Dinamalar Top News, Top News Stories & Headlines, Top India & World News Detail
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
தற்போதைய செய்தி 
டிஸ்சார்ஜ் ஆனார் மாஜி முதல்வர் மதுகோடா ; விரைவில் கைதாகிறார்
நவம்பர் 08,2009,00:30  IST

Top world news stories and headlines detail

ராஞ்சி : "ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவின் உடல்நில‌ை சரியாக இருப்பதாக மருத்துவமன‌ையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஹவாலா, வெளிநாடுகளில் சட்ட விரோத முதலீடு, பணப் பதுக்கல் போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மது கோடா உள்ளிட்ட எட்டு பேர் மீது, வருமான வரி மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். மது கோடாவின் உதவியாளர் விகாஸ் சின்கா கைது செய்யப்பட்டுள்ளார்.வயிற்று வலி காரணமாக, மதுகோடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.



இதுகுறித்து, மது கோடா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜாவேத் அக்தார் கூறுகையில், ""மது கோடாவை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து (இன்று) டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். மதுகோடாவை டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன், அதுகுறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அமலாக்க பிரிவு மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள், மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளனர்.இதனால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் மதுகோடா கைது செய்யப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள விகாஸ் சின்காவை அமலாக்க பிரிவு அதிகாரிகள் பத்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க ராஞ்சி கோர்ட், நேற்று அனுமதி அளித்தது.



மது கோடா ஊழலில் சின்காவின் பங்கு குறித்து அமலாக்க பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:மது கோடாவின் நெருங்கிய நண்பரான பினோத் சின்காவின் சகோதரர் தான், விகாஸ் சின்கா. மது கோடா மற்றும் தனது சகோதரருக்காக இவர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2006-07ம் ஆண்டில், இவர் தாக்கல் செய்த வருமான வரி தாக்கல் அறிக்கையில், ஐந்து கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இதற்கு அடுத்த ஆண்டில் அவரது வருவாய் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் 40 கோடி ரூபாயை ராஞ்சியில் இருந்து கோல்கட்டாவுக்கு ஹவாலா மூலம் அனுப்பி வைத்துள்ளார்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 There must be a new law, when any person charged with corruption where the amount involved exceeds certain amount(say 1 Crore) can not be admitted in private hospitals if they are sick (pretending to be sick) when charged. He/she must be admitted only in the nearest military hospital. Coversations and treatments must be video recorded. Phone calls will be recorded. Only one relative is allowed to be with the patient(FAKE!?). Any real emergency should be attended by military appointed spepicialists. The military medical team will decide if he or she is fit to go for trial /Prison. There should be a special express court to deal with such econolmic offences. The court/Investigators will be given a specific time to charge and covict the accused. The defence lawers will be allowed only to defend the corruption charges when the case is at the special express court and not the medical condition(fake again!?). Must freez all his/her assets and bank balances.
We should realise offenders such as this one is actually waging a war on India and must be dealt by the military. 
by kprem prem,Singapore,India    11/8/2009 3:53:58 PM IST
 We have to ban all indian parties from polical activities. 
by M Shahul,Kenya,India    11/8/2009 3:18:29 PM IST
 இது இந்தியாவின் சாபகேடு. சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அப்பதான் இது போன்ற தேச துரோகிகள் ஒழிவார்கள்.  
by D ஆல்பர்ட்,singapore,India    11/8/2009 3:15:33 PM IST
 how can we become the superpower while there is politicians like this how we can control naxals indian govt shd take severe action follow china 
by s edwin,abudhabi,India    11/8/2009 2:48:40 PM IST
 இது தான் இந்தியா! சரியாக நிரூபித்து உள்ளார்! வாழ்த்துக்கள்! நம் நாட்டு மக்களுக்கு இவர் ஒரு முன்மாதிரி. எல்லோரும் இவரை பின்பற்றுவதாக சபதம் ஏற்போம்! 
by A ஜாகிர் ஹுசைன்,dubai,United Arab Emirates    11/8/2009 1:52:39 PM IST
 எல்லாரும் தமிழகம் வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளவும். மேலும் தமிழ் மக்களைப்போலே மனதும் மறக்கின்றதாக, எது நடந்தும் எதுவும் தெரியாதது போலவும் தனக்கு மட்டும் காரியம் நடந்தால் போதும் என்ற எண்ணமும் இருக்கவேண்டும். இல்லையெனில் அவர் வாங்கவில்லையா இவர் வாங்கவில்லையா என்ற புள்ளி விவரம் தரத் தெரிய வேண்டும். எனக்கு முன் வாங்கியவர் இதைவிட அதிகம் வாங்கியுள்ளார் எனச் சொல்லத்தெரிய வேண்டும். அல்லது நிரந்தரமாக ஆளும் கட்சியிலேயே இருக்கவேண்டும். அதாவது எக்கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அக்கட்சிக்கு தாவிவிட வேண்டும் அப்பீல் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் கேஸ் தள்ளுபடி ஆகும்வரை. 
by R சாமுவேல் முத்தையாராஜ் ,Kancheepuram,India    11/8/2009 12:19:08 PM IST
 பேசாமல் சீனாவிடம் இந்தியாவை குடுத்துவிடுங்கள்.
ஏனெனில் இந்தியாவில் எவனுக்கும் தைரியம் கிடையாது.
மேலும் ஒரு மறுமலர்ச்சியும் வராது.

வீணாக பொழுதை போக்காதே..... 
by Arun சங்கர் கணேஷ்,Vallanadu,India    11/8/2009 11:52:24 AM IST
 ஜார்கண்ட் முதல்வர் தப்பிக்க அவரை ஆஸ்பிடலில் கோர்ட் காவலில் வைக்க <கோர்ட் ஆனுமதி அளிக்க வேண்டும். தவிர அவருடைய எல்லா சொத்துக்களையும் ஜப்தி செய்ய வேண்டும். முடியுமா? 
by T S vaidya,sydney,India    11/8/2009 11:46:11 AM IST
 
இவர் ஜெயா அம்மாவிடம் பாடம் படித்தவர் போலும். கருணாநிதியிடம் பாடம் படித்திருந்தால் மாட்டி கொள்ளவே மாட்டார்.  
by SA PALAYAM,CHINA,India    11/8/2009 11:29:09 AM IST
 sir,for all persons who have cheated the people should be punished very severely.just shooting order is enough for him.again govt need not waste money to file a case,enquiry etc.,pls god ,save India from these culprits! 
by k sukanthi,uttukuli,India    11/8/2009 10:59:02 AM IST
 சில பேருக்கு குபேரன் இப்பிடி அள்ளி வுடறாரு... ஆனா மச்சானுக ரொம்ப பேராசைப்பட்டு கடசீல சிக்கீட்டு சீக்கி ஊத வேண்டீதடா போயிடுது.. இருந்தாலும் இவனுங்கெல்லாம் எப்பிடியோ ஆனந்தமா தான் இருக்கானுக... 
by v sundaravadivelu,tiruppur,India    11/8/2009 10:57:55 AM IST
 அட முட்டா பசங்கள .. எங்க தமிழ் நாட்டுக்கு வந்து கத்துக்குனுக்கு போங்க... 
by km VISWANATHAN,Bhubaneswar,India    11/8/2009 10:09:32 AM IST
 madhugoda ni பெரிய nadigan than போ ...
மது--- hotdrink
goda --- don;t give
you only take (2,000 crore)alll money from indian govt , people life ????????/ 
by sdr sundar,ajman,United Arab Emirates    11/8/2009 10:00:03 AM IST
 தூக்கிலிடுங்கள்... இந்த (மது கோடா) மதி கேடனை...  
by C Jegan,nagercoil,Singapore    11/8/2009 9:59:37 AM IST
 என்னால் நம்ப முடியலை .இவ்வளவு பணத்த அவன் சுருட்டுற வரைக்கும் நம்ப CBI அதிகாரிகள் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ? இன்னும் ஒரு மாதமோ ரெண்டு மாதமோ ,நாம எல்லாரும் இந்த விஷயத்தை (விஷத்தை ) மறந்துருவோம். இந்தியாவின் சாபக்கேடு .
 
by mr senthil,australia,Australia    11/8/2009 9:59:26 AM IST
 கொள்ளையோ கொள்ளை. அவன் ரூபா அனைத்தும் பறிமுதல் செய்யுங்கள். அப்புறம் ஜெயிலில் போடுங்கள். 5o வருஸம் அப்பதான் அடுத்தவன் உணருவான்  
by ABDUL kassim,dubai,India    11/8/2009 9:59:12 AM IST
 சாதாரண பிக்பாக்கெட் அடித்தவனுக்கு அடி உதை மற்றும் கடும் தண்டனை. ஆனால் இதுபோல் கோடி கணக்கில் அடிப்பவர்களுக்கு 1 ஸ்ட் கிளாஸ் ஜெயில். முதல் தர சாப்பாடு மற்றும் மருத்துவம் - டிவி மற்றும் இதர வசதிகள். மற்றும் முன் ஜாமீன். இது போல இருந்தால் இவர்களுக்கு எப்படி பயம் வரும். இவர்களை வருடக்கணக்கில் தெரு கூட்ட விடவேண்டும். அப்படி இருந்தால் தான் இவர்களுக்கு ஊழல் செய்ய பயம் வரும் .  
by s sara,kualalumpur,Malaysia    11/8/2009 8:56:49 AM IST
 இவ்வளவு குறுகிய காலத்தில் இரண்டாயிரம் கோடி ஊழல் ... கோடா அவர்களே ... கோடி கோடியாய் கொள்ளை அடிக்க எப்படி உங்களால் முடிந்தது? கோடி கோடியான மக்கள் சோத்துக்கு லாட்டரி அடிக்கும்போது, அவர்களால் ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் அடி வயிற்றில் அடித்துவிட்டு, சுவிஸ் வங்கயில் கோடிகளை கொட்டி வைத்துள்ளீர்களே ... உங்களைப்போன்ற அரசியல்வாதிகளை நடு ரோட்டில் கட்டி வைத்து மக்களால் கல்லால் அடித்து கொலை செய்தால், இறைவன் மிகவும் சந்தோஷப்படுவான். அந்த நல்ல நாள் என்று வரும்?  
by A அப்துல் ரஹீம் ,CHINNA SALEM,India    11/8/2009 8:55:12 AM IST
 If it is countries like US or UK, be this time, the culprit would have been arrested and legal action would have been initiated. Time is very important factor. In his case, perhaps the law enforcing authorities are awaiting clear signal from high command of political party. Further there is news that a UPA minister is involved in the affair, apart from bureaucrats. All these things tell us that the case will be fizzled out as any other cases earlier came to light. Even if it takes ''its own course'', as Supreme court Sr. Lawer, Ram Jethmalani pointed out, it takes a long time and finally ends in negative results, as the long time taken in court procedures, interpretation of law and political influence etc will drag the case to an extent the public will forget the case and go after another ''Breaking News'' generated by media. This is the curse of this country. Only people''s power can change this. But people have their own priorities like running day to day difficulties and no time to view this seriously. Moneyed and vested interested people, steer clear of these hurdles and treat the the public as idiots.
 
by V Narayanan,Chennai,India    11/8/2009 8:17:37 AM IST
 1,00,000 கோடி ஊழலை பார்க்கும்ப்போது இந்த 2000 கோடி ஒன்றுமில்லை. 
by DR பாஸ்கரன்,Bangalore,India    11/8/2009 7:58:43 AM IST
 இந்த தேச துரோகியை வுடனே கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும். நோயாளியாக நடிக்கிறான். சரிஅப்படியே நோய் என்றாலும் ஜெயிலிலேயே சிகிட்சை பண்ண வேண்டும். இந்த நோய் குணமானதும் பெரிய நோயாகிய ஊழல் என்ற நோய்க்குரிய சிகிட்சையை வுடனே துவங்க வேண்டும்.அரசியல் வாதிகள் என்றாலே அயோக்கிய வாதிகள் என்றே மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். இவனுக்கு கொடுக்கும் தண்டனை மற்ற அரசியல் திருடர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். இவைகள் நடக்குமா என்பதுதான் சந்தேகம், 
by ibnusalih,abudhabi,,abudahabi,uae.,United Arab Emirates    11/8/2009 7:36:00 AM IST
 If government put Raju(satyam scam) into jail why not Koda. Give him life sentence so that other politicians will think for doing this kind of mistakes in the future. This is excellent chance for our judiciary to prove our democratic strength against this kind of evil elements.Government has to take stern action and get back all the wealth of his family members, friends and relatives whoever involved in this scam. Justice(GOD) only can save India. If government put Raju(satyam scam) into jail why not Koda. Give him life sentence so that other politicians will think for doing this kind of mistakes in the future. This is excellent chance for our judiciary to prove our democratic strength against this kind of evil elements.Government has to take stern action and get back all the wealth of his family members, friends and relatives whoever involved in this scam. Justice(GOD) only can save India. Jai Hind. 
by R தமிழ்செல்வன்,New York,United States    11/8/2009 6:46:43 AM IST
 இவனைக் கைது செய்து ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு உள்ளே தள்ள வேண்டும். இல்லையென்றால் வெளி வந்து மீண்டும் இது போல் ஊழல் நடக்கத்தான் செய்யும்.அதனால் இவனை சும்மா விடக்கூடாது. 
by s மகேஷ் ,abudhabi,India    11/8/2009 6:23:56 AM IST
 நம் ஊர் அரசியல்வாதிகளை அவர் பின்பற்றவில்லை. அதுதான் இப்படி மாட் டிகொண்டுள்ளர். இவர்களுக்கு வெட்கம் என்பதே தெரியாதா? 
by V. Durai,Chennai,India    11/8/2009 5:57:43 AM IST
 Put him 50 Year jail and 50 crores fine. Get back all the bribes assets from him.We are expecting the right judgement.Still we beleive our court.
 
by m mahend,singapore,Singapore    11/8/2009 5:51:29 AM IST
 இவர் இப்படி நடிக்கிறாரே உண்மையில்,இவர்கள் ஜெயித்து ''கவர்நர்''நிதிபதி மற்றும் எல்லா மக்கள் முன்னிலையிலும்,பதவி பிரமாணம் செயிது கொள்கிறார்கள். உண்மயாக உண்மையாக மக்களை ஏமாற்றமாட்டேன், இந்தியாவின் அரசியல் சட்டத்தை மதிப்பேன், என்று அப்படி இருக்கும் போது ஏப்படி இதுமாதிரி நடக்கிறார்கள் மானகெட்டவர்கள்,அசிங்கமாக இல்லை வேட்க்காகேட்டவர்கள்,சார் பணத்தை மீட்டு ஏழை எளியவரின் பசியை போக்காவும்.  
by A.M.Y முஹம்மத் அமின் ,villiers sur marne,France    11/8/2009 5:47:28 AM IST
 ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இன்னும் ஏன் தயக்கம் கைது செய்வதருக்கு. உண்மைலே அவருக்கு உடல் நிலை சரில்லையா ?இல்லை நாடகமா?அப்ப்டிஇருக்கும் பட்டசத்தில் அவருடைய மருத்துவ அறிக்கை வேறு ஒரு மருத்துவரிடம் காட்டி கைது செய்யவேண்டியது தானே...
2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. யாரு முன்னால் முதல்வர் மக்கள் நம்பி ஒட்டு போட்டு வெற்றி பெற்றவர்.நம்பிக்கை துரோகம் இது தக்க தண்டனை தருவது மட்டும் இல்லாமல் இனி இதுபோல செய்வதருக்கு பயம் கொள்ளும் அளவுக்கு இருக்கணும்......... 
by கலை ராஜா ,trichy,India    11/8/2009 1:33:37 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் தற்போதைய செய்திகள்
  இ-பேப்பர்