உடன் பிறவா சகோதரரே...உங்கள் தாபத்தியத்தை ருசிச்சு அனுபவிக்க வேண்டிய நேரத்தில் தம்பி பிள்ளையை நந்தி போல் உங்களுடன் வைத்து கொண்டு உங்களின் மனைவி மேல் பழியை போடுகிறிர்கள்...புது மண தம்பதியர்கள் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என திட்டம் தீட்டி அனுபவம் புதுமை அதிசயம் அருமை என டுஎஅட்பாட வேண்டிய நேரத்தில் தம்பி பிள்ளையை வைத்து கொண்டு தாளம் போட்டு கொண்டு இருப்பது உங்களுக்கு நியாமா?....உங்களுக்கு வயது முதிர்ந்து கல்யாணம் செய்து கொண்டதால் அந்தரங்க உறவில் உங்களை உங்களால் கட்டு படுத்த முடியும்..உங்களை நம்மி வந்த அந்த மாதுவின் மனநிலை மற்றும் உடல் நிலையை பாருங்கள்....இப்போது உள்ள நிலையில் அந்த உறவு மட்டுமே தான் அவள் வாழ்க்கை என்பது போல் இருக்கும்...இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் பாட்டியிடம் பேரனை கொடுத்து போல் உங்களின் தம்பி மகனை கொடுத்து வளர்க்க சொல்வது மிக பெரிய தவறு...எத்தனை பட்டம் படித்து என்ன செய்ய இல்லறத்தை பறக்க விட்டு விட்டு தம்பி பிள்ளையை கயறாக பிடிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை சிந்தித்து பாருங்கள்....அல்லது உங்கள் தம்பியாவது சிந்தித்து பார்க்க வேண்டும்...வயது முதிர்ந்து கல்யாணம் ஆன தம்பதியரை தொந்தரவு செய்ய கூடாது என்று. நீங்கள் நல்ல முறையில் உங்கள் தம்பியிடம் சொல்லி உங்கள் தம்பி வீட்டில் ஒப்படைபதுதான் உங்களுக்கு நல்லது...இல்லாவிட்டால் உங்கள் மனைவியை வீண் சந்தேகத்திற்கு ஆளாக்கி உங்கள் வாழ்க்கை பரி பேகும்...கிடைத்த வாழ்கையை நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ளவும்.
16-ஜூன்-2013 10:23:00 IST
அன்பு சகோதரியே வணக்கம்...நீ எத்தனை பெரிய அதிகாரியாக இருந்தாலும்.நீ எத்தனை பெரிய சம்பளத்தில் இருந்தாலும் நீ ஒரு பெண். என்பதை மறந்து விடாதே...உனக்குள் வரட்டு கவர்வமும்...அதிகார பெருமையும்...சம்பாரிக்கிற திமிரும் உன்னை சுற்றி அதிகமாகவே வலம் வருகிறது..இன்னும் கொஞ்சம் போனால் பிள்ளையை கூட ஹவுஸ் ஹச்பண்ட் பெற்று கொடுக்க கூட சொல்வாய் என்று நினைக்கிறேன்...நீ என்னத்தான் அதிகாரம். பொறுப்பு,சம்பளம்.இருந்ததாலும் கூட பெண்ணால் என்ன செய்ய முடியுமோ அதைதான் நீ செய்ய வேண்டும்.ஒரு ஆணால் என்ன செய்ய முடியுமோ அதை ஒரு ஆண் செய்ய வேண்டும்.. தமிழ் கலாசாரத்தையும்,பண்பாட்டையும்...தயவு செய்து கெடுத்து விடாதே அம்மிணி...நமது முத்தையர்களில் எத்தனையோ பேர்கள் மேதாதிகள்.புரட்சி பெண் மணிகள்..பிரதமர்...ஏன் தெய்வங்கள் கூட பெண்களாக இருந்து இருக்கிறார்கள்..அவர்கள் கூட இப்படி எல்லாம் நினைத்து கூட பார்த்தது இல்லை...மேலை நாடுகளின் கலாச்சாரத்தை தயவு செய்து நம் நாட்டு கலாசாரத்துடன் ஒப்பிடாதீர்கள்.... சகோதரியே முதலில் நீ ஒரு அதிகாரி என்ற கவர்வம் இல்லாமல் பெண் என்ற ஒரு ஒழுக்கமும் அடக்கமும் உன்னிடத்தில் வரவழைத்து கொள்...பிறகு எல்லாம் சரியாகும்..
09-ஜூன்-2013 10:49:00 IST
சகோதரியே நீ எழுதிய மடலை பார்க்கும் போது.நீ மாநிலம் விட்டு மாநிலம் வந்தது படிபதிர்க்கு இல்லை காதலிபதர்க்கு என்பது உறுதியாக தெரிகிறது....நீ முதலாம் ஆண்டே இப்படி ஒரு கற்பனை காதலில் மிதக்கிறாய் என்றால் நீ பட்டம் வாங்குவதர்க்குள் தாய்மையே அடைந்து விடுவாயே என்பது எனக்கு பயமாக இருக்கு...இனிமையாக பேசுபவர்களை எல்லாம் காதலிக்கிறார்கள் என்றால் நமது வாழ்கையில் முக்கால் வாசி பேர் காதலர்கலக்கத்தான் எண்ண தோன்றும்..உனக்கு வயது 18 .ஆகவே நீ பேச வில்லை.உன் வயது தான் உன்னை மீறி செயல் படுகிறது இப்போது நீ செய்ய வேண்டியது.நீ உன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி நன்றாக படித்து விட்டு பிறகு உன் வாழ்க்கை துணைவனை அல்லது காதலனை தேர்த்தேடுக்கலாம்..
02-ஜூன்-2013 10:24:40 IST
சகோதரியே..இரு மணம் ஒன்று சேர்வதுதான் திருமணம்...இதில் பட்ட படிபோ இல்லை.. பணம் காசோ...ஒரு முக்கியம் இல்லை.உங்கள் மகளே மனம் விரும்பும் போது...பையனை நன்றாக விசாரித்து..அவனின் குண நலங்கள்,நடவடிக்கை,அவனின் குடும்ப பின்னணி அவனின் உழைப்பு...என்று பல முறை விசாரித்து முறை படி கட்டி கொடுப்பது தான் நல்லது...இப்படி தடை விதித்து உங்களின் மகள் மனம் மாறி வீட்டை விட்டு ஓடி விட்டால் உங்களின் குடுபத்திற்கு தான் அவமானம் தலை குனிவு...ஆகவே உங்களின் மகளிடம் படிப்பு முடியும் வரை பொறுமையாக இருக்குபடி சொல்லி அவளை அமைதி படுத்தி விட்டு...பிறகு உங்களின் கணவரிடம் பக்குவமாக எடுத்து சொல்லி திருமணம் செய்து வைப்பது தான் நல்லது.படிப்பு என்பது எந்த வயதிலும் படித்து பட்டம் பெறலாம்....அவனின் படிப்புதான் உங்களுக்கு இடையுறாக இருக்கிறது என்றால்....இந்த வருடமே அவன் ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கலாமே...பகுதி நேர கல்லூரி அல்லது தபால் மூலம் கூட படிக்க வாய்ப்புகள் உள்ளது...இதை ஒரு பிரச்சனையாக எடுக்காமல்...இதை எப்படி சீர் அமைப்பது என்று மட்டும் யோசியுங்கள்...எல்லாம் நலமாக அமையும்.
26-மே-2013 10:59:13 IST
சகோதரியே முதலில் கைக்கு ஏத்த வீக்கம் தான் வேணும். வெள்ளை தோலுக்கும்...பணக்காரன் என்பதாலும் உன் உள்ளமும், உடலும் அலை மோதுகிறது என்று நினைகிறேன்..நீ வாழ வேண்டிய வயது தான்..இல்லை என்று சொல்ல வில்லை..உனக்கு ஏத்த ஒருவனை தேர்ந்தெடுப்பதுதான் உனக்கு நல்லது...நீ ஏற்கனவே பாதிக்க பட்டவள்...நீ பெற்ற பிள்ளையை ஆசிரமத்தில் சேர்க்க சொல்கிறான் என்றால் பிள்ளை மனம் அறியாதவன்..பெற்ற பாசம் புரியாதவன்....உன்னை திருமணம் செய்து கொண்டு உன்னை ஆண்டு அனுபவித்து விட்டு நாளை உன்னையும் ஒரு ஆசிரமத்தில் சேர்க்க மாட்டன் என்பதில் ஐயம் இல்லை...இவன் கல் மனம் படைத்தவன்...இளகிய மனம் என்று நீ அவனுடன் இணைந்து விடாதே....உனக்கு தகுந்த ஒருவனயை உன் பிள்ளையை தன் பிள்ளையாய் நேசிப்பவனை உனக்கு தேர்தடுப்பது உனக்கும் உன் பிள்ளைக்கும் நல்லது என்று நினைகிறேன்.
19-மே-2013 10:10:16 IST
இப்ப உள்ள சூல் நிலையில் கல்லூரி படிக்கும் பெண்களை நம்ப முடிவதில்லை..அவள் கல்லூரிக்கு போய் திருப்பி வரும்வரை பெற்றோர்கள் மடியில் நெருப்பை கட்டி கொண்டு இருக்கிறார்கள்...உன் தாய் தகப்பன் சந்தேக படுவதும் நியாம்தானே....நியே சொல்லி இருக்கிறாய் சஜ்ட் பிரண்ட் என்று ஜஸ்ட் பிரண்டு தான் நாள்ளடைவில் பேஸ்ட் பிரண்டாக மாறி உன்னை வழி தவற செயயும் ஆகவே தான் உன் பெற்றோர் இப்படி உன்னிடம் நடந்து கொள்கிறார்கள்...அவர்களின் சந்தேகத்தை நீதான் பக்குவமாக எடுத்து புரியும்படி சொல்லி அதன் படி நடந்து காட்டவேண்டும்...தற்கொலைக்கு முயற்சிப்பது உன் அறியாமையை காண்பிக்கிறது...எதிர்த்து பேரிடுவதே உன் லச்சியம் என்று நிருபித்து காண்பி...நீ தவறு செய்யவில்லை என்றால் தைரியம் தான் உன் பக்க பலம் என்பதை மறந்து விடாதே..
12-மே-2013 12:03:51 IST
உன்னை பொறுத்தவரை செக்ஸ் மட்டும்தான் உனக்கு வாழ்க்கை என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறாய்....நீ ஒரு மன உளைச்சலுக்குள் அகப்பட்டு கொண்டு இருகிறாய் என்பது உன் மடலில் புரிகிறது....கையை கீறி கொள்வது சூடு வைத்து கொள்வது...இதை எல்லாம் பார்க்கும் போது உன் மன நிலை நன்றாக படம் பிடித்து காண்பிக்கிறது....நீ இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை கவனத்தில் கொள்....மேலும் அதிகமாக குடி பழக்கம் உள்ளவர்களுக்கு ஆண்மை பாதிப்பு ஏற்படும்..செக்ஸ் வைத்துகொள்ள நாட்டம் இருக்காது....உன் கணவனை அம்மாவில் நிழலே சுவர்க்கம் என்பது என்ன தவறு...நாளை உன் மகனும் உன் நிழலே சுவர்க்கம் என்றால் நீ சந்தோஷ படுவாயா?துக்க படுவாய?சிந்தித்து பார்....வீண் குழப்பத்திற்கு ஆளாகாமல்...ஒரு நாள் கணவனுடன் செக்ஸ் உறவு கொண்டாலும் அந்த சுகம் தான்...ஓராண்டு செக்ஸ் உறவு கொண்டாலும் அந்த சுகம் தான் என்று உன் மனதை திருப்தி படுத்தி கொண்டு....உன் கணவனுக்கு செக்ஸ் உறவில் ஏன் நாட்டம் இல்லை என்பதை ஆராய்ந்தது பார்....பிறகு குடும்பம் என்றால் சில பிரச்சனைகள் இருக்கும் அதை பெரிதாக நினைக்காமல்..அதை எல்லாம் கூட்டி பெருக்கி மூலையில் தள்ளி விட்டு...வரும் கால்ங்களில் எப்படி எல்லாம் வாழ் வேண்டும் என்பதை பற்றி உன் மனதிற்குள் ஒரு வரை படம் வரைந்து கொள்.
05-மே-2013 14:08:00 IST
எனது அன்பு சகோதரரே...உண்மையில் நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்து வந்த முத்து என்று தான் சொல்வேன்...இவ்வளவும் சகித்து கொண்டு நீங்கள் உங்கள் மனைவிடம் வாழ்கிரிர்கள் என்றால் நீங்கள் தெய்வத்தைவிட ஒரு அடி மேலில்தான் நீங்கள் இருப்பதாக எனக்கு தெரிகிறது....இந்த மாதிரி குணம் படைத்த ஒரு பெண்ணிடம் இத்தனை நாள் குடுமபம் நடத்தியதே மிக பெரிய விஷயம்.. நீங்கள் தெய்வத்தின் தெய்வம் என்று தான் புகழ வேண்டும்... என்ன செய்வது சகோதரரே இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....எனக்கு தெரிந்த ஒருவர் உங்களை போல் தான் கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையும் பெற்று வாழ்கையில் வளம் பெற வேண்டும் என்று பிழைப்பை தேடி வெளிநாடு சென்றார்...தன் மனைவிக்கு துணைக்கு தன் சொந்த மாமா வீட்டை பாதுகாப்பிற்கு தன் வீட்டில் வாடகை இல்லாமல் குடி வைத்து விட்டு வெளிநாடு சென்றார். இரண்டு ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பும் போது அவரின் மனைவி நிறைமாத கர்பிணியாக காட்சி அளிக்கிறாள்..சொந்த மாமா மகனே உறவு வைத்து இருக்கிறான். இதை பார்த்த அவனின் உள்ளம் கொதித்து போனது...
தன் மனைவின் மேல் உள்ள பாசத்தால் அதையும் சகித்து கொண்டு அவளின் பிரசவத்தை இவன் சொந்த செலவிலயே பார்த்தான்...அவளுக்கு பிறந்த குழந்தை ஒரு ஊனமாக பிறந்தது..பிறந்த மூன்று நாட்களில் இறந்து விட்டது...அந்த குழந்தையின் இறுதி கிரிகையும் இவன் செலவில் தான் செய்யப்பட்டது..குடுப்பமே வீசி நாரி போய் விட்டது..இப்படி இருந்தும்...அவள் இல்லாமல் நான் இல்லை என்று இன்னமும் அவளுடன் தான் குடுப்பம் நடத்துகிறான்...உங்களை போல் இவனும் சகித்து கொண்டு தான் வாழ்கிறான்...என்றால் இப்படி பட்ட பெண்களை என்ன செய்வது என்று புரியாத புதிர்தான்...இத்தனை காலம் குடும்பம் நடத்தி விட்டிர்கள் இருக்கும் கொஞ்ச காலமும் சகித்து கொண்டு வாழ்வதே சரி என்பது எனது வேண்டுகோள்...
28-ஏப்-2013 11:01:25 IST
சகோதரியே...உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா?...எந்த முட்டாளாவது கட்டிய கணவனுக்கு இரண்டாவது கட்ட அனுமதி கடிதம் கொடுப்பர்ர்களா???நீ எழுதி கொடுத்தது மன்னிக்க முடியாத தவறு...உன்னை தொட்டு தாலி காட்டி அந்த மாமாவுடன் இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தியதில் தாபத்தியம் உனக்கு கசந்து விட்டதா?சலித்து விட்டதா?இல்லை உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா???இப்படி எல்லாம் நடந்து கொண்ட உன் மாமாவை உன் குடும்பத்தில் கேட்க யாரும் முன் வரவில்லையா???எந்த காரணத்தை கொண்டும் உன் மாமாவை (கணவரை) விட்டு கொடுக்காதே...எதை வேண்டுமானாலும் பங்கு வைத்து கொடுக்கலாம்....நீ உன் தாலியையே பங்கு வைக்க முன் வருகிறாய் என்றால் உனக்கு புத்தி பேதலித்து விட்டது....நீ எதில் குறைந்து இருக்கிறாய்...உன் மாமாவிடம் கேள்...நான் உங்களுக்கு என்ன குறை வைத்து இருக்கிறேன் என்று...என்னிடம் இல்லாத சுகம் உங்களுக்கு அப்படி அங்கே என்ன கிடைக்கிறது...நான் சமைத்து போடுவது சுவை இல்லையா?என்னிடம் உடல் சுகம் இல்லையா?என்று மனம் திறந்தது பேசு ...மாறிவிடுவான் மாமா...பிறகு உன் வாழ்க்கை சந்தோசம் தம்மா??கவலை படதே சும்மா...உன் மாமாவுக்கு முத்தங்கள் அள்ளி தாமா.....
21-ஏப்-2013 11:23:55 IST
நல்ல உள்ளம் படைத்த அந்த பண்ணாரி அம்மாளுக்கு சேலம் மருத்துவமனைஇல் உடனே பிரசவ அறையில் பணியில் அமர்த்த வேண்டும் .நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.இதயத்தில் ஈரம் இல்லாத மனித மிருகங்கள்.
15-ஏப்-2013 09:57:34 IST