Advertisement
venkat Iyer : கருத்துக்கள் ( 82 )
venkat Iyer
Advertisement
Advertisement
மார்ச்
12
2016
பொது ஆவிகளுக்கு பயப்படவில்லைபாவிகளுக்கு பயந்தேன் சகாயம்
சட்ட மன்ற வாக்களராக நிற்கும் போட்டியாளர் அனைவரையும் ஒரே மேடையில் நிற்க வைத்து ,அவர்கள் தொகுதிக்கு செய்ய விருக்கும் நல்ல விஷயங்களை பத்திரத்தில் வாங்கி பதிவு செய்த பின்னர் ,அதில் யார் அதிகமாக செய்கின்றாரோ ,அவரை ஜெயிக்க வைக்க மக்கள் முன் வர வெண்டும். இதனையும் தங்கள் பேச்சில் சொன்னால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கிட்டும்.   06:46:02 IST
Rate this:
1 members
1 members
10 members
Share this Comment

மார்ச்
11
2016
பொது நான் ஓடி ஒளியவில்லை மவுனம் கலைத்தார் மல்லையா
ஏர் இந்திய விமான போக்குவரத்தினை அரசு கட்டுப்பாட்டில் இருக்கும்போதே,அதனை லாபமாக கொண்டு செல்லவில்லை. அரசின் ஏவியேஷன் சட்ட விதிகள், உலக போக்குவரத்து விதிகளை ஒத்து அமையவில்லை. சாமானியன் விமானத்தில் இன்று வரை பணம் கொடுத்து பயணிக்க முடிவதில்லை.பல நாடுகள் தேவையான பெட்ரோலை சலுகை விலையில் கொடுக்கின்றன. டிக்கெட்டுக்கு போடப்படும் வரிகளை நீக்கி வைத்துள்ளன. நெதர்லாந்தில் ,உசிலம்பட்டிக்கு போகுவதற்கு கூட விமானத்தினை பயன்படுத்துகின்றன. ஏதோ பணக்காரர்கள் போகும் வாகனம் என்று இன்று வரை முத்திரை குத்தி வைத்து உள்ளன. விஜய் மல்லையா ஒரு சிறந்த நிர்வாக திறன் உள்ளவர். ஊடகங்களுக்கு நிறைய விளம்பரங்களை அள்ளி வழங்கியவர். அவருக்கு மதுபான ஆலைகள் உலக அளவில் நிறைய உள்ளன.அவற்றை சிறப்பாக செய்து கொண்டு வருகின்றார். இந்திய அரசியலில் ஒரு தொழில் அதிபர் முன்னெறி விட்டார் என்றால் அவரிடம் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு கொண்டு பணத்தினை எதிர்பார்க்கின்றன.ஜெட் ஏர்வேசில் நஷ்டம் வர காரணம் ,இந்திய அரசியல்வாதிகள்தான்..அவர்கள் வகுத்த சட்டங்களும் பாலிசிகளும்தான் முக்கிய காரணம். சொல்ல போனால் அவர் இந்தியாவை நம்பி இல்லை.பல்வெறு நாடுகளில் அவரது தொழில் புரட்சி நடந்து கொண்டு இருக்கின்றது. முதலில் லக்ஷ்மி மிட்டல் பெரிய சாதனையை உலகு எங்கும் படைத்தார்.நல்ல தொழில் அதிபர்களின் பிரச்சனைகளை ,மத்திய அரசு கேட்டு முறைபடுத்தினால் மட்டுமே ,இந்தியாவில் தொழில் புரட்சி ஏற்படும் .கட்சிகளின் சுய லாபத்திற்காக ,அவமான படுத்தும் நிலை இருந்தால்,தொழில் அதிபர்கள் வெளி நாடுகளுக்கு சென்றுவிடுவார்கள்.விஜய் மல்லாவி பற்றி ஊடகங்கள் சில பெரிசு படுத்துவதன் பின்னணி பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.   06:38:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2016
அரசியல் தி.மு.க., துவக்கிய விளம்பர பிரசாரத்தால் தேர்தல் களம் விறுவிறுப்பு சமூக வலைதளங்களில் அ.தி.மு.க., - பா.ம.க., பதிலடி
சிங்க்கப்பூர் சேகர் ரொம்ப ஜால்ரா அடிக்கின்றார்.போன தேர்தல்ல நானும் அம்மாவுக்கு ஒட்டு போட்டேன்.நான் இயற்கை விவசாயத்தில் விவசாயி என்று என்னை ஓரளவு சொல்லிக்க முடியும்.இப்ப இருக்கற ஒங்க நாட்டுக்கும் அந்த அரிசியினை ஏற்றுமதி அனுப்பி உள்ளேன்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் எவ்வளவு பொறம் போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்க பட்டுள்ளது என்பதை ,நீங்கள் வந்து பார்த்த தான் தெரியும். நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஏன், தண்ணிர் வரும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு பாசனம் பெற முடியாமல் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.கிராமங்களில் உள்ள இளைஞ்சர்கள் வேலை இல்லாமல் சாராயத்திற்கு அடிமையாகி பைக்கை வைத்திருந்தாள் பணக்காரன் என்ற தோரணையில் பலரிடம் மது போதையில் சண்டை போட்டுவிட்டு போலிஸ் ஸ்டேஷனில் அவர்களிடம் இருப்பதையும் கப்பம் கட்டி பஜ்சாயித்து கூட்டம் கூட்டமாக நடத்துகின்றார்கள்.இதில்,அந்த பகுதி சதுர செயலர் அரசியல் கட்சிகள் உட்புகுந்து ,இளைஞரின் குடும்ப பொருளாதாரத்தினை வீணடிக்கின்றன. பலதுறைகள் செயல்படவில்லை. ஏனென்றால் போதிய பணியாளர்கள் இல்லையாம்.   08:15:11 IST
Rate this:
20 members
3 members
242 members
Share this Comment

அக்டோபர்
26
2015
பொது சாகுபடியை பார்க்க செல்லுங்கள்!வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு
எங்கள் மண்மலை விவசாயிகள் நல சங்கம் ,இதனை நாகப்பட்டினம் மாவட்ட வேளாண் மை இயக்குனர் அவர்களிடம் ஏற்கனவே முறையீட்டு உள்ளோம். விவசாய அலுவலர் ,அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு என்ன புடுங்குகின்றார்கள் என்று தெரியவில்லை. மயிலாடுதுறை வேளாண் மை பொறியாளர் அலுவலகத்தில் JCP மொத்தம் ஏழு இருக்கின்றன. அது போல உழவு டிராக்டர்கள் இருக்கின்றது.ஆனால்,அனைத்தும் ரிப்பேர் என்று கூறுகின்றார்கள்.தனியார் ஜகப் நி லத்தினை சீர்திருத்த பயன்படுத்தினால்,கூடுதல் 50% செலவு ஆகின்றது.வேளாண்மை பொறியாளரை கோபப்பட்டு கிட்ட பொது அவர் தனியார் ஜி.சி.பி வைத்துள்ளவர்களின் முகவரிகளை கொடுத்து பயன்படுத்திய போது,அவருக்கு கமிஷன் கொடுப்பதாக தனியார் இயந்திரம் வைத்து இருப்பவர் என்று கூறுகின்றார். உண்மையில் ,இவர்கள் எதற்குதான் அலுவலகத்துக்கு வருகின்றார்.நெல் விதை மான்யம் என்று சொல்லி சம்மந்தம் இல்லாத மருந்துகளை அந்த மான்யத்தில் கழித்து கொள்கின்றார்கள்.இதில் இவர்களுக்கு லஞ்சம் வேறு கேட்கின்றார்கள்.எங்கள் விவசாய சங்கத்துடன் அனைத்தையும் ஒப்படைத்து விடுங்கள் .சம்பளம் இல்லாமல் ,அனைத்து விவசாயிகளையும் திருப்தி படுமாறு செய்து விடுகின்றோம். இதில் விரிவாக்க பணியாளர் வேறு வெட்டி சம்பளம்.நெல் நாற்றை பிடுங்கி ,வேர் அழுகல் நோயை காட்டிய போது சேறு சட்டையில் பட்டுவிட்டதால்,ரகளையில் ஈடுபட்டது சொல்லிக்க முடியாதது.தொழில் செய்பவர்களுக்கு ,அரசு துறையில் அந்த தொழில் துறை சம்மந்தமான வேலை கிடைக்காதாது வேதனைக்கு உரியது.கடவுள்தான் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.குறித்த பட்சம் அரசு ஊழியர்கள் தொழில் தர்மத்துக்காகவது வேலை செய்யுங்கள்.   08:01:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2015
அரசியல் தஞ்சை, பாபநாசம் குறிவைக்கிறார் வாசன்
எனது அண்ணன் திரு.வாசன் அவர்களே,தஞ்சை விவசாய பூமீ, அங்கு விவசாயிகள்தான் அதிகம். விவசாயிகளின் நலனில் ,மிகுந்த அக்கறை கொண்டு ,உள் மனதிலிருந்தே ஆத்மார்த்தமாக எடுக்கும் ஒரு உண்ணத மனிதர் அது நீங்கள் மட்டும்தான்.விவசாயம் உங்கள் குடும்பத்தில் உயிர் நாடி. கடந்த முறை .உங்களை மத்திய விவசாய அமைச்சராக வருவீர்கள் என்று எதிர் பார்த்தோம். ஆனால்,அது கிடைக்க வில்லை.நீங்கள் உங்கள் கட்சியில் ஒரு சீட்டாக கூட சரத்குமாரை போல பெற்று தஞ்சையிலோ ,பாபனாசத்திலோ அல்லது கும்பகோணத்திலோ எம் எல் ஏ வுக்கு நின்று அதிக ஓட்டில்தான் வெற்றி பெறுவீர்கள்.ஆனால்,உங்களுக்கு விவசாய அமைச்சர் பதவி கிடைக்க அவர்கள் ஒற்றுக்கொள்ள வெண்டும். ,அனைத்து விவசாய சங்கங்களும் சேர்ந்து நடு ரோட்டில் இருந்து உண்ணாவிரதம் இருந்து உயிரை விடுகின்றோம்.தஞ்சை தரணியை பசுமை புரட்சியை கொண்டு வரும் ஒரு வேகம் உங்களிடம்தான் உள்ளது. கரை படியாத மாமனிதரை உலகம் புரிந்து கொள்கின்றதோ இல்லையோ ,உங்களோடு சேர்ந்த உண்மையான விவசாயிகள் புரிந்து கொள்வார்கள்.வாருங்கள் ஐயா .விடிவெள்ளியாக வாருங்கள். விவசாயியாக இறுந்து செத்துக்கொண்டு இருக்கின்றோம்.அம்மாவிடம் சென்று நான் மத்திய அரசிடம் விவசாய மான்ய உதவிகளை கேட்டு பெறுவேன் என்றும்,வாய்ப்பு கொடுங்கள் என்று கேளுங்கள்.இது விவசாயி எங்கலுக்காக இறங்கி வந்து கேட்பதாக இருக்கட்டும். .உங்கள் பின்னால் ஒரு பெரிய விவசாய சமூகம் என்ற மிகப்பெரிய கூட்டம் , சாதி மத பேதங்களை கடந்து இருக்கின்றோம்.உங்களுக்காக விவசாயத்தினை காப்பாற்ற /போராட உயிரை விட தயாராக இருக்கின்றோம்.விவசாயிகளை காப்பாற்றுங்கள். மற்ற எவருக்கும் உங்கள் அளவு தகுதியே கிடையாது.புறப்படுங்கள்.-மண்மலை விவசாயிகள் நல சங்கம் (காவேரி கடை மடை பகுதி) .   07:34:39 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
29
2015
அரசியல் மக்களைத்தேடி கட்சிகள் வரவேண்டும் ஸ்டாலின் பேச்சு மனைவியுடன் பெருமாள் கோயிலில் வழிபாடு
முட்டாள்களை புத்திசாலிகளை ஏதோ ஒரு தருணத்தில் ஏமாற்றலாம். புத்திசாலிகள் முட்டாள்களை ஏதோ ஒரு தருணத்தில் ஏமாற்றலாம்.ஆனால்,இந்த,........ர்கள் ,ஏல்லாரையும் எல்லா தருணத்திலும் ஏமாற்ற முடியாது.இது கடவுளின் முடிவு.   19:58:33 IST
Rate this:
41 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
28
2015
பொது மண்ணுலகை நீத்தார் மக்கள் ஜனாதிபதி இழந்தோம் பாரத ரத்னா அப்துல் கலாமைஉலகம் முழுவதும் இந்தியர்கள் கண்ணீர்
நல்ல தலைவரை இழந்து விட்டோம் .அவரது உடல்நிலையை கவனிக்க யாரும் நினைக்கவில்லை. கல்லூரியில் பேசுவதற்குத்தான் அழைப்பார்கள் .இது சுய லாபத்துக்காக செய்யப்பட்டவைதான் என்று தொலைநோக்கில் பார்க்க கூடிய நிலை இருந்தது. உடல் நிலை சரியில்லாத நிலையிலும் நின்று மக்களை வணங்கி உரை ஆற்றினார்.ஆனால், அவரது உடல்நிலை சுவாச கோளாறினால் ,கீழே விழ வைத்து விட்டது.சரியான தூக்கம் இல்லாமல் இது நடந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள். IMM ஷில்லாங் இயக்குனர் ,அவரை அழைப்பு கொடுத்து வர வைத்து ,நான் எமனாக இருந்துவிட்டேனே என்று அழும் காட்சிகள்,உண்மையில் அவரை குடும்பத்தில் ஒருவராக நினைப்பதை காட்டுகின்றது. குடும்பம் ஒன்று இருந்தால் ,அவரை பாசத்துடன் கவனித்து இருக்கும். இங்கே ,மரியாதையுடன் அவர் உடல் நிலையில் காட்டப்பட்ட கவனம் அவரை விண்ணுலகைவிட்டு அனுப்பி விட்டது. உட்கார்ந்து பல தலைவர்கள் உறையாற்றியுள்ளார்கள்.இவர் அதனை தவறு என்று கூறீயதும் ,தலைவர்கள் இறந்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று கூறும் நிலையை விரும்பாதவர்.ஒவ்வொரு நிமிஷமும் இளைஞர்களுக்கு முக்கியமானது என்பதை உணர்த்தியவராவர்.   09:26:01 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
28
2015
பொது மண்ணுலகை நீத்தார் மக்கள் ஜனாதிபதி இழந்தோம் பாரத ரத்னா அப்துல் கலாமைஉலகம் முழுவதும் இந்தியர்கள் கண்ணீர்
சென்னையில், ICC கருத்தரங்கில், ஐந்து அடி தொலைவில் இருந்த போது,அவர் என் முகத்தை பார்த்து சிரித்த போது,எனக்குள் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. அன்றே,நாட்டிற்காக ஏதோ நம்மால் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் வாழ்ந்த சிறு கிராமத்தினை தத்து எடுத்து உதவிகளும் ,ஆலோசனைகளும் செய்து வருகின்றேன். கடைசி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன் என்று சொல்லும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் ,சொல்லாமல் நிரூபித்த பிளாட்டினம் நீங்கள். ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் அவரைபற்றி புகழாரம் கூறுவது சரியல்ல .இளம் குழந்தைகள் கூறட்டும் போதும்.   09:10:04 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
28
2015
பொது மண்ணுலகை நீத்தார் மக்கள் ஜனாதிபதி இழந்தோம் பாரத ரத்னா அப்துல் கலாமைஉலகம் முழுவதும் இந்தியர்கள் கண்ணீர்
நமது தந்தையை, குழந்தைகளின் தாத்தாவை தமிழக அரசு மரியாதையுடன் நாளை ஏற்று இறுதி கடன்களை செய்ய வேண்டும்.அம்மா செய்வாரா? நாளை அரசு துறை தனியார்துறை ,வர்த்தகதுறை போன்றவற்றை மூடி கெளரவிக்க வேண்டும். இதை ஈடு செய்ய வேண்டுமானால் சண்டே திறந்து கொள்ள அனுமதிக்கலாமே. .இப்படி செய்தால் அது பாரத ரத்னாவுக்கு கொடுக்கப்படும் மரியாதை. விக்ரம் சாராபாய்க்கு கர்நாடக அரசு கொடுத்த மரியாதையை விட கூடுதலாக நமது மண்ணின் மைந்தனுக்கு நாம் கொடுக்க வேண்டும்.செய்வார்களா? தமிழக அரசு இதுவரை மெளனமாக இருப்பது ஏன்?.நண்பர்களே இது பற்றி எழுதுங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.தமிழகத்தின் நேரு அல்லவா?அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அல்லவா? குழந்தைகள் அவரைபற்றி சிந்திக்க ஒரு நாள் கொடுப்போமே   08:55:32 IST
Rate this:
0 members
0 members
76 members
Share this Comment

ஜூன்
18
2015
பொது சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட இந்தியர்கள் பணம்... மாயம் ரூ.13 ஆயிரம் கோடி மட்டும் இருப்பதாக அறிவிப்பு
நாகர்கோயில் ஸ்ரீதர் கூறியது பல ஏற்றுக்கொண்டாலும் சில சரியான வார்த்தைகள் சரியானது இல்லை என்றுதான் தோன்றுகின்றது. உலகமயமாக்கல்ஆன பின் சுவிஸ் வங்கிக்கு தனித்தன்மை ஏற்பட்டது. எந்த ஒரு கேள்வியும் இல்லாமல் பணம் போட வங்கி வாய்ப்பு அளித்தது .இந்தியாவில் ,வங்கிகள் வங்கி கணக்காளர்களிடம் நடத்தும் மரியாதை கேவலத்துக்கு உரியது .வங்கிகளுக்கு அரசு துறை இடர்பாடுகளினால் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாடுகளையும் அதிகாரங்களையும் இழந்து உள்ளது.வெளி நாடுகளில் ,ஒரு டாலரில் பெற முடியும் பொருள்,அவற்றிற்கு அதிக விலை கொடுத்து வாங்கி இந்திய பணம் மறை முகமாக அங்கு சென்று வெளி நாடுகளில் சேமிக்கப்படுகின்றன. உலக சந்தை விலையை விட மூன்று மடங்கு கொடுக்கப்பட்டு பணமானது வெளி நாடுகளில் சேமிக்கப்படுகின்றது. MNC உணவகங்களில் ,குளிரையும் ,நிலா வெளிச்சத்தினையும் கொடுத்து கும்பகோணம் டிகிரி காபி ஐயர் கடையில் பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில்,இவை ரூபாய் 90 முதல் ரூபாய் 120 -க்கு விற்கப்படுகின்றன.இவற்றின் லாபம் வெளிநாடு உரிமம் பெற்ற நிறுவனத்திற்கு செல்கின்றது. அதனுடைய உரிமையாளர் நம்ம ஊர்காரர்.அங்கே வங்கிகளில் போடுகின்றார் .அதனால் நமக்கு என்ன லாபம் ? உலகத்தில் பல நாடுகளில் (இந்தியாவின் சராசரி ஊதியம் வாங்குபவன்) விமானத்தில் செல்கின்றார்கள் .இங்கே வெளி நாடுகளுக்கு செல்லும் பொது மட்டும்தான் சராசரி இந்தியன் வழியில்லாமல் செல்கின்றான். சென்னையிலிருந்து டெல்லி செல்ல ரூபாய் 7000/ கட்ட வேண்டியுள்ளது. இது அவர்களின் 50% பணமாக உள்ளது. இந்திய அரசியல் ,ரிசர்வ் வங்கியின் புதிய சட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும். மற்ற வங்கிகளின் கண்காணிப்பு என்பது சுத்தமாக குறைந்துவிட்டது .கடன் கொடுத்த வங்கிகள் ,அதனை திரும்ப பெற எத்தகைய முயற்சியும் எடுக்கவில்லை. பணம் வெளி நாடுகளுக்கு செல்லும் பாதை சரியாக கவனிக்க முடியாததற்கு காரணம் பல்வேறு துறைகளிடம் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு இல்லாததே காரணம். இந்தியாவில் 50% மக்கள் குறைந்த பட்சம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் பலனை பெற வேண்டும்.பல ஏழை நாடுகள் முன்னேற்றம் அடைந்து உள்ளது.இந்தியாவில் மனித வளம் கல்வி அறிவு பெற்று பல்வேறு நாடுகளில் வேலை பெற்று உள்ளன. அவர்களின் மூலம் இந்தியாவிற்கு வரும் பணம் 18,000 கோடிக்கு மேல் உள்ளதாக தெரிவிக்கின்றன. பிரச்சனை,அவர்களின் செயல்பாடுகள் சிறப்பு பெற்ற உடன் அவர்களுக்கு பத்து ஆண்டுகளில் குடியுரிமை 90% நாடுகள் கொடுத்து விடுகின்றன. இவர்களை இந்தியா திரும்ப பெரும் விதம் சட்ட திட்டங்களை கொண்டு வர வெண்டும். சென்னை அசோக் நகரில் தந்தை இராமநாதன் இறந்ததற்கு அவரது பையன் amerikkaavil சாஸ்திரிகளை வைத்து ஸ்கைப்பிள் இறுதி கடமைகளை செய்வதை பெரிய திரையில் இறந்தவர் வீட்டில் உறவினர்கள் பார்த்து ,நாயை தூக்கி தகனம் செய்தது போல செய்துள்ளார்கள். அப்பா ,பிள்ளை என்ற உறவுகளே சீர் இல்லாமல் போன விலையில் ,சமுதாயம் ஏமாற்று சமுதாயமாக மாறுவதில் ஆச்சரியப்படுவதிற்கில்லை. மக்கள் ,வங்கிகள் மட்டுமே மாற்றத்தினை உருவாக்க முடியும். தனி மனிதன் நெருப்பு பொரி போல சொல்ல முடியும். அனைவரது ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். அதில்,நாம் அனைவரும் அடங்குவோம்.குடும்பம்,உறவு, கல்வி, பணம்,சொத்து, சமுதாயம் அனைத்தையும் உருவாக்கி தருபவந்தான் என்று உண்மையான மனிதன் என்று யாரும் சொல்லவில்லை,நான் சொல்கின்றேன். ஒருவர் வசதியாக இருந்தால் இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே நான் மதிக்கும் unnatha நபராக கருதுவேன் .மாற்று கருத்து இருந்தால் தெரிவியுங்கள்.   09:09:29 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment