கபாலீஸ்வரர் கோயில்: மயிலாப்பூர் பகுதியில்
அமைந்துள்ள சிவன் கோயில்.
சிவபெருமாøன் மயில் வடிவில்
பார்வதி தேவி வழிபட்டதால்
இந்த பகுதி மயிலாப்பூர் என்று
அழைக்கப்படுகிறது. மேலும்
இங்கு தேவாரம் பாடிய மூவரில்
ஒருவரான திருஞான சம்பந்தர்
பதிகம் பாடி ஒரு சிறுவனை
உயிர்ப்பித்ததாகவும் புராணம்
கூறுகிறது. மார்ச்- ஏப்ரல்
மாதங்களில் நடத்தப்படும்
அறுபத்து மூவர் திருவிழா
குறிப்பிடத்தக்கது.
மருந்தீஸ்வரர் கோயில்:
11ம் நூற்றாண்டைச் சேர்ந்த
இந்த கோயில் அக்காலத்து
கட்டிடநுட்பத்திற்கும்
கலாசாரத்திற்கும்
எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
ராமாயணம் எழுதிய வால்மீகி
இந்த கோயிலுக்கு வந்து
தரிசித்ததாக கூறப்படுகிறது.
அய்யப்பன் கோயில்: சென்னையில்
உருவான முதல் அய்யப்பன் கோயில்
நுங்கம்பாக்கத்தில்
மகாலிங்கபுரத்தில்
அமைந்துள்ளது. இந்த கோயிலில்
அக்டோபர் முதல் ஜனவரி வரை
சிறப்பு பூஜைகள்
நடத்தப்படுகின்றன. இதேபோல்
ராஜா அண்ணாமலைபுரத்திலும் ஒரு
அய்யப்பன் கோயில் உள்ளது.
கேரளாவில் சபரிமலையில் உள்ள
அய்யப்பனே இங்கும் மூல
விக்ரகம்; சபரி மலையில் உள்ளது
போன்றே இங்கும் 18ம் படி
அமைந்துள்ளது.
காளிகாம்பாள் கோயில்:
சென்னை தம்புச் செட்டி
தெருவில் அமைந்துள்ள காளி
கோயில்.
மத்ய கைலாஷ்:
நடுக்கைலாயம் என்று
அழைக்கப்படும் இந்த கோயிலில்
பரமேஸ்வரர், அம்பிகை, ஆதித்யன்,
திருமால் ஆகியோருடன்
விநாயகரும் இடம் பெற்றுள்ளார்.
இந்த கோயிலில் ஆஞ்சநேயர்
மற்றும் வைரவருக்கு தனி
சந்நிதிகள் உள்ளன.
நவகிரகங்களும் உள்ளன.
அடையாறில் இருந்து தரமணி
செல்லும் வழியில் அமைந்துள்ள
இந்த கோயில், கண்கவர் பளிங்கு
கற்களால் கட்டப்பட்டுள்ளது.
பார்த்தசாரதி கோயில்:
திருவல்லிக்கேணி பகுதியில்
அமைந்துள்ள இந்த வைஷ்ணவ கோயில்,
பழங்கால தென்னிந்திய கோயில்
சிற்பக் கலைக்கு
எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இங்கு திருமாலின் பல்வேறு
அவதாரங்கள்
சித்தரிக்கப்பட்டுள்ளன.
இங்குள் கோயில் யானை, தெய்வ
வழிபாட்டில் ஈடுபடுவதையும்
காணலாம்.
ஸ்ரீ வடபழநி ஆண்டவர் கோயில்:
வடபழநி பகுதியில் அமைந்துள்ள
இந்த முருகன் கோயில் நூறாண்டு
பழமையானது. இங்கு 4 அடி உயர
முருகன் விக்ரகம் உள்ளது.