Mirthika Sathiamoorthi : கருத்துக்கள் ( 328 )
Mirthika Sathiamoorthi
Advertisement
Advertisement
நவம்பர்
20
2018
சினிமா அமைதிக்கு காரணம் இதுதான் : சின்மயி விளக்கம்...
ஊடகங்கள் முதல் உங்களை போன்ற தனிநபர் வரை இப்போது வரையிலும் சின்மயியின் குற்றச்சாட்டைப் பற்றித்தான் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வைரமுத்துவை நோக்கியோ மீடியாக்கள் ஏன் படையெடுக்கவில்லை? பாதிக்கப்பட்டவர்களை நோக்கி நீளும் கேள்விகள், 1. உங்களை பாலியல் ரீதியாக அச்சுறுத்தியவரை நீங்கள் எப்படி உங்கள் திருமணத்திற்கு அழைக்கலாம்? 2. அவரது காலில் விழுந்து எப்படி ஆசி வாங்கலாம்? 3 அவர் விருது பெற்றதற்கு ட்விட்டரில் எப்படிப் பாராட்ட மனம் வந்தது? 4. ஏன் இத்தனைகாலம் சும்மா இருந்தீங்க? ( குற்றம் சுமத்த காலவரையறை வரையறுக்க யாருக்கும் உரிமை இல்லை....காலம் கடந்த தவறுகளை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால், குற்றத்தை நிரூபிக்க முடியுமா? ஒருவேளை நிரூபிக்க முடியாமல் போனால், நிரூபிக்க முடியாத தவறு குற்றமல்லவே.... நடந்தது தவறே அல்ல என்று சொல்ல முடியுமா?) இப்படியெல்லாம் பாதிக்கப்பட்டவர்களை கேள்விகளால் துளைத்தெடுப்பதை விட்டு விட்டு. வைரமுத்துவை பார்த்து, நீங்கள் உங்களது பாலியல் அனுகூலங்களுக்காக உங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியது வாஸ்தவம் தானா? அரசியல் அணுக்கத்தைக் காட்டி உங்களது நிகழ்ச்சிகளுக்கு பாடகர்களை வற்புறுத்தி வரவழைத்துப் பங்கேற்கச் செய்தது உண்டா? சின்மயியின் குற்றச்சாட்டை நீங்கள் எந்தெந்த விதத்தில் மறுக்கிறீர்கள்?. அவரது குற்றச்சாட்டுக்கு உள்நோக்கம் உண்டென்பதைப் போலவே உங்களது மறுப்புக்கும் உள்நோக்கம் உண்டு என்று அவர் சொன்னால் அதற்கு உங்களது பதில் என்ன? நீங்கள் அப்பழுக்கற்றவர் என்றால் உங்களுக்காக உங்களை ஆதரித்து இதுவரை உங்கள் பெண் ரசிகைகளிலிருந்து கூட ஒருவரும் குரலெழுப்பாதது ஏன்? ஆண்டாள் விவகாரத்தில் கூட உங்களை ஆதரிக்க பல குரல்கள் எழுந்த நிலையில் இந்த மீடூ வுக்கு எதிராக எதிராக ஒரு குரல் கூட இதுவரை பதிவாகாதது ஏன்? இப்படியெல்லாம் வைரமுத்துவுக்கு அக்னிப் பரீட்சை நிகழ்த்த மீடியாக்கள் சின்மயிக்கு எதிரான மனம் கொண்டவர்களும் தயங்குவது ஏன் என்பது தான் புரியாத புதிர்..அவர் மிக எளிமையாக தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரங்களைத் தாம் திரட்டி வருவதாகவும் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் எதிர்வினையாற்றி விட்டு அமைதியடைந்து விட்டார். ஆனால் பாவம் சின்மயி இன்னமும் பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்....இன்னமும்..இந்த விநாடிவரை...   17:40:56 IST
Rate this:
3 members
0 members
23 members
Share this Comment

நவம்பர்
19
2018
சினிமா கஜா புயல் : சிவகுமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதி...
மன்னிக்கவேண்டும் உங்களுக்கு அரசு உதவி கிடைக்கவில்லை என்பதற்காக இப்படி போதம் பொதுவாக எல்லோரையும் பொறுப்பற்றவர்களாக குற்றம் சொல்வது நாகரிகமாக இல்லை...உங்களுக்கு உதவினால் அத்தனையும் நீங்கள் டாஸ்மாக்கிற்கு கொடுக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? நீங்கள் மட்டும் நல்லவர் அப்படித்தானே?....அங்கு பல விவசாயிகளின் வாழ்வாதாரமே நிலைகுலைந்து உள்ள நிலையில்..அவர்களுக்கு கிடைக்கும் இந்த சிறு உதவி டாஸ்மார்க்கிற்குத்தான் போகும் எனும் உங்களின் எண்ணமே ஏன் உங்களுக்கு உதவிகள் வழங்கப்படவில்லை என்பதற்கான காரணம்...   10:14:06 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2018
சினிமா கஜா புயல், அமைதி காக்கும் நட்சத்திரங்கள்...
சும்மாவே நட்சத்திரங்களை துப்புவதற்கு சிலர் அலையும் இந்த நேரத்தில் இது அவர்களுக்கு இனிப்பு தரும் செய்தி... இதில் நட்சத்திரங்களை மட்டும் குறைவு சொல்ல முடியாது... இந்த புயலின் சீற்றத்தை முறையாக மக்களிடம் கொண்டு போகாத ஊடகங்கள் முக்கிய காரணம்.. கேரளாவின் பாதிப்பை படம் பிடித்த செய்திகள்... கஜா புயலை அவ்வளவாக வெளிக்கொணராத போது எப்படி உதவிகள் வந்து சேரும்? மனதில் கைவைத்து சொல்லுங்கள்.. சென்னைவாசிகளுக்கு இந்த காஜா புயலின் வீரியம் எத்தனைபேருக்கு தெரியும்... இப்பொழுதுதான் அங்குள்ள மக்களின் போராட்டங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வர ஆரம்பிக்கிறது... இனி அதனை பெரும் உதவுவார்கள். யாரையும் நாம் கட்டாய படுத்த முடியாது... அதே சமயம் தமிழ் நடிகர்களில் பலர் மனிதநேயம் உள்ளவர்கள்.. பலர் சத்தமில்லாமல் விளம்பரம் இல்லாமலும் உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள்...   10:06:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
20
2018
உலகம் அமெரிக்காவில் மாணவர்களிடம் வீட்டு வேலைவாங்கிய பேராசிரியர்
எந்த ஊர் போனாலும் தன்னை இந்தியர்கள் என அடையாளப்படுத்த நாம் தவறியதே இல்லை...   09:56:48 IST
Rate this:
1 members
0 members
77 members
Share this Comment

நவம்பர்
15
2018
சினிமா 80களின் நட்சத்திரங்கள் சந்திப்பு...
அப்போ ஏதோரொம்ப அவசியம் ? உங்களுக்கு எரிச்சல் ஆகாத அந்த அவசியத்தை எங்களுடன் பகிரலாமே?   09:56:33 IST
Rate this:
0 members
0 members
42 members
Share this Comment

நவம்பர்
15
2018
சினிமா 80களின் நட்சத்திரங்கள் சந்திப்பு...
நாளைய தாத்தாவிற்கு அதிலெயென்ன வருத்தம்?   09:52:36 IST
Rate this:
0 members
0 members
41 members
Share this Comment

நவம்பர்
14
2018
சினிமா திஷா பதானி செம ஹாட்...
மன்னிக்கவேண்டும், நீங்கள் கவனிக்க மறந்து அவர் அணிந்திருக்கும் உள்ளாடை ஒரு பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு...இது அந்த நிறுவனதயாரிப்பின் ஏன் விளம்பர புகைப்படமாக இருக்க கூடாது? உள்ளாடை விற்பனை கடையில் பல நடிகைகள் மாடலான புகைப்படங்கள் பலவும் உள்ளாடை பாதுகாப்பு அட்டை பெட்டியில் அச்சிடப்பட்ட புகைப்படங்களும் பார்த்ததில்லை?...அப்பொழுதெல்லாம் வாராத மீ 2 மற்றும் நீலப்படம் குறித்த எண்ணம், இணையத்தில அந்த படம் வெளிவரும்போது வருகின்றதே ஏன்? இது நமது மந அழுக்கா ?   10:13:36 IST
Rate this:
1 members
0 members
37 members
Share this Comment

நவம்பர்
11
2018
சினிமா 2.ஓ சவால்: தமிழ் ராக்கர்ஸ் மறுப்பு...
கூத்தாடிகளை அழிக்க வந்த தெய்வமே நீ ஏன் விஜய் மாதிரி அந்தர் பல்டி அடிக்கறே..? ஏன் சட்டம் ரொமப கழுத்தை நெரிக்குதோ?   10:45:16 IST
Rate this:
8 members
1 members
15 members
Share this Comment

நவம்பர்
10
2018
சினிமா திருமணத்திற்காக இத்தாலி சென்ற ரன்வீர், தீபிகா...
இந்தியாவில் செலிப்ரட்டிய அதுவும் திரைத்துறை பிரபலங்களா பொறப்பது போன ஜென்மத்தில் செஞ்ச பாவம்...இல்லைனா ஆளாளுக்கு அட்வைஸ் அம்புஜமா மாறி அறிவுரை சொல்ல ஆரம்பிகிறோம் கேள்விகேட்க ஆரம்பிக்கிறோம்..அவன் நடிப்பு திறமையை விமர்சனம் பண்ணாம அவங்க தனிப்பட்ட வாழ்க்கையில மூக்கை நொழைக்கறது எனக்கு தெரிஞ்சு நம்ம ஊர்க்காரங்க மட்டும்தான்..நம்ம ஊர் ஆளுங்க சந்த்ரமண்டலத்தில் தங்கியிருந்தாலும் அடுத்தவங்க தனிப்பட்ட வாழ்க்கையில் அதுவும் சினிமாக்காரன் வாழ்க்கையில மூக்கை நொழைக்கிறதில ஒரு குஷி...பொதுவாழ்க்கையில் இருபவங்க விமர்சனத்துக்கு ஆளாவாங்க அதுக்காக குளிக்கறதில இருந்து நைட் தூங்கிறவரைக்கும் அவங்களுக்கு பிரைவசியே இருக்கக்கூடாதுன்னு நடத்துக்கறது?..இந்த கேள்வியெல்லாம் கேக்கறவங்ககிட்டே கேக்கமாட்டோம்..இவனுங்கள பாத்து சம்பாரிச்சு ஏன் நாட்டுக்கு சேவை செய்யல, ஏன் ரசிகனை போட்டோ எடுக்க விடல, ஏன் ஏழைங்களை காப்பாத்தலா? சினிமாவில காப்பாத்துற (இத நாம வில்லன்களிடம் கேக்கமாட்டோம்...சினிமாவில கொலை போன்ற ஏன் நிஜவாழ்க்கையில கொலை போன்றதே இல்லைன்னு) இப்போ கல்யாணம் ஏன் வெளிநாட்டுல பண்ற? அவன் கல்யாணம் அவன் எங்கேயே பண்ணிட்டு போறான். கல்யாணம் சுமால் டவுன் ...முடியல. ஏன் பாஸ்? அப்படி கல்யாணம் நடக்கறப்ப வரும் VIP அவங்களுக்கு தாங்கும் வசதிகள் அவர்களின் பாதுகாப்பு..ஏதாவது அசம்பாவிதம நடந்த சின்ன ஏரியாவுக்கு மீட்ப்பை உடனே வரவைக்க முடியுமா.? அதுக்கேத்த எல்ல நடவடிக்கைக்கும் ஆகுற செலவு யார் கொடுக்கறது? (அதுதான் ரிசெப்ஷன் வைக்கிறாங்களே 2 தடவை.)..சரி ஒருவேளை கல்யாணம் பண்ணி டூரிஸ்ட் பிளேஸ் ஆயிடுச்சு கல்யாணத்துக்கு அப்புறம்...தீபிகா கல்யாண நகரம்ன்னு வரலாற்று பதிவோட மிக சிறந்த டூரிஸ்ட் பிளேச இருக்குமா? ஒரு நாள் கூத்துக்கு அப்புறம் யார் சார் அந்த இடத்தை கண்டுக்க போறாங்க? இந்தியாவில இருக்குற டூரிஸ்ட் பிளேச மெயின்டைன் பண்ண நம்மால முடியல...ஒரு வேளை அவ்வளவு செலவுபண்ணி கல்யாணம் பண்ணுனா மட்டும் நம்மாளுங்க சும்மா விட்டுருவாங்களா...இவளவு கோடியா? ஏன் சிம்புல பண்ணி அந்த காச ஏழைங்களுக்கு கொடுக்க கூடாதான்னு ஒரு கும்பல் கிளம்பும்...முடியலடா சாமி.. ஐயோ ஐயோ.   10:42:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
10
2018
சினிமா வக்கிலாகிறார் அஜித்...
ஓரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் ஓய்விற்க்காக சிறிது இடைவெளி விடும் தல, விசுவாசம் பிறகு ஓய்வு எடுப்பதா அல்லது ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவத எனும் சூழ்நிலையில். இந்த பிங்க் படம் அவருக்கு அமைந்தது...கதையில் அமிதாப் கெஸ்ட் ரோல் பண்ணியிருப்பர்...அஜித்துக்காக காட்சியை அதிகப்படுத்தி மாற்ற நினைத்த போது கதையின் தரம் குறைந்து விடும் எனக்கூறி அதில் நம் தல கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்...இதனால் அவருக்கு 3 சௌரியங்கள். 1 . மிக குறைந்த நாட்களே கால்சீட்...2 . அஜித்தின் காட்சிகள் அனைத்தும் கோர்ட்டில் நடப்பதால் ஒரே செட்டுக்குள் எல்ல காட்சிகளும் படமாகும் தொந்தரவு இல்லை.. 3 . முழு சம்பளம்...இந்த படம் ஓடினால் அஜித்தினால் ஓடியது என்பார்கள்...ஓடாவிட்டால் அவர் இதில் கதாநாயகன் இல்லை..ஒரே கல்லில் பல மாங்காய்...தயாரிப்பு நிறுவனம் கதையை நம்புகிறது...மற்றும் மீ டூ விவகாரம் சீரியஸாக இருப்பதால் இதுதான் நல்ல தருணம் படம் வர என நினைப்பதால் அஜித்தும் சரி என ஒப்புக்கொண்டுள்ளார்....டாப்ஸிக்கு ஹிந்தியில் நல்ல ஒரு வெற்றியை கொடுத்த படம்...தமிழிலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்....   18:19:23 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X