எச்.ராஜா ஜூன் 23,2018 15:26 IST

இரண்டு கொடி, இரண்டு பிரதமர் நீக்கப்பட்டுவிட்டது. இரண்டு சட்டங்கள் இன்னமும் உள்ளது. அதையும் நீக்கி JK இந்தியாவுடன் முழுமையாக இணைப்பதே டாக்டர் முகர்ஜி அவர்களுக்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலி. இன்று நமது மரியாதையை அவரது பாதங்களில் சமர்ப்பிப்போம்.

ராகுல் ஜூன் 21,2018 10:05 IST

மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி ஒரு அறைக்குள் அடைப்பட்டு கிடக்கிறார். பா.ஜ., பொருளாளர்கள் கையில் இந்திய பொருளாதாரம் சிக்குண்டு கிடக்கிறது. ஆனால் கேப்டன் மோடி பார்த்து மவுனம் காக்கிறார்.

நரேந்திர மோடி ஜூன் 21,2018 09:58 IST

யோகா, உடலை சரியான முறையில் வைத்திருப்பதற்கான பயிற்சி மட்டுமல்ல; நம் உடல் நலம் சீராக இருப்பதற்கும் உதவும். 'யோகாவை, தங்கள் வாழ்க்கையின் ஒருஅங்கமாக்க, மக்கள் முன் வரவேண்டும்'

காங்கிரஸ் ஜூன் 20,2018 17:03 IST

விவசாய வளர்ச்சி தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. எந்த கொள்கை விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்.

பா.ஜ.க., ஜூன் 20,2018 17:02 IST

மஹாராஷ்டிர மாநிலம் சோலாபூரை சேர்ந்த திலீப் என்ற விவசாயி, 1000 விவசாயிகள் உதவியுடன் விவசாய சங்கம் அமைக்கப்பட்டது குறித்தும், அதனை பதிவு செய்தது குறித்தும் பிரதமரிடம் விளக்கினார். இதன் மூலம் அவருக்கு கடன் கிடைக்க பெரிய அளவில் உதவியது

ஸ்டாலின் ஜூன் 20,2018 17:02 IST

கடந்த மூன்று தினங்களாக PetrolDiesel விலை உயர்வை கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஜனாதிபதி ஜூன் 20,2018 17:02 IST

சூரினாமின் பரமரிபோ நகர் சென்றடைந்த எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே, பலமான உறவை பலப்படுத்த ஆர்வமாக உள்ளேன்.

ப.சிதம்பரம் ஜூன் 20,2018 16:59 IST

எத்தனை பொய் வழக்குகளை அரசு போட்டாலும் அவற்றை என்னுடைய குடும்பத்தினர் சட்ட வழியில் உறுதியோடு எதிர்கொள்வார்கள். சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்குப் பெரும் பாதுகாப்பு

பொன்.ராதாகிருஷ்ணன் ஜூன் 20,2018 16:59 IST

விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து நமோ ஆப் மூலம், விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதை பார்த்தது மகிழ்ச்சியடைந்தேன்

அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 20,2018 16:58 IST

எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் டில்லி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல்வர்கள் மம்தா பானர்ஜி, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் ஆகியோருக்கு சிறப்பு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அருண் ஜெட்லி ஜூன் 20,2018 16:57 IST

கிராமப்புற திட்டங்களுக்கு செலவு செய்வது அதிகரித்துள்ளது. சமூக நீதி திட்டங்கள், ஏராளமான சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்தியாவின் வளர்ச்சி நிலையாக உள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

கமலஹாசன் ஜூன் 15,2018 18:51 IST

கபினி அணையை திறந்ததால், கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு நன்றி தெரிவித்தேன்.காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்பட தொடங்கிய பிறகு, இரு மாநிலங்களுக்கு இடையேயான நட்புறவால் மட்டுமே, அடைக்கப்பட்டிருக்கும் பல கதவுகள் திறக்கப்படும்.


தமிழிசை சவுந்திரராஜன் ஜூன் 13,2018 15:51 IST

பியூஸ் கோயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நாட்டின் வளர்ச்சிக்காக உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதித்தன்மை ஆகியவை அனைத்து இளைஞர்களும் பின்பற்ற வேண்டியவை. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ கடவுளை வேண்டி கொள்கிறேன்.

சத்குரு ஜூன் 11,2018 12:52 IST

உங்களில் எழும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் , உங்களுக்கு சோர்வு, உளச்சல் இருக்காது.

சுப்ரமணியன் சுவாமி ஜூன் 05,2018 12:17 IST

சுனந்தாபுஷ்கர் மர்ம மரணம் தொடர்பாக சாட்சியங்கள், தடயங்கள் அழிப்பு தொடர்பாக எனது கோரிக்கையை ஏற்ற பாட்டியாலா கோர்ட் எனது தரப்பு விவாதத்தை எடுத்து வைக்க அனுமதி அளித்துள்ளது.

ரஜினிகாந்த் ஜூன் 03,2018 18:14 IST

நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..

சுஷ்மா சுவராஜ் மே 04,2018 16:42 IST

கர்நாடகாவில் உள்ள மாட்டூர் கிராமத்திற்கு சென்று பார்வையிட அதிர்ஷ்டம் கிடைத்தது, உண்மையிலேயே இது ஒரு அற்புதமாக கிராமம் ஆகும்.
Advertisement
Advertisement