@ பொன்.ராதாகிருஷ்ணன் ட்வீட்ஸ்

பொன்.ராதாகிருஷ்ணன்

பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைப்பெற்ற மாபெரும் கூட்டத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு @CMOTamilNadu அவர்கள் எனது கோரிக்கையை ஏற்று நாகர்கோவில் நகராட்சியை தொகுதி மறுசீரமைப்பு முடிந்தவுடன் மாநகராட்சியாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். செப்டம்பர் 23,2018

பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜானா என்ற திட்டம் ராஞ்சியில் வரும் 23 ம் தேதி (நாளை) பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 10 கோடி பயன்பெறுவர். ஒரு குடும்பத்தினர் ஆண்டுக்கு தலா ரூ, 5 லட்சம் பெற முடியும்.
செப்டம்பர் 22,2018

75,000 விழாக்களுக்கு மேல் அறுசுவை உணவு படைத்தவரும், தனக்கென சமையற்கலையில் தனி முத்திரை பதித்தவருமான அறுசுவை நடராஜன் அவர்களின் இழப்பு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. அன்னாரை பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். செப்டம்பர் 18,2018

தமிழகத்திற்கு சிறப்பு நிதியை ஒதுக்கியமைக்காக பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு எனது சார்பாகவும்,தமிழகத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். செப்டம்பர் 17,2018

சுதந்திர வேட்கையை மக்களின் மனதில் விதைத்த முண்டாசுக்கவி சுப்ரமணிய பாரதியின் நினைவைப் போற்றுவோம்! செப்டம்பர் 11,2018

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினேன். குமரி மாவட்ட மருத்துவ கல்லூரியில் மல்டி ஸ்பெஷாலிட்டி துறை அமைக்க வலியுறுத்தியுள்ளேன்.
செப்டம்பர் 10,2018

கிரிராஜ்சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! அவர் நீண்ட ஆயுளும் , ஆரோக்கியமும் பெற்று இந்த நாட்டிற்கு இன்னும் சேவை செய்ய பிரார்திக்கிறேன்.
செப்டம்பர் 08,2018

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்தம் தியாகத்தைப் போற்றுவோம். செப்டம்பர் 05,2018

கர்நாடகாவில் மெகா கூட்டணி இருந்தும் பா.ஜ., உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்கு உழைத்த பா.ஜ., செயல்வீரர்களுக்கு வாழ்த்துக்கள் !
செப்டம்பர் 04,2018

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு @mkstalin அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள். மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடமிருந்த பல ஆண்டுகளாய் பெற்ற பாடம், பல பொறுப்புகளில் அவர் பணியாற்றிய அனுபவம் ஆகியவை திமுகவிற்கு பயனுடையதாக அமையும் என நம்புகிறேன். ஆகஸ்ட் 28,2018

திமுக தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் திரு @mkstalin அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 26,2018

சிவகிரி ,திருநெல்வேலி, ராஜபாளையம் பகுதியில் மறைந்த வாஜ்பாய் அஸ்தி கொண்டு சென்றபோது திரளானவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆகஸ்ட் 24,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X