@ எடப்பாடி பழனிசாமி ட்வீட்ஸ்

எடப்பாடி பழனிசாமி

முதலவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று தலைமைச் செயலகத்தில், போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.P.W.C டேவிதார் இ.ஆ.ப., அவர்கள் பணிஓய்வு பெறுவதையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நவம்பர் 01,2018

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ1 லட்சம் வழங்க, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 24,2018

அஇஅதிமுக 47வது ஆண்டு தொடக்க விழாவில், மாண்புமிகு ஒருங்கிணைப்பாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் அவர்களால் தயார் செய்யப்பட்டுள்ள "சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை" கொடியசைத்து துவக்கி வைத்தனர். அக்டோபர் 17,2018

இன்று (10.10.2018) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினேன். அக்டோபர் 10,2018

தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து தமிழக அரசு சார்பாக எடுக்கப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினேன். அக்டோபர் 06,2018

தமிழகத்தில் 7.10.2018 அன்று சில இடங்களில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்ததையொட்டி, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அக்டோபர் 05,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X