@ ஸ்டாலின் ட்வீட்ஸ்

ஸ்டாலின்

ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார். இதன் உண்மை நிலையை அறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
செப்டம்பர் 22,2018

ஆடிட் அதிகாரி “Bogus Energy allotment made without generation” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அறிக்கை கொடுத்த பிறகும், அமைச்சர் தன் பேட்டியில் “இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்” என மூடி மறைக்க முயற்சிக்கிறார்! தைரியமிருந்தால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுக! செப்டம்பர் 21,2018

வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம்,பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது! பிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும்! இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும்!

செப்டம்பர் 13,2018

மின் தேவையை சமாளிக்க Maintenance, Fault என்ற போர்வையில் அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக பாதிக்கின்ற வகையில் தமிழகம் முழுவதும் “அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்” அமலுக்கு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அரசின் நிர்வாகத் திறமையின்மையால் பொதுமக்கள் பாதிப்பதை ஒருபோதும் ஏற்க இயலாதுமின் பகிர்மானக் கழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள வரலாறு காணாத நிதி நெருக்கடியால், மக்களுக்கு “வெளிச்சம்” தரும் மின் பகிர்மானக் கழகமே “இருட்டுக்குள்” தள்ளப்பட்டுள்ளது!இதற்கு, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர் தங்கமணியின் நிர்வாக சீர்கேடே முழுக்காரணம்! செப்டம்பர் 12,2018

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை பெரும் அளவில் பாதிக்கிறது. மக்களின் நலன் கருதி இதன் விலையை குறைக்க மாநில முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செப்டம்பர் 10,2018

திரு ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்!
செப்டம்பர் 09,2018

சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை, சோபியா மீது தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டும். செப்டம்பர் 07,2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்!
27வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை விடுதலை செய்ய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி உடனடி முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்! செப்டம்பர் 06,2018

கைது செய்யப்பட்ட ஷோபியாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கருத்துரிமைக்கு எதிரான கைது நடவடிக்கை கண்டனத்துக்குரியது. ஷோபியா மட்டுமல்ல நானும் சொல்கிறேன், 'பா.ஜ.,வின் பாசிச ஆட்சி ஒழிக'. இப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். செப்டம்பர் 04,2018

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியிருக்கும் தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மேலும் முழுமையான அளவில் விரைந்து உடல்நலன் பெற்று, பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடரவேண்டும் என்ற எனது விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன். செப்டம்பர் 02,2018

என் உயிரினும் மேலான தமிழினமே! என் கடைசி மூச்சு உள்ளவரை என் கடைசி இதயத் துடிப்புவரை... உனக்காக உழைத்திடுவேன்! உனக்காக போராடுவேன்! இனம், மொழி, நாடு, கழகம் இந்த நான்கையும் எப்போதும் காப்பேன். ஆகஸ்ட் 28,2018

லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி மீது கூறப்பட்டுள்ள “பாலியல் தொல்லை” புகாரை விசாரிப்பதற்கு பதிலாக, புகார் அளித்த பெண் எஸ்.பி.யை பழிவாங்கவும், வழக்கை நீர்த்துபோகச் செய்யவும் முதலமைச்சர் முதல் டி.ஜி.பி வரை வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது! ஆகஸ்ட் 26,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X