Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
பக்தர்களை ரட்சிக்கவும், துஷ்டர்களை சிட்சிக்கவும், பல உருவங்களில், பலவித ஆயுதங்களுடன் அவ்வப்போது அவதரிக்கிறாள் தேவி பராசக்தி. இப்படிப்பட்ட உருவங்களில், காளி உருவமும் ஒன்று. பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும், பக்தர்களிடம் மிகவும் கருணை உடையவள் காளி. அன்புடன் அளிக்கும் அன்ன நிவேதனத்தையே ஏற்றுக் கொள்வாள் இந்த காளி. ஒரு சிலர், காளிக்கு, ஜீவன்களை பலியிடும் வழக்கத்தை ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
மே-6 அட்சய திரிதியை!அட்சய திரிதியை நன்னாள், தர்மத்தை வலியுறுத்துகிறது. தர்மம் இருக்கும் நாட்டில், செல்வம் பெருகும். இந்நாளில் செய்யப்படும் தர்மம், பெரும் நன்மை தரும். ஒரு காலத்தில், மக்களின் பசி தீர்க்க, இந்நாளில் தயிர்சாதம் தானம் செய்தனர். "அட்சய' எனும் சொல்லுக்கு, "வளர்தல்' என்று பொருள். இந்தச் சொல்லுக்குரிய மகிமை பற்றிய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்...விஜயரகுநாத ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
நவீன கொள்ளையர்கள்!என் நண்பரின் பெண்ணுக்கு, மணமகன் வேண்டி, பிரபல திருமண தகவல் மையம் ஒன்றிற்கு சென்றிருந்தோம். அவர்கள் நீட்டிய நிபந்தனை தாளைப் படித்த போது, எங்களுக்கு தலை சுற்றி விட்டது. பத்து முதல், நூறு பவுன் வரை வரதட்சணையாக படிந்தால், 7,000 ரூபாய் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரையும், அதுவே, இரண்டாம் திருமணம் என்றால், 10 ஆயிரம் ரூபாய் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரையும், கமிஷனாகத் தர ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
மே 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!கோடை காலம் தவிர்க்க முடியாதது; ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும்.கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், ஆயாசமும், கூடவே தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது.இளநீர், மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். அவ்வாறு ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
* தர்ப்பூசணியில் கொட்டையை எடுத்துவிட்டு, மிக்சியில் அடித்து, ஜூசாக்கி, சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.* சிலர் மாம்பழம் உடலுக்கு சூடு என்பர்; அது தவறு. மாம்பழத் துண்டுகளுடன் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடம்பிற்கு நல்லது.* நுங்கை தோல் நீக்கி, துண்டுகளாக்கி, மிக்சியில் அடித்து, பால் சேர்த்து, ஏலக்காய், சர்க்கரை கலந்து பருகலாம்.* காலையில் வெறும் வயிற்றில், ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
குப்பண்ணாவின் எதிர் வீட்டுப் பையன், கையில் ஒரு கேமராவோடு வேகமாக ஓடி வந்தான். "எல்லாரும் ஒரு நிமிஷம் அப்படியே இருங்கள்!' என்று சொல்லி, கேமராவை, "கிளிக்' செய்ய முனைந்தான்."ஆமாம்... இவன் மனதில் பெரிய, "கார்ஷ்' என்று நினைப்பு!' என்றார் குப்பண்ணா."ஆமாம்... நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த காலத்திய உலகப் புகழ் பெற்ற புகைப்படக்காரராமே அவர்!' என்றபடியே லென்ஸ் ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
*கே.மகேஸ்வரன், மணவாளநல்லூர்: உமது சொத்து கணக்கு எவ்வளவு? உமது ஓட்டை சைக்கிளை அசையும் சொத்தாக எடுத்துக் கொள்ளவும்...ஓ.கே.,! அசையும் சொத்து அது ஒன்றே! அசையா சொத்து ஒன்றுமில்லை... இது போக, ஒரு பேனா, கொஞ்சம் மூளை உண்டு!***** பா.பெரியசாமி, அம்மாபேட்டை: இந்திய நர்சுகளுக்கு அமெரிக்காவில் ஏக கிராக்கியாமே...உண்மைதான்! ஒரு லட்சம் நர்சுகள் தேவைப்படுகிறது அமெரிக்காவிற்கு! உலகின் மற்ற ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
இதுவரை: விமான பணிப்பெண்ணான கவிதாவின் குழந்தை, காணாமல் போய்விட்டது என்று தெரிந்ததும், உடனே, காவல் நிலையத்திற்கு சென்ற நரேன், அங்கிருந்த கவிதாவுக்கு ஆறுதல் கூறினான். நரேன் யார், அவனுக்கும், கவிதாவுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்டறிந்த போலீஸ் அதிகாரி, நரேனின் மனைவி மதுரிமாவிடமும் குழந்தை காணாமல் போனது சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கூறி, அவளது ஆஸ்திரேலிய ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
கமலின் விஸ்வரூபம்!செல்வராகவன் இயக்கத் தில், கமல் நடிக்கும் படத்திற்கு, விஸ்வரூபம் என்று பெயர் வைத்துள்ளனர். இது, ஏற்கனவே சிவாஜி கணேசன் நடித்த படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. கமலுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் இப்படத்தின், 50 சதவீத படப்பிடிப்பு, அமெரிக்காவில் நடக்கிறது. இப்படத்துக்காக உடற்கட்டை குறைத்து, இளவட்ட பையன் போல் காட்சி தருகிறார் கமல். ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
தொலைவில் தெரிந்தது புதைமேடு. அதன் நாற்புறங்களிலும் வயற்காட்டில், பச்சைப் பசேலென்று நெற்பயிர் வளர்ந்திருந்தது. தங்களுக்கு நடுவே ஒரு கோரமான நிகழ்வு நெடுங்காலமாக நடந்து கொண்டிருப்பது தெரியாதது போல், நீரில் நின்று, காற்றில் தலை ஆட்டிக் கொண்டிருந்தன கதிர்கள்.காற்று வீசும் திசையில் அவை, உடம்பை வளைத்து, தலையை சாய்த்துக் கொள்வதும், காற்று நின்றதும், மறுபடியும் நின்ற ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
என்னை பெறாத அம்மாவுக்கு —நான் ஒரு பெண்; வயது 21. உங்களுடைய கருத்துக்கள் அனைத்தையும் நான் படித்துள்ளேன். இப்போது, என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறேன், உங்களின் வழி காட்டுதலுக்காக...என் குடும்பத்தில் நான்கு பேர். நான் சிறு வயதிலிருந்து, மிகவும் கஷ்டப்பட்டு, சந்தோஷம் என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்து வருகிறேன். என் அப்பா, எனக்கு ஒரு அப்பாவாகவும், ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
தி.மு.க., சந்தித்த முதல் பொதுத் தேர்தலில், (1957), 15 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு நாள், பகல், 12 மணிக்கு, அண்ணாதுரையை காண வந்தார் ம.பொ.சி., பொது மேடைகளில் அண்ணாதுரையை கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டிருந்த அவரது வருகை, ஆச்சரியமூட்டியது.வந்தவர், அண்ணாதுரையுடன் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தபின், விஷயத்திற்கு வந்தார். "சட்டசபை மேலவைக்கான தேர்தல் வருகிறதல்லவா... அது விஷயமாக ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
பெண்கள் எதையும் சாதிப்பர் என்று சொன்னாலும், இந்தியாவை பொறுத்தவரை இன்னமும் கடற்படையில் பணிபுரிய பெண்கள் முன்வருவதில்லை. அதற்கான படிப்பில் சேரவே இன்னும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பது வருத்தமான விஷயம்.இந்நிலையில், ஒரு பெண் பல வருடங்களுக்கு முன் கடல்சார் கல்வியை விரும்பி படித்ததுடன், படிப்படியாக முன்னேறி, அந்தத் துறை ஆண்களே வியக்கும்படியாக தலைமை தளபதியாக ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
­""கூனவாத்தி வர்றாரு டோய்...''மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோணவாயன், ஊரே கேட்கும்படி உளறி முடிப்பதற்குள், ""அப்படிச் சொன்னா, வாயி புழுத்துப் போய் சாவ...'' என்று, சாபம் போட்டபடி, குவித்து வைத்திருந்த சாணிக் குவியலில் உமித்தூளையும், வைக்கோல் பிரித் துண்டுகளையும் கலந்து போட்டு, மெதுவாக மிதித்துக் கொண்டிருந்த கருப்பாயி பாட்டி, கோணவாயனைக் காலில் போட்டு மிதிப்பது போல, ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
எதிர்காலம்* பறவை உதிர்த்தஒற்றை இறகாய்காற்றில் அலைகிறது...நம் தேடல்கள்!* பாழுங் கிணற்றில் போட்டகூழாங் கற்களாய்குவிந்து கிடக்கிறது...நம் லட்சியங்கள்!* நூலறுந்த பட்டமாய் போய் விடுமாதாயின் கனவுகள்...காதறுந்த ஊசியென ஆகிவிடுமாதந்தையின் கணிப்புகள்!* பகல் உணவென்பதுபகல் கனவானாலும்நிகழ்காலப் பசி இருட்டுக்குஅகல் விளக்கேற்றுவோம்!* வேற்றுக் கிரகம் வரைவெற்றிக் கொடி நாட்ட வந்த ..

பதிவு செய்த நாள் : மே 01,2011 IST
விசாகப்பட்டினம் இந்திரா காந்தி மிருக காட்சி சாலையில் உள்ள வெள்ளைப்புலி குமாரி, ஒரே பிரசவத்தில் ஐந்து குட்டிகளை ஈன்றது.மூன்றாண்டுகளுக்கு முன், இந்தப் புலி, ஒரே பிரசவத்தில் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்தது. கடந்த மாதம், இந்த புலி ஐந்து குட்டிகளை ஈன்று, பார்வையாளர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.மூன்றுக்கும் அதிகமான குட்டிகளை ஈன்றால், குட்டிகள் எடை குறைந்து, பலவீனமாக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X