இவற்றை
ஆராய்ந்த தொல்பொருள்
ஆராய்ச்சியாளர்கள் 2800 ஆண்டு
பழமையானது என உறுதியளித்தனர்.
இதன் மூலம் புதிய கற்காலத்தில்
இருந்து 3000 ஆண்டுகளுக்கு
முன்னரே திருநெல்வேலியில்
மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது
தெரிய வந்தது. மேலும்
ஆராய்வதற்காக அரிச்சநல்லூர்
தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி
மையத்தின் கட்டுப்பாட்டில்
உள்ளது.
பாண்டியர்கள் காலத்தில்
திருநெல்வேலி தென்பகுதியின்
தலைநகரமாக விளங்கியது. ஆற்காடு
நவாப் மற்றும் நாயக்கர்கள்
காலத்தில் இது முக்கிய
வர்த்தக நகரமாக இருந்தது.
அவர்கள் திருநெல்வேலியை நெல்லை
சீமை என்று அழைத்தனர்.
பாண்டியர்கள் ஆட்சிக்கு பின்
கி.பி. 900 முதல் 1200 வரைசோழ
பேரரசின் முக்கிய நகரமாக
திருநெல்வேலி இருந்தது.
பின்னர் விஜயநகர பேரரசின்
கட்டுப்பாட்டிலும்,
நாயக்கர்கள், நவாப்கள்
கட்டுப்பாட்டிலும் இருந்தது.
1781ம் ஆண்டு ஆற்காடு நவாப்கள்
உள்ளூர் நிர்வாகத்தை
ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர்.
1801ம் ஆண்டு திருநெல்வேலியை
ஆங்கிலேயர்கள் முழுமையாக
கைப்பற்றினர். அதன் பின்னர்
இந்தியா சுதந்திரம் அடையும்
வரை ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி
புரிந்தனர்.
ஆங்கிலேயர்களுக்கு
திருநெல்வேலி என்பது
உச்சரிக்க சிரமமாக இருந்ததால்
ஆற்காடு நவாப்கள் 1801ம் ஆண்டு
தின்னவேலி என பெயரிட்டனர்.
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய
கம்பெனியின் நிர்வாகத்தில்
திருநெல்வேலி ராணுவ
தலைமையகமாக இருந்தது. இதன்
மூலம் பாளையக்காரர்களை
ஆங்கிலேயர்கள் ஒடுக்கினர்.
இதன் பின்னர் திருநெல்வேலி
மற்றும் பாளையங்கோட்டை
இரண்டும், இரட்டை நகரங்களாக
வளர துவங்கியது.
திருநெல்வேலி அல்வா நகரம்
என்றும் அழைக்கப்பட்டது.
திருநெல்வேலி அல்வாவை பற்றி
தெரியாதவர்களே இருக்க முடியாது.
அடுத்து, சுவாமி நெல்லையப்பர்
காந்திமதி கோயில் பிரசித்தி
பெற்றதாகும். திருநெல்வேலி,
திருநெல்வேலி டவுன்,
பாளையங்கோட்டை, மேலப்பாளையம்
என்று மூன்று நிர்வாக
மையங்களாக செயல்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் மக்கள்
தொகை, வருவாய் ஆகியவற்றை
கொண்டு 1999ம் ஆண்டு
மாநகராட்சியாக
அறிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி பிறநகரங்களுடன்
சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.
மதுரை, கன்னியாகுமரி, கொல்லம்,
கேரளாவுடன் தேசிய
நெடுஞ்சாலைகள் மூலம்
இணைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்களான
வீரபாண்டிய கட்டபொம்மன்,
வ.உ.சிதம்பரம் பிள்ளை,
பாரதியார் (தூத்துக்குடி)
போன்றவர்கள் திருநெல்வேலியை
சேர்ந்தவர்களாவர். 1990ம்
ஆண்டிற்கு முன் தூத்துக்குடி,
திருநெல்வேலி மாவட்டத்திற்குள்
இருந்தது.