Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்(திருப்பதி பிரம்மோற்சவம்)

திருப்பதி பிரம்மோற்சவம்

 

BACK NEXT

 

08.  பிரம்மோற்ஸவம் நிகழ்ச்சி நிரல்

செப். 30: பிரம்மோற்ஸவத்தில் முந்தையநாளான இன்று தேவர்களையும், முனிவர்களையும், பக்தர்களையும் பிரம்மோற்ஸவ விழாவிற்கு அழைக்கும் அங்குராப்பணம் நிகழ்ச்சி.

அக்.1: மாலை 5.20: கொடியேற்றம்,  இரவு9: பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்.


அக்.2: காலை9மணி: சிறிய சேஷ வாகனத்தில் உலா
இரவு9மணி: ஹம்ச (அன்னம்) வாகனத்தில் பவனி.


அக்.3: காலை9மணி : சிம்ம வாகனத்தில் பவனி இரவு 9மணி: முத்துப்பந்தல் வாகனத்தில் பவனி


அக்.4: காலை 9மணி: கற்பக விருட்ச வாகனத்தில் பவனி இரவு9 மணி: சர்வபூபால வாகனத்தில் பவனி


அக்.5: காலை 9மணி: மோகினி அவதாரத்தில் சுவாமி உலா. இரவு 9மணி: கருடசேவை


அக்.5: காலை 9மணி: மோகினி அவதாரத்தில் சுவாமி உலா.
இரவு 9மணி: கருடசேவை


அக்.6: காலை 9மணி: அனுமந்த வாகனத்தில் பவனி
மாலை 5மணி: தங்கத்தேர் உலா இரவு 9மணி: யானை வாகன பவனி.


அக்.7: காலை 9மணி: சூரியபிரபை வாகனத்தில் பவனி
இரவு 9மணி: சந்திர பிரபை வாகனத்தில் பவனி.


அக்.8: காலை 7மணி: தேரோட்டம்
இரவு9மணி: குதிரை வாகனத்தில் பவனி.

 
அக்.9: காலை 5மணி: பல்லக்கில் பவனி
காலை 8மணி: புஷ்கரணயில் சக்ர ஸ்நானம்.க்ஷ
.............
மிக முக்கியமான கருட சேவை

பிரம்மோற்ஸவத்தின் முக்கியவிழாவான கருடசேவை ஐந்தம் நாள் கொண்டாடப்படும். இதற்கு ஒரு கதை உண்டு. திருமால் சீனிவாசனாக அவதாரம் கொண்டு திருப்பதி வந்து சேர்ந்தார். தான் ஓடி விளையாட வைகுண்டத்தில் இருப்பது போல இயற்கை அழகு மிக்க ஒரு இடம் வேண்டும் என பெருமாள் சொல்ல, கருடன் வைகுண்ட மலையையே பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழுமலையும் ஒன்று சேர்ந்து பூலோகத்திற்கு வந்தது. அங்கேயே சீனிவாசன் குடியிருந்தார். இன்றும் குடியிருக்கிறார். அவ்வளவு பெரியமலையையே பெயர்த்து வந்த கருடனைக் கவுரவிக்கும் வகையில் திருமால் அவரையே வாகனமாக்கி கொண்டார். தன்னைத் தரிசிக்கவரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனை தரிசித்தபிறகே, தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லாப் பெருமாள் கோயில்களிலும் வாசலில் கருடபகவான் வீற்றிருக்கிறார். அன்று பெருமாள் லட்சுமி ஹாரம் (மாலை) அணிந்திருப்பார். மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம் என்பதால், ஒரு காலத்தில் கருடசேவை முடியும் வரை நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் கருதி, சில நிமிடங்கள் அடைக்கப்படுகிறது.

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        | 
  மின்னஞ்சல்  |   | 



முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in