விண்டோஸ் சிஸ்டத்தின் முதன்மையான நோக்கமே, கம்ப்யூட்டர் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ள மற்றும் பதியப்பட்டுள்ள அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான். அதற்கு முன்னர் இருந்த, டாஸ் இயக்க முறை, ஒரு வேளையில், ஒரு செயலை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற வகையில் செயல்பட்டது. கிராபிகல் இடைமுகத்தின் உதவியுடன் இந்த பல்முனை செயல்பாடு சாத்தியமாயிற்று. எந்த புரோகிராமையும், ..
மிகப் பெரிய கார் நிறுத்துமிடத்தில், உங்கள் காரை நிறுத்திவிட்டு வேகமாக திரைப்படம் பார்க்கவோ, அல்லது பெரிய வணிக வளாகங்களில் பொருள் வாங்கவோ சென்றுவிடுகிறீர்கள். எல்லாம் முடிந்து வந்த பின்னரே, அந்தக் கூட்டத்தில், உங்கள் காரை எங்கு பார்க் செய்திருக்கிறீர்கள் என அறிய முடியவில்லை. சென்னை ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்பிரஸ் அவின்யூ போன்ற இடங்களில் பல அடுக்குகளில் கார்களை பார்க் ..
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வந்த ‘Win32/Ramnit’ என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என, இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response TeamIndia (CERTIn)) எச்சரிக்கை ..
சென்ற மாதம் தான், பிரிபார்ம் நிறுவனம், தன் சி கிளீனர் பதிப்பின் 4 ஆவது பதிப்பினை, பல புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிட்டது. தற்போது பதிப்பு 4.01 வெளியாகியுள்ளது. இதில் விண்டோஸ் 8 ரெஜிஸ்ட்ரி கிளீனிங், முழுமையாகச் செயல்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. அதே போல, பைல் தேடிக் கண்டறிதல் மற்றும் சிஸ்டம் மற்றும் பிரவுசர் மானிட்டரிங் ஆகிய பணிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ..
வரும் 2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, தற்போது இருப்பதைக் காட்டிலும் மூன்று மடங்காக உயரும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் 12.5 கோடி இணையப் பயனாளர்கள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டனர். இது 2016ல் 33 கோடியாக உயரும் எனத் தெரியப்பட்டுள்ளது. BCG என அழைக்கப்படும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்த ..
பன்னாடெங்கும் இயங்கும் கம்ப்யூட்டர்களில், நான்கில் ஒன்று பாதுகாப்பற்ற நிலையில் இயங்குவதாகவும், இவற்றில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குவது மிக எளிதான ஒன்றாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்திட, செக்யூரிட்டி இன்டலிஜென்ஸ் அமைப்பு ஒன்றை இயக்கி வருகிறது. இதன் சமீபத்திய ..
இரண்டு விண்டோவில் ஒரு ஒர்க்புக்:சில வேளைகளில், எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றின் இரண்டு பகுதிகளில், ஒரே நேரத்தில் பணியாற்ற வேண்டியதிருக்கும். ஒவ்வொரு முறையும் அங்கும் இங்குமாகச் சென்று பணியாற்றுவது சற்று சிரமமான காரியம். கவனம் சிதறும் வாய்ப்புகள் உள்ள செயலும் கூட. ஆனால், விண்டோஸ் இதற்கு ஒரு நல்ல வழி தருகிறது. இரண்டு விண்டோக்களில் ஒரே ஒர்க்புக்கினைத் திறந்து நாம் ..
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.வேர்ட் தொகுப்பு:Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய ..
சென்ட் டூ மெனுவை நீட்டலாம்:Send To மெனுவில் கூடுதலாக பைல்களை பதிப்பதில், விஸ்டா இயக்கம் எக்ஸ்பி இயக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. விஸ்டாவில் Control Panel ஐத் திறக்கவும். அதன்பின் Folder Options பிரிவைத்தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைத் திறக்கவும். இங்கு தரப்படும் ஆப்ஷன்களில் Show hidden Files and Folders என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இனி ஸ்டார்ட் ..
புதிய போல்டரில் டாக்குமெண்ட்:வேர்டில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி முடிக்கும் போதுதான் அதனைத் தனியாக ஒரு போல்டரில் வைத்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். இதற்கென மீண்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து அங்கு ஒரு போல்டரை உருவாக்கிப் பின் மீண்டும் டாகுமெண்ட் வந்து போல்டரைத் தேடித் திறந்து சேவ் செய்திட வேண்டியதில்லை. டாகுமெண்ட் வேலை முடிந்தவுடன் Ctrl+S ..
ஆபீஸ் 2003 விட்டுவிட்டு, புதிய கம்ப்யூட்டரில் வேர்ட் 2007 பயன்படுத்தி வருவதாக, ஒரு வாசகர் நீண்ட கடிதம் எழுதியுள்ளார். இதில் வரிகளுக்கிடையே உள்ள இடைவெளி, வழக்கமாக இல்லாமல் சற்று அதிகமாகவே உள்ளதாகவும், இதனை சிங்கிள் லைன் ஸ்பேஸ் இருக்குமாறு அமைப்பது எப்படி என்றும் கேட்டுள்ளார். மேலும் இதனை மாறா நிலையில் அனைத்து டாகுமெண்ட்களுக்குமாக அமைக்கக் கூடிய வழிகளையும் ..
அனைத்து பணிகளையும் முடித்த பின்னர், நாம் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுகிறோம். தொடர்ந்து ஒரு மணி நேரம் வேலை பார்த்த பின்னர், சிறிது ஓய்வு எடுக்க எண்ணுகிறோம். அப்போதும் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திட வேண்டுமா? அப்படியானால், அப்போது கம்ப்யூட்டரை ஸ்லீப் நிலைக்குக் கொண்டு செல்லலாமா? அல்லது ஹைபர்னேட் நிலையில் வைக்கலாமா? இந்த குழப்பத்திற்கான தீர்வை இங்கு ..
இணையம் பற்றிப் படிக்கையில், பயன்படுத்துகையில், பலர் இதற்குக் காரணம் ஆனவர்கள் என்று தெரிந்து கொள்கிறோம். முதல் முதலாக, அவர்களின் புகைப் படங்களுடன், அவர்கள் இணையத்தில் ஏற்படுத்திய கூடுதல் வசதிகளையும் பட்டியல் இட்டது மிகவும் சிறப்பான, நன்றிக் கடன் ஆற்றும் கட்டுரை. உங்களுடன் நாங்களும் சேர்ந்து அந்த வல்லுநர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் அடிக்கிறோம். செவன்த் சென்ஸ் மாணவர் ..
கேள்வி: என் கம்ப்யூட்டரில் பேக் அப் எடுக்க ப்ளாஷ் ட்ரைவினையே பயன்படுத்துகிறேன். இதனால், அதனை எப்போதும் கம்ப்யூட்டரில் இணைத்தே வைத்திருக்கிறேன். இது கம்ப்யூட்டருக்கு நல்லதா? இதனால் கெடுதல் வருமா?எஸ். சிக்கந்தர், உத்தமபாளையம்.பதில்: மிக அருமையான கேள்வி, சிக்கந்தர். நம் ஹார்ட் ட்ரைவ் பயன்பாடு குறித்து கொண்டிருக்கும் சில தகவல்களின் அடிப் படையில் உங்களுக்கு இந்த பயம் ..
டேப்ஸ் டயலாக் பாக்ஸ் வேண்டுமா? மேலே உள்ள ரூலர் அருகே கர்சரைக் கொண்டு சென்று ரூலரின் கீழாக கர்சரை அமைத்து டபுள் கிளிக் செய்தால் டேப் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அப்போது ஒரு டேப் மார்க் ஒன்று உண்டாகும். இதனை நீக்க வேண்டும் என எண்ணினால் டேப் டயலாக் பாக்ஸில் அதனைச் செய்யலாம்; அல்லது அதன் மீது கர்சரை வைத்து மேலே இழுத்துச் சென்று விடலாம். உடனே இடது பக்கம் ரூலரில் இது போல ..