வாஷிங்டன் : அமெரிக்காவில் வேலைஇல்லா திண்டாட்டம் கடந்த 6 மாதத்தில் கடுமையாக தலைவிரித்தாட துவங்கியுள்ளது. அமெரிக்காவில் சமீபகாலமாக எழும்பி வந்த பொருளாதார நிலையில் , வேலை இழப்பு, வேலையின்மை காரணமாக மீண்டும் பெரும் பின்னடைவு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.
50 லட்சம் பேர் வேலை இழப்பு : இது குறித்து அமெரிக்க தொழிலார் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; வேலை வாய்ப்பு, வேலையின்மை தொடர்பாக கடந்த 70 ஆண்டுகளாக கணக்கிடப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வேலை இல்லாதவர்கள் 9 . 8 சதமாக உயர்ந்திருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்த அக்டோபரில்10. 2 சதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 6 மாதத்தில் 5 .6 மில்லியன் நபர்கள் ( 50 லட்சத்திற்கும் மேல் ) வேலை இழந்துள்ளனர். இது அமெரிக்காவில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கையில் 35. 6 சதம் ஆகும். கட்டுமானம், உற்பத்தி மற்றும் வணிகம் உள்ளிட்ட துறைகளில் தான் பலர் வேலை இழந்துள்ளனர். இந்த வேலையின்மை நிலை நீடித்தால் அமெரிக்காவில் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இது போன்ற வேலையின்மை காரணமாக நாட்டில் வாங்கும் சக்தி குறைந்து விடும் .
2007 ல் கூட இப்படி இல்லை : இந்த நெருக்கடி காரணமாக உலக அளவில் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து வருகிறது. யூரோ, யென் மதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2007 ல் பொருளாதாரச்சரிவு ஏற்பட்டபோதுகூட 8. 2 மில்லியன் பேர்கள் வேலை இல்லாதவர்களாக இருந்தனர். அதாவது 4. 9 சதம்.
சபதமேற்ற ஓபாமா ? : அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் பேசியபோது அமெரிக்காவில் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் வேலை கிடைக்கும் படி செய்வேன் என்றும் அது வரை ஓய மாட்டேன் என்றும் சபதமேற்றார். ஆனால் இவரது ஆசை நிராசையாக மாறி வருவது அமெரிக்கர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
| வாசகர் கருத்து |
It is just the natural cycle....We have seen it before...seeing now...and we will see again and again...........want to be smart?...save some grain for rainy days!!!!!!!!!
|
by p krishna,Tirupur,India 11/8/2009 12:37:48 AM IST |
அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்கு அதன் ராணுவ செலவுதான் மிக முக்கிய காரணமாகும். அந்நிய நாட்டில் அமைதி நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்க ராணுவ தலையீடே இதற்கு மிக முக்கிய காரணமாகும்.ஆகவே அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையீட்டை குறைத்து தன் ராணுவ செலவின் ஒதுக்கீட்டை குறைத்து கொண்டால் தன் நாட்டு பொருளாதாரத்தை மீட்டு பராமரிக்க முடியும். அதை விட்டுவிட்டு வுலக போலீசாக நினைத்து எல்லா நாடுகளிலும்,எல்லா விவகாரங்களிலும் தன் தலையீட்டை செயல் படுத்தினால் அமெரிக்காவின் பொருளாதாரம் ,வேலை இன்மை இன்னும் அதிகமாகவே செய்யும். அமெரிக்காவின் இந்த விஷயத்தில் அந்நாட்டு தலைவர்கள் அனைவரும் இந்த முறையையே பின் பற்ற வேண்டும்.ஒபாமாவும் அதற்கு விதி விலக்கானவர் இல்லை.
|
by ibnusalih,abudhabi,,abudahabi,uae.,India 11/8/2009 12:01:42 AM IST |
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி என்றால் நாம் ஏன் கவலைப்பட வேண்டும். நமது நாட்டில் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நமது நாட்டு இலஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கவேண்டும்.
|
by M நாட்ராயன்,Guziliamparai,India 11/7/2009 8:58:35 PM IST |
Developed countries planed to sit on developing countries head,, but here position has changed and now those are suffering, unluckily we have to suffer, no way to escape
|
by Rama Raj,Al-Jubail,Saudi Arabia 11/7/2009 8:57:38 PM IST |
இந்திய அரசு விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம்
|
by K Shanmugavel,latur,India 11/7/2009 8:48:46 PM IST |
Dear Expatrates in U.S, Please note Mr.Obama''s statement he assured for ''Every American Will Get Job'', meaning to say he dont bother about other country people. So take care!!!
|
by R MANI,DUBAI,India 11/7/2009 7:44:11 PM IST |
ஒபாமா சார் மாதிரி யாராவது இந்தியாவுல சபதம் எடுதங்கள்ள இல்ல நம்ப நாட்டுல எல்லாம் சுஷ் பங்கல்ல பணம் போட கன்னவு கண்ட்ரங்க அப்புறம் என்ங்க நாடு பத்தி கவல்ல எர்ருக்கும்.
|
by R வெங்கடேசன்,Dubai,India 11/7/2009 7:01:12 PM IST |
Again resession...Can''t.digest!
|
by T Narendhran ,Abudhabi,United Arab Emirates 11/7/2009 6:54:26 PM IST |
'' சுத்தம் '' வாழ்க ஒபாமா
|
by A. peer,UAE,India 11/7/2009 6:45:02 PM IST |
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
|
by S இந்தியன்,Doha,Qatar 11/7/2009 6:41:41 PM IST |
இந்த செய்திக்கு என்ன ஆதாரம்? அமெரிக்கா மாதிரி வளர்ந்த பணக்கார நாடுகளுக்கு இது ஒரு பிரச்னை இல்லை. <ணீ> <ணீ> பன்றி காச்சலுக்கு அமெரிக்க பள்ளிக்கூட மாணவர்களுக்கு இலவசமாக தடுப்பு ஊசி போடுகிறார்கள். இந்தியால இதுக்கு எதாவது பண்ணினார்களா? அமெரிக்கா பத்து பொருளாதார நெருக்கடிய தாங்கும், நம்ம வேலைய நாம பார்போம். இல்ல இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று கனவு காண்போம்
|
by MKM மன்னார்சாமி,Chennai,India 11/7/2009 6:37:56 PM IST |
ஜப்பான் மற்றும் சைனா போன்ற நாடுகள் பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையை டாலரில் கொடுப்பதற்கு பதிலாக தங்கள் நாட்டு கரன்சியிலேயே கொடுப்பதால், டாலரின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைய துவங்கியுள்ளது. இது அமெரிக்கவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது.
|
by MANNANDHAI,India,India 11/7/2009 6:18:48 PM IST |
அமெரிக்காவில் வேலை இல்லா திண்டாட்டமா? அப்போ அமெரிக்க போய் வேலை செய்யும் இந்தியர்கள் நிலைமை என்ன? கேள்வி குறியாக உள்ளது?
|
by H மக்தும்,Abu Dhabi,United Arab Emirates 11/7/2009 6:16:16 PM IST |
obama!plz dont give too much dollar to pakistan.try to concentrate ur''s country''s unemployement problem.dont act like BUSH. HOPE U R SMART THAN HIM.TRY TO GET RESOLVED THE UNEMPLOYMENT PROBLEM
|
by L.B THIRUPPATHI,DOHA,Qatar 11/7/2009 5:27:58 PM IST |
Recently heard lot of sad news like child prostitutes / unemployment etc ect.. from America Mother Teresa said that '' Today countries are concentrating too much on efforts and means to defend their borders. Yet these countries know so little about the poverty and suffering that make the human beings who live inside such borders feel so lonely!. If instead they would worry about giving these defenseless beings some food, some shelter, some healthcare, some clothes, it is undeniable that the world would be a more peaceful and happy place to live. As above, If America and every Country feel about their own people and take care about them, then definitely the World would be a more peaceful place to live.
|
by gj தங்கராஜ்,Tamilnadu, India.,India 11/7/2009 4:04:00 PM IST |
இன்னொரு பொருளாதார நெருக்கடியா? தாங்கமுடியாது சாமி...
|
by P சந்தோஷ்,Pan Yu,China 11/7/2009 3:45:39 PM IST |