நெல்லையப்பர்
காந்திமதியம்மன் கோயில்
இந்த கோயில்
நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
ரயில் நிலையத்தில் இருந்து 2
கி.மீ தொலைவில் கோயில் உள்ளது.
இங்குள்ள தெப்பகுளம்,
இசைத்தூண்கள், ஆயிரங்கால்
மண்டபம் மற்றும் அரிய நகைகள்
ஆகியவை பார்க்ககூடியனவாகும். |
 |
இந்த கோயிலில் 2 கோபுரங்கள்
உள்ளன. இந்த கோபுரங்கள்
ஆகமவிதிப்படி ராமபாண்டியன்
என்ற மன்னனால் கட்டப்பட்டது.
7ம் நூற்றாண்டில் நின்றசீர்
நெடுமாறன் என்ற மன்னனின்
ஆட்சியின் போது கோயிலின்
முக்கிய பகுதிகள் மறு
சீரமைக்கப்பட்டது. 1756ம்
ஆண்டில் நுழைவாயில் அருகில்
அழகான நந்தவனம் அமைக்கப்பட்டது.
நூறு துண்களுடன் கூடிய மண்டபம்
நந்தவனத்தின் நடுவில் உள்ளது.
நெல்லையப்பர் கோயில் மதுரை
மீனாட்சி அம்மன் கோயிலை விட
பெரியதாகும்.
குற்றாலம் :
நெல்லை
மாவட்டத்தின் மிக முக்கியமான
சுற்றுலா தலமாக குற்றாலம்
விளங்குகிறது. இங்குள்ள
நீர்வீழ்ச்சியில் நீராட
தமிழகம் மட்டுமல்லாமல்
பிறமாநில மக்களும் சீசன்
நேரத்தில் குவிகின்றனர்.
குற்றாலத்தில் மெயின் அருவி,
ஐந்தருவி, செண்பக அருவி, புலி
அருவி, பழைய குற்றாலம் அருவி,
பழத்தோட்ட அருவி, தேனருவி,
சிற்றருவி, புது அருவி போன்ற
9 அருவிகள் உள்ளன. |
 |
இவற்றில்
நீராடுவது உடலுக்கும்
மனதிற்கும் புத்துணர்வு
தருகிறது. இந்த நீரில்
மூலிகைகளின் குணம் இருப்பதால்
மன நோய்க்கு மருந்தாக அமைவதாக
கூறுவதுண்டு. ஆகஸ்ட் மாதம்
அருவிகளில் நீர் வரத்து அதிகம்
இருக்கும். தாமிர சபையும்
இங்குதான் உள்ளது. மங்குஸ்தான்,
ராம்தான் போன்ற மலைகளில்
இருந்து கிடைக்கும் பழங்கள்
சீசன் நேரத்தில் கிடைக்கும்.
முண்டந்துறை வனவிலங்கு
சரணாலயம்
முண்டந்துறை
களக்காடு வனவிலங்கு சரணாலயம்
1988ம் ஆண்டு புலிகள்
சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இந்த சரணாலயம் 817 சதுர
கிலோமீட்டர் பரப்பளவில்
அமைந்துள்ளது. நெல்லையில்
இருந்து 20 கி.மீ தொலைவில்
உள்ள அம்பாசமுத்திரம் அருகே
இந்த சரணாலயம் அமைந்துள்ளது. |
 |