புனித நீராடி என்ன புண்ணியம் மக்களே உங்கள் மனதை புனிதப்படுத்தினாலே போதும் இதுபோன்ற ஆப்பத்தான ஆன்மீக பயணங்களே தேவை இல்லை.உணருங்கள்.
11-பிப்-2013 11:45:06 IST
"தன்னை பெற்ற தாயை 2 மாதமாகியும் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் பிள்ளைகள்".
இந்நேரம் தொலைந்தது நீங்களாக இருந்தால் ஒரு தாய் என்ன செய்திருப்பாள் என்று தெரியுமா பிள்ளைகளே?
04-பிப்-2013 17:13:53 IST
திரு.மகேந்திரன் அவர்களின் அர்த்தமுள்ள சேவைக்கு நான் முதலில் தலை வணங்குகிறேன்.
நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும், ஆதரவற்ற முதியோர்கள் ஆளில்லா இடத்தில் ஒன்றும் வீழ்ந்து கிடக்கவில்லை, பணக்காரர்களும்,பதவியிலிருப்போரும்,பொதுமக்களும் மாறிமாறி பயணிக்கும் பாதையில்தான் என்று, இருந்தும் எத்தனை பேர் திரு.மகேந்திரன் அவர்களை போல் ஆதரவு கொடுத்திருப்பார்கள்.(இதில் நானும் ஒருவன்,இதை எண்ணி நான் வெட்கி தலைகுனிகிறேன், சாலையில் இவர்களை கடுந்துசெல்லும் போது என் கையில் உள்ளளவில் உதவி மேற்கொண்டு உதவாமல் செல்லும் போது நான் மிகவும் வருத்தப்படுகிறேன்,மேற்கொண்டு உதவி செய்ய எனக்கு உணர்வுகள் இருக்கிறது ஆனால் என் உடனிருக்க ஆட்கள் தான் இல்லை, இருந்தாலும் என் வாழ்நாள் முடிவிற்குள் இவர்களை பாதுகாக்கும் ஒருஅமைப்பை ஏற்படுத்தி செல்லவேண்டும் என்ற என் குறிக்கோளின் மூலம் என் மனபுன்ணிற்கு நானே மருந்திட்டுக்கொள்கிறேன்.
கூடுதலாக இப்போது திரு.மகேந்திரன் அவர்களின் மகத்தான சேவைகளை எண்ணி என் மனதிற்கு வலுவூட்டுகிறேன்.)
வீண் ஆடம்பரத்தையும்,ஆதிக்கத்தையும் தன்னகத்தே கொண்டவர்கள் அமைதியையும்,
பணத்தோடு மக்கள் பாவத்தையும் சேர்த்து சம்பாதிப்பவர்கள் கருணையையும் நாட வேண்டிய நேரம் வெகுதொலைவில் இல்லை அவர்கள் முதுமை அடையும் வரை காத்திருங்கள்.
மனிதநேயத்தின் மறுபெயராக திகழும் திரு.மகேந்திரன் அவர்கள் இருக்கும் வரை கோவை மாநகரில் ஆதரவற்றவர்கள் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.திரு.மகேந்திரன் அவர்களே நீங்களும்,உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கவேண்டும் உங்களுடைய இந்த மகத்தான சேவை இந்திய தேசம் முழுவதும் பரவவேண்டும் என என்மனதார வேண்டி வாழ்த்துகிறேன்.நன்றி
30-ஜன-2013 16:11:19 IST
அருமை அருமை கேட்கவே மிக்க ஆனந்தமாக இருக்கிறது, இவர்களை போன்ற ஒருசில ஆசிரியர்களால் தான் அரசு பள்ளிகளுக்கே பெருமை ஏற்படுகிறது . திருமதி. சசிகலா தேவி அவர்கள் பள்ளி குழைந்தைகளின் கல்வியை பொருத்தவகையில் ஒரு சரஸ்வதி தேவி என்றே சொல்லலாம். தன் பணியை தனது கடமையாக கருதும் இந்த ஆசிரிய பெருந்தகை அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இவரை போன்று சக அரசு ஊழியர்களும் கல்வித்துறை மட்டுமில்லாது மற்ற துறையிலும், தங்களது பணியை தமது கடமையாக கருதி செய்தால் நாடு வெகுவிரைவில் வளர்ச்சி பெரும்.
27-ஜன-2013 18:30:18 IST
தன் தாய் தகப்பனையும்,தாய்மொழியையும் நம்பினோர் என்றும் வீணாவது இல்லை என்ற உன்னதமான உண்மையை உலகிற்கு பறைசாற்றிய சகோதரிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.மென் மேலும் தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.நன்றி
25-ஜன-2013 11:03:53 IST
முன்னர் ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்த நம் சமுகம் இப்பொழுது அவன் மொழிக்கு அடிமையாகி கிடக்கிறது.
என் தாய்நாட்டில், என் தாய் மொழி தமிழில், பேசுவது தவறா?
எனக்கு ஒரு சந்தேகம் சொல்வீர்களா?
எனக்கும் தமிழ் தெரியும் உங்களுக்கும் நன்றாக தெரியும் அப்படி இருக்க நாம் இருவரும் தமிழிலேயே பேசிக்கொள்ளலாமே
அதை விட்டுவிட்டு நடுவில் எதற்கு வேறொரு மொழி?
03-ஜன-2013 12:09:32 IST
யார் எதை செய்தாலும் சரி , அது ஒருநாள் எந்தவகையிலும் வெளிப்படும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை . ஏனென்றால் இது காலத்தின் கட்டாயம்.
மக்களே நீங்கள் ஒன்றை மனதில் கொள்ளுங்கள், அங்கு அழிக்கப்பட்டது நம் இனம் என்று கூட நீங்கள் நினைக்காவிட்டாலும் சரி , அங்கு அநீதிக்கு ஆளானது நம்மை போன்ற சக மக்களும், குடும்பங்களும் தான் என்று கூடவா எண்ணி முன்வரமாட்டீர்களா
மதம், சாதி என்றெல்லாம் பிரிந்துகிடந்த நீங்கள் இப்போது அரசியல் கட்சி வாரியாகவும் பிரிந்து கிடக்கிறீர்கள். தயவுசெய்து உதவி செய்யுங்கள் நண்பர்களே நான் ஆளும் கட்சி, நீ எதிர் கட்சி என்றெல்லாம் கூறி அரசியல் நடுத்துவதை விட்டுவிட்டு எந்த ஆதாயமும் இல்லாமல் ஒன்றுபட்ட தமிழக மக்களாக ஒன்று திரண்டால் தமிழர்களுக்கென ஒரு நாடு அமைவது உறுதி.
17-டிச-2012 17:49:34 IST