@ ராகுல் ட்வீட்ஸ்

ராகுல்

தற்போது மேலும் ஒரு பலாத்கார சம்பவம் தொடர்ந்துள்ளது. பிரதமர் மோடி இது குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏற்று கொள்ள முடியாது. நமது இந்திய பெண்கள் பலாத்கார அச்சத்திலும், பாதுகாப்பின்மையாலும் வாழ்கின்றனர். பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.
செப்டம்பர் 18,2018

நமது பிரதமர் நரேந்திரமோடிஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! அவர் எப்போதும், மகிழ்ச்சியும் பெற்றிருக்க வாழ்த்துகிறேன்.
செப்டம்பர் 17,2018

விமானத்தில் தடுத்து நிறுத்தும் நோட்டீசை, தகவல் தெரிவிக்கும் நோட்டீசாக சிபிஐ மாற்றியதால், விஜய் மல்லையா எளிதாக தப்பி சென்றார். செப்டம்பர் 14,2018

ஜெட்லியை மல்லையா சந்தித்தது குறித்து பிரதமர் மோடி உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை ஜெட்லி தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். செப்டம்பர் 13,2018

தெலுங்கானாவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அறிந்து கவலையுற்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்., தொண்டர்கள் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
செப்டம்பர் 11,2018

ஒரு மனிதன் அழைப்பு வந்தால் மட்டுமே கைலாஷ் செல்ல முடியும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். மிக அழகிய யாத்திரை அனுபங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.மானசரோவர் ஏரியில் உள்ள தண்ணீர் மென்மையாக, அமைதியாக உள்ளது. அது அனைத்தையும் கொடுக்கிறது. ஆனால், எதையும் இழக்கவில்லை. அதை யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். இங்கு, வெறுப்பு இல்லை. எனவே தான், இதுபோன்ற தண்ணீரை இந்தியாவில் வழிபடுகிறோம். செப்டம்பர் 05,2018

டியர் ஜெட்லி அவர்களே ! ரபேல் விமானம் கொள்ளை தொடர்பாக விசாரிக்க பார்லி., கூட்டுக்குழு அமைக்க உங்கள் பாஸ் மறுத்து விட்டார் என நான் நினைக்கிறேன். மறைப்பதால், மக்களை சந்திக்க அச்சப்படுகிறீர்கள்.
ஆகஸ்ட் 31,2018

இந்தியாவில் ஒரேஒரு நிறுவனத்திற்கு மட்டுமே இடம் உண்டு. அது தான் ஆர்.எஸ்.எஸ்., ஏனைய அமைப்புகளை எல்லாம் மூடி விடலாம். மற்ற அமைப்பு நடத்துபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விடலாம். இது தான் புதிய இந்தியா.
ஆகஸ்ட் 30,2018

ரபேல் கொள்ளைக்கு தேசத்தின் கவனத்தை மீண்டும் திருப்பியதற்கு மிகவும் நன்றி ஜெட்லி. ரபேல் ஒப்பந்தம் குறித்து இருக்கும்சந்தேகங்களை போக்கி கொள்ள பார்லிமென்ட் கூட்டு குழு அமைத்து விசாரிக்கலாமா? உங்களது தலைவர், அவரது நண்பரை இந்த ஓப்பந்தம் மூலம் காக்க முயற்சி செய்கிறார். இது குறித்து ஆலோசித்து 24 மணி நேரத்தில் பதில் கூறுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம் ஆகஸ்ட் 30,2018

தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் ! அவர் அரசியலில் துவக்கும் புதிய அத்தியாத்தில் வெற்றியும், மகிழ்ச்சியும் பெற வாழ்த்துகிறேன். ஆகஸ்ட் 28,2018

நாளை ( 28 ம் தேதி) நான் கேரளா செல்கிறேன். மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதுடன், மீனவர்கள் மற்றும் சமூக தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினரையும் சந்தித்து பேசுகிறேன்.
ஆகஸ்ட் 27,2018

இந்த துயரமான தருணத்தில் முகாம்களிலும் வீடுகளிலும் தவித்து வரும் கேரள மக்கள் மீண்டு வர ஓணம் நாளில் வேறுபாடு இன்றி ஒத்துழைப்பு வழங்குவோம். ஆகஸ்ட் 25,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X