@ தமிழிசை சவுந்திரராஜன் ட்வீட்ஸ்

தமிழிசை சவுந்திரராஜன்

வெளிநாடும் வெளிநடப்பும்!மக்கள்வரிப்பணத்தில் மோடி வெளிநாடுசெல்வதாக விமர்சிக்கும் ஸ்டாலின்அவர்களே வெளிநாட்டிலிருந்து மக்களுக்கு முதலீடு வருகிறது,மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் சட்டமன்றத்தில் நீங்கள் வெளிநடப்பு செய்ததால் மக்களுக்கு என்ன வருகிறது?உங்களுக்கு கால் சுளுக்கு வருவதைத்தவிர? நவம்பர் 15,2018

ஒருகோடிதொழிலாளர் திடீரென வேலையிழக்க யார் காரணம்?பட்டாசு எதிர்ப்புபிரச்சாரம் செய்த இடதுசாரி ஆதரவாளர்களே முழுமுதற்காரணம் பல்வேறு பெயர்களில் போராடி விட்டு தற்சமயம் நீலிக்கண்ணீர் வடிக்கும் இடதுசாரிகள்.சென்னையில் பட்டாசு எதிர்ப்பு பிரச்சாரம்.சிவகாசியில் பட்டாசு தொழிலாளர் ஆதரவு வேடம் நவம்பர் 14,2018

தேசபக்தர் மோடி தேசம் காக்கும் படைவீரர்களுடன் தீபாவளி நவம்பர் 07,2018

கீழடியின் முதல் இரு அகழ்வாய்வு இறுதி அறிக்கை தயாரிக்க முன்னாள் இயக்குனர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசாணை வெளியிட்டிருப்பதை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசுக்கு நன்றி நவம்பர் 01,2018

சென்னை பா.ஜ., மாநில தலைமை அலுவலகத்தில் எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கு தயாராவது குறித்து தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடந்தது. அக்டோபர் 24,2018

அய்யப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும்......பண்பாடு..பாதுகாக்கப்பட வேண்டும்.... அங்கு...பெண்பாடு முக்கியமில்லை...பழக்கப்பட்டுவரும்...பண்பாடுதான் முக்கியம்...இது மூடநம்பிக்கையல்ல...முடிவான நம்பிக்கை..இது தீர்க்கக்கூடிய..நம்பிக்கையல்ல...தீர்க்கமான..தீவிரமான நம்பிக்கை அக்டோபர் 19,2018

சர்கார் என படத்தலைப்பு வைத்துள்ளவர்களுக்கே மக்களுக்கு நல்லது செய்ய இவ்வளவு ஆர்வம் என்றால், சர்காராக இருக்கும் எங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும் ? அக்டோபர் 15,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X