Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
அக்., 29 தீபாவளிகுழந்தைகளுக்கு, நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுப்பது, பெற்றோரின் கடமை என்பதை உணர்த்துவதே தீபாவளி பண்டிகையின் நோக்கம். நரகாசுரன் நல்லபடியாக வளராததால், தன் பெற்றோர் கையாலேயே, அழிவைச் சந்திக்க நேர்ந்தது. அதனால், தீபாவளிக்கு, குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசு வாங்கிக் கொடுப்பதோடு, இதுபோன்ற நல்ல கருத்துகளை சொல்லி, கொண்டாடச் சொல்ல வேண்டும்.பிரம்மாவிடம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
முட்டாள் பெற்றோராக இருக்காதீர்!என் தோழியின் மூத்த மகள், 10ம் வகுப்பு படிக்கிறாள்; இன்னும், பூப்படையவில்லை. சமீபத்தில், தோழியின் ஆறாம் வகுப்பு படிக்கும் இளைய மகள் பூப்படைந்தாள். உடனே தோழி, மூத்த மகளை பார்த்து, 'நீ பிறந்ததே வீண்... என்ன பாவம் செய்தியோ, இன்னும் வயசுக்கு வராம இருக்குற... உன்னால, நான் என்னென்ன கஷ்டங்களை படவேண்டியிருக்குமோ தெரியலயே...' என்று, வாய்க்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
உலக நாடுகளில் மக்களிடம் இன்னும் எந்த அளவில், நேர்மை இருக்கிறது என, சோதித்து பார்க்க விரும்பியது, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' ஆங்கில மாத இதழ்!இதற்காக, உலகின், பல நாடுகளையும் தேர்வு செய்தது. ஒரு மணிபர்சில், கொஞ்சம் பணம் (இது நாட்டுக்கு நாடு, மாறுபட்டது.) பர்சின் சொந்தக்காரரின் முகவரி, தொலைபேசி எண், அவரின் குடும்ப போட்டோ, மளிகைக் கடையில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல், சில ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
எம்.பழனிச்சாமி, கோவை: தொழிலாளர்களை நிர்வகிப்பதில் தகுதி பெற, எந்தெந்த புத்தகங்களைப் படிக்கலாம்?'எந்த புத்தகத்தையுமே படிக்கத் தேவையில்லை...' என்கிறார், இந்தியாவின் தலைசிறந்த கம்பெனி நிர்வாகிகளில் ஒருவர்... 'கடுகடுப்பை கைவிடுங்கள்; இன்முகம் காட்டுங்கள் போதும். தொழிலாளர்களின் இதயத்தில் இடம் பிடித்து விடலாம்...' என்று கூறுகிறார்; முயன்று பாருங்களேன்!வி.ரேவதி, சென்னை: ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
அரங்கத்தில் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து, அசந்து போனான், குரு. வந்திருந்தோர் கைகளை பிடித்துக் குலுக்கியதில், விரல்களில் படிந்த ஈரத்தை, அவர்களறியாது கவிழ்த்து உலர்த்தினான்.'உன் கரங்கள் பெற்றுக் கொள்ள வேண்டியதை, நான் பற்றியுள்ளேன்; எங்கே போனாய் சீக்கிரம் வா...' மனதிற்குள் கூவி அழைத்தான்; மூலை முடுக்கெல்லாம் அவன் கண்கள் தேடியது. ஆனால், அவனைக் காணோம்.'மூன்றாம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
அனல் பறக்கும் பைரவா விஜய்!தன் படங்களில், 'பஞ்ச்' டயலாக் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தவர், விஜய். இதனால், அவரது சில படங்களுக்கு, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, 'பஞ்ச்' டயலாக் பேசுவதை, சமீபத்திய படங்களில் குறைத்து விட்டார். என்றாலும், ரசிகர்களுக்கு அது பெருங்குறையாகி விட்டதால், தற்போது நடித்துள்ள, பைரவா படத்தில், 'பஞ்ச்' டயலாக்குகளுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
குழந்தையாக, தோழனாக, நாதனாக, தலைவனாக மற்றும் தெய்வமாக என்று கண்ணனை பல விதங்களில் போற்றி களிப்புறுகின்றனர், அவரது அடியவர்கள்.அத்தகையோரில் ஒருவர் தான், மகான் லீலாசுகர்; அவர், கண்ணனை தான் நேரில் கண்டு களித்த அனுபவத்தை கூறுகிறார்...'காயாம் பூ வண்ண மேனி, சிவந்த அதரங்களில் குறும்பு சிரிப்பு, நீண்ட கண்களில் கருணை பொங்க, இடைச்சேரி முழுவதும் தவழ்ந்து விளையாடும் என் கண்ணனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
டபுள் கா மீட்டா - ரபடி!தேவையான பொருட்கள்:பிரட் துண்டுகள் - 6சர்க்கரை - 1 கப்முந்திரி மற்றும் பாதாம் பருப்பு - தலா, 50 கிராம்எண்ணெய் - தேவையான அளவுபால் - அரை லிட்டர்மைதா மாவு - 1 தேக்கரண்டிகுங்குமப்பூ - சிறிதளவுசெய்முறை: பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி, அதை, முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளவும். மிதமாக, காய்ந்த எண்ணெயில், பிரட் துண்டுகளை பொரித்தெடுக்கவும். பின், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
அன்புள்ள அம்மா,நான், 33 வயது, பட்டதாரி பெண்; என், 16 வயதில், சொந்த அத்தை மகனை திருமணம் செய்து வைத்தனர். தற்போது, 13வயதில் ஒரு ஆண் பிள்ளையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். திருமணமான ஐந்து ஆண்டுகளுக்கு பின், என் கணவருக்கு தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லை. நான், அவரிடம் என்னவென்று கேட்ட போது, பதில் கூற மறுத்து விட்டார். சில ஆண்டுகளுக்கு முன், அவரை மனோதத்துவ நிபுணரிடம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
கேப்டவுனின் இன்னொரு அழகு என்னவென்றால், தூரத்திலிருந்து இரு மலைகளையும் ஒரு சேர பார்த்தால், சிங்கம் அமர்ந்திருப்பது போன்று தோன்றும். ஹெலிகாப்டரில் இம்மலையை சுற்றி வரும் போது, கடலின் அழகையும், மலையை ஒட்டி அமைந்துள்ள, 'காட்டேஜ்'கள் மற்றும் கேப்டவுன் நகரின் அழகையும் முழுமையாக ரசிக்கலாம்.கேப்டவுனில் மூன்று நாட்கள் தங்கிய பின், நான்காம் நாள், உள்ளூர் விமானத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
'சுடச் சுடச் சொன்னார்கள்' நூலிலிருந்து: கடந்த, 1960ல், உதகமண்டலத்தில், மரம் நடுவிழா நடைபெற்றது. மரக்கன்று நட்டு, விழாவைத் துவக்கி வைத்தார், சர்.சி.பி.ராமசாமி ஐயர். பின், 1964ல் நடந்த மரம் நடு விழாவிற்கும் அவர் அழைக்கப்பட்டிருந்தார். மரக் கன்றை நட்டு, விழாவை துவக்கி வைத்த, ராமசாமி ஐயர், விழா காரியதரிசியை கூப்பிட்டு, 'நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு செடி நட்டேனே... அது எந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
அந்த நாளில், கலைவாணரும், துரைராஜும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ராயப்பேட்டையில் சிறிய வீட்டில் குடியிருந்தனர். கலைவாணர், புகழ் பெற துவங்கிய காலம் அது. அப்போது ஒரு சம்பவம் நடைபெற்றது...சேலம், ராசிபுரத்தைச் சேர்ந்த கைத்தறி வியாபாரி ஒருவருக்கு சினிமாப் படம் தயாரிக்கும் ஆசை ஏற்பட்டது; வாயையும், வயிற்றையும் கட்டி, சில ஆயிரம் ரூபாய் சேர்த்து, பற்றாக்குறைக்கு கடன் வாங்கி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
சமீபத்தில், 'டிவி'யில் ஒரு செய்தி பார்த்தேன். வட மாநில காட்சி... திடீரென்று, வன்முறை கூட்டம், காவல்துறை வாகனத்தை சூழ்ந்து தாக்க, உள்ளே இருந்த காவலர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என, சிதறி ஓடுகின்றனர்.இது, எதிராளியின் வலிமை, உறுதியாக தெரிந்த பின்னும், வீராப்பு காட்டுவது, தவறு என்பதை தவிர, வேறு அல்ல!'அஞ்சுவது அஞ்சாமை பேதமை...' என்றார் வள்ளுவர். எல்லா பின்வாங்கல்களும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
திருநாள் கொண்டாடுவோம்!அன்பு உள்ளங்கள்அணிவகுத்துக்கொண்டால்அகண்ட தீபம் ஏற்றிஅகிலமெங்கும் கொண்டாடுவோம்!ஆசை நெஞ்சங்கள்அரவணைத்துக்கொண்டால்காதல் தீபம் ஏற்றிகாலமெல்லாம் கொண்டாடுவோம்!சந்தோஷ மனங்கள்சந்தித்துக்கொண்டால்மகிழ்ச்சி தீபம் ஏற்றிமனம் நிறைய கொண்டாடுவோம்!உதவும் உத்தமர்கள்ஒருங்கிணைந்து கொண்டால்நட்பு தீபம் ஏற்றிநன்றி சொல்லி கொண்டாடுவோம்!உழைக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
* குலோப் ஜாமூனுக்கு பாகு வைக்கும் போது, சம அளவு சர்க்கரை, தண்ணீர் இருக்கும்படி செய்தால், நன்றாக இருக்கும்.* மாவை அழுத்திப் பிசையாதீர்கள்; உள்ளே, கெட்டியாக நின்று விடும்.* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும் போது தான், நன்றாக வரும். ஆறிய பாகில் போட்டால், ஜாமூன், 'மொழுக்'கென்று அழகாக இல்லாமல், குழி போல வந்துவிடும்.* அகலமான பாத்திரத்தில், பாகை ஊற்றி, அதில் தான் ஜாமூன்களை போட ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
தீபாவளி அன்று, அதிகாலையில் சுவாமி படத்தின் முன் தீபமேற்றி, புதுத்துணிகள் மற்றும் பட்சணங்கள் படைத்து வணங்க வேண்டும்.பின், நல்லெண்ணெயில், வெற்றிலை, மிளகு, சீரகம் மற்றும் பூண்டு போட்டு காய்ச்சி, குளித்த பின், வீட்டு பெரியவர்கள் கையால், புதுத்துணியை பெற்று, அணிந்து, அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய பின், லேகியம் சாப்பிட வேண்டும்தலைவாழை இலையில் உணவு பரிமாறி, விருந்துண்டு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X