Palanisamy T : கருத்துக்கள் ( 723 )
Palanisamy T
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2018
சம்பவம் சர்ச்சை பேச்சு எம்.எல்.ஏ. கருணாஸ் கைது
பலராமன் அவர்களே, அன்னைத் தமிழ் பெற்றெடுத்த அறிஞர் அண்ணா என்ற ஒரு மாமனிதரை தமிழகம் பெற்றிக்காவிட்டால்,இன்றையத் தமிழகத்தின் நிலை என்னவாயிருக்குமென்று நம்மால் எண்ணிப்பார்க்கமுடியாது. தமிழகத்தை நமக்கு மீட்டுக்கொடுத்தவர் அதனால்தான் இன்று நாம் நல்லத் தமிழில் தமிழில் எழுதிக்கொண்டிருக்கின்றோம் அவரைப் பற்றிக் குறைச் சொல்ல எனக்கும் தகுதியில்லையென்று நினைக்கின்றேன். அவர் என்றென்றும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துக் கொண்டிருப்பார்.   08:15:04 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
அரசியல் திமுகவில் வாரிசு அரசியல் முதல்வர் தாக்கு
ஜெயா அம்மையாருக்கு மட்டும் குடும்பம் இருந்திருந்தால் அதிமுக விலும் நிச்சயம் வாரிசு அரசியல் இருந்திருக்கும். இந்த உண்மையை அறியாமல் திமுகவை மட்டும் குற்றம் சாட்டுவதில் நியாயமில்லை முடிந்தால்வெறு விஷயங்களை பேசுங்கள்   22:22:48 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
உலகம் பொருளாதார தடை இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஆயுதம் வாங்கினால் பொருளாதார்த் தடைப் போடுவேன் என்கின்றான் ஆனால் ஏன் போடுகின்றானென்று யாரும் சொல்லவில்லையே இந்திய அரசுக்கு தைரியமிருந்தால் ஆயுதம் வாங்குவதில் ஏன் தயக்கம். ரசியா சீனா ஆகிய இந்த நாடுகளின் மீது தடைப் போட்டவன் இந்தியா மீதும் போடாமலிருப்பானா இந்த இரு நாடுகளும் உலகத்தின் பெரிய நாடுகள் அதுவும் வல்லரசு நாடுகள் அதிலும் சீனா இரண்டாவதுப் பெரிய பொருளாதர நாடு இந்திய அரசு ஒன்றை மட்டும் செய்துக் கொள்ளலாம். சீனா மீது போட்ட பொருளாதாரத் தடையை இந்திய அரசு இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி தனது பொருளாதாரா பாதுகாப்புத் துறைகளை வலுப்படுத்திக்கொள்ளவேண்டும் அதுதான் சாமர்த்தியம் செய்வார்களா   21:31:53 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
பொது எச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு
இதே நீதித் துறைதான் குற்றவாளியென்று தீர்ப்பளித்த ஜெயாவிற்கும் சகல அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதே இதையும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கலாமே. ஏன் இந்த பாகுபாடு   18:32:50 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
பொது வெள்ளத்தை தொடர்ந்து வறட்சியை நோக்கி கேரளா?
கேரள மாநிலம் அதிகம் படித்தவர்கள் கொண்ட மாநிலம். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வருகைத் தந்தப் போது இப்படி புகழ்ந்துச் சொன்னார். ஆனால் இன்று கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழகமும் காரணமென்று குற்றம் சாட்டிது படிப்பறிவுக் கொண்ட அவர்களே தங்களை தாழ்த்திக் கொண்டுள்ளார்கள். இவர்களின் குற்றச்சாட்டு நீர்வளத் துறையின் அறிக்கைக்கு முற்றிலும் முரணாகயிருக்கின்றது. குற்றம் சாட்டுவதற்கு முன் இவர்கள் சரியாக ஆய்வுகளை செய்திருக்க வேண்டும். படித்த இவர்களின் செய்கையைப் பார்க்கும் போது "படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்" என்ற நம் பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது   20:51:19 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
பொது 7 பேர் விடுதலை அறிக்கை அனுப்பவில்லை கவர்னர் மாளிகை
தமிழக காங்கிரஸ் தலைவர் அவர்கள் சொன்னது- இவர்களை விடுவித்தாள் இந்த விடுதலையானது ஒரு தவறான முன் உதாரணமாய்விடும். ஆக உங்கள் கருத்தை மதிக்கின்றேன். இந்திய நாட்டை மிக நீண்டகாலமாக ஆண்டக் கட்சியென்பதால் அவர் இந்தத் தவறான முன் உதாரணம் சட்டத்தின் அடிப்படையிலா அல்லது உணர்வுகள், உணர்ச்சிகளின் அடிப் படையில்லா என்பதை அவர் இதை மக்களுக்கு விளக்குவது நன்று யாராகயிருந்தாலும் சட்டம் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. சட்டங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.   14:56:29 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
உலகம் போலந்து பல்கலையில் தமிழ் இருக்கை
தமிழகத்தில் பல கோடித் தமிழர்கள் வாழ்கின்றார்கள் இந்தத் தமிழகத்தில் இங்குள்ள தமிழுக்கோ தமிழனுக்கோ அப்படி என்னதான் பயன்.   18:44:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது இலங்கை போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை ராஜபக்சே
1. @சீனு. கூடுவாஞ்சேரி.- இதிலென்ன வங்க தேசம் பாகிஸ்தானின் இணைந்தப் பகுதி அல்லவென்ற வாதம். கிழக்குப் பாகிஸ்தான் மேற்குப் பாகிஸ்தான் ஒரு நாடு சுதந்திர இந்தியாவைப் பிரிக்கும்போது மத அடிப் படையில் மட்டும் உருவானது பாகிஸ்தான் என்ற ஒரு நாடு. ஏன் அப்போது அவர்கள் அப்படிப் பிரிக்க வேண்டும் அவர்களுக்கு இணைந்தப் பகுதி, இணையாதப் பகுதி என்றுத் தெரியாதா? இரண்டு ஊராகப் பிரித்தவர்கள் மூன்று ஊராகப் பிரித்திருக்கலாமே. நேருக் காலத்தில் உருவாக்கப் பட்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை கொஞ்சம் நாம் எட்டிப் பார்க்க வேண்டும் இந்தியாவின் பாதுகாப்பிற்காகவும் நலனுக்காகவும் கொண்டு வரப்பட்டதுதான் இந்த வெளியுறவுக் கொள்கை. பாகிஸ்தானை உடைத்தால் இந்தியாவிற்கு நல்லதென்று நினைத்தார்கள் - உடைத்தார்கள் அதேக் கொள்கையின் அடிப்படியில் இலங்கையில் தனி நாடு உருவானாலும், ஈழத் தமிழர்கள் தன்னாட்சியோ, சுயாட்சிப் பெற்றாலும் இலங்கையில் ஒரு நல்ல தனி மாநிலம் உருவானாலும் அது இந்திய நாட்டிற்கு நல்ல தல்லவென்று நினைத்தார்கள் அதனால்தான் ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை இந்த அடிப்படையுண்மைகள் தெரியாமல் நாம் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கின்றோம் ஏனப்பா, தமிழகத்திற்கு சொந்தமான கச்சத் தீவை,- இல்லை இல்லை- இந்தியாவிற்கு சொந்தமான கச்சத் தீவை ஏன் இலங்கைக்கு கொடுக்க வேண்டும் இதற்க்கு ஏதாவது நியாயமான காரணங்களுண்டா? எந்த நாடும் இப்படிச் செய்யுமா? இறைவனுக்குத்தான் வெளிச்சம்.   04:07:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது இலங்கை போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை ராஜபக்சே
எந்த நாடும் பிரிவினை வாதத்தை ஆதரிக்காதென்றால், அன்று 1971-ல் வங்க தேச மக்கள் பாகிஸ்தானிலிருந்து பிரிந்துச் செல்ல இந்தியா அவர்களுக்கு ஆதரவாக நின்று தனி வங்க தேச நாட்டை உருவாக்கியதே இதற்க்கென்ன சொல்லப் போகின்றீர்கள் மீண்டும் எந்த நாடும் பிரிவினை வாதத்தை ஆதரிக்காதென்றால் அன்று Feb 2014-ல் ரசியா உக்ரைன் நாட்டின் மேல் படையெடுத்து கிறைமீ என்ற அந்த நாட்டின் பகுதியைப் வன்முறையாகப் பிடித்து தன் நாட்டோடு இணைத்துக் கொண்டார்களே இந்த உண்மையாவது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவும் ரசியாவும் நாடுகள் தானே. இவர்கள் செய்தால் மட்டும் தப்பில்லையோ எந்த நாடும் பிரிவினைவாதத்தை ஆதரிக்காதென்றால் பாக்கிஸ்த்தானும் உக்ரைன் நாடும் நாடுகள்தான். அவர்கள் தங்கள் நாடு பிரிந்துப் போவதை ஆதரித்தார்களா? நீங்கள் குழப்பத்திலிருப்பதுப் போல் தெரிகின்றது. ராஜபக்சேயின் பேச்சை நம்ப வேண்டாம் ராஜ்பக்சே அதிபராக இருந்தப் போது அவர் ஒரு சர்வாதிகாரி அன்று அங்கு நடந்தது கொடுங்களாட்சி போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் எண்ணிலடங்கா? இதற்க்கெல்லாம் உங்களால் நிச்சயம் பதில் சொல்ல முடியாது.   19:38:51 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
பொது தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைவாய்ப்பு
அடிக்கடி நல்ல மழைப் பெய்கின்ற சேதி, நல்லசேதிதான் ஆனால் பெய்கின்ற மழை நீரை வறட்சிக் காலத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் திட்டங்களை அரசோ ஆட்சியாளர்களோ மக்களுக்குச் சொன்னால் இதை விட நல்ல சேதியாகயிருக்குமே சேமித்து வைக்கப் பட்ட நீரால் நிலத்தடி நீரும் உயர்வுக் காணுமே. பசுமையான தமிழகமும் நாளை மலருமே.   13:15:39 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X