பொதுவாக கும்பகர்ண ஜெயா ஐந்து வருடத்தில் கடைசி ஆறு மாதம் மட்டுமே விழித்து கொள்வார், ஆட்சியில் இல்லாவிட்டால் கடைசி ஆறு மாதம் பொய் பிரசாரம் செய்து வெற்றி பெறுவார்,அல்லது ஆட்சியில் இருந்தால் கடைசி ஆறு மாதங்கள் மட்டுமே திட்டம் போடுவார். இப்போது இங்கே உள்ள கட்டுரை முழுமையாக இல்லை, எனவே கலைஞரின் கீழே உள்ள உரையை படித்து யார் மக்களுக்காக திட்டங்கள் போட்டனர் அது எப்படி நடை பெற்றது என்பதை தெரிந்து கொள்ளவும். ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பெரும்பாலான குடிநீர்த் திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று அத்துறையின் அமைச்சரும் பதிலளித்து விட்டார்.
அப்போது வெளியிட வேண்டிய அறிவிப்புகளை ஏப்ரல் 10ஆம் தேதி 110ஆவது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 3.80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகக் கூறியுள்ளார். ராமநாதபுரத்தின் வறட்சியைக் கணக்கில் கொண்டு 1996-ல் திமுக ஆட்சியில் ரூ. 72.20 கோடியில் உவர் நீரை நன்னீராக்கும் 11 திட்டங்களைச் செயல்படுத்தினோம். இதன் மூலம் 237 கிராமங்கள் குடிநீர் வசதியைப் பெற்றன.
ரூ. 671 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 30-1-2007-ல் பரமக்குடியில் நடைபெற்ற விழாவில் நான் அடிக்கல் நாட்டினேன்.
இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சிகள், மண்டபம், சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய போரூராட்சிப் பகுதிகளுக்கும் 27-6-2009-ல் குடிநீர் வழங்கப்பட்டன.
2ஆவது கட்டமாக இத்திட்டத்தின் வழியோரப் பகுதிகளான புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 குடியிருப்புகளுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 799 குடியிருப்புகளுக்கும், ராமநாதபுரத்தின் ஊரகப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டன.
மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சியில் 1971ஆம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டது. 1995-96ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குடிநீர் வழங்கும் பணிகளுக்காக ரூ. 213.82 கோடி செலவிடப்பட்டது. ஆனால், 2000-01-ல் திமுக ஆட்சியில் குடிநீர் பணிகளுக்காக ரூ. 842 கோடி ஒதுக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக ஆட்சியில் ரூ. 51 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு, 27-6-1999-ல் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், இது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
கிருஷ்ணா குடிநீர்த் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகள் திமுக ஆட்சியில்தான் நடைபெற்றன. மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அது திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது.
நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆனாலும் இத்திட்டத்தின் பெருமளவு பணிகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன.
எல்லாப் பெருமைகளையும் முதல்வர் ஜெயலலிதா தேடிக் கொள்ள முயன்றாலும் திட்டங்களின் பயன்களை அனுபவித்து வரும் மக்களுக்கு உண்மை தெரியும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
12-ஏப்-2013 06:51:55 IST
சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்து ஒரு பெரிய பிரச்சினை என்றால் சம்பத்தப்பட்ட அமைச்சர் பதவி விலகுவார், கன்னியாகுமாரியில் ரயில் விபத்து நடந்தால் டில்லியில் உள்ள அமைச்சர் பதவி விலகுவார், இது எந்த வகையில் நியாயம்? ஆனாலும் தன் துறையின் பிரச்சினைக்கு தானே தாமீக பொறுப்பு என்று பதவி விலகுவார், இந்த முறை சமீப காலத்தில் குறைந்து சம்பத்தப்பட்டவர் புலன் விசாரணை கோருவது அல்லது அவரிடம் எதாவது தகவலையாவது பத்திரிக்கை பெற்று பொது மக்களுக்கு தெரியபடுத்தும், இந்த முறையானது தி.மு.க ஆட்சியில் வெளிப்படையாக இருக்கும். முட்டத்தில் உள்ள மூத்திர சந்தில் கொசு கடிதல் ஆ.தி.மு.க போராட்டம் நடத்தும் அதற்கு அந்த துறை அமைச்சர் விளக்கம் அளிப்பார்,அல்லது சபை நடந்து கொண்டு இருந்தால் கலைஞரே கூட விளக்கம் அளிப்பார்.அது மக்கள் ஆட்சி இப்போது நடக்கும் "இருட்டுவின்" ஆட்சியில் கல்வி துறை இவ்வளவு மோசமான நிலைக்கு போயும் நமக்கு யார் அமைச்சர் அவர் என்ன செய்கிறார் என்று தெரிவதில்லை, இந்த ஆட்சியில் மட்டும் பிரச்சினை என்றால் புயூன்,அஞ்சல் அலுவலர்,ரயில் பார்சல் ஆபீஸ் அதிகாரிதான் காரணம் என்று பொறுப்பு தட்டி கழிக்கபடுகிறது, ஆனால் தி.மு.க ஆட்சி என்றால் பத்திரிகை நேரடியாக அமைச்சரே அனைத்திற்கும் பொறுப்பு என்று ஊரை கூட்டும் வேறு என்ன செய்ய? மானங்கெட்ட தமிழன் இன்னும் நிறைய "இருட்டை" அனுபவித்தால் கூட புத்தி வராதவன் ஆயிற்றே
09-ஏப்-2013 06:40:47 IST
சட்டம் ஒழுங்கை கட்டி காக்க கையாலாகாத பாட்டியால் இன்று ஒரு கலைஞனின் முழு படைப்பையும் காண இயலாமல் போகிறது, அது வெளிப்படை. அதே சமயம் அவர் கமல் மேல் கொண்ட பகையால் சென்சார் அனுமதி முதல் பல முறைகேடுகளை கமல் செய்துள்ளார் என்று தடை நீக்கபட்ட பின்பும் மேல்முறையீடு செய்து தடை வாங்கிய ஜெயா எவ்வளவு கீழ்தரமானவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. அதோடு அவர் தமிழகம் முழுதும் கலவரம் செய்வார்கள் என்று ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் புண்படுத்தினார். இன்னொன்றும் தெரிகிறது அதாவது இது நாள் வரை சில அமைப்புகள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அதரவு தெரிவித்தனர் அவர்கள் இப்போது ஆப்கன் தீவிரவாதிகளுக்கும் ஆதரவாளர்கள் என்று இந்த செய்கை மூலம் நிருபித்துள்ளனர்,தமிழக அரசு படத்தை தடை செய்து இருக்க கூடாது. செய்து இருக்க வேண்டியது அந்த அமைப்புகளைத்தான். ஆக மொத்தம் பூனை வெளியே வரவில்லை புளுகு மூட்டை யானை வெளியே வந்துள்ளது. போன ஆட்சியில் மூத்திர சந்தில் கொசு கடித்தாலும் போராட்டம் நடத்திய பாட்டி இப்போது பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தும் இதனை நாள் மௌனம் காத்து கமலுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது ஏன்? மேலும் கொசுறு செய்தி அந்த காலத்தில் கமலுடன் எல்லா நடிகைகளும் நடிக்க ஆசைப்பட்டு நடித்து பேர் வாங்கினர் அன்று பாட்டியும் நடிக்க ஆசைப்பட அதை தெரிந்த கமல் இதனால் "தாத்தா" நடிகர் கோபத்திற்கு ஆளாக நேரிடம் என்று மறுத்து விட்டார். இதனால் கடந்த 35 வருடமாக "படையம்மாவாக" கோபம் கொண்ட பாட்டி இப்போது வஞ்சம் தீர்த்து உள்ளார்
04-பிப்-2013 09:31:02 IST
பூனை வெளியே வரவில்லை புளுகு மூட்டை யானை வெளியே வந்துள்ளது,போன ஆட்சியில் மூத்திர சந்தில் கொசு கடித்தாலும் போராட்டம் நடத்திய பாட்டி இப்போது பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தும் இன்னும் மௌனம் காத்தது ஏன் என்று இப்போது தெரிகிறது. அதோடு சென்சார் போர்டின் ஜின்னா என்பவர் கமலின் நண்பர் மற்றும் கடந்த தேர்தலில் சென்னையில் ஆளும் கட்சி வளர்மதியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர். அதனால் அவர் அனுமதி அளித்ததும் பாட்டிக்கு பொறுக்கலை. மேலும் அந்த காலத்தில் கமலுடன் எல்லா நடிகைகளும் அடிக்க ஆசைப்பட்டு நடித்து பேர் வாங்கினர் அன்று பாட்டியும் நடிக்க ஆசைப்பட அதை தெரிந்த கமல் இதனால் "தாத்தா" நடிகர் கோபத்திற்கு ஆளாக நேரிடம் என்று மறுத்து விட்டார்,இதனால் கடந்த 35 வருடமாக "படையம்மாவாக" கோபம் கொண்ட பாட்டி இப்போது வஞ்சம் தீர்த்து உள்ளார்
31-ஜன-2013 05:33:57 IST
நடிக்கும் போது பெற முடியாத போன "சிறந்த நடிகை" பட்டதை இப்போது கொடுக்கலாம் அப்பப்பா என்னே நடிப்பு, தமிழகத்தின் மேல் அக்கறை இருந்தால் இப்படி "மணி" அடிச்சிட்டான் போன்ற சின்னத்தனமான நடிப்பெல்லாம் தேவை இருக்காது இருபதெட்டு மாநிலங்கள், ஏழு யூனியன் என முப்பத்தைந்து முதல்வர்களுக்கு முப்பது நிமிடம் ஒதுக்குவது என்றால்- பதினேலரை மணி நேரம் தேவை படும்,இது நடைமுறையில் சாத்தியமா? இப்படி எல்லா முதல்வர் சொல்வதையெல்லாம் ஒரு சேர பிரதமர் மனதில் வைத்து கொள்ள முடியுமா? அதற்குதான் எழுத்து வடிவில் வாங்கி அதன் மேல் நடவடிக்கை எடுக்க படுகிறதே,அதுதான் ஆதாரமும் கூட முக்கிய பிரச்சினைகளை பேச எல்லா முதல்வருக்கும் பத்து நிமிடம் போதும் சரி இதெல்லாம் ஏற்கனவே இரு முறை முதல்வராக இருந்த இவருக்கு தெரியும் தானே? இப்போது ஏன் இப்படி செய்தார்? அங்கேதான் இருக்குது உளவு துறையின் சமீபத்திய அறிக்கை தமிழகத்தின் முப்பத்தொன்பது சீட்டும் நாமம் என்று சொல்லி விட்டது அந்த அறிக்கை தான் எப்படி தமிழகத்தை சீரழித்து விட்டோம் என்பதை இன்னும் உணராமல் எப்படியாவது மத்திய அரசின் மீது பழி போட்டே காலத்தை கடத்தலாம் என்று வழிய சென்று இப்படி ஒரு நாடகத்தை நடத்தி உள்ளார்,இல்லா விட்டால் பன்னீரோ,வேறு தலைமை அதிகாரியோ சென்று இருப்பர் இது நான் சில நாட்களுக்கு முன்பு சொன்ன கருது இப்போதான் வெளி வருதுஅப்புறம் பாதிதான் நியூ இயர் கொண்டாட கிளம்பிட்டங்கள்ள இன்னும் ஏன் தாமதம் எல்லாரும் பொய் தண்ணி அடிச்சிட்டு தூங்குங்க,கரன்ட்டே தேவை இல்லை
31-டிச-2012 05:25:19 IST
என்ன சேகர் சார், கடந்த மதங்களில் பாட்டியின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் படும் துன்பங்கள் பற்றி செய்தி தொடர்ந்து வந்த போது உங்கள் திருமுகத்தை மறைத்து வைத்து கருத்து சொல்வதை நிருத்தினீர்கள்,இப்போது பாட்டிக்கு சாதகமாக பாட்டியே ஏற்படுத்தி கொள்ளும் சில டுபாக்கூர் விஷயத்துக்கு ஓடோடி வந்து கருத்து சொல்கிறீர் ஏன் பாட்டிகூட மின் பிரச்சினைக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் ஒவ்வொரு திங்கள் கிழைமையும் கூடி திட்டம் போடுவார்கள் என்றார் - இதுவரை எத்தனை முறை கூடி என்ன திட்டம் போட்டார்கள் என்று தெரியுமா? எதாவது ஆதாரம் உள்ளதா? டான்சி ராணி போட்ட கையெழுத்தையே இல்லை என்றவர் எதற்குதான் சரியான ஆதாரம் உள்ளது? பிரதமரை பார்க்க போன தி.மு.க எம்பிக்கள் டேப் எடுத்து கொண்டு போய் ஆதராமாக பதிவு செய்யவா முடியும்? எல்லாம் உளவு துறை அறிக்கை செய்யும் வேலை. அதில் வரும் தேர்தலில் முப்பத்தொன்பது தொகுதியிலும் "நாமம்" என்று சொல்லி விட்டனர். பாவம் பாட்டி,காவிரி பிரச்சினையில் சுப்ப்ரீம் கோர்ட்டுக்கே நல்ல பெயர் கிடைகிறது, தான் வழிய போய் ஷெட்டரை சந்தித்தும் ஒரு ஆணியும் புடுங்க முடியலை. மேலும் பிரதமரை பார்க்க போன தி.மு.க எம்பிக்கள் எங்கே சொன்னதை சாதித்து விடுவார்களோ என்று பயம், இப்படி தனக்கு ஒரு நல்ல பெயரும் வரவில்லையே என்று சமீபத்தில் டெல்லியி "மணி" அடித்து விட்டான் என்று பூச்சாண்டி காட்டியதை அனைவரும் "டிராமா" என்று சொல்லி கடுபேதி விட்டனர்-தொடர் தோல்வியால் துவண்டு போன பட்டி நாளொரு அறிக்கையும், பொழுதொரு பொய்யுமாக பிதற்றுகிறார் சரி அதான் கொடநாடு கிளம்பிட்டரே இனி எல்லாம் போய் ரெஸ்ட் எடுங்க
31-டிச-2012 05:20:59 IST
என்ன கணேஷ் நீங்க உண்மையிலேயே சென்னையில்தான் இருக்கீங்களா? இல்லை வெளிநாடா? நீங்க மேலே சொன்ன அனைத்தும் இப்போதுள்ள ஆட்சியில்தான் அதிகம். இத அடிக்கடி தினமலரே "சென்ற ஆட்சியைவிட அதிகம் " என்று பல துறையில் நடக்கும் அகிரமங்களை குறிப்பிட்டு வருகிறது, நீங்கள் தொடர்ந்து மலரை படிப்பவர் என்றால் உங்களுக்கு தெரியாமல் இருக்காது தமிழகத்தை ஜெயா இவ்வளவு சீரழித்த பின்னும் உங்களை போன்ற ஆதரவாளர்கள் எப்போதும் ஜெயாவை ஆதரிப்பதில் அர்த்தம் இல்லை, சின்ன தப்பு செய்தவர்களை விட பெரிய தப்பு செய்பவரை ஆதரிப்பேன் என்பது பொருந்தவில்லை
26-டிச-2012 12:13:12 IST
துளியும் ஆள தகுதி இல்லாத இவரை தேர்ந்தெடுத்து விட்டு இப்போது மக்கள் புலம்பாத நாள் இல்லை. ஒரு பெண் என்றும் பாராமல் எல்லா தகிடு தத்தங்களும் செய்தார்,செய்கிறார். ஐம்பதாயிரம் கோடி ஊழல் என்று சொல்லப்பட்ட கல் குவாரி ஊழலை வெறும் நாலாயிரம் கோடியில் முடித்து வைத்துள்ளார்.மேலும் இவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் அனுபவிக்கும் சிரமங்கள் சொல்லவே தேவை இல்லை, தகுதி இல்லாத இவர் ஆட்சியை தி.மு.க விடம் ஒப்படைத்தால் நல்லது
26-டிச-2012 05:47:04 IST
தினமும் பாதிக்கப்பட்ட ஐந்து விவசாயிகளுக்கு ஐம்பதாயிரம் வீதம் தி.மு.க கொடுக்கிறது,அதெல்லாம் செய்தியில் போடபடுவது இல்லை,. அப்புறம் பாட்டி வால்மார்ட் வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்னையில் வால்மார்ட்டின் மிகப்பெரிய கோடவுன் கட்டுமான பணியில் உள்ளதே அதெப்படி? ரெண்டாயிரத்து ஐநூறு சிறு வணிகர்கள் அதில் சேர்ந்து விட்டனரே அதெப்படி?
24-டிச-2012 05:43:51 IST