அவர் குறிப்பிட்ட மூன்று நகரங்களும் (கொல்கத்தா, ஷாங்காய், டாக்கா) கடலுக்கு பக்கத்தில் அமையவில்லை. அவைகள் ஆற்றின் கரையில் அமைந்துள்ள நகரங்கள் ஆகும். சேது சமுத்திரத்தில் நீர் ஓட்டம் அதிகமானால் பயனே அன்றி பாதகமில்லை.
08-ஏப்-2013 10:05:41 IST
தனது அக்கா மற்றும் அம்மாவை இரவு 8 மணிக்கு தனியாக இந்த ADSP அனுப்புவாரா? அப்போது இந்த ADSP-க்கு புரியும் இந்த சமுதாயத்தின் அவலங்கள்.
23-மார்-2013 09:32:06 IST
படம் பலவிதங்களில் புதுமையாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட மதத்தை இவ்வளவு கேவலமாக காட்டியிருப்பது ரசிக்க கூடியதில்லை. இதில் எந்த அளவு வரலாற்று உண்மைகள் உள்ளது என்பதை ஆராய்ந்து பாகுபாடுயின்றி balanced-ஆக சொல்லியிருந்தால் நல்லது. மதமாற்றம் நடந்தது என்பது உண்மை. ஆனால் இப்படி தான் நடந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? எவ்வளவோ பேர்களுக்கு சாகும் போது உதவி, மறு வாழ்வு கொடுத்தவர்களை இப்படி கேவலப்படுத்தாமல், சில முறையாவது உதவுவது போல காட்டியிருக்கலாம். திரு. பாலா அவர்களுக்கு எனது கண்டனங்கள்.
19-மார்-2013 12:36:32 IST
ராணுவ ரகசியங்கள் எப்படி பொதுமக்கள் உபயோக படுத்தும் வலைத்தளத்தில் வந்தது? அதற்காக எவ்வளவோ தொழில் நுட்பங்கள் இருக்கிறது VPN போல. இது வேண்டுமென்றே சீனா திருட கொடுத்தாக இருக்கும்...வேறு பிளான் வைத்திருப்பார்கள். அதனை ஆராய வேண்டியது அவசியம்.
14-மார்-2013 09:38:22 IST
அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் போது கொச்சை வார்த்தைகளை உபயோகிப்பது நாகரிகமற்றது. ஆனால் அவர்களை விமர்சிக்கவே கூடாது என்பது ஜனநாயகத்திற்கு நல்லதா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. நாம் அரசர் காலத்திற்கா சென்றுக்கொண்டுயிருக்கிறோம்? இப்போது நம்மை ஆளுபவர்கள் ஜனநாயக தலைவர்கள் தானே? நாம் தேர்ந்தெடுத்தவர்கள் தானே?
26-பிப்-2013 11:24:21 IST
ஐயா, கொஞ்சம் ராயபுரம் போலீஸ் ஸ்டேஷன் கூட பாருங்க. இதே நிலை தான். போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியிலிருந்து அரசாங்க அலுவலங்கங்களை வேறு இடத்திற்கு மாற்றி smooth trafficக்கு வழி வகுக்கலாமே? அப்படியே, கொஞ்சம் சாந்தோம் பக்கமும் பாருங்கள் - லைட் ஹவுஸ் to பட்டினப்பாக்கம் வரை - எப்போதும் traffic.
22-பிப்-2013 10:14:05 IST
இந்த தொழிற் சங்கங்கள் எல்லாம் லஞ்சம் ஊழல் இவை குறித்து போராட்டங்கள் பண்ணியதா சரித்திரமே இல்லை. எல்லா நிலைகளிலும் இதை எதிர்த்து போராடுவது அனைவரது கடமை. மக்களை சுரண்டி திவாலாக்கும் இன்றைய காலகட்டத்தில் தங்களது கல்லா மட்டும் நிரம்பினால் போதும் என்பது எந்த வகையில் நியாயம்? எங்களிடம் பணம் இருந்தால் தானே வேலை செய்பவர்களுக்கு சம்பளம்? ஏனோ மனம் அறிய மறுக்குது?
19-பிப்-2013 16:52:37 IST
காதல் காதல் காதல். காதல் போயின் சாதல் சாதல் சாதல்... அந்த கயவன் தன்னை மாய்திருக்க வேண்டும். அடுத்தவரை கொல்ல யார் அனுமதி கொடுத்தது? எந்த பெண்ணும் தனது காதல் தோல்விக்காக ஆண்கள் மீது acid வீசியதாக தகவல் இல்லை... ஏன் இந்த கொடுமை ஆண்களால் பெண்கள் மீது? Acid ஆண்களுக்கு மட்டும் விற்கபடுகிறதா? சிங்கார மகளை இழந்த வினோதினியின் பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த கயவனை அணு அணுவாக சித்ரவதை செய்து கொல்ல வேண்டும். நமது சட்ட முறைகள் மாற வேண்டும்.
13-பிப்-2013 12:51:32 IST
வெற்றி பெற்ற படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை கமல் அவர்கள் தன்னை போல் சுதந்திர கருத்து சொல்லி அலைகழிக்கப்படும் மக்களுக்காக பயன்படுத்தலாமே. ஜன நாயகத்தில் இன்னும் நிறைய பேர் கருத்து சுதந்தரத்திற்கு போராட வேண்டியுள்ளது. கமல் அவர்கள் நாட்டில் இருந்துக்கொண்டு வழி காட்டலாமே செய்வாரா? செய்யவிடுவார்களா?
13-பிப்-2013 11:58:23 IST