கனிமொழி எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் தி.மு.க கட்சிக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே திண்டிவனத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தை, தன்னால் கட்சியில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக ரத்து செய்தார். எனவே இந்த முறை அதுமாதிரி நடக்காது.
29-மே-2013 12:57:29 IST
தி.மு.கவிப் பொறுத்தவரை திருச்சி சிவா மற்றும் கனிமொழி ஆகியோரின் ராஜ்ய சபா பதவிக் காலாம் முடிவுறுகிறது. இதில் திருச்சி சிவா வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருச்சியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. கனிமொழியைப் பொறுத்தவரை கடந்த 6 ஆண்டுகளில் ராஜ்ய சபாவில் தி.மு.க சார்பில் பல்வேறு விவாதங்களில் கலந்துகொண்டு சிறப்பாகப் பேசியிருக்கிறார்.கட்சிப் பணிகளிலும் சர்ச்சைகள் இல்லாமல் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். கலைஞர் டி.வி. பணப் பவர்த்தனை வழக்கிற்கும் கனிமொழிக்கும் சம்பந்தமில்லை என்றாலும், அதில் சிக்கவைக்கப்பட்டார். தற்போது அதுவும் நிரூபனமாகிக்கொண்டிருக்கிறது. எனவே தி.மு.க சார்பில் மீண்டும் ராஜ்யசபாவிற்கு கனிமொழியைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் தி.மு.க விற்கும் அது பலத்தைக் கொடுக்கும் வகையில் அமையும்.
29-மே-2013 11:40:48 IST
வட இந்தியாவில் எதிர் எதிராக இருக்கும் கட்சியின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள், வீட்டு நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இங்கோ எதிர் எதிர் கட்சிகளில் இருப்பவர்கள் உறவினர்களாக இருந்தாலும்கூட சந்திப்பது பாவமாகக் கருதப்படுகிறது. பண்பாடு, நாகரிகம் என்பது காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டது. ஒரு மூத்த அரசியல் தலைவர், இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் இருக்கும்போது சென்று உடல்நலன் விசாரிப்பதைக் கூட விமர்சிக்கும் அளவிற்கு தமிழத்தில் பண்பாடு சீரழிந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
29-மே-2013 11:27:27 IST
கலைஞர் டி.விக்கும் கனிமொழிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று இதுவரை சொல்லி வந்தது இப்போது நிரூபணம் ஆகியுள்ளது. இந்த வழக்கில் கனிமொழியை சிக்கவைத்து அதன்மூலம் அப்பாவியான கனிமொழியை பல மாதங்கள் சிறைவாசத்தையும் அனுபவிக்க வைத்து விட்டார்கள். இதில் நடந்தது அரசியல் சதியா? குடும்ப சதியா? இதற்கு ஏன் சி.பி.ஐ யும் உடந்தையாக இருந்தது, காங்கிரஸ் கட்சியும் இதற்குப் பின்னணியில் இருந்ததா என்பதெல்லாம் விரைவில் வெளிவரும்.
04-மே-2013 12:43:28 IST
கருணாநிதியின் கருத்து மிகச் சரியானதே. புகார் அளித்தவர் மரணமடைவதால் அவர் எந்தக் குற்றத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாரோ, அந்தக் குற்றம் மறைந்துவிடாது என்பது நியதி. இந்த நியதி ஏழை, பணக்காரன், சாதாரண குடிமகன், அரசு அதிகாரத்தில் இருப்பவர் என்று எல்லோருக்கும் பொருந்தும். தாமதமானாலும் நீதி வெல்லும்.
02-மே-2013 18:26:18 IST
ஒவ்வொரு முறையும் மத்திய அரசிடம் இந்தப் பிரச்னைக்காக வேண்டுகோள் விடுப்பதும் தொடர்கதையாக உள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் மீனவர்களின் இந்தத் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இனியும் காலதாமதம் செய்யாமல் விரைந்து தீவிரமான ஒரு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன் வரவேண்டும். இத்தாலி கடற்படையினரால் கேரள மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வில் மத்திய அரசு செலுத்தி வரும் அக்கறையில் நூறில் ஒரு பங்காவது தமிழக மீனவர்களுக்கும் செலுத்திட வேண்டுமென்று தமிழகமே எதிர்பார்க்கிறது.
02-மே-2013 18:24:06 IST
கேரளா மற்றும் உள்ள மாநிலங்களில் எல்லாம் இதுமாதிரி சம்பவங்கள் நடந்தால் அம்மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் விரைந்தோடி சென்று உதவிக்கரம் நீட்டுகிறார்கள். அடுத்து இதுமாதிரி சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக ஆலோசனை செய்கிறார்கள். தூத்துக்குடியில், திருப்பூரில் என்று நடைபெற்ற சில சம்பவங்களை தமிழக அரசு அலட்சிய மனப்பான்மையோடு அணுகியது வேதனைக்குரியது. தூத்துக்குடியில் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டபோது, தி.மு.க சார்பில் உதவித்தொகை அறிவிக்கப்பட்டு அதனை கனிமொழி நேரில் கொண்டு சென்று கொடுத்து அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகுதான் தமிழக அரசே நிவாரணத் தொகையை அறிவித்தது.
02-மே-2013 18:16:38 IST
தமிழகம் முழுவதும், குடிநீர் பஞ்சம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., அரசு, குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், குடிநீர் திட்டங்களை, 110வது விதியின் கீழ் அறிவிப்பதிலேயே, காலத்தைச் செலுத்தி வருகிறது.நெம்மேலியில், கடல் நீரைக் குடிநீராக்க, 1,000 கோடி ரூபாயில் புதிய குடிநீர் திட்டம் ஒன்றை, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருக்கிறார். வெறும் காகித அறிவிப்பு, தமிழ் மக்களின் தண்ணீர் தாகத்தைத் தணித்திடுமா?
22-ஏப்-2013 12:20:18 IST
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.சி.சாக்கோவை தலைவராக நியமித்ததே காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அறிக்கை வெளியிடத்தானோ என்று தோன்றுகிறது. மந்திரிசபை கேபினெட் முடிவை செயல்படுத்தியதற்காக வருடக்கணக்கில் சிறையில் வைக்கப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் தன் தரப்பு நியாயத்தை சொல்வதற்கு அனுமதி கேட்பது நியாமான கோரிக்கைதானே?. குற்றம் சாட்டப்பட்டவர் ராஜா... அவர் தரப்பு நியாயத்தை சொல்ல வந்தால் ஏன் மறுக்கவேண்டும்? ராஜாவிற்கு சாட்சியம் அளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு, கேபினட்டிற்குத் தலைமை தாங்கிய பிரதமர் மன்மோகன்சிங்கும், இந்த முடிவில் முக்கிய பங்கு வகித்த, நிதி அமைச்சர் சிதம்பரமும், கூட்டுக்குழு முன் ஆஜராகாத நிலையில், ஜே.பி.சி யின் அறிக்கை பழி முழுவதையும் ராஜா மீது போட்டு காங்கிரஸ் கட்சியைக் காப்பற்றவே முயன்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
22-ஏப்-2013 12:16:24 IST
மதுரை, ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயனத்திற்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அழகிரியை சந்தித்திருக்கவேண்டும். தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கும் அழகிரியப் புறக்கணித்திருப்பது கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். சமீபத்தில், கனிமொழி மதுரை சென்றபோது கூறியபடி, அழகிரியும், ஸ்டாலினும் ஒன்றாகப் பணியாற்றினால், கட்சி பலம் பெறும். வருங்காலத் தலைவராக உருவகப்படுத்தப்படும் ஸ்டாலின் யாரையும் புறக்கணிக்காமல், எல்லோரையும் அனுசரித்து நடந்தால்தான் அவர் அந்தத் தலைமைப் பதவியை அலங்கரிக்கமுடியும்
15-ஏப்-2013 10:18:56 IST