சிலா தோரணம்
திருமலையில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் மலைப்பாதையில்
சிலாதோரணம் என்ற அறிவியல் ஆர்ச் உள்ளது. இது ஒரு
பாறைப்படிமம். மிகமிக அரிதாக அமைந்துள்ள இப்பாறைப்படிமம்
இயற்கையாக அமைந்த ஒன்றாகும். ஆசியாவில் இது போன்ற அமைப்பு
வேறெங்கும் இல்லை. இரண்டாயிரத்து 500மில்லியன் ஆண்டுகளுக்கு
முன் உருவானது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.இத்தோரணத்தின்
நீளம் 25 அடி. உயரம் 10அடி. இவ்விடத்தில் இருந்த புற்றில்
இருந்தே வெங்கடேசப் பெருமாள் சீனிவாசனாக வெளிப்பட்டதாகக்
கூறுகிறார்கள். இந்த படிமத்தில் சங்கு, கரம், அபயஹஸ்தம்,
கருடாழ்வார், ஐராவதம் ஆகிய உருவங்கள் இயற்கையாக
அமைந்துள்ளன.
இவ்விடத்திற்கு ஜீப்கள் சென்று
வருகின்றன. திருமகளைத் தேடி அலைந்த திருமலை முழுவதும்
அலைந்த சீனிவாசப் பெருமாள், இறுதியாக ஓரிடத்தில் வந்து
நின்றார் . அம்மலையின் சிகரத்தில் திருமால் பாதம் பதித்து
நின்ற இடம் நாராயணகிரி என்று அழைக்கப்படுகிறது.இப்பாதங்களை
"ஸ்ரீவாரி பாதம்' என்று அழைக்கின்றனர். ஒரு அழகான
மண்டபத்தின் நடுவில் பாததரிசனத்தை இப்போதும் காணலாம்.
பக்தர்கள் பாதங்களை வலம் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம்
செய்கின்றனர். மலையுச்சியிலிருந்து கீழுள்ள கோயிலையும்
ரசிக்கலாம். ஜீப்பில் சென்றால் சிலாதோரணத்தையும், ஸ்ரீவாரி
பாதங்களையும் ஒரே நேரத்தில் தரிசித்து விடலாம். இவ்விரண்டு
பகுதிகளும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.
பாவாஜி
அதிஷ்டானம்
ஹாதிராம் பாவாஜி என்னும் வடநாட்டு பக்தர் சீனிவாசனை
தினமும் வணங்குபவர். அவரின் பக்தியை ஏற்ற வெங்கடேசப்
பெருமான், பாவாஜி தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். ""சுவாமி!
என்னுடன் சொக்கட்டான் விளையாடி அருள் செய்ய வேண்டும்''
என்று பாவாஜி கேட்டுக் கொண்டார் |
|
வெங்கடேசனுடன் அதையேற்று
விளையாடினார். ஒருநாள் பெருமாள் தான் அணிந்திருந்த
மாலை (ஹாரம்) ஒன்றை விட்டுச் சென்று விட்டார்.
ஹாதிராம் பாவாஜி காலையில் கோயிலில் சென்று
கொடுத்துவிடலாம் என்று எண்ணினார். காலையில்
பூஜைக்கு சென்ற அர்ச்சகர்கள் மாலை இல்லாததைக் கண்டு
அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மாலையை வைத்திருந்த
பாவாஜியை திருடன் என்று முடிவெடுத்து தண்டித்தனர்.
பாவாஜி இறைவனே நேரில் வந்து சொக்கட்டான் விளையாடிய
உண்மையை சொல்லியும், யாரும் நம்புவதாக இல்லை
|
பாவாஜியை சிறை வைத்தனர். அவரிடம் ""நீர் சொல்வது
உண்மையானால், இந்த அறையிலுள்ள
கரும்புக்கட்டுக்களைமுழுமையாகத் தின்று தீர்க்க
வேண்டும். அப்படியில்லாவிட்டால் கடுமையான தண்டனை
கிடைக்கும்,'' என்று நிபந்தனை விதித்தனர். பாவாஜி
பக்தியுடன் பாலாஜியைத் தியானிக்கத் தொடங்கினார். |
|
நள்ளிரவில் யானையாக வந்த பெருமாள்
கரும்புக்கட்டுகளை தின்று தீர்த்தார்.
திருமலையிலிருந்து பாபவிநாச தீர்த்தம் செல்லும்
வழியிலுள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் பாவாஜியின்
அதிஷ்டானம் அமைந்து உள்ளது. வேணுகோபாலர் சன்னதியில்
சுவாமி மிகுந்த அழகுடன் காட்சியளிப்பார்.
நுழைவுக்கட்டணம்ரூ.2. |
|
சிகரத்தில் ஸ்ரீவாரி பாதம்
|
திருமகளைத் தேடி அலைந்த திருமலை முழுவதும் அலைந்த
சீனிவாசப் பெருமாள், இறுதியாக ஓரிடத்தில் வந்து
நின்றார் . அம்மலையின் சிகரத்தில் திருமால் பாதம்
பதித்து நின்ற இடம் நாராயணகிரி என்று அழைக்கப்
படுகிறது.இப்பாதங்களை "ஸ்ரீவாரி பாதம்' என்று
அழைக்கின்றனர். ஒரு அழகான மண்டபத்தின் நடுவில்
பாததரிசனத்தை இப்போதும் காணலாம். பக்தர்கள் பாதங்களை
வலம் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கின்றனர்.
மலையுச்சியிலிருந்து கீழுள்ள கோயிலையும் ரசிக்கலாம்.
ஜீப்பில் சென்றால் சிலாதோரணத்தையும், ஸ்ரீவாரி
பாதங்களையும் ஒரே நேரத்தில் தரிசித்து விடலாம்.
இவ்விரண்டு பகுதிகளும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. |
|
|