அமெரிக்கா, இந்தியா எனப் பல நாடுகள், நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினைக் கண்காணிக்கிறார்கள் என்ற உண்மை வெளிவந்த பின்னர், ஒவ்வொருவரும், தாங்கள் கம்ப்யூட்டரில் இடும் தகவல்களை, அரசு எடுத்துக் கொள்கிறதோ எனக் கவலை அடைந்துள்ளனர். ஒரு சிலர் இதிலிருந்து தப்பும் வழிகள் குறித்து எண்ணத் தொடங்குகின்றனர். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாடு சூழ்நிலையில், எந்த வழிகளைக் கையாண்டால், ..
தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டா விட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஓர் அம்சத்தை இங்கு பார்ப்போம்.எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் ..
வெகு வேகமாகத் தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பேஸ்புக் சமூக இணைய தளம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பேஸ்புக் தளத்தினைப் பார்ப்பது ஒருவித மன நோயாகவே, மக்களிடம் அமைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேஸ்புக் சமூக இணைய தளத்தில், நாம் நம் உணர்ச்சி உந்துதலில், பல தகவல்களை, செய்திகளை, நம் கருத்தினப் பதிவு செய்துவிடுகிறோம். பின்னரே, சிலவற்றைப் பதியாமல் இருந்திருக்கலாமே ..
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் முற்றிலும் புதிய வழிமுறை ஒன்றை மைக்ரோசாப்ட் அண்மையில் அறிமுகப்படுத்தியது. சிலருக்கு வழக்கமான விண்டோஸ் இயங்கு தளத்திலிருந்து வருவதற்குத் தயக்கம் இருந்தாலும், இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் செயல்முறைக்கு மாறி வருகின்றனர். என்னதான் மைக்ரோசாப்ட் மீது குற்றம் சாட்டினாலும், கம்ப்யூட்டர் ..
எக்ஸெல் பழைய பதிப்பிலிருந்து புதிய எக்ஸெல் 2007க்கு மாறியுள்ளீர்களா? அப்படியானால், பார்முலா பாரின் அருகே உள்ள டூல்ஸ் பிரிவில் சிறிய மாற்றத்தினைக் கவனிக்கலாம். உங்களுடைய பழைய பதிப்பில், பார்முலா பாருக்கு அடுத்தபடியாக ஒரு சமக்குறி அடையாளம்(equal sign) இருந்திருக்கும். நீங்களாக அதனை அமைக்க வேண்டியதில்லை. இதில் கிளிக் செய்தால், ஒரு செல்லில் என்ன இருந்தாலும், அதனை நீக்காமல், ..
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் வசதியினைப் பயன்படுத்தலாம். பலரும் அறியாத ஒரு வசதியை, இங்கு நான் உங்களுக்குத் தரப் போகிறேன்.பைல் ஒன்றைத் திறக்கும் போதும், சேவ் செய்திடும்போதும், சிஸ்டமானது, சிறிய அளவில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் டூலைப் பயன்படுத்துகிறது. இதனால் என்ன என்கிறீர்களா? இதனால் தான் நமக்குக் ..
ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் தமிழ் உள்ளீடு செய்வதற்கான, பயன்பாட்டு தொகுப்பான, செல்லினம், தற்போது கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு பதிப்பு 2 ஆகக் கிடைக்கிறது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், தமிழில் உள்ளீடு செய்வதற்கென, மலேசியா வினைச் சேர்ந்த முத்து நெடுமாறன், செல்லினம் என்ற பயன்பாட்டு தொகுப்பினை பத்து ..
வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும். 1. எந்த இடத்தில் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை வர ..
வரும் ஜூன் மாதத்தில், இந்திய இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 24 கோடியே 30 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் எட்டு மாதங்களில், இந்த வளர்ச்சி 18.53 சதவீதமாக இருக்கும். இதற்கான அடிப்படைக் காரணங்களில், உயர்ந்து வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடும் ஆகும். ஜூன் மாதத்தில் இந்த வளர்ச்சியை அடையும் பட்சத்தில், உலக அளவில், இணையப் பயனாளர் எண்ணிக்கையில், இந்தியா, ..
டாக்குமெண்டில் சொல் தேர்ந்தெடுத்தல்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை எடிட் செய்திடுகையில், வேர்ட் புரோகிராம், நாம் என்ன செய்திடப் போகிறோம் என உணர்ந்து, நாம் முடிக்கும் முன்னர் தானே அதனை மேற்கொள்கிறது. பல வேளைகளில் இது நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட் ஒன்றில், சொல் ஒன்றின் நடுப்பகுதியிலிருந்து இன்னொரு சொல் ஒன்றின் நடுப் பகுதி வரை நாம் ..
தன் ஊழியர்களைச் சுதந்திரமாக ஆய்வு செய்திட வசதிகள் செய்து கொடுத்து, அவர்களின் புதிய முயற்சிகளில் தானே, கூகுள் அதிகமான சேவைகளை உருவாக்கியது. பின் ஏன் அதனை நிறுத்திவிட்டது? காரணம் தெரிந்தால் தரவும்.நீ. மஹா லட்சுமி, திருப்பூர்.என்னதான் வேகமாக வளர்ந்தாலும், கூகுள் ப்ளஸ் பிரிவில், இன்னும் சில தனித்தன்மை கொண்ட வசதிகளைத்தர கூகுள் முன் வர வேண்டும். அப்போதுதான் பயனாளர்கள் ..
கேள்வி: நான் ஆண்ட்ராய்ட் சாம்சங் போன் பயன்படுத்துகிறேன். இதில் உள்ள கீ போர்டில் சமன் எனப்படும் ஈக்குவல் சைன் அமைக்க முடியவில்லை. எண்களுக்கான பகுதியில், இந்த அடையாளம் இல்லை. சில இணைய முகவரிகளில் இது தேவைப்படுகிறது. இதற்கு என்ன வழி?ஆர். ராஜ்வேல், மதுரை.பதில்: ராஜ்வேல், சற்றுப் பொறுமையாக அனைத்து கீகளையும் பார்த்திருக்கலாம். எண்களுக்கான பிரிவில் 1/3 என்று ஒரு கீ இருக்கும். ..