Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
மாற்றி யோசி... வாழ்க்கை வளமாகும்!என் நண்பர், உணவு விடுதி துவங்கினார். காலை டிபன் செய்ய மட்டுமே ஆள் கிடைத்தனர். மதிய உணவு செய்ய போதிய ஊழியர்கள் கிடைக்கவில்லை. இதனால், தன் அக்கம், பக்கத்து வீட்டு நண்பர்களின் மனைவியரிடம், தினமும், 50 நபர்கள் சாப்பிடக் கூடிய அளவு சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், வத்தல் என, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வீட்டினரிடம் செய்து தரக் கேட்டு, ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
காந்தா கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக நடிகையாக ஒப்பந்தமானார் எம்.என்.ராஜம். கிருஷ்ணன் - பஞ்சுவுக்கு தெரிந்த பெண்ணான அவர், டி.கே.சண்முகம் நாடகக்குழுவில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும், அவருக்கு, ராதாவைப் பற்றி எதுவும் தெரியாது. சினிமா வாய்ப்பு கிடைக்கிறதே என்று ஒப்புக்கொண்டார்.ரிகர்சல் எல்லாம் இல்லை. நேராக ஷாட்டுக்குச் சென்று விட்டனர். நவநாகரிக மோகன், ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
இயற்கைக்கு எதிராக மனிதன் செயல்படும் போது, அது, அவனை, 'பொட்' என்று தலையில் குட்டியது போன்று ஒவ்வொரு முறையும் பாடம் கற்பிக்கிறது. ஆனாலும், மனிதன் திருந்துவதில்லை!இப்படித்தான் இங்கிலாந்தில் நடந்தது...இங்கிலாந்து நாட்டு பசுமாடுகளை, 'டிவி'களில் பார்த்து இருப்பீர்கள்... கொழு கொழுவென இருக்கும்; 30 - 40 லிட்டர் பால் கொடுக்கும். ஆனால், அதற்கு மேலும் அதிகமாக பால் கொடுக்க ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
எஸ்.கனகசுப்பு, திருவான்மியூர்: சிரித்துப் பேசுபவர்கள் எல்லாம் கழுத்தறுப்பவர்கள் என்பது உண்மையா?'அனா'வாதிகளின் சிரிப்பை சிரிப்பவர்களை மட்டும், 'கானா' அறுப்பவர்கள் கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளலாம்! ம.சுரேந்திரன், புதுச்சேரி: போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகத்தை திருத்த ஏற்றது ஆன்மிகமா, சமத்துவமா?'சமத்துவம்தான்' என நினைத்து செயல்பட்ட இடங்களில் - நாடுகளில் ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
பத்ம விபூஷன் விருது பெற்ற புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடகி டி.கே.பட்டம்மாளின் தம்பி டி.கே.ஜெயராமின் மகனான ஜெ.வைத்தியநாதன், கர்நாடக இசைத் துறையில் பிரபலமானவர். இவர், தினமலர் - வாரமலர் இதழுக்கு அளித்த பேட்டி:என் அத்தை டி.கே.பட்டம்மாள் தான், என் அப்பா டி.கே.ஜெயராமனுக்கு குரு. காஞ்சிபுரம் நைனா பிள்ளை என்பவரிடம், அத்தை சங்கீதம் பயின்றார். கர்நாடக சங்கீதம் கற்று, மேடை கச்சேரி ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
பரந்தாமன் எழுதிய, 'ராஜாஜி நூற்றுக்கு நூறு' நூலிலிருந்து:இரண்டாம் உலகப் போரின் போது, ஆங்கில ஏகாதிபத்தியம், தன் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளிடமிருந்து உணவாக, பொருட்களாக மற்றும் பல வகையிலும் ஆதரவு திரட்டியது போல, இந்தியாவிலும் திரட்டியது. இப்பணியில், ஆங்கிலேய அதிகார வர்க்கம் வெளிப்படையாகவே ஈடுபட்டிருந்தது.ராஜாஜியை பின்பற்றக்கூடிய தலைவர்களுள் ஒருவர், யுத்த நிதி வசூலை ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
மோகன்லால் - மம்முட்டி இணையும், 56வது படம்!மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால் - மம்முட்டி இருவருக்குமிடையே தொழில் போட்டி இருந்த போதும், இருவரும், இதுவரை, 55 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மோகன்லால் படத்தில் மம்முட்டியும், மம்முட்டி படத்தில் மோகன்லாலும் கெஸ்ட் ரோலில் நடிப்பது, வெகு சாதாரணமான விஷயம். இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், டுவன்டி 20 என்ற ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
மாணவர்களுக்கு பள்ளி நாட்களோடு மட்டுமா போட்டி உணர்வு நின்று போகிறது?கல்லூரியில் அது கடுமையாகி, படிப்பிலிருந்து தாண்டி, விளையாட்டுப் போட்டிக்கு மாறி, பின், 'அவள் எனக்கா, உனக்கா...' என்று வாலிபத்திலும் முட்டிக் கொள்கிறது.இதோடு முடிகிறதா எனில், அதுவும் இல்லை. 'உன் வேலையை விட, என் வேலையும், நான் வாங்கும் சம்பளமும் எங்கோ இருக்கின்றன...' என்று, தன் நண்பனுக்கு வீண் ஜம்பம் ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
அன்பு சகோதரி,நான், முன்னாள் ராணுவ வீரன் மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி நிலைய பொறியியல் உதவியாளர்; மேலும், 2003 - 2012 வரையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணி. கடந்த, இரு ஆண்டுகளாக கிராமத்தில் குறு விவசாயம் செய்து வருகிறேன். நான், என் தாய்மாமன் மகளைத் தான் திருமணம் செய்துள்ளேன். வரும் ஜனவரி, 15ல் எங்களது, 52வது திருமண ஆண்டாகும்.என் உடன் பிறந்தோர் இரு ஆண்கள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
சங்கீதத்தில் உள்ள மும்மூர்த்திகளைப் போல, நாம பஜனை செய்வோரிலும் மும்மூர்த்திகள் உண்டு. அவர்கள், ஸ்ரீ பகவந்நாம போதேந்திராள், ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் மற்றும் ஸ்ரீ மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள்!இன்று, நாம பஜனை செய்வதற்கு நம்மில் பலர் வெட்கப்படுகின்றனர்; இறைவன் நாமத்தைச் சொல்லி, ஆடிப் பாடி பஜனை செய்வது எத்தகைய நன்மையைத் தரும் என்பதை இக்கதை விளக்குகிறது...குழந்தை இல்லாமல், ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
இடி இறங்கும் காலம்!பணம் சேரச்சேரஅது தன்னைதானே தின்றுவிடுமா?என்ன வந்தாலும்நிரம்ப மறுக்கிறதுஎப்போதும்இதய கஜானா!பணம் நிறைவைப் பிரசவிப்பதில்லை...அது, ஆசை முட்டையிட்டுஅடைகாக்கிறது!அன்பை ஆகுதியாக்கிபெற்ற பிள்ளைகள்பட்டம் பெற்ற கையோடுபறந்து விடுகின்றனர்தூர தேசங்களுக்குகடல் தாண்டிஅவர்கள் சிறகடிப்பதுகவுரவம் சம்பாதிக்க!விமானங்களில் பயணிக்கையிலேயேபண்பையும், ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
மே 12 திருநாவுக்கரசர் குருபூஜைவிழுப்புரம் அருகிலுள்ள திருவாமூரில் புகழனார் - மாதினியார் தம்பதியருக்கு, மகனாக பிறந்தார் மருள்நீக்கியார். இவரின் தந்தை பெரும் பணக்காரர்; தாயார் மாதினியோ சிறந்த சிவபக்தை. இவரது சகோதரி திலகவதி.திலகவதிக்கும், அந்நாட்டு படைத் தலைவரான கலிப்பகையாருக்கும் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில், புகழனாரும், மாதினியாரும் அடுத்தடுத்து இறந்து விட்ட ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
'ஆள் பாதி; ஆடை பாதி என்பது போல், மனுஷனுக்கு ஆரோக்கியம் இல்லன்னா, கட்டின பொண்டாட்டி கூட மதிக்க மாட்டா போலிருக்கு...' என்று நினைத்தார் சிங்கார வேலன்.''ஏங்க... இப்படி பொம்பள மாதிரி சீரியல பாத்துகிட்டு உட்கார்ந்திருக்கீங்களே... நீங்க எனக்கு வீட்டு வேலையில, உதவி செய்யக் கூட வேணாம்; ஏதாவது வேலையிருக்கான்னு கேக்குறதாலே, என்ன கொறஞ்சு போயிடுவீங்க,'' என்றாள் மனைவி ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
தியேட்டருக்கு சென்று படம் பார்த்த காலம் மலையேறி விட்டது. தற்போது வீடுகளிலேயே, பிரமாண்ட, 'டிவி' திரைகள் மூலம் படம் பார்க்க துவங்கி விட்டனர் மக்கள். அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள பணக்கார பிரபலங்கள், இந்த விஷயத்தில் ரொம்பவே முன்னேறி, தங்கள் வீடுகளுக்குள்ளேயே, மினி தியேட்டர்களை கட்டியுள்ளனர். பாப்கார்ன் மிஷின், காபி மேக்கர், நான்கு பக்கமும் ஸ்பீக்கர்கள், பெரிய ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
பரமபதம்!: தாயம் விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பாரம்பரியமாக ஒரு பரமபத படம், அக்காலத்தில் எல்லார் வீட்டிலும் இருக்கும். அதில், சொர்க்கம் செல்ல வைகுண்டம் இருக்கும். இது, ஆன்மிகத்தன்மையுடன் இணைந்த விளையாட்டு இதுவும் உள்ளரங்க விளையாட்டு தான்.இப்போது, 'ஸ்னேக் அண்ட் லேடர்' என்ற போர்ட் விளையாட்டுகள் இருந்தாலும், பரம பதத்தின் சுவாரசியமே தனி தான். ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
வட அமெரிக்காவில் உள்ள ஒரு வகை பல்லிக்கு, தலையில் கொம்பு உள்ளது. பாலைவனங்களில் வாழும் இத்தகைய பல்லிகள், தங்கள் கண்கள் வழியாக, துர்நாற்றம் கொண்ட ரத்தத்தை பீச்சி, எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும். அத்துடன், அவ்வப்போது நிறத்தையும் மாற்றிக் கொள்ளும். என்னே கடவுளின் படைப்பு!— ..

பதிவு செய்த நாள் : மே 10,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X