Advertisement
தினமலர் முதல் பக்கம் » anandhaprasadh அவரது கருத்துக்கள்
anandhaprasadh : கருத்துக்கள் ( 208 )
anandhaprasadh
Advertisement
ஜூன்
17
2013
அரசியல் தமிழக அமைச்சரவையில் இருந்து இரண்டு பேர் நீக்கம் புது மந்திரிகள் இரண்டு பேர் இன்று பதவி ஏற்பு வாரியங்களிலும் அ.தி.மு.க.,வினர் நியமனம்
தமிழ்நிதி.. உங்கள் கருத்து ஓரளவு சரியே... ஆனால் மின்சாரம், பொதுப்பணி, போக்குவரத்து, கல்வித்துறை முதலான எந்தத் துறை அமைச்சரின் கல்வி அறிவைக் கவனித்தீர்களா? அவர்கள் அந்தத் துறையில் எந்த அளவு அறிவு பெற்றவர்களாக இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? நீங்கள் பட்டியலிட்ட திமுக அமைச்சர்களால் அந்தந்தத் துறைகள் எந்த அளவு முன்னேற்றம் கண்டன? (அந்தத் துறைகளை வைத்து அவர்கள் முன்னேற்றம் அடைந்திருப்பார்கள் என்பது வேறு விஷயம்) மின்சாரத் துறையில் ஒரு வயர்மேனாகக் குறைந்தது டிப்ளோமா தேவைப்படுகிறது. ஆனால் துறை அமைச்சராக இருப்பவர்கள் பத்தாம் வகுப்பைக் கூடத் தாண்டியவர்கள் இல்லை. எனவே இவர்களின் அறிவோ அனுபவமோ எந்த வகையிலும் முன்னேற்றத்திற்குக் கை கொடுக்கப் போவதில்லை. கோப்பில் எந்த இடத்தில் கையொப்பம் / கைநாட்டு இட வேண்டும் எனத் தெரிந்திருந்தால் போதுமானது. எல்லாக் கட்சிகளும் இதே நிலைதான். மேலும் படித்தவர்கள் அரசியலுக்கு வருவது என்பது பகற்கனவு. எனவே அமைச்சர்களாக இருப்பவர்கள் புத்திசாலியாக இல்லாவிட்டாலும் நேர்மையாக, ஊழல் செய்யாதவாறு இருப்பதே பெரிய விஷயம். அவ்வாறு ஊழல் செய்பவர்களை மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.   12:18:21 IST
Rate this:
13 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
15
2013
எக்ஸ்குளுசிவ் தகுதியிருந்தும் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை இழக்கும் மாணவர்கள்
ராஜனின் நியாயமான கருத்துக்கு 81 பேர் மோசம் என்று குறியிட்டதிலிருந்தே தெரிகிறது, நம் நாடு சீக்கிரம் உருப்பட்டுவிடுமென்று... ஜாதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை எந்த முன்னேறிய நாடுகளிலும் இல்லை...   15:36:05 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
16
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
யோசித்துப்பார்த்தால் அண்ணன், தம்பி, அண்ணன் மனைவி அனைவரிடமும் சில தவறுகள் இருப்பது புரிகிறது. (1) தம்பி தனது குழந்தையை அண்ணனிடம் விட்டது சரியல்ல. ஒரு அறிஞனை உருவாக்க அவனின் பெற்றோர் அறிஞர்களாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. இது கூட இரண்டாவது காரணம்தான். முதல் காரணம், தனது பெற்றோரை விட்டு எந்தக் குழந்தையும் பிரிந்து வளர்வது நல்லதல்ல. அதனால் உருவாகும் இடைவெளி பிற்காலத்தில் பெற்றோர்-குழந்தை உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். (2) இதைத் தம்பி புரிந்து கொள்ளாவிட்டாலும் 4 பட்டங்கள் பெற்ற அண்ணன், தனது தம்பியிடம் சொல்லி, புரிய வைத்திருக்க வேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. பையனை அவன் பெற்றோரிடம் சேர்த்துவிடுவது நல்லது. (3) அண்ணனின் மனைவி ஆரம்பத்தில் நன்றாக கவனித்து விட்டு, பிறகு ஏன் வெறுக்கிறார் என்று தெரியவில்லை. வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா என்று ஒரு கணவனுக்குரிய பொறுப்புடன் யோசித்து, மனைவியிடம் கலந்து பேசவேண்டும். உண்மையிலேயே மனைவி பக்கம் நியாயம் இருப்பின் அதை அவர் புரிந்துகொண்டு, அதன்படி நடக்க வேண்டும். இல்லை, மனைவி விதண்டாவாதமாக சண்டை போடுகிறார், வாழ விருப்பமில்லை (வேறு சில காரணங்கள் இருப்பின்) என்றால் பரஸ்பர விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிடலாம். ஆனால் அது கடைசி நிகழ்வாகத்தான் இருக்கவேண்டும். கசப்புகள் மறைந்து குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.   13:05:52 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
9
2013
வாரமலர் பெற்றோரை மதிப்பவரா நீங்கள்?
சிவா.. உங்களோட செம காமெடிங்க... எந்த மருமகனால மாமியார், மாமனார் அநாதரவா, இல்லன்னா முதியோர் இல்லத்துக்குப் போயிருக்காங்க... கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்களேன் பார்ப்போம்... ஒருவேளை உங்களை வீட்டோட மாப்பிள்ளையா இருக்க விடலை'ன்னு நீங்க அப்படி பண்ணிட்டீங்களோ என்னமோ...   19:52:16 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
9
2013
வாரமலர் பெற்றோரை மதிப்பவரா நீங்கள்?
அருமையான கட்டுரை.... மாமனார், மாமியாரை முதியோர் இல்லத்திலோ, தனியாகவோ தங்கவிட்டு, தனிக் குடித்தனம் போகத் துடிக்கும் அனைத்து பெண்களும், அவர்களின் பெற்றோரும் படிக்க வேண்டிய கட்டுரை...   14:50:39 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
9
2013
வாரமலர் ஒரு பிரளயத்திற்கான பொறி!
ராஜன், நாத்தனாரும் ஒரு பெண்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்... கோபித்துக்கொண்டு தாய்வீடு திரும்பும் பெண் கூட தன் சகோதரனின் மனைவிக்கு நாத்தனார்தான்... திரும்பி வந்தவள் ஒரு கொடுமைக்கார நாத்தனாராக இருந்து விட்டால் என்ன சொல்வீர்கள்? பொதுவாகவே பெண்களின், பெண்ணைப் பெற்றவர்களின் கண்ணோட்டம் இப்போது மாறிவிட்டது... தாய், தந்தை, சகோதர சகோதரிகள் செய்யும் தவறை ஏற்றுக்கொள்ளும் மனம் கணவன் அல்லது மாமனார் மாமியாரின் சிறிய தவறுகளைக் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறது... அதற்காகப் புகுந்தவீட்டில் என்னசெய்தாலும் சரி என்று சொல்லவரவில்லை... பெண்களிடம் பொதுவாகவே சகிப்புத்தன்மை குறைந்து விட்டது... சிறிய மணல்துகளைக் கூட பூதக் கண்ணாடி மூலம் பார்த்தால் பாறாங்கல் போன்றுதான் தெரியும்.. அந்த மனப்பாங்கு இப்போது பெரும்பாலான பெண்களிடமும் அவர்களைப் பெற்றவர்களிடமும் உள்ளது... திருமண வாழ்க்கை முறிந்து போவதற்கு இது முக்கியக் காரணம்...   14:35:53 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
6
2013
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
திரு. ஜெ.தமிழ்ச்செல்வன், தலைவர், இந்தியன் பயர் ஒர்க்ஸ் அசோசியேஷன் அவர்கள் கூறிய கருத்து சரிதான்... சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல ஊர்களுக்கும் பட்டாசுத் தொழில் வாழ்வாதாரமாக இருக்கிறது என்பது உண்மை... ஆனால் முதலாளிகள் லட்சக் கணக்கில் சம்பாதிக்க அவர்கள் சில நூறுகளுக்காகத் தம் இன்னுயிரை நித்தமும் அடகு வைத்துவிட்டு அல்லவா வேலைக்கு வரவேண்டியுள்ளது... சமீபத்தில் நடந்த இரு பட்டாசுத் தொழிற்சாலை விபத்துக்களைப் பற்றி செய்தித்தாளில் படித்தேன்... விசாரணைகளின் முடிவில் அவற்றின் மூலகாரணம் பாதுகாப்பற்ற உற்பத்திச் சூழல் என்றுதான் தெரியவந்தது. (un-safe working condition).... இப்போது, தரக் கட்டுப்பாடு (ISO 9000), மாசுக் கட்டுப்பாடு (ISO 14000) போல சர்வதேச அளவில் தொழிலாளர் நல மற்றும் பாதுகாப்பும் (OHSAS 18000 - Occupational Health and Safety Management tem) முக்கியத்துவம் பெற்று வருகிறது.. அந்த வகையில் இந்தப் பட்டாசுத் தொழிற்சாலைகள் எந்த அளவுக்கு தொழிலாளர்களின் பணியிடப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருகின்றன? எத்தனை தொழிற்சாலைகள் 18 வயதுக்கு மேற்பட்டவரை மட்டுமே பணியில் அமர்த்துகின்றன? எத்தனை தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் பாதுகாக்கின்றன? நம்மை விட சீனாவில் பட்டாசு உற்பத்தி பல மடங்கு அதிகம்... ஆனால் இதுபோன்ற விபத்துக்கள் அங்கு நிகழ்வதில்லை... (அலுவலக விஷயமாக சீனா சென்றிருந்தபோது அங்குத் தெரிந்து கொண்டேன்)... அரசு அதிகாரிகள் நேர்மையற்ற முறையில் நடந்து கொள்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை... ஆனால் பட்டாசுத் தொழிற்சாலை அதிபர்கள் 70% லாபம் எதிர்பார்த்து பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனம் காட்டுவதை விட, 60% லாபம் வைத்து தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு சிறிது செலவிட்டால் இதுபோன்ற துயரங்களைத் துடைத்தெறியலாம்... கவனிப்பார்களா?   12:56:18 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
2
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
மங்கை, நான் உங்களைப் பற்றி பேஸ்புக்கில் போடுங்கள் என்று கூறியதற்கே உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே... இதுதான் நமது நாடு சொல்லிக் கொடுத்த பண்பாடு... தெரிந்தோ தெரியாமலோ நமது பண்பாடு உங்கள் ரத்தத்தில் உள்ளது... அதைத்தான் மதிக்கவும், பாதுகாக்கவும் உங்களைப் போன்றவர்களுக்கு நாங்கள் கற்றுக்கொடுக்க முயற்சிக்கிறோமே தவிர வெளிநாட்டுக்காரனின் பாராட்டை நம்பி அல்ல... புரிந்துகொள்ளுங்கள்...   14:25:35 IST
Rate this:
8 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
2
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
மங்கை, சம்பவம் நடந்தது ஒரு பேருந்தில். அதை நான்கு பேர் விமர்சிக்கத்தான் செய்வார்கள்... நான்கு சுவற்றுக்குள் நடக்கும் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதுதான் தவறு... இது தெரியாமல் பொரிந்து தள்ளுகிறீர்களே, குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது இதுதானோ?   14:10:22 IST
Rate this:
9 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
4
2013
சம்பவம் விஷ்ணு அவதாரம் போல விளம்பரம் தோனிக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு
இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள் என்றே ஆகிவிட்டது... கடவுளை இழிவாகப் பேசும், சித்தரிக்கும் கேவலம் நம்மில் மட்டுமே உள்ளது.. மற்ற எந்த ஒரு மதத்தினரும் இவ்வாறு செய்ய, பேச அனுமதிப்பதில்லை.. பொங்கி எழுகின்றனர்...   17:34:39 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment