அட என்னப்பா இது? எங்கு பார்த்தாலும் பாகுபாடு.
மின்சாரத்தில்த்தான் சென்னையினைத்தவிர மற்ற இடஙகளில் 10 மணி நேரத்திற்கும் மேலாக தடை செய்து வேடிக்கை பார்க்கிறார்களென்றால், இப்போது இப்படியொரு கேள்வி. இதே கேள்வியினை "பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி அவசியமா" என்று கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைவிடுத்து, கிராமத்தில் படிப்பவர்களென அவர்களைத் தனியாக ஒதுக்குவது எதனால்? இப்படியே நமக்குள்ளேயே இப்படிப் பாகுபடுத்திக் கொண்டிருந்தால் கூடியவிரைவில் தமிழகமே பலவாறாகப் பிரிந்தாலும் ஆச்சரியப்படுவற்கில்லை.
படிப்பில் ஒதுக்கீடு, வேலையில் ஒதுக்கீடு (சாதிகள் அடிப்படையில்)
தற்போது மின்சாரத்தில் ஒதுக்கீடு,
கல்வி வசதிகள் பெறுவதிலும் ஒதுக்கீடா?
25-மார்-2013 19:36:04 IST
அவருக்கு அடுத்தமாதம்தான் பிறந்த தினம் என்பதை அனைத்து ரசிகர்களும் அறிவார்கள். மேலும் கடந்த சில ஆண்டுகளாக அவர் சரியாக விளையாடவில்லையென்று வேறு செய்தி வெளியிட்டிருகிறார்கள். இந்தியா உலகக்கோப்பை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தவரே இவர்தான். அது நடந்தது 2011-இல். அதற்கு முன்புதான் அவர் 200 அடித்து இருந்தார், ஆகவே சில ஆண்டுகள் என்று சொல்வதே மிகப்பெரிய தவறு. வேண்டுமென்றால் ஒரு சதம்கூட அடிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
25-மார்-2013 16:07:53 IST
இதற்குப் பெயர் என்னவாம்? இதுவும் இனவெறித் தாக்குதல்தானே... அப்படி அந்த அளவிற்கு அந்தச் சிங்களவர்கள்மீது கோபம் இருப்பவர்கள் ஏன் ஒன்று செய்யக் கூடாது. நேராக சிங்களம் சென்று போராட வேண்டியதுதானே?
17-மார்-2013 19:44:13 IST
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா...?
வாழ்த்துக்கள் கமல் அவர்களே... தன்னுடைய படம் தோல்வி அடைந்தால்கூட, விடா முயறிசியுடன் இன்னும் பலவற்றைப் பரீட்சித்துப் பார்ப்பவர் கமல். இப்போது சொல்லவா வேண்டும்... உங்களது அடுத்தடுத்த படைப்புகளுக்காகக் காத்திருக்கிறோம்...
12-பிப்-2013 13:31:35 IST
இந்த விசயத்தில் கமலின் நிலைப்பாட்டைப் பாராட்டியே தீர வேண்டும். மனோதிடத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார். கலை மகளின், கலைப் பொக்கிசம் என்று சொல்லி தலையில் தூக்கிக் கொண்டாடும் சினிமா உலகம் கூட இவர் காலைவாரிவிட்டது. ஆனால் அதற்கெல்லாம் சற்றும் கலங்காமல் தனித்து நின்று போராடும் உம்மை ரசித்ததற்கு இப்போது பெருமைப்படுகிறேன் - ரசிகன் என்ற முறையில். கவலைப் படாதீர்கள் கமல், எது நடந்தாலும் நாங்கள், உங்கள் ரசிகர்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்.
29-ஜன-2013 21:00:08 IST
முதலில் பெண்களை, பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் மட்டும் அமரும்படி சொல்லுங்கள். அல்லது, ஆண்களுக்கென இருக்கை ஒதுக்கீட்டைக் கொடுங்கள். இங்கையும் உக்காருவாங்களாம், அங்கையும் உக்காருவாங்களாம் அப்ப ஆண்கள் எங்கதான் போயி உக்காருவது?
02-ஜன-2013 16:30:32 IST