@ நரேந்திர மோடி ட்வீட்ஸ்

நரேந்திர மோடி

அனைவரது வாழ்த்தும், பிரார்த்தனையும் எனக்கு பெரும் பலத்தை தருகிறது. பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வரும் ஒவ்வொருவருக்கும் நன்றி !
செப்டம்பர் 17,2018

தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான விழாவில் பங்கேற்க டில்லியில் உள்ள அம்பேத்கர் பள்ளிக்கு சென்ற போது அங்கிருந்த மாணவர்கள் பெரும் வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. செப்டம்பர் 15,2018

கிளீன் இந்தியா திட்டத்திற்கு பி.டி. உஷா, அஜ்மத் அலிகான், உள்ளிட்ட பிரபலங்களின் ஆதரவு பெரும் மகிழ்வை தருகிறது.
செப்டம்பர் 14,2018

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இளைஞர்களின் மனது மற்றும் நமது நாட்டை கட்டமைப்பதில், ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த நாளில், புகழ்பெற்ற ஆசிரியரும், முன்னாள் ஜனாதிபதியுமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு தலை வணங்குகிறேன். செப்டம்பர் 05,2018

ஆசிய விளயைாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்,வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் ! மேலும் அவர்களுக்கு துணையாக நிற்கும் கோச்சர்ஸ் ,பெற்றோர்களுக்கு தலைவணங்குகிறேன்.
செப்டம்பர் 02,2018

ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! அவர் நீண்ட ஆயுளும்,வளமும் பெற பிரார்த்திக்கிறேன்.
ஆகஸ்ட் 30,2018

தேசிய விளையைாட்டு தினத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். ஹாக்கி வீரர் மேஜர் தியார் சந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம். ஆரோக்கியமான இந்தியாவுக்காக விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைக்கு முன்னுரிமை தரவேண்டும் என மக்களை கேட்டுக் கொள்கிறேன். ஆகஸ்ட் 29,2018

அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கைன் மறைவுக்கு இரங்கல், அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். அவரது இழப்பு இந்த உலகிற்கு பேரிழப்பு.
ஆகஸ்ட் 27,2018

சமீபத்திய துக்க துயரங்களில் இருந்து கேரள மக்கள் மீண்டு வர இந்த ஓணம் திருநாள் பலம் தரட்டும். அவர்களின் மீட்சி அடைய இந்தியாவில் அனைவரும் தோளோடு, தோள் கொடுப்போம்.
ஆகஸ்ட் 25,2018

வரும் 2022 க்குள் ஏழைகள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும். கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் சொந்த வீடு பெற்றனர் என கேட்டுள்ளோம். தற்போது ஏழைகள் வீடு பெறுவார்கள் என கேட்கிறோம். ஆகஸ்ட் 23,2018

பத்திரிகையாளர் குல்ததீப் நய்யார் நமது காலத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் மனிதர். வெளிப்படையாகவும், அச்சமின்றியும் தமது கருத்துக்களை வெளியிட்டவர். எமர்ஜென்ஸி காலத்தில் வலுவாக எதிர்த்து நின்றவர். இவரது நினைவு என்றும நிலைத்து நிற்கும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
ஆகஸ்ட் 23,2018

பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள். இந்நாளில் நம்மிடையே இரக்கமும் சகோதரத்துவமும் பரவட்டும் ஆகஸ்ட் 22,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X