image
image

சென்னை நகரில் தங்கும் வசதி

சொகுசு ஓட்டல்கள்


பிஷர்மேன் கோவ்:

மு ன்பு டச்சு கோட்டையாக இருந்த இடம் தற்போது சொகுசு ஓட்டலாக உரப்பெற்றுள்ளது. 88 காட்டேஜ்களைக் கொண்ட இந்த ஓட்டலில் அனைத்து அளைகளிலும் இருந்து கடலைப் பார்த்தது ரசிக்கலாம். ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக தோட்டம் மற்றும் அமர்ந்து ரசிக்கும் இடம் என வடிவமைக்கப்பட்டுள்ளது. விமான நிலயத்திலிருந்து 32 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஒட்டல் பகுதியில் பனைமரங்கள் நிறைந்துள்ளன. இங்குள்ள வர்த்தக மையத்தில் ஒயர்லஸ் இன்டர்நெட், கம்ப்யூட்டர் போன்ற வசதிகளும் 400 பேர் அமரத்தக்க மாநாட்டு மண்டபமம் உள்ளது.

முகவரி: Covelong Beach, Kanchipuram District 603 112 Tamil Nadu; Tel: (91-4114) 272304/5/6; URL: www.tajhotels.com

சோழா ஷெரட்டான்:

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சோழா ஷெரட்டான் ஓட்டல், சென்னையில் உள்ள சிறந்த 5 நட்சத்திர ஓட்டல்களில் இது ஒன்று. இந்திய சுற்றுலா கழகத்தின் அங்கீகாரம் பெற்ற முதல் ஓட்டலான இது விமான நிலையத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஓட்டலின் அருகேயே ஷாப்பிங் மற்றும் வர்த்தக மையங்கள் உள்ளன. இந்த ஓட்டலில் 33 சொகுசு அறைகள், 92 சாதாரண அறைகள், சூட்கள் மற்றும் 44 இரட்டை அறைகள் உள்ளன. இந்த இரட்டை அறைகளில் படுக்கை அறை தவிர பார்க்க வரு÷õரைச் சந்திப்பதற்கான தனி இடமும் உள்ளது. வர்த்தகம் தொடர்பான சிறப்பான சேவையும் உள்ளது.

முகவரி: Cathedral Road, Chennai - 600 086; Tel: (91-44) 2811 0101; URl: www.welcomgroup.com

தி டிரிடென்ட்:

சென்னை விமான நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தி டிரிடென்ட் ஓட்டல், ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர், கிண்டி தொழிற்பேட்டை போன்ற வர்த்தக மையங்கள் அருகே அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பிலான தோட்டப் பகுதியில் அமைந்துள்ள இந்த முதல் தர சர்வதேச ஓட்டலில் 167 அறைகள் உள்ளன. 375 பேர வரை அமரத்தக்க விருந்து மண்டபங்கள், மாநாட்டு மண்டபங்கள் உள்ளன.

 முகவரி: /24, G.S.T. Road, Chennai 600 027; Tel: (91) (44) 2344747


தாஜ் கன்னிமாரா:

சென்னையில் பாரம்பரிய ஒட்டல்; அரண்மனை போல் தோற்றம் அளிக்கும் இந்த அந்த அளவிற்கு சேவையும் உண்டு. குளுகுளு வசதி கொண்ட 150 அறைகளும் 9 சூட்களும் கொண்ட இந்த ஓட்டல் விமான நிலையத்திலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் உள்ளது.

முகவரி: Taj Connemara, Binny Road Chennai - 600 002; Tel: (91-44) 5500 0000; URl: www.tajhotels.com

தாஜ் கோரமண்டல்:

தென்இந்திய வடிவமைப்பும் ஐரோப்பிய கம்பீரமும் கொண்ட தாஜ் கோரமண்டல் ஓட்டல் விமான நிலையத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த ஒட்டல், தொழில் அதிபர்களுக்கும் சற்றுலா பயணிகளுக்கும் ஏற்றது. அனைவரின் வசதிக்கும் ஏற்ற 205 அறைகளும் 22 சூட்களும் கொண்ட இந்த ஒட்டலில் 25 பேர் முதல் ஆயிரம் பேர் வரை பங்கேற்கும் வகையில் மாநாட்டு மண்டபங்களும் விருந்து மண்டபங்களும் உள்ளன.

முகவரி: Taj Coromandal 37, Mahatma Gandhi Road, Nungambakkam, Chennai 600 034; Tel: (91-44) 5500 2827; URl: www.tajhotels.com

 
 
 

Next



image
image
image