@ எச்.ராஜா ட்வீட்ஸ்

எச்.ராஜா

சிறைத்துறை முழுவதும் பயங்கரவாகதிகளின் கைக்கூலிகளாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆப்பிள் ஃபோன் உட்பட அனைத்துப் பொருட்களும் உள்ளே எப்படி சென்றன. இதுவரை எந்த அதிகாரி மீதும் ஏன் நடவடிக்கை இல்லை. வெட்கம். செப்டம்பர் 15,2018

அறநிலையத்துறை அதிகாரிகள் அமைச்சரையே மிரட்டுகிறார்கள். வரும் 27 ம்தேதி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் என்று கேள்விப்படுகிறேன். தயவுசெய்து இப்படி ஒரு திட்டமிருப்பின் அதை கைவிடாமல் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். செப்டம்பர் 14,2018

பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த விஜய் மல்லையா பாராளுமன்றத்திலிருந்து வெளியே வரும் போது நிதி அமைச்சரை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தாக மல்லையா வேண்டும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையே நேற்று திரு. ஜெட்லி அவர்களும் கூறியுள்ளார். வீண் வதந்திகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது. செப்டம்பர் 14,2018

இந்து அறநிலையத்துறை வசம் 38646 கோவில்கள் உள்ளன என்று அறநிலையத்துறையின் கொள்கை குறிப்பு கூறுகிறது. அறநிலையத்துறை அவைகளை எடுத்துக் கொள்ளும் போது வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இன்று அனைத்தும் வழிபாடு நடக்கும் கோவில்களா என்று அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். செப்டம்பர் 12,2018

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான தமிழக அரசின் கெடுபிடிகள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். மத நிகழ்ச்சிகளுக்கு எந்த கட்டுப்பாடும் அரசு விதிக்க முடியாது. இந்துக்கள் வீதிக்கு வந்து நம் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய நேரமிது. செப்டம்பர் 11,2018

எதிர்கட்சிகளுக்கு வேறு எந்த பிரச்னையும் கிடைக்கவில்லை. இதனால் தான் பெட்ரோல், டீசல் விலை பிரச்னையை ஊதி பெரிதாக்குகின்றன.
செப்டம்பர் 10,2018

முகநூலில் ஒரு நண்பரின் கேள்வி. மிருகங்களோ அல்லது தாவரங்களோ கூட ஓரினசேர்க்கை அல்லது தன்பால் ஈர்ப்பில் ஈடுபடாத போது மனிதன் மட்டும் ஏன் இப்படி? இதற்கு என்ன பதில் சொல்வது? செப்டம்பர் 08,2018

நகர்புற நக்ஸலைட்கள் கொரில்லா நக்ஸலைட்டுகளை விட ஆபத்தானவர்கள் என்று கூறிய காங்கிரஸ் இன்று மோடி ஜியை கொலை செய்ய திட்டமிட்டுள்ள நக்ஸலைட்டுகளை ஆதரிப்பது ஆபத்தான மற்றும் கீழ்தரமான செயலாகும். எப்போதும் போல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கொலைகார கும்பலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். செப்டம்பர் 04,2018

விமானத்திலும் தூத்துக்குடி விமானநிலையத்திலும் மாநிலத் தலைவி Dr.தமிழிசை , பாஜக, மற்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு எதிராக கோஷமிட்ட ஸோஃபியா வின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லா அநாகரீக செயல்களையும் ஆதரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் செயல் கண்டிக்கத்தக்கது. செப்டம்பர் 04,2018

2.9.18 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை அமல்படுத்த கோரி நடைபெற்ற உண்ணாவிரதத்தில் ஆதரவளித்து கலந்து கொண்ட அனைத்து இந்து உணர்வாளர்களுக்கும் பாஜக மற்றும் இந்து இயக்கத்தினரும் கும் நன்றி. செப்டம்பர் 03,2018

அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் !
செப்டம்பர் 02,2018

இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பாக நடத்த உள்ள போராட்டத்தின் அவசியத்தை உணர்த்தும் சம்பவம். பல்கலைக்கழகம் முதல் பால் பூத்து வரை கழகங்களின் கோவில் நிலத்தில் அபகரிப்பு தொடர்கிறது. அதிமுக புதுகை நகரச் செயலாளர் பாஸ்கரனை கைது செய்யும் வரை பகிரவும். செப்டம்பர் 01,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X