Advertisement
மாவட்டம் >> மதுரை சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
மதுரை
மதுரை மாவட்டம் முதல் பக்கம்
மதுரை நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
மதுரை வரலாறு
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி

மதுரையில் பல சாப்ட்வேர் நிறுவனங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளது. மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் அருகிலும், புறநகர் பகுதியிலும் இரண்டு தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இலந்தைகுளம் அருகில் ...

மேலும்...
மதுரை சுற்றுலா
ஈகோ பார்க்:

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமானது ஈகோ பார்க். இங்கு குழந்தைகள் விளையாடு வதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு விடுமுறை காலங்களில்

மேலும்...
மதுரை
மதுரை

மதுரை சிறப்பு


இந்தியாவின் பழமை வாய்ந்த நகரங்களில் மதுரையும் ஒன்று. மதுரை தமிழகத்தின் தென்பகுதியில் உள்ளது. சங்க காலத்தில் மிகவும் பெருமை வாய்ந்த நகரமாக விளங்கியது. கோயில்களின் நகரம் என அழைக்கப்படும் மதுரை வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலால் இந்நகரம் புகழ் அடைந்துள்ளது.



மதுரைக்கு 2500 ஆண்டு கால வரலாறு உள்ளது. கி.பி. 550ம் ஆண்டிற்கு முன்னரே கலாசாரம் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் பெற்ற நகரமாக விளங்குகிறது. பண்டை காலத்தில் மதுரை பாண்டிய நாட்டின் தலைநகரமாக விளங்கியது. மதுரை மாநகர் முற்காலத்தில் கடம்பவனம் என்ற வனப்பகுதியாக இருந்தது. அங்கு கடம்ப மரத்தின் கீழ் இருந்த சுயம்பு லிங்கத்தை இந்திரன் வழிபட்டு கொண்டிருந்தான்.



இந்த விஷயம் குலசேகரபாண்டிய மன்னனுக்கு எட்டியது. லிங்கத்தை சுற்றி கோயில் (மீனாட்சி அம்மன் கோயில்) மற்றும் கோயிலை சுற்றி தாமரை வடிவிலான மதுரை நகரத்தையும் குலசேகர பாண்டியன் கட்டினான். மதுரை மாநகரை சிவபெருமான் தேவாமிர்தத்தை தெளித்து அருள் புரிந்ததால், மதுராபுரி என்ற பெயராலும் அழைக்கப்பட்டது.


பரப்பளவு : 22 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை : 10.9 லட்சம்
உயரம் : கடல் மட்டத்தில் இருந்து 101 மீட்டர்
மழை அளவு : -
பேசப்படும் மொழிகள் : தமிழ்,ஆங்கிலம், சவுராஷ்டிரா

 
Share  
Bookmark and Share
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X