Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
நமக்கு பலவித சவுகரியங்களை செய்து கொடுத்துள்ளார் பகவான். உணவு, உடை, இடம் எல்லாம் கொடுத்திருக்கிறார். இவைகளை அனுபவிக்க, அவயவங்களையும் தக்கபடி கொடுத்திருக் கிறார்; நாம், அவைகளை அனுபவிக்கிறோம். இதற்காக, நாம் பகவானுக்கு நன்றி செலுத்த வேண்டும். நன்றி செலுத்துகிறோமா? "இவ்வளவும் நான் சம்பாதித்தது சார்...' என்று, மார் தட்டிக் கொள்கிறோம். பகவானுடைய அருள் இன்றி, நம்மால் எதை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
மார்ச் 27 - மாரியம்மன் பங்குனி திருவிழா ஆரம்பம்!மாரியம்மன் வழிபாடு, தொன்று தொட்டே நம் மக்களிடம் உள்ளது. ஒவ்வொரு நகரின் காவல் தெய்வமாகவும், வெப்புநோய் தீர்ப்பவளாகவும் இவள் விளங்குகிறாள். பராசக்தி, தன் ஆற்றலை வெளிப்படுத்து வதற்காக எடுத்த அவதாரமே, துர்க்கை அல்லது காளி. மகிஷாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காக, அவளுக்கு, சிவன், சக்தி கொடுக்க, அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
உங்கள் மகன் சிகரெட் பிடிக்கிறானா?என் நண்பரை சந்திக்க, அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது, வெளியில் சென்றிருந்த அவரது, 22 வயது மகன், வீட்டிற்குள் நுழைந்தான். தன் தந்தையைக் கண்டதும், தலையைக் குனிந்தவாறு, நைசாக உள்ளே சென்று விட்டான்.நண்பரை, புரியாமல் பார்த்தேன் நான். அவர், மெதுவான குரலில், "அவன் சிகரெட் பிடித்து விட்டு வந்திருக்கிறான். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து, மூணாறு போகும் மலைப் பாதையில், 30 கி.மீ., தூரத்தில் உள்ளது கோடந்தூர் மலைவாழ் கிராமம். இங்கு, 60 குடியிருப்புகளில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.பெரும்பாலும் விவசாய பணிகளை செய்து வரும் இவர்களது வாழ்க்கை, இயற்கையை ஒட்டி அமைந்துள்ளது.மிக முக்கியமான வேலையோ, தேவையோ இருந்தால் ஒழிய, மலைப்பகுதியை விட்டு இவர்கள் கீழே இறங்குவது இல்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
வளர்ந்து வரும் நாடுகள் அனைத்திலும், "ஸ்டிரீட்-கிட்ஸ்' — தெருவில் அலையும் அனாதை பிச்சைக்காரக் குழந்தைகளின் தொல்லை இருந்து தான் வருகிறது. நம்ம ஊரைப் பொறுத்தவரை இவ்வகை குழந்தைகள், கையில் உண்டியல் ஏந்தி, காவி உடை அணிந்து, "நெற்றியில் விபூதி, குங்குமம் பூசி, "மாரியம்மன் கோவிலுக்கு காணிக்கை போடுங்கள்...' என்றோ, "சபரிமலை போகிறேன்; காசு கொடுங்கள்...' என்றோ பிச்சை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
**ப.ராமநாதன், திருப்பூர்: விதண்டாவாதம் பேசுகிறவர்களைத் திருத்துவது எப்படி?நேரத்தையும், சக்தியையும் ஏன் வீணடிக்க விரும்புகிறீர்கள். இப்படிப்பட்ட ஆசாமிகளைத் திருத்த முடியாது. இவர்களைப் பார்த்தாலே, "அம்பேல்' ஆகி விடுங்கள்.****என்.ஜானகி, பெரியகுளம்: சுடிதார், சல்வார் கம்மீஸ் போன்ற ஆடைகளை, எந்த வயது பெண்கள் அணியலாம்?குழந்தை பெற்று பெண்களின் வயிறு, "தஸ்... புஸ்...' ஆகும் வரை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
இதுவரை: மனதில் பலவித குழப்பங்கள் இருந்தாலும், நாட்டிய நிகழ்ச்சியில் சிறப்பாக நடனம் ஆடி முடித்தாள் மதுரிமா. அவளை, நேரில் பாராட்ட, அவளது அறைக்கே வந்தார் வைத்தீஸ்வரன். அவரின் பேச்சு, மதுரிமாவை மேலும் குழப்பியது. நாட்டிய நிகழ்ச்சி பற்றியும், வைத்தீஸ்வரனின் பேச்சு பற்றியும் மதுரிமாவிடம் விசாரித்தான் நரேன் —நரேன் கண் விழித்துப் பார்த்த போது, கடிகாரம் காலை மணி எட்டை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
ஜவஹர்லால் நேரு சென்னைக்கு வந்த போது, தி.மு.க., சார்பில் கறுப்புக் கொடி காட்டத் திட்டமிட்டோம். அப்போது, கழக முக்கியத் தோழர்களை முன் கூட்டியே கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் வைக்கப் பட்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, முன்னாள் மேயர் முனுசாமி, ராஜாராம், நான் மற்றும் சிலர். எங்களை, 10 தினங்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
வீரப்பன் கதை மீண்டும் படமாகிறது!ஏற்கனவே, சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை, பல இயக்குனர்கள் துருவி, துருவி படமாக்கி விட்டனர். இந்நிலையில், காதலர் குடியிருப்பு படத்தை இயக்கிய ரமேஷ், மீண்டும் வீரப்பன் கதையை, வனயுத்தம் என்ற பெயரில் படமாக்குகிறார். இதில், இதுவரை வீரப்பனைப் பற்றி வெளிவராத பல புதிய தகவல்கள் இடம்பெறும் என்கிறார். — சினிமா பொன்னையா.மீண்டும் பின்னணி பாடிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
மனநலப்பிரிவு தலைமை மருத்துவரின் குளிர்பதனமூட்டப்பட்ட அறைக்குள், அந்த மூவர் பிரவேசித்தனர். 40 வயது சொர்ண சம்பத், 37 வயது சரஸ்வதி தம்பதியின், 10 வயது மகன் தென்னரசன்.தென்னரசன் உள்ளே நுழையும் போதே, ஆன்மிகவாதி போல், இரு கைகளையும் உயர்த்தி, மனநல பிரிவு தலைவர் கிரிதரை ஆசீர்வதித்தான்.""ஹாய்... ஹாய்... ஹாய்!''""நீங்க அழைச்சிட்டு வந்திருக்கும் சிறுவன் தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், வீட்டுக்கு மூத்தவன்; வயது 22. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். பத்தாம் வகுப்பு வரை தான் படித்தேன். அன்பான பெற்றோர்; இரண்டு தம்பிகள். போலீஸ் அதிகாரியாக வேண்டும்; இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும்; சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே என் ஆசைகளாக இருந்தன. படிக்கும் வயதில் பள்ளிக்கு போகாமல், ஊர் சுத்தினேன்; விஷயம் வீட்டுக்குத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
காலை, ஒன்பது மணி.தலைமை நர்ஸ் பேஷன்டுகளை பார்வையிட வந்தார்.மனைவி நாகம்மாவின் கட்டில் அருகில் அமர்ந்திருந்த சத்தியமூர்த்தி, எழுந்து ஜன்னல் பக்கம் எட்டிப் பார்த்தார்.மருத்துவமனை வாசலில் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். அவள், தவிப்புடன் நிற்பது தெரிந்தது.அவர், "ஒரு நிமிஷம் நில்லும்மா... இதோ வந்துடறேன்...' என்று கை ஜாடை காட்டினார்; அவள் தலையசைத்தாள்.திரும்பி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
"சப்வே' என்ற பெயரில், பெரிய நகரங்களில் அதிநவீன ரெஸ்டாரன்டுகள் இயங்குவதைப் பார்த்திருப்பீர்கள். இதே போன்று மெக்டொனால்ட், கே.எப்.சி., என்ற ரெஸ்டாரன்டுகளும் உலகம் முழுவதும் எல்லா நகரங்களிலும் இயங்குகின்றன. மெக்டொனால்ட் ரெஸ்டாரன்டுகளை விட, சப்வே ரெஸ்டாரன்டுகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.கடந்த, 2010ம் ஆண்டு நிலவரப்படி, உலகம் முழுவதும், 33 ஆயிரத்து, 749 சப்வே கடைகள் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
உலகின் மிகவும் விலை உயர்ந்த, அரண்மனை போன்று தோற்றமளிக்கும் கப்பல் ஒன்று தயாராகி வருகிறது. இந்த கப்பலின் விலை, 5,150 கோடி ரூபாய்.பிரிட்டன் நாட்டில் துறைமுகம் ஒன்றில் கட்டப்பட்டு வரும் இந்த கப்பல், மொனாக்கோ நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்காக தயாராகி வருகிறது. அவர் பெயரை வெளியிட இந்த கப்பல் கட்டுமான நிறுவனம் மறுத்து விட்டது. 500 அடி நீளமுள்ள இந்த கப்பலுக்கு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
"கரணம் தப்பினால் மரணம்' என, சர்க்கசில் சாதனை செய்யும் வீரர்களை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்போம். இதே போல் சாகசம் செய்த வீரர் ஒருவர், ஐந்தாயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த போது, மரணமடைந்துள்ளார்.பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இந்த வீரரின் பெயர் கேரி ஹார்பர்ட். மிக உயரமான மலைகள், கட்டடங்கள், வானில் பறக்கும் விமானங்களில் இருந்து, பாராசூட் மூலம் குதித்து சாதனை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கடற்கரையில் கடந்த சில மாதங்களாக நூதன சம்பவம் ஒன்று நடந்து வருகிறது. கடற்கரை, மீன்பிடி துறைமுகம் என எங்கு பார்த்தாலும், லட்சக்கணக்கான மீன்கள் செத்து ஒதுங்குகின்றன. தினம், தினம் ஒதுங்கும் இந்த மீன்களை அப்புறப்படுத்துவதற்குள், உள்ளாட்சி நிர்வாகத்திற்கு போதும், போதுமென ஆகி விடுகிறது. கடலில் ஒரு அடி ஆழத்திற்கு, லட்சக்கணக்கில் பல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
பயன்படாத ரயில் நிலையம் ஏதாவது இருந்தால், அது, நம்ம ஊரில் பாழடைந்து, குப்பை கொட்டும் இடமாக மாறி இருக்கும். ஆனால், இங்கிலாந்தில் இப்படியொரு ரயில் நிலையம், இன்று, வித்தியாசமாய் சாதனை படைத்து வருகிறது.இங்கிலாந்தில் நார்தம்பர்லாந்து என்ற பகுதியில், விக்டோரியா ஆலன்விக் என்ற ரயில் நிலையம் ஒன்று இருந்தது. வில்லியம் பெல் என்பவரால், 1887ல் வடிவமைக்கப்பட்டு துவக்கப்பட்ட இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
காதல் டைரிகள்!* எல்லாப் பக்கத்திலும்எழுதியிருப்பதுன்பெயர்;எழுதாததுன்துரோகம்... * குறிப்பேட்டைஎரித்தாலும்...குற்றங்கள்மரிக்காது...* வாலிபத்துஅபத்தங்களாய்எழுதப்பட்டிருந்தும்வாய்மையானவை...* கனவெனஎழுதியதுதாராளம்...எழுதாததும்ஏராளம்...* எப்பக்கம்திருப்பினாலும்தெரிவதுதிருத்தவியலாவருத்தங்கள்...* குறிப்பெழுதினேன்மணக்க...நீமறக்க...*காதலன்குறிப்பெழுதுவான்...சில ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X