image
image

மதுரை நகரில் பார்க்க வேண்டிய இடங்கள்

மீனாட்சி அம்மன் கோயில்  
 

மதுரையின் மிக முக்கியமான இடமாக மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. மதுரைக்கு பெருமை சேர்ப்பதே இந்த கோயில் தான். திராவிட கட்டடகலைக்கு மீனாட்சி அம்மன் கோயில் சிறந்த எடுத்து காட்டாகும். 6 ஏக்கர் பரப்பளவில் கோயில் அமைந்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலில் 12 கோபுரங்களும் 4 விமானங்களும் உள்ளன. கோயில் கோபுரங்களில் உயரமானது தெற்கு கோபுரம் ஆகும். இதன் உயரம் 170 அடியாகும்.

Madurai Meenakshi Temple

பொற்றாமரை குளம்

 

மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பம்சமாக பொற்றாமரை குளம் அமைந்துள்ளது. இந்த குளம் 165 அடி நீளமும், 120 அடி அகலமும் உடையது. குளத்தில் அல்லி, தாமரை போன்ற பூக்கள் உள்ளன. மேலும், இந்த குளத்தில் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. தற்போது பொற்றாமரை குளத்தில் 7 கிலோ எடையுள்ள ஐம்பொன்னால் ஆன தாமரை மிதக்கவிடப்பட்டுள்ளது.

Madurai Golden Lotus Tank

ஆயிரம் கால் மண்டபம்

 

மற்றொரு சிறப்பம்சமான ஆயிரம் கால் மண்டபம் திராவிட கட்டடகலைக்கு சான்றாக அமைந்துள்ளது. ஆயிரம் கால் மண்டபத்தில் 999 தூண்களே உள்ளன. மதுரையை ஆண்ட முதல் நாயக்கர் அரசரின் பிரதம மந்திரியான ஆர்யநாத முதலியாரால் கட்டப்பட்டிருக்காலம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Meenakshi Temple

 ஆயிரம் கால் மண்டபத்தில் 1200 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள், பழங்கால பொருட்கள் போன்றவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வெளியே மேற்கு பகுதியில் இசைத்தூண் உள்ளது. இந்த தூணை தட்டினால் இசை வெளிப்படும். மண்டபத்தின் தெற்கே திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு தான் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 

  Next


image
image
image