"பிட்டராக இருந்தாலும் விபவரமானவர் பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர்." ஆமாம் பிட்டர் ஆக இருந்தால் படித்தவராக புத்திசாலியாக இருக்க கூடாதா என்ன? உங்கள் தொனி பிட்டர் ஆக இருப்பவர்கள் எல்லோரும் ஞான சூன்யங்கள் என்றல்லவா சொல்ல விழைகிறது. என் குடும்பத்தில் - இது போல தொழிற்சாலையில் வேலை செய்தவர் - அவர் வெல்டர் - அவர் போல ஒரு புத்திசாலி, அறிவாளி யாரும் கிடையாது - இத்தனிக்கும் பலர் டாக்டர், இஞ்சினீயர், வெளிநாட்டில் Ph.D பெற்றவர் என்று பெரிய பெயர் உண்டு. அது வெறும் அனுபவ அறிவு மட்டும் இல்லை, Quantum Physics முதல் விவாதிக்க கூடிய அறிவினை பெற்றவர். போசோன் particle பற்றி செய்தி வந்த பொழுது அதனையும் இந்து மத கோட்பாடுகள் எப்படி அதனை அறிகிறது என்பதையும் - படித்தவர் மட்டுமல்ல எஸ்.எஸ்.எல்.சி படித்த அவரது மனைவிக்கும் விளக்கி சொன்னவர். ஆனால் அவர் வெறும் வெல்டர் மட்டுமே
19-மே-2013 01:22:26 IST
"அடிக்கடி வயிற்று வலி மாத்திரைகளையும், மாதவிலக்கை தள்ளிப் போட செய்யும் மாத்திரைகளையும் சாப்பிடுவது ஆபத்து என்று, டாக்டர் சொல்கிறார் " - இது முற்றிலும் தவறான தகவல். வயிற்று வலி மருந்துகள் வலி நிவாரணிகளே (அதனை அதிகம் உட்கொள்வதில் ஆபத்து உள்ளதே தவிர அடிக்கடி உட்கொள்வதில் இல்லை ). அடுத்த மாத்திரை பற்றி விவரம் தெரிந்து கொள்ள இணையம் உள்ளது. ஹார்மோன் கோளாறுகள் உள்ளவர்கள் எடுத்து கொள்ளும் நிவாரணம் போல தான் இது. வருடத்திற்கு நான்கு முறை விலக்கு என்பது இந்த மருந்துகளின் நோக்கம். Yaz என்ற பெயரில் விற்பனை ஆகும் இதனை பற்றி உங்கள் மருத்தவரிடம் விசாரித்து பார்க்கவும் (பக்க விளவுகளை பற்றியும்). இது உங்கள் கணவரின் நடத்தையை சரி என்பதற்காக சொல்லவில்லை - மருத்துகளை பற்றி தவறாக சொல்ல வேண்டாம் என்பதற்காக. உங்கள் கணவர் - அல்லது அவரை போன்று insensitive ஆக இருப்பவர்களை ஆதரிப்பதற்கு இல்லை இந்த பதிப்பு.
"யாருக்கோ என்னவோ, ஆனால் நமக்கு என்ன என்ற மனப்பாங்கு, இந்த குடிகாரர்களிடம் ஏன் இப்படி பரவிக் கிடக்கிறதோ தெரியவில்லை" - ஐயா இந்த மனப்பான்மை எல்லோருக்கும் இருக்கிறது. அதற்காக குடிகாரகளுக்கு மட்டும் இருப்பதாக இங்கு சொல்ல வேண்டாம். ஏன் வீட்டை கூட்டி தெருவில் குப்பையை (குழந்தைகளின் மல கழிவு, சானிடரி சாதனைகள் உட்பட) எறியும் பெண்மணிகள் முதல், சிகரட்டை பிடித்துவிட்டு அதன் பில்டரை கடாசும் படித்த மடையர்கள் வரை எல்லோரும் இப்படிதானே. தெருவில் காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் பைகளை பார்க்கவும், அந்த சிகரட் (அணையாதது வேறு) செருப்பில்லாது நடக்கும் (பெரும்பாலும் வசதிஇல்லாத சிறுவ, சிறுமியர்) பலரை காலை பதம் பார்க்கும் என்பது படித்தவருக்கும் தெரியவில்லையே. அதனை ஏற்கும் நீங்கள் - குடிகாரகளுக்கு மட்டும் இந்த பழக்கம் இருப்பது போல, குற்றம் சாட்டுவது தவறு. அப்படியே கண்ணாடியில் உங்களை பார்த்து கொள்ளுங்கள். எத்தனை முறை வாழை பழ தோலை சாப்பிட்டு விட்டு தெருவில் விட்டு எறிந்து இருக்கிறீர்கள் என்று பின்னர் குற்றம் சாட்டலாம் .
19-மே-2013 01:13:49 IST
@தங்கப்பன் - உங்கள் அக்கறை புரிகிறது. ஆனால் அதே நேரம், மாணவ மாணவியரை இச்செயலில் ஈடுபட கூடாது என்று தடுக்க இயலாது என்பதும் உண்மை . அவர்களுக்கு பாதுகாப்பான முறைகளை சொல்லி தரலாம். ஆனால் அதனை செய்தால் நம் கலாசார காவலர்கள் - பள்ளியை மட்டும் அல்ல, அந்த ஆசிரியைகளையும் பழித்து, ஒழித்து விடுவார்கள். ஆமாம் இதனை ஏன் அந்த பெண்களின் பெற்றோர்கள் சொல்லி தர கூடாது? அவர்களை கண்காணிக்க வேண்டாம் - அவர்கள் குற்றவாளிகள் அல்ல. ஒரு தாய் இதனை எளிதாக தன பெண்ணிற்கு சொல்லி தரலாமே? அந்த பொறுப்பை ஏன் ஆசிரியைகளிடம் விட வேண்டும்? ஆசிரியைகள் சொல்லி தருவது தவறு என சொல்லவில்லை ஆனால் தாயை விடவா குரு? ஆசிரியைகள் இதனை செய்ய தயங்கி விலகுவார்கள் - பயத்தில். அத்துடன் இந்த வகுப்புகளை ஒரு வித லஜ்ஜையுடன் நடத்தி, கேலிக்கும் உள்ள்வார்கள்.
12-மே-2013 07:25:53 IST
இந்த 2013 ஆம் ஆண்டில் கூட இது போன்ற பெற்றோர்கள் இருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். அதுவும் கல்லூரிக்கு செல்லும் பெண்ணை சந்தேகிப்பது இன்னமும் அவலமான விஷயம். இதற்கு நமது சமீபத்திய காலாச்சார காவலர்களும் ஒரு மிக பெரிய காரணி. அதுதான் சாதி போர்வையில் காதல் என்பதை எதிர்த்து, பெண்களை இன்னமும் தம் கைக்குள் அடக்க நினைக்கும் சமூக காவலர்கள். அவர்ளின் பலம், அ வர்களை ஆதரிக்கும் இது போன்ற பெற்றோர்.
ஒரு முக்கிய கேள்வி. இவரின் தாயார் பற்றி இவர் எதுவும் சொல்லாதது. இவரின் தாயார் இவரை எப்படி நடத்துகிறார்?
தற்கொலைக்கு முயற்சிக்கும் இவரது மனபோக்கு அதிர்ச்சியை தருகிறது. அத்தனை அளவிற்கு ஒன்று இவரது பெற்றோர் இவரை கடுமையாக நடத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்க வேண்டும் அல்லது இவர் அவர்களின் ஒப்புதலை பெற, தன்னை நிலை நிறுத்தி கொள்ள அதிகமாக விரும்புகிறார் போலும். அதுதான் இவரின் அதீத அதிரடி நடவடிக்கை.
பெற்றோரை நிராகரிக்க வேண்டியது முதல் படி. நிராகரிப்பது என்பது வீட்டை விட்டு ஓடுதல் அல்ல. அதற்காக அவர்கள் சொல்படி - அல்லது அவர்களது கட்டளைப்படி நடக்க வேண்டும் என்பதும் அல்ல.
பெற்றோர் வன்முறையில் இறங்கினால் பிறகு வேறு வழி தேட வேண்டும். அவர்களின் அழிச்சாட்டியம் எல்லாம் அவர்களை இந்த பெண் பொருளாதார ரீதியாக சார்ந்து இருக்கிறாள் என்ற ஒரு முக்கிய அம்சத்தினாலேயே நடக்கிறது. அந்த காரணி அழியும் பட்சத்தில் இவர்கள் முக்கியமற்றவர்கள் என்பதை உணர வேண்டும், உணர வைக்க வேண்டும். பின்னாளில் அவர்கள் உங்களை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும் என்பதை உணராத மடையர்கள். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பதை உணர மறுப்பவர்கள்.
இந்த ஆலோசகர் சொன்னது போல இவர், தன சுய எதிகாலத்தை எண்ணி அதனை மட்டுமே கருத்தில் கொண்டு தன்னை தனி நபராக நிலை நிறுத்தி கொள்ள முயல வேண்டும். இத்தகைய பெற்றோர் மற்றவர்களின் மதிப்பீடுகளுக்காக வாழும் மடையர்கள். தம் குழந்தைகள் தவறே செய்தாலும் ஆலோசை தந்து வழி நடத்தும் பெற்றோர்கள் இருக்கும் காலத்தில் இவர்கள் டைனோசர்கள். இந்த ஆலோச்சகர சொன்ன ஒரு கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அது - இவர் தம் பெற்றோர் போற்ற வாழ வேண்டும் என்று சொல்வது. தம் குறிக்கோளை, லட்சியத்தை, தனித்தன்மையை, நிலை நாட்டி வாழ வேண்டும் தவிர மற்றவர் போற்ற, மற்றவருக்காக வாழ வேண்டும் என்பது எல்லாம் தவறு. அதனால்தான் கனவுகள் காணாமல் போகின்றன. இந்த வயதில் கனவுகளை கண்டு அதனை அடைய முயற்சிக்காமல் இருந்தால் அது தவறு. (அது எந்த வயதுக்கும் பொருந்தும் என்றாலும்). அந்த வாழ்க்கையை உங்கள் பெற்றோர் ஏற்றால் நல்லது ஏற்காவிடினும் நல்லதே ஏன் எனில் அது உங்கள் வாழ்க்கை, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை. உங்கள் பெற்றோர் போல மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து அதற்காக தங்கள் சுய தன்மையை இழந்து வாழாதீர்கள்.
நீங்கள் உங்களுக்கு உண்மையானவராக இருத்தல் முக்கியம் - அது மட்டும் போதும். எந்த வித ஏச்சும் பேச்சும் உங்களை பாதிக்காது. அது உங்களை பாதிக்க விடுவது உங்கள் பலவீனம்.
இது போன்ற பிள்ளை பூச்சிகளை, கொட்டி கொண்டே இருக்கும் நச்சு வண்டுகளை புறக்கணிக்க கற்று கொள்ளுங்கள். ஒரு விதத்தில் அது உங்களுக்கான வாழ்க்கை பயிற்சி. உங்கள் எதிர்காலத்தில் (அலுவலகம், குடும்பம் என்று பல இடங்களில் இது போல கொட்டும் நச்சு பேர்வழிகள் நிறைய பேரை எதிர் கொள்வீர்கள் . அதற்கான பயிற்சி முகாம் இது என கொள்ளுங்கள். அந்த விதத்தில் உங்கள் பெற்றோருக்கு நன்றி கூட சொல்லலாம்.
நீங்கள் சொந்த காலில் நிற்கும் வரை, நீங்கள் இவர்களை அண்டி இருக்கும் ஒரு ஒட்டுண்ணி. ஆமாம் ஒட்டுண்ணி. வளர்ந்த பிறகு கவலை எதுவும் படாது கூட்டை விட்டு பறந்து போங்கள். உங்கள் பெண்ணை ( பெண் பிறந்தால்) நம்புங்கள், கண்ணை மூடி கொண்டு நம்புங்கள். எப்படி இருக்க கூடாது என்பதை இவர்களிடம் இருந்து கற்று கொள்ளுங்கள்.
12-மே-2013 07:11:47 IST
மடத்தனம் "நம் வரலாற்றை வெளிநாட்டவர், நம்மிடமே சொல்ல வேண்டியிருப்பதை நினைத்து, நெளியத்தான் செய்தேன்" என்ற எண்ணம். அவருக்கு இதில் ஆர்வம் அதனால் தெரிந்து வைத்திருக்கிறார். அவரிடம் போய் ஒபாமாவின் பூர்வ கதை கேளுங்கள் - அசடு வழிவார். ஏன் அமெரிக்க சிவப்பிந்தியர்களின் பல்வேறு குடியிருப்புகளை (reservation என்பார்கள் ) கேளுங்கள் முழிப்பார். அவ்வளவு ஏன் அந்த நாட்டின் மாகாணங்கள் எத்தனை - அதன் தலைநகரம் எவை என்று கேட்டு பாருங்கள் - பேய் முழி முழிக்க கூடும். ஆக அவர் ஆர்வம் - கற்று கொள்கிறார். அதற்காக நெளிவது - அவரை புகழ்வது எல்லாம் டூ மச்.
05-மே-2013 02:01:52 IST
"அப்பாவிகளை அழ வைக்கும்" .. என்று சாபம் இட்டு இருக்கிறீர்கள். பாவம் - என்னதான் "உண்மையாக இருக்கும் பட்சத்தில் " என்ற disclaimer இருந்தாலும் .. அந்த பெண்ணின் நிலையில் இருந்து பார்க்கவும். அவளுக்கும் இது ஒரு வாழ்க்கை. திணிக்கப்பட்ட ஒன்று ஆக இருக்க கூடும். அப்படி என்றால் அந்த பெண்ணின் பாவம் இவரை எந்த நரகத்தில் தள்ளுமாம்? அல்லது அந்த பெண் என்பவள் மீது இது திணிக்கப்பட்ட குற்றம் ஆக இருப்பின். வெகு சமீபத்தில் ஒரு பிரபல திரைப்பட நடிகை வீட்டை விட்டு வெளி ஏறினார். அவர் மீது அவரின் வளர்ப்பு தாயாரே சொன்னது என்னவாம் - அவருக்கு ஏதோ நோய், தினமும் மாத்திரை உட்கொள்ள வேண்டும். அதனை சொன்ன விதம்தான் கொடுமை. தினமும் மாத்திரை - ஒரு BP, diabetes, thyroid, என்று பல சாதாரண காரணகளுக்கு உட்கொள்ளலாம். ஆனால் அது என்னமோ தெரிய கூடாத நோய் போலவும், அதன் மூலம் அந்த பெண்ணின் ஒழுக்கம் பற்றிய தவறான கருத்தை (subtle ஆக) பரப்பினார். இதுதான் இன்றைய நிலை - அதுவும் மேல் தட்டு பெண்ணிற்கு. அது போல இவர் ஏன் தன்னை, தன குறையை மறைக்க தன மனைவியை குற்றம் சொல்லி இருக்க கூடாது ? அவரின் வர்ணனைகளும் அதனை பறை சாற்றுகின்றன அதனால் தான் இவரை துளியும் நம்ப முடியவில்லை.
30-ஏப்-2013 18:56:09 IST
நீங்கள் சொல்லுவது நிரம்ப, கனவு போல தோன்றுகிறது. இன்று நம் நாட்டில் நடக்கும் பல திருமணங்கள் marriage for convenience. பொருளாதார தேவை, இளமையின் அடக்க இயலாத உடல் தேவை, பெண்களை எங்கேயாவது தள்ளி விட வேண்டும் என்ற பெற்றொரின் தேவை - இவைகளின் சங்கமமே இவை.
ஆதலால் காமம் முடிந்த பின், மோகம் முடிந்த பின், நிதர்சனம் ஒருவரை தாக்கும் பொழுது குற்றம் குறைகள் பெரிதாக தெரிகின்றன. ஏமாற்றங்கள் ஏற்பட்டு பின்னர் அதற்கு மாற்று வழிகள் தேடப்படுகின்றன.
அது பெண் ஆக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி - இருவருக்கும் ஏற்படும் ஒரு நிலை இது. அதனை ஏற்று சகித்து போகும் பலர் உண்டு, மாற்று வழிகள் தேடுபவர் உண்டு - அதனை செய்பவர்களை "மன்னித்து" ஏற்கும் பலரும் விரும்பி செய்வதில்லை. ஒரு விதத்தில் அவர்கள் - பொருளாதார ரீதி (பெண்கள் ஆயின்), குழந்தைகளின் எதிர்காலம், குடும்ப கௌரவம், - நிர்பந்திக்க படுகிறார்கள் - கலாச்சாரம் என்பது மிக அதிகமாக பயன்படுத்த படும் ஒரு ஆயுதம். அதிலும் மத்திய தர குடும்பங்களில் இவற்றின் தாக்கம் மிக மிக அதிகம்.
கர்நாடகத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் எழுதிய புத்தகம் ஒன்றில் இதனை அழகாக விளக்கி இருக்கிறார். பெயர் நினைவில்லை. அவரின் ஆய்வில் - பெண்கள் என்பவர்கள் சமூகத்தின் மேல் தட்டிலும், கீழ் தட்டிலும் மிகவும் சுதந்திரமாக இருக்கிறார்கள். ஒரு மணமான ஆளை பிடிக்கவில்லை என்றால் மற்றும் ஒரு மனதிற்கு பிடித்த துணையை நாடுவதில், இணைவதில் மேல் தட்டு மக்கள் தடுமாறுவதில்லை - கீழ் தட்டு மக்களும் தடுமாறுவதில்லை. அதன் முதல் காரணம் அவர்களின் பொருளாதார indepence.
அதனை தான் இன்றைய பெண் சமூகம் பெற்று வருகிறது. அதனால்தான் அவர்களால் காதல் என்று தமக்கு பிடித்த ஒருவரை தேர்ந்தெடுக்க முடிகிறது. அந்த ஒரு திண்ணமான முடிவு (அது காமம் சார்ந்து இருக்க வாய்ப்பு உண்டு) அவர்களின் முடிவாக இருக்கிறது. அதனால் தான் விவாகரத்து அதிகம் ஆக இருக்கிறது. அது மிகவும் நல்லதே. ஏன் எனில் 20 -30 வருடங்களில் இவர்கள் உருவாக்கும் தலைமுறை குழந்தைகள் இது போல தனித்தன்மையுடன் (அவர்கள் விருப்பம்- பெற்றொரின் திணிப்பு அல்ல, பொருளாதார தேவை அல்ல, கலாச்சார தேவை அல்ல) வளர முடியும்.
காதல் என்பது தானாக வர வேண்டியது - வரவழைக்க முடியும் என்பது கனவு. சினிமா போல - நான் அவளை காதலிக்கிறேன், ஆனால் இவளோ என்னை காதலிக்கிறாள் அதனால் இவளை திருமணம் செய்கிறேன் என்பது எந்த அளவு காம்பரமைஸ் ஓ அது போல தான் திருமணதிற்கு பிறுகு காதலிப்பது என்பதும்.
என்னதான் அறிவுரை சொன்னாலும் அடிப்படை கோணல் மாறாது. அதுவே சில செய்கைககளாக வெளி படுகிறது . அழகு தேய்ந்ததும், மோகம் போனதும் (அல்லது அந்த ஐந்து நிமிட வேகம் முடிந்ததும்) அவர்களின் குறைகள் தெரிய ஆரம்பிக்கின்றன. அந்த நேரத்தில் நீங்கள் சொல்வது எல்லாம் மேல் பூச்சு அல்லது தம்மை தாமே ஏமாற்றி கொள்ளும் உத்திகள். அதனை பலரும் வெற்றி கரமாக செயல் படுத்தி வருகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் இவை தம்மை தாமே ஏமாற்றி கொள்ளும் உத்திகள் என்பது மறுக்க முடியாது. எப்படி ஒரு குழந்தைக்கு மிட்டாய் தந்து அது "ஏமாந்த" நேரத்தில் ஊசி போடுகிறார்களோ அது போல.
கலாசாரம் என்ற சிறை இல்லை எனில், பலர் இந்த குறைகள் இன்றி இருப்பார்கள் என்பது என் கருத்து. நான் நிறைய சயின்ஸ் பிக்ஷன் வாசிப்பவன் அந்த முறையில் சொல்கிறேன். ஆண் என்பவன் இல்லாமல் யுனி செக்ஸ் முறையில் பெண்களால் இன விருத்தி செய்ய இயலும். அது பல நுனுயிரிகளில் இன்று நடந்து வருகிறது. இது கற்பனை அல்ல.
ஆக செக்ஸ் என்பது மட்டும் இன்றி, அதனை தாண்டி companionship என்ற தோழமையை நாடுவது மனித இயல்பு. ஏனெனில் மனிதன் ஒரு social animal. அது அவன் மரபணுக்களில் உள்ள ஒன்று. எப்படி ஒரு எறும்பு, தேனீ தனியாக இருக்க முடியாதோ அது போல. அந்த தோழமை தேவையை - செக்ஸ், திருமணம் என்ற பிணைப்பில் இருந்து விடுவிக்கும் பட்சத்தில் - இரு பாலருக்குமே நல்லது.
இன்று கலாசார நிர்பந்தங்களுக்கு உட்பட்டு, இந்த இந்திய தாலிபான் உண்டாக்கும் கட்டுபாடுகளினால் - பெற்றோர், இந்த வயதானவர் சொல்லும் அடிமை வியாக்கியானம், திருமணத்தின் பெருமை என்ற பீற்றல் - பலர் தம் விருப்பத்திற்கு மாறான வாழ்க்கை வாழ்கிறார்கள். அதுவும் மத்திய தட்டு மக்கள் - இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்.
அந்த தோழமையை ஏற்கும் மன பக்குவம் பலருக்கு இல்லை. ஒரு பெண்ணோ, ஆணோ மற்ற பாலருடன் பழகினால் அதனை தவறாக பார்க்கும் எண்ணம் - அதுவும் சுற்றி இருப்பவர்களின் கேள்விகள் என்ற பயம் - நம்மிடையே அதிகம். அதிலும் அந்த தவறான எண்ணங்களால் பாதிக்கப்படுவது பெண்ணே.
30-ஏப்-2013 18:46:18 IST
இன்று இந்தியாவில், தமிழ் நாட்டில் நாட்டை ஆளும் அளவிற்கு பெண்கள் திறமை பெற்றவர்கள். பல பெரிய நிறுவனகளின் தலைமை பொறுப்பை ஏற்று இருப்பவர்களும் அவரே. யாகூவின் மெலிசா, பெப்ஸியின் நூயி என்று ஆரம்பித்து ஜெயலலிதா, சோனியா என்று பலர். பள்ளிகளிலும் தேர்வில் முதன்மையாக வருபவர் அவர்களே - இன்னமும் இரண்டு வாரத்தில் 10, 12 வகுப்பு முடிவுகள் இதனை பறை சாற்றும். இந்த தினமலரின் பகுதியில் (ஒரு சாம்பிளாக ) எடுத்து பார்த்தால் தலைமை மாறலாம் ஆனால் அடிப்படையில் இன்னமும் பெண்களை அடிமையாக, இரண்டாம்தர மக்களாக, சிறுமையாக பார்க்கும் எண்ணம் அப்பட்டமாக தெரிகிறது. இன்று கற்பழிப்பு, வன்புணர்வு என்று இருப்பதின் காரணம் இங்கு பதிக்கப்படும் like/Dislike கூட வெளிச்சம் போட்டு காட்டும். இந்த வாரம் மட்டும் இல்லை முந்தைய பல வாராங்களை பார்த்தால் தெரியும். இங்கு ஒருவர் இப்படிப்பட்ட பெண்கள் சாதாரணம் என்று கூறிவிட்டு தன நண்பரின் conquest (வெற்றிகளை) அளக்கிறார் - அதற்கு வரும் ஆதரவை பாருங்கள். அந்த ஆண் மகனின் செயலை கண்டிக்க ஒருவர் முனையவில்லை - ஆனால் காறி துப்பியது என்னவோ அந்த பெண்ணை - அதனை பாராட்டி பலர். இது எதனை காட்டுகிறது? பெண் செய்தால் தவறு - ஆண் செய்தால் அது வீரம். இப்படிப்பட்ட கருத்து கொண்டவர்களின் மீது அல்லவா காறி உமிழ வேண்டும் அதனை விட்டு விட்டு ஏகோபித்த பாராட்டுகள். வெட்கி தலை குனிய வேண்டும் இவர்கள். ஒரு பெண்ணை குற்றம் சொன்னால் அது பொல்லாத பாவம் என்று கற்று தந்தனர் நம் பெரியோர். ஏனெனில் அவர்கள் மீது எளிதாக குற்றம் சாட்டலாம். அவர்கள் தாம் தம்மை நல்லவர் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஆனான பட்ட சீதையே தீ குளிக்க வேண்டி இருந்தது. ஆனால் மூன்று பெண்டாட்டி காரனை தலைவன் என்று ஏற்று கொண்டு கொண்டாடும் அறிவிலிகள் நிறைந்த நாடு இது - இங்கு வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இன்றும் தம்மை தவறாக பேசி விட கூடாது என்று கௌரவ கொலைகளில் இருந்து, அவன் சாண் ஆனாலும் ஆண் பிள்ளை என்று பெண்களை மட்டம் தட்டி பேசுவது வரை எங்கும் இதே கண்ணோட்டம். இன்னம் ஒன்று. இன்று இந்தியாவில்தான் செக்ஸ் விற்கப்படும் வலைத்தளங்கள் அதிகமாக பார்க்கபடுகிறது. அதனை பார்ப்பவர்களும் பெரும்பான்மையோர் ஆண்கள்தான். தெரு ஓரம், பஸ்களில் பெண்களை சீண்டுவதும் ஆண்கள்தான். ஆக வெறி பிடித்து அலைய ஆண்களுக்கு உரிமை உண்டு என்று அதனை ஆதரிக்கும் கூட்டம் நிறைந்த நாடாகி விட்டது. பெண் சிசு கொலைகளில் ஆரம்பித்து இன்று குற்றம் சொன்னால் கூட - அதனை பணத்தால் மறைக்க, அந்த பெண்ணை தாழ்வாக பேச முற்படும் மக்கள் நிறைந்த மதி கேட்ட நாடாகி விட்டது. அதன் எதிரொலியை இங்கு பதிக்கப்படும் ஆதரவு பறை சாற்றுகிறது. வெட்க கேடு.
29-ஏப்-2013 04:17:57 IST
இல்லை என நான் மறுக்க முயலவில்லை. ஆனால் இவரை தெய்வ பிறவி என்பது எல்லாம் டூ மச்.
அதனுடன், நடைமுறையில் மனைவியின் பழைய கால செய்கைகளை (கடந்த கால நினைவுகளை) நினைத்து நினைத்து மன வேதனை படுகிறேன் என்பதே - இவரால் அதனை மன்னிக்க/மறக்க முடியவில்லை என பறை சாற்றுகிறது. ஆக தம்மை தாமே வருத்தி கொள்ளூம் வியாதி கொண்டவர். தன்னிரக்கதால் தவிப்பவர். தன்னிரக்கத்தில் தவிப்பர்வர்களை கவனித்து பாருங்கள். இல்லாதது எல்லவற்றையும் பெரிதாக்கி தம்மை மட்டும் இன்றி தம்மை சுற்றி இருப்பவர்களையும் படுத்துவார்கள். துன்புறுத்துவார்கள். உலகமே தம்மை சுற்றிதான் சுழல வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். ஒன்று இவர்கள் சர்வாதிகாரிகளாக இருப்பார்கள் அல்லது இது போல - புழுங்கி, புழுங்கி மற்றவரை சாக அடிப்பார்கள். They crave for attention. They imagine things where they are the victims (or heroes).
இவரால் இவர் மனைவி, குடும்பம் படும் அவஸ்தை தான் அதிகம் இருக்கும் என நிச்சயமாக நம்புகிறேன்.
28-ஏப்-2013 20:42:08 IST