GUNAVENDHAN : கருத்துக்கள் ( 93 )
GUNAVENDHAN
Advertisement
Advertisement
மே
17
2017
அரசியல் பெருச்சாளியுடன் மதுசூதனனை ஒப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார்
பன்னீர்செல்வம், மதுசூதனன் , பொன்னையன் எல்லோருமே சசிகலா கட்டுப்பாட்டில் இருந்த வர்கள் தானே , பதவி பறித்ததால் அந்த ஆத்திரத்தில் கட்சியை விட்டு வெளியேறி, பதவி போன வயித்தெரிச்சலில் சசிகலாவை பன்னீர் எதிர்ப்பது என்ன கொள்கை வழி பிரிவா ?. சொல்லப்போனால் இந்த அளவுக்கு கட்சியை சிக்கலில் தள்ளி விட்டவர்கள் இந்த பன்னீரும், மதுஸூதனனும் தான் , இவர்கள் தான் ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் , வேறு யாருக்கும் நாதியில்லை என்றெல்லாம் எல்லா அமைச்சர்களையும் உசுப்பிவிட்டு, மாவட்ட செயலாளர்களையெல்லாம் ஆமாம்போட வைத்தவர்கள் . முதல்வர் பதவியை பன்னீரிடம் இருந்து பிடுங்காமல் இருந்து இருந்தால் இன்று வரை சசிகலாவின் காலில் தான் விழுந்து கிடப்பார், இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கின்றதா ?. இவர்களால் தான் இத்தனை குழப்பங்களும் , ஆரம்பத்திலேயே கட்சியை காப்பாற்ற எங்களுக்கு தெரியும், சசிகலா இதில் தலையிட வேண்டாம் என்று சொல்லியுருக்க வேண்டியது தானே உண்மையிலேயே தலைமையேற்று கட்சியை நடத்துவதற்கான தகுதி பன்னீருக்கு இல்லாததால் தான் சசிகலா காலில் விழுந்து கிடந்தார் , இப்போது யோக்கியனாட்டம் பேசுவது தவறு .   16:23:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2017
கோர்ட் வரும் 29ம் தேதி வரை தினகரன் உள்ளே தான்!
இந்த அளவுக்கு கீழ்த்தரமாக காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது கூட நடக்கவில்லை .   16:15:15 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மே
13
2017
அரசியல் அ.தி.மு.க., அணிகளில் யாருக்கு ஆதரவு? தடுமாறுகிறது பா.ஜ., தலைமை
பாஜக எந்த அணிக்கும் ஆதரவு கொடுக்காமல் , நியாயமாக நடந்தாலே போதும் . தானாகவே ஒரே கட்சியாகிவிடுவார்கள் , அல்லது தொண்டர்களாக பார்த்து யாரை ஏற்றுக்கொள்வது என்று முடிவெடுப்பார்கள் . இவர்களை பிரித்தாள்வதே பாஜக தானே . மத்திய அரசு தன்னுடைய கையில் இருப்பதால் , ஒரு கண்ணில் வெண்ணை இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்று வைத்திடாமணல் இருந்தாலே போதுமானது .   16:02:45 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

மே
13
2017
அரசியல் இரு அணிகள் இணைப்பில் சுணக்கம் முதல்வர் மீது அமைச்சர்கள் வருத்தம்
சசிகலா சிறைக்கு சென்று விட்டார், இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு அவர் நேரிடையாக தமிழக அரசியலில் தலையிட வாய்ப்பே இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது, சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்துக்காக தினகரானால் தான் இணைப்பு பேச்சு தடைபடுகிறது என்று அமைச்சர்கள் நினைத்ததால், இப்போது தினகரனும் நான் ஒதுங்கிக்கொள்கிறேன், என்னால் கட்சிக்கு எவ்விதமான இழப்பும் ஏற்படக்கூடாது என்று எண்ணுகிறேன் என்று மிகவும் பெருந்தன்மையாக கூறிவிட்டு சுத்தமாக ஒதுங்கி உள்ளார், தமிழக அரசியலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதே இல்லை, அவரை சந்திக்கின்றவர்களிடமும் கட்சிக்கு எவ்விதமான இழப்பும் ஏற்படக்கூடாது என்று சொல்லிவருவதாகத்தான் செயதிகள் வருகிறது . இந்த நிலைமையில் பன்னீர் உடனிருப்போர், இந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும், அந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும் என்று வெளியுலகத்துக்கு தெரிகிறபடி அறிவித்துக்கொண்டு, மறைமுகமாக முதல்வர் பதவியும் வேண்டும், பொதுச்செயலாளர் பதவியும் வேண்டும் என்று முரண்டு பிடிப்பது கொஞ்சம் கூட நியாயமாகவே இல்லை என்பது தான் என்னுடைய கருத்து . இன்றைக்கு அண்ணா திமுக ஆட்சி தமிழகத்தில் நடக்கின்றது என்றால் அதற்க்கு முழு முதற்காரணம் சசிகலா தான் என்று சொல்வது சிலருக்கு கசப்பாக கூட இருக்கலாம், ஆனால் உண்மை அது தானே . சசிகலாவும் , தினகரனும் அந்த நாலைந்து நாட்கள் இரவு பகலாக அரசியல் காய் நகர்த்தாமல் இருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று யாரும் எண்ணிப்பார்க்காமலேயே வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கின்றனர். அன்று முன்னின்று ஆட்சியை காப்பாற்றி இருக்கா விட்டால், திமுக குதிரை பேரத்தில் இறங்கி எப்போதோ ஆட்சியை கவிழ்த்து இருப்பார்கள், தாங்கள் நினைத்தபடி ஆட்சி கவிழவில்லையே என்கிற ஆத்திரத்தில், கோபத்தில் தானே திமுகவினர் அன்று சட்டமன்றத்தில் படு கேவலமாக நடந்து, சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டும், மேசைகள் மீது ஏறி நின்றுக்கொன்றும் ஆட்டம் போட்டனர், சபாநாயகர் சட்டையை, கைகளை பிடித்திழுத்து, சட்டையை கிழித்தனர் . இந்த பன்னீர்செல்வத்தால் ஆட்சியை காப்பாற்றி இருக்க முடியுமா? நான் புரட்சித்தலைவி அவர்கள் இறந்த அன்று சொன்னது தான் இன்றும் சொல்கிறேன், என்றைக்கு முதல்வர் பதவியில் இருந்துகொண்டு சசிகலாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துக்கொண்டு இருந்தாரோ அப்போதே இந்த ஆள் முதல்வர் பதவிக்கே லாயக்கில்லாதவர் தான் . பன்னீரால் கட்சியை காப்பாற்றவே முடியாது, இப்போதைக்கு கொஞ்சம் பேர் பன்னீர் என்னவோ பெரிதாக கிழித்து விடுவார் என்று நம்பிக்கொண்டு அவர் பின்னால் நிற்கின்றார்கள், நான் இன்றைக்கு சொல்கிறேன் பன்னீர் பின்னால் நிற்பவர்கள் கூடிய விரைவில் பன்னீர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொண்டு அங்கிருந்து வெளியேறிவிடுவார்கள், இது நடக்கத்தான் போகிறது. எடப்பாடி பழனிசாமி சசிகலா நியமித்த ஆள் என்கிறவர்களை கேட்கிறேன், பன்னீர் மட்டும் என்ன புரட்சித்தலைவியால் நேரிடையாக தேர்ந்தெடுக்க பட்டவரா? இல்லையே, தினகரன் கைகாட்டி, சசிகலாவால் முன்மொழியப்பட்டு , புரட்சித்தலைவியால் ஏற்றுக்கொண்டு அந்த பதவிக்கு வந்தவர் தானே. சென்ற தேர்தலின் போது புரட்சித்தலைவி அவர்களால் சுத்தமாக ஓரம்கட்டி வைக்கப்பட்டவர் தானே இந்த பன்னீர், பன்னீர்செல்வத்துக்கு சென்ற சட்டமன்ற தேர்தலின் போது சீட்டு கிடைக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாகத்தானே , வேட்பாளர் பட்டியல் வரும் வரை இருந்தது. அதுவும் முதல் லிஸ்டில் அவர் பெயர் இல்லையே. ஆகவே புரட்சித்தலைவியால் கைகாட்டப்பட்டவர் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டு இருப்பதே வடிகட்டிய பொய். சும்மா கூழைக்கும்பிடு போட்டுக்கொண்டு, பதவி கிடைக்கும் என்றால் யார் காலில் வேண்டுமானாலும் விழுந்துக்கொண்டு இருக்கும் இந்த ஆள் முதல்வர் பதவிக்கே லாயக்கில்லாத நபர் . எனவே எல்லா அமைச்சர்களும் எந்த எந்த வகையில் எல்லாம் மக்களுக்கு நல்லதை செய்யலாம் என்று சிந்தித்து ,வேகமாக செயல்பட்டுக்கொண்டு இருந்தாலே நிலைமைகள் சரியாகிவிடும் . முதல்வர் பதவியில் இருந்தபோது எல்லாம் சசிகலா சொன்னதெற்க்கெல்லாம் ஒத்து ஊதிக்கொண்டு இருந்து விட்டு, பதவியை பறித்த பிறகு யோக்கியன் வேடம் போடுவதால் இப்போதைக்கு கொஞ்சம் பேர் அவரை நம்பி ஏமாற்றலாம், ஆனால் கூடிய விரைவில் அவர் சாயம் வேலும்மும், மணல் கொள்ளையன் சேகர் ரெட்டி விஷயம் நியாயமாக வருமான வரித்துறையால் வெளிக்கொணரப்பட்டாலே பன்னீர் சாயம் வெளுத்து விடும் , பன்னீர் அதில் பெருமளவு சம்மந்தப்பட்ட உள்ளதால் மத்திய அரசு அடக்கி வாசிக்கின்றது. கட்சி மீதும், கட்சியின் தலைவியாக இருந்த புரட்சித்தலைவி மீதும், கோடிக்கணக்கான தொண்டர்கள் மீதும் பற்று இருந்தால் எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் கட்சியை இணைக்க வேண்டும் .   15:20:12 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மே
14
2017
அரசியல் கெஜ்ரிவால் கறுப்பு பணம் மாற்றினார்கபில் மிஸ்ரா புதுகுண்டு
எந்த அரசியல் வாதியும் இன்றய அரசியல் சூழ்நிலையில் யோக்கியமானவராக இருக்கவே முடியாது என்பது தான் உண்மை . ஒவ்வொரு அரசியல் வாதியும் தான் அடுத்த தேர்தலில் நிற்க, தேர்தலில் வெற்றி பெற கோடிக்கணக்கான பணம் வேண்டும் என்பதை மறுக்கவே முடியாது, எனவே ஒவ்வொரு அரசியல் வாதியும் பணத்தை சேர்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்கள்,ஆனால் இதில் ஓரளவுக்கு பணத்தை சேர்த்து வைத்துள்ளனர் யார், அளவுக்கதிகமாக ஆயிரம் கோடி, ஐந்தாயிரம் கோடி என்று யார் பதுக்கி வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று தான் பார்க்கவேண்டியுள்ளது. நான் யோக்கியன் என்று எந்த கட்சி அரசியல்வாதியும் சொல்லவே முடியாது, அப்படி சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும் .   14:40:18 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

மே
7
2017
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
அரசியல் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்?புது வியூகத்துக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்
அத்வானி தான் அடுத்த ஜனாதிபதி என்று சொல்லி அவரை அமைதிப்படுத்தி வைத்திருக்கின்றார்கள், ஆனால் மோடிக்கு தன்னை வளர்த்துவிட்ட தன்னுடைய குரு அத்வானியை ஜனாதிபதியாக்குவதில் விருப்பமில்லையாம், அத்வானிக்கு பட்டை நாமம் போட்டுவிட்டு , ஆர் எஸ் எஸ் தலைவரை ஜனாதிபதியாக்க போகிறார்களாம் . தன்னை வளர்த்துவிட்ட ஆசானுக்கே பெப்பே காட்டும் மோடி .   16:45:10 IST
Rate this:
8 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
அரசியல் அ.தி.மு.க., அணிகள் இணைப்பு அம்போ? சுற்றுப்பயணம் கிளம்புகிறார் பன்னீர்
இரண்டு மாதத்துக்கு முன்பு வரை சசிகலா காலில் விழுந்து கிடந்த இந்த பன்னீர் இப்போது யோக்கியராகி விட்டாரா ?. கங்கை தண்ணீரை மோடி தெளித்து விட்டாரா ?. மக்களை என்னமாய் ஏமாற்று கிறார்கள் .   16:39:40 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
அரசியல் சசி அண்ணன் மகன் விவேக்கின் முதலீடுகளை வருமான வரித்துறை... தோண்டுகிறது!
தனக்கு வேண்டாதவர்கள் மீது மட்டும் குறிவைத்து தாக்குவது மத்திய அரசுக்கு நல்லதல்ல, பன்னீரை எப்படியாவது தூக்கி நிறுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தன்னுடைய அதிகாரத்தையெல்லாம் தவறான வழியில் பயன்படுத்துவதாகவே தோன்றுகிறது, காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது கூட இந்த அளவுக்கு தனிப்பட்டவர்களை குறிவைத்து இப்படி நடக்கவில்லை , காங்கிரசை விடவும் அதிக அளவில் ஒரு கட்சியை உடைக்க , பலவீனப்படுத்த கொஞ்சமும் அச்சமில்லாமல் பிஜே பி நடக்கின்றது .    16:29:33 IST
Rate this:
6 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
அரசியல் காட்டி கொடுத்த சுகேஷ் மொபைல் போன்
சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பரபரப்பான அறிவிப்புகளை செய்து மேலிடத்தின் வறுபுறுத்தலுக்கினாங்க தினகரனை கைதும் செய்தாகி விட்டது, இன்னமும் ஆதாரங்களை தேடித்தேடி அலைகிறது டில்லி போலீஸ் . இப்போதைக்கு டில்லி தலைமையின் எண்ணமே , தினகரனை செயல்படுவதில் இருந்து தடுத்து, பன்னீருக்கு தேவையான அளவுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது ஒன்றே குறிக்கோளாக உள்ளது . ஆனால் என்னதான் மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி பி ஐ , டில்லி போலீஸ் எல்லாவற்றையும் பன்னீரை கைத்தூக்கிவிட பயன்படுத்தினாலும் அவர்கள் நினைத்த அளவுக்கு பன்னீரால் கட்சியை உடைத்திட முடியவில்லை .   16:02:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment