பிரம்ம புராணத்தில் சொல்லப்படும் தகவலின்படி
வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி
வராக சுவாமியை
தரிசிக்க வேண்டும் என்பது விதி. அதுபோல அவருக்கே முதல்
நைவேத்யமும் படைக்க வேண்டும். அத்ரி சம்ஹிதை என்ற நூலில்
சொல்லப்பட்டுள்ளபடி வராக அவதாரம் ஆதி வராகம், பிரளய வராகம்,
யஜ்ன வராகம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது.
இவ்வகையில் இங்குள்ள வராக சுவாமி "ஆதி வராகர்'
எனப்படுகிறார். இவரது திருநாமம் "ஆதிவராக மூர்த்தி'
என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக்
கரையில் உள்ளது.
.......
சுவாமி புஷ்கரணி
|
திருப்பதியில் உள்ள தெப்பக்குளத்தை சுவாமி புஷ்கரணி
என்பர். பார்ப்பதற்கு மகா விஷ்ணு தங்கியுள்ள வைகுண்டம்
போல காட்சியளிக்கும். கருடபகவான் இந்த குளத்தைவெங்கடா
சலபதிக்காக அமைத்துள்ளார். |
|
இந்த தீர்த்தத்தில்
உலகிலுள்ள மூன்று கோடி தீர்த்தங்கள் கலந்திருப்பதாக
சொல்லப்படுகிறது. மார்கழி மாதத்தில் 12வது நாளில் "முக்கோட்டி
துவாதசி' இந்த குளக்கரையில் நடக்கும். அன்று பகவான் இந்த
குளத்தில் நீராடுவதாக நம்பிக்கை. அந்த நாளில் கங்கை நதியும்
இந்த தீர்த்தத்திற்கு வந்து நீராடி தன்னிடம் சேர்ந்துள்ள
பாவங்களை கழுவுகிறது. இந்த குளத்தின் மேற்கு கரையில் வராக
சுவாமி கோயிலும், தென்கரையில் வெங்கடாலசபதி கோயிலும்
அமைந்துள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இங்கு
தெப்பத்திருவிழா நடக்கும். பிரம்மோற்ஸவத்தின் கடைசிநாளில்
"சக்ர ஸ்நானம்' நிகழ்ச்சி இந்த தீர்த்தத்தில்
நடத்தப்படும்.தை மாதத்தில் ராமகிருஷ்ண தீர்த்த திருவிழாவும்,
மாசி பவுர்ணமியில் குமாரதாரா தீர்த்த திருவிழாவும், பங்குனி
பவுர்ணமியில் தும்புரு தீர்த்த திருவிழாவும், கார்த்திகை
மாத க்ஷிராப்தி துவாதசியில் சக்ர தீர்த்த விழாவும்
நடக்கிறது.
.......
பேடி ஆஞ்சநேயர் கோயில்
|
திருப்பதி சன்னதி வீதியில், ஸ்ரீபேடி ஆஞ்சநேய சுவாமி
கோயில் உள்ளது. ஒரு பெருமாள் கோயிலின் எதிரே கருடன்
அல்லது ஆஞ்சநேயர் கோயில் தனித்து அமைந்திருந்தால் அது
மிகவும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. |
|
அவ்வகையில் வெங்கடாசலபதி
கோயிலின் எதிரே இந்த கோயில்அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் இவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள்
நடத்தப் படும். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்றும் விசேஷ பூஜை உண்டு.
"பேடி' என்றால் "விலங்கு' என பொருள். அஞ்சனாதேவி
திருமலையில் தவமிருந்து ஆஞ்சநேயரை பெற்றதாக சொல்வதுண்டு.
வெங்கடாசலபதியின் அருளால் பிறந்த இந்த குழந்தை அவரை எந்த
காலமும் பிரியக்கூடாது என அஞ்சனாதேவி நினைத்தாள். ஆனால்
விளையாட்டு பிள்ளையான ஆஞ்சநேயரோ சூரியனை பிடிப்பதற்காக
வானத்திற்கு பறந்து சென்று திரும்பினார். இதன்பின்னும் அவர்
எங்காவது விளையாட செல்லக்கூடாது என்பதற்காக அஞ்சனா அவருக்கு
விலங்கிட்டு வைத்தாள். அந்த நிலையிலேயே அவரை வெங்கடாசலபதி
சன்னதி முன்னால் நிறுத்தி சுவாமியை எந்நேரமும் வணங்க
வேண்டும் என கட்டளையிட்டாள். இந்த விலங்கை நம்மால் காண
இயலாது. ஏனெனில் அஞ்சனாதேவி விண்வெளியையே கயிறாக திரித்து
அவரது கைகளில் கட்டி வைத்தாள். விலங்கிடப்பட்ட ஆஞ்சநேயர்
என்பதால் இவரை "பேடி ஆஞ்சநேயர்' என்கிறார்கள். இதுதவிர
வராக சுவாமி கோயில் எதிரிலும் ஒரு ஆஞ்சநேயர் கோயில்
இருக்கிறது.