அரசியலாக்காதீர்கள் என்று மாண்புமிகு மோடி அவர்கள் கூறுகிறார். சாதாரண மக்கள் செய்து இருந்தால் உடனே அவர்களை அர்ரெஸ்ட் செய்து இருப்பீர்கள். ஆனால் செய்ததே அரசியல்வாதி தானே பின்னர் எப்படி அரசியலாக்காது இருக்க முடியும். அவர் அவர்களுக்கு வந்தால் தான் வலி தெரியும். உங்கள் ஆட்சியில் மக்களுக்கு பல வழிகளில் பிரச்சினை கொடுத்து இருக்கிறீர்கள். அந்த பணம் வாபஸ் என்ற ஒன்று போதும் உங்கள் ஆட்சி பெருமை கூற . வாயில் வந்தது எல்லாம் பேசலாம் என்று உங்கள் ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் நீங்கள் தண்டனை கொடுத்தால் கண்டிப்பாக நீங்கள் நல்ல பிரதமர்.
19-ஏப்-2018 11:03:42 IST
ஒரு உயிரை எடுக்கிறது இந்த நாய்களுக்கு விளையாட்டா போச்சு. அந்த பெண்ணையும் வாழ விடாமல் இவனும் வாழாமல். என்ன தான் நடக்கிறது. கல்லூரி சென்று வரும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை. பட்டப்பகலில் ஒருவன் கொலை செய்கிறான். பெண்கள் அந்நிய ஆண்களுடன் வைக்கும் நட்பு ஒரு அளவோடு இருக்கட்டும். அது முகநூல் , எதாக இருந்தாலும் எல்லாம் ஒரு அளவோடு பரிமாறி கொள்ளுங்கள். இல்லை என்றால் இது போன்ற தேவை இல்லாத சிக்கல்கள் வந்து சேரும். ஆட்சியாளர்களால் மக்களை காப்பாற்ற முடியாது. அவர்கள் அவர்களையே காப்பாற்றி கொள்ள போராடி கொண்டு இருக்கிறார்கள். இதில் எங்கே மக்களை பாதுகாப்பது. மக்களாகிய நாம் தான் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். எல்லா பெற்றோருக்கும். ஒரு வேண்டுகோள். பிள்ளைகளை நண்பர்கள் போல் பாவித்து எதாக இருந்தாலும் நேரடியாக கேட்டு விடுவது நல்லது. பெண் பிள்ளை மொபைல் கொண்டு மொட்டை மாடி மேல் பேசினால் ஏதோ உங்களுக்கு தெரியாத ரகசியம் இருக்கும். அதை கண்காணிக்க வேண்டாம் நேரடியாக கேட்பது நல்லது. கண்காணிக்கும் போது தான் தவறுகள் அதிகம் செய்ய வாய்ப்பு அதிகம். நேரடியாக கேட்டு விட்டால் நல்லது. இது போன்ற சம்பவங்களுக்கு பிள்ளைகள் தனக்கு மற்றவர்களால் ஏட்படும் தொல்லைகளை பெற்றவர்களிடம் தெரிவிக்காதது தான் காரணம். பொதுமக்களாகிய நாம் தான் நம்மை காக்க வேண்டும். காவல் துறையோ அரசாங்கமோ நம்மை காக்கும் என்று காத்து இருந்தால் எல்லோரும் சம்பவங்கள் நடந்த பின்னர் தான் வருவார்.
09-மார்ச்-2018 16:36:22 IST
குதிரை வண்டி சவாரி என்பது பெரிய சுகம். 1980 நான் சிறு வயதில் ஆவடியில் என் மாமா உடைய நண்பர் ஒருவர் குதிரை வண்டி வைத்து இருந்தார் மாமா வீட்டிட்கு போகும் போது எல்லாம். பக்கத்து வீட்டில் அந்த குதிரை வண்டி நிற்கும். குதிரை சாப்பிட்டு கொண்டு இருக்கும். சில நேரங்களில் அவர் எங்களை சவாரி கொண்டு ஒரு ரௌண்டு வருவார். அப்போது கிடைத்த மகிழ்ச்சி இப்போது காரில் சென்றாலும் கிடைப்பது இல்லை. இயறகை காற்றை அனுபவித்து கொண்டு செய்யும் பயணம் ஒரு தனி சுகம் தான்.
12-டிச-2017 11:11:58 IST
ராஜா ராணி, மௌன ராகம் கதை தழுவல், அது பல இடங்களில் வெளிப்படையாகவே தெரியும். அதுவும் கிளைமாக்ஸ் அப்பட்டமான கோப்பி என்ன அதில் காதலன் இல்லை. இதில் காதலன் உயிரோடு இருக்கிறான் அவ்வளவுதான். இதில் ஏர்போர்ட் அதில் ரெயில்.வீட்டில் நடக்கும் பார்ட்டியில் அப்பா முன்னாள் நடிப்பது கூட மௌன ராகத்தில் உள்ளது. இதில் நஸ்ரியா ஒரு ஸ்பெஷல் கேரக்டர் அவ்வளவுதான். மௌன ராகத்தை இந்த காலத்திட்க்கு ஏட்ப கொஞ்சம் மசாலா ஊத்தி மாத்தி இருக்கிறார் அட்லீயே. தேறி விஜயகாந்த் படம் , மெர்சல் பல படங்களின் காபி. அட்லீயை குறை சொல்ல முடியாது. இனிமேல் எத்தனை படம் வந்தாலும் அது பழைய படங்களின் சாயல் இருக்கத்தான் செய்யும். ஏன் என்றால் யார் கையிலும் கதை இல்லை. அல்லது கதை எழுத தெரியவில்லை. மொத்தம் பதினான்கு ரீலில் இதுவரை வெளிவந்த படங்களின் ஒரு ஒரு சீனை எடுத்தாலே போதும் ஒரு புதிய படம் உருவாகிவிடும். அதைத்தான் இன்று நிறைய டைரேக்டர்கள் செய்கிறார்கள். பார்க்கலாம் அடுத்த படம் எந்த படத்தின் காப்பி என்று
11-நவ-2017 05:25:55 IST
திருவண்ணாமலையில் பஸ் டிரைவராக இருக்கிறார் ராதிகா. இவருடைய மகனான உதயநிதி, சென்னையில் ஐ.டி. துறையில் வேலைபார்த்து, பின்னர் வேலை இல்லாமல் இருக்கிறார். நாயகி மஞ்சிமா மோகனும், உதயநிதியும் காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய காதல் விஷயம், மஞ்சிமா மோகனின் அண்ணனான ஆர்.கே.சுரேஷுக்கு தெரியவருகிறது.
போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆர்.கே.சுரேஷ், மஞ்சிமா மோகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவர்களை பிரிக்கவும் முயற்சி செய்கிறார். இந்நிலையில், உதயநிதியும், மஞ்சிமா மோகனும், பதிவு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.
இதற்கிடையில், தீவிரவாதியான டேனியல் பாலாஜி வட இந்தியாவில் வெடிகுண்டுகளை வைத்து விட்டு, சென்னையில் வெடிகுண்டு வைப்பதற்காக வருகிறார். எதிர்பாராத விதமாக, உதயநிதியையும், சூரியையும் சந்தித்து செல்கிறார். இவர்களின் சந்திப்பு சிசிடிவி கேமராவில் பதிவாகி விட, டேனியல் பாலாஜிக்கும், உதயநிதிக்கும் சம்மந்தம் இருப்பதாக கருதி போலீஸ் அவர்களை கைது விடுகிறார்கள்.
இதுதான் சமயம் என்று உதயநிதியை என்கவுண்டர் செய்ய முயற்சிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இறுதியில் ஆர்.கே.சுரேஷின் என்கவுண்டரில் இருந்து தப்பித்து, டேனியல் பாலாஜிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று நிருபித்தாரா? மஞ்சிமா மோகனுடன் இணைந்தாரா? டேனியல் பாலாஜியை பிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதி வழக்கமான அவரது ஸ்டைலில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுக்க ஓடி ஓடி நடித்திருகிறார். முதல்பாதி மஞ்சிமா மோகனுடன், இரண்டாம் பாதியில், சூரியுடனும் பயணித்து நடித்திருக்கிறார். மஞ்சிமாவுடன் ரொமன்ஸிலும், சூரியுடன் காமெடியிலும் கலக்கி இருக்கிறார் உதயநிதி.
மஞ்சிமா மோகன் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அண்ணனுக்கு பயப்படுவது, துணிச்சலாக திருமணம் செய்து கொள்ள தயாராகுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
சூரியின் காமெடி இப்படத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது. உதயநிதியுடன் இவர் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்க வைத்திருக்கிறது. உதயநிதிக்கு அம்மாவாகவும் பஸ் டிரைவராக நடித்திருக்கிறார் ராதிகா. பஸ் ஓட்டும் முதல் பெண்ணாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், தங்கையின் காதலுக்கு எதிரியாகவும், வில்லத்தனத்திலும் மிரட்டியிருக்கிறார். அதுபோல் தீவிரவாதியாக வரும் டேனியல் பாலாஜியும் சிறப்பாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார். இயக்குனர் கவுரவ் சிறப்பு தோற்றத்தில் வந்து கலக்கி இருக்கிறார்.
தூங்கா நகரம், சிகரம் தொடு, ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த, கவுரவ் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், போக போக திரைக்கதை சூடுபிடிக்கிறது. உதயநிதி, சூரி, டேனியல் பாலாஜி என ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத மூன்று பேரின் வாழ்க்கையை இணைத்து, ஒரு ஆக்ஷன் த்ரில்லரை உருவாக்குவது சவாலான காரியம்தான். அதற்கென பொருத்தமான கதையையும் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர்.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றார் போல் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘இப்படை வெல்லும்’ நிச்சயம் வெல்லும்.
10-நவ-2017 12:33:25 IST
இந்த கேடுகெட்டவன் எல்லாம் தானாக அழியிற கூட்டம். இவன் அழிவது மட்டுமல்லாமல் ஒன்றும் அறியாத சிறார்களை தன இயக்கத்தில் சேர்த்து அழித்து கொண்டு இருக்கிறான். ஒருவேளை இவன் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக அழிக்கப்பட வேண்டியவன்.
01-அக்-2017 17:41:12 IST
கமெண்ட்ஸ் ரொம்ப குறைவா இருக்கு மணி பத்தரை ஆகப்போது இந்த நேரத்திட்குள் ஒரு நூறு கமெண்ட்ஸ் வந்து இருக்க வேண்டும் சரி இன்று வெள்ளிக்கிழமை காலையில் கமெண்ட்ஸ் என்ற பெயரில் பாவம் செய்ய வேண்டாம் என்று நினைத்து இருப்பார்கள். மாலை ஆறு மணிக்கு நூறு தாண்டும் என்று நினைக்கிறேன். மதுரை ராமன் கணேசன் சூப்பரா ஒரு கமெண்ட்ஸ் எழுதி இருக்கார். அந்த கமெண்ட்ஸுக்கு ஒரு நூறு டிஸ்லைக் வர வேண்டும். அந்த ஆள் நடிப்பது அந்த ஆள் உடைய வேலை. அதட்கு சம்பளம் கொடுக்கிறாங்க. அவ்வளவுதான். நமக்கு தெரிஞ்ச தொழில் நாம் சேரோம். அந்த ஆளுக்கு தெரிஞ்ச தொழில் அவர் செய்றார். அவ்வளவு தான் . அந்த மனிதர் இன்னும் கட்சி பற்றி அறிவிக்கவில்லை. தொடங்குவோம் இல்லை அதட்கு உள்ளாகவே இந்த அளவுக்கு விமர்சனமா. எல்லோரும் ஆட்சி செய்து விட்டார்கள். தமிழ்நாடு உருப்படல. அவர் வரட்டும் வந்து நல்ல ஆட்சி கொடுத்தால் பாராட்டுங்க. இல்லை என்றால் இன்னும் அதிகமா திட்டுங்க. ஏன் நல்ல ஆட்சி கொடுக்க வில்லை என்றால் நான் கூட அவரை குறை சொல்வேன். அதை விட்டு விட்டு அந்த மனிதர் எத்தனை பேர் எப்படி திட்டினாலும் அமைதியாக இருக்கிறார். அதட்கு காரணம். அவரின் தெய்வபக்தி. உண்மையான தெய்வபக்தி உடையவன் தவறு செய்ய மாட்டான். கண்டிப்பாக அந்த மனிதர் ஆட்சிக்கு வந்தால் நல்ல ஆட்சி கொடுப்பார் என்று நம்புவோம். அதை விட்டு விட்டு. இன்னும் மரத்தில் பழமே வரவில்லை அதட்குள் எல்லோரும் இந்த பழம் புளிக்கும் என்பது தவறானது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பது இறைவன் கையில் தான் உள்ளது. ஒரு பஸ் நடத்துனர் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் ஆகா முடியும் என்றால். ஒரு சூப்பர் ஸ்டார் கண்டிப்பாக முதல் அமைச்சர் ஆகா முடியும். எல்லாம் இறைவன் உடைய தீர்ப்பு. அதை மாற்ற நம்மை போன்ற சாதாரண மனிதனால் முடியாது. இறைவன் நினைத்தால் வடிவேலுவை கூட முதல் அமைச்சராக்கி தமிழ்நாட்டை மேன்மை படுத்தி விடுவான். எல்லாம் வான் கையில். நாம் விமர்சனம் என்ற பெயரில் புலமுவதால் ஒன்றும் நடக்க போவது இல்லை.
14-ஜூலை-2017 10:39:32 IST
ஏம்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை போய் வீணாக சினிமாவில் செலவழிக்கணும். ஒரு குடும்பத்தில் நாலு பேர் பார்க்க ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு வரை செலவாகிறது. அந்த பணத்தில் வீட்டில் சூப்பராக பிரியாணி தயாரித்து. ஒரு 32 டிவி அல்லது 40 டிவி வாங்கி வீட்டில் வைத்து புது படத்தை அதில் பார்க்கலாம்.காலையில் வெளியான படம் மாலையில் இன்டர்நெட்டில் வெளிவருகிறது. பின்னர் ஏனப்பா பணத்தை வீணாக்குகிறீர்கள். ஒரு மாதம் எவரும் சினிமாவுக்கு போகாமல் இருந்து பாருங்கள். இந்த கொள்ளை அடிக்கும் திரையரங்கம், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் காணாமல் போவார்கள். நடிகர்கள் எல்லாம் என்னை வாழவைக்கும் ரசிகர்களே என்று சொல்லி சொல்லி உசுப்பேத்தி. அந்த நடிகன் மட்டுமே வாழ்கிறான். அவனை வாழ வைத்த ரசிகனா வீட்டில் பிள்ளைகளுக்கு பள்ளி பீஸ் கட்ட கூட பணம் இல்லாமல் திண்டாடுகிறான். முதலில் அதிக பணம் கொடுத்து படம் பார்ப்பதை தவிருங்கள்.எல்லா நடிகர்களும் தெருவுக்கு வருவார்கள். அப்போது நியாயமான சம்பளம் வாங்குவார்கள். டிக்கெட் விலையும் குறைந்து இருக்கும். நாம் திருந்தினால் தான் அவர்கள் மாறுவார்கள் இல்லை என்றால் அவர்கள் கோடியிலும் நாம் ரோட்டிலும் இருக்க வேண்டியது தான்.
09-ஜூலை-2017 08:51:05 IST
இளம் பொறியாளர்கள் சாதனை. அவர்களை பாராட்டுவதை விட்டு விட்டு ஏன்பா இதில் கூட மதத்தை கலக்குகிறீர்கள். திறமை எங்கு இருந்தாலும் பாராட்டுவோம். முன்னாடி இருந்தவன் தான் ஒருத்தனை ஒருத்தன் ஜாதி மத வெறி கொண்டு மாண்டு போனான். இப்போ ஏன்பா அந்த தப்பையே செய்கிறீர்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிகொண்டது அனைவரும் தமிழர் என்ற உணர்வினால் தானே தவிர மதங்களால் அல்ல. ஆகையால் ஜாதி மதங்களை மறப்போம் தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற கொள்கையோடு வாழுங்கள். அப்போது தான் நாமும் உயர்ந்து தமிழ்நாட்டையும் உயர்த்த முடியும்.
07-மார்ச்-2017 06:54:10 IST