மொத்தத்தில் இந்தியா உருப்படாமல் போக ஒரு முக்கிய காரணி இந்த ஊடகங்கள்தான் என்பதில் சந்தேகமே இல்லை. இவனுங்களை தேவை இல்லாமல் பேட்டி காண்கிறோம் என்று சொல்லி பெரிய ஆள் ஆக்குறானுங்க. இவனுங்க ஏற்கனவே மேலிடத்தில் பேசி வைத்துதான் நாடகம் ஆடுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம். இவனெல்லாம் 5 வருஷம் உள்ளே போய் ஜாலியா இருந்துவிட்டு வரப் போறான். அன்றைக்கு இவனால் உயிர்விட்டவர்கள் திரும்பி வருவார்களா? என்னே உலகமடா இது?
28-மார்-2013 14:15:14 IST
இவ்வளவு பேசுகிறோம். இந்த அளவுக்கு நம் தமிழ் மக்கள் காங்கிரஸை ஒதுக்கி வைத்தாலும், கடந்த தமிழக சட்ட சபை தேர்தலில் தென் தமிழ் நாட்டிலிருந்து குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டப் பகுதியிலிருந்து நான்கு காங்கிரஸ் மான்புமிகுக்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்களே. அந்த பகுதி மீனவர்கள் தான் அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள். இவர்களை தேர்ந்தெடுத்ததால் மீனவர்களுக்கு பரிந்து பேசினார்களா. அல்லது அதே மீனவர்கள் இவர்களுக்கு உடந்தையா. வட தமிழ் நாட்டில் தமிழ் தெரியாத ஒருவர் காங்கிரஸ் எம் எல் ஏ. என்ன பயனைக் கண்டார்கள் அந்த தொகுதி மக்கள். .காங்கிரஸுக்கு இது போதாதா. ஆட்டம் போட. தமிழக மக்களும் நம்மிடம் ஒற்றுமை இல்லாமல் அரசியல் வியாதிகளை குறைச் சொல்லி பயனில்லை.
27-மார்-2013 11:36:00 IST
jagan - Chennai,இந்தியா- என்ன இழப்பு? உங்களுக்கா எங்களுக்கா IPL போட்டிகள் நடத்தவில்லைஎன்றால், மழை பெய்யாதா? கணத்த மழை பெய்துவிடுமா? நாடு சுடுகாடாகிவிடுமா? மாணவர்கள் படித்து அறிவாளியாகிவிடமாட்டர்களா? ஏதாவது நாம் தெரிந்துதான் பேசுகிறோமா? கிரிகட் தான் நமக்கு உயிர் மூச்சா? அன்பர்களே கொஞ்சமாவது யோசித்து இங்கு கருத்துக்களை பதியுங்கள்.
27-மார்-2013 10:49:15 IST
ஆசிய தடகள போட்டி சென்னையில் நடத்தக்கூடாது என்று சொன்ன போது பொங்கி எழாதவர்கள் இப்போது பொங்குவது ஏன்? கிரிகெட் நமது தேசிய விளையாட்டு என்பதாலா? விளையாட்டாவது அரசியல் மாநாடாவது எதுவாக இருந்தாலும் தடை என்றால் தடைதான். தயவுசெய்து நம்ம பிள்ளைகளை ஒழுங்காக பரீச்சைக்கு படிக்க விடுங்கடா.
26-மார்-2013 16:33:16 IST
ஒரே ஒரு தடவை, எல்லாரும் விரும்புகிற நல்லாட்சி கொடுத்ததாக, சரித்திரத்தில் பதிவு செய்யுங்கள்.ஒன்பது முறை முதல்வராவது சாதனையல்ல. ஒரே ஒரு தடவை, வெகுஜன முதல்வர் என்ற பட்டம் பெற்று, சரித்திரத்தில் பதிவு செய்வதே சாதனைசபாஷ்...உண்மை நன்றி.
21-மார்-2013 16:57:35 IST
இலங்கைக்காக, இப்படி ஒத்துமையா குரல் கொடுக்கறதை பார்க்கவே, எவ்வளவோ நல்லாயிருக்கு-இதுக்கு பேர்தான் பிரசவ வைராக்கியம். தேர்தல் வந்தால் ஓட்டுக்காக கட்சி பாகுபாடு இல்லாமல் நம்ம எம் பி கள் குரல் கொடுப்பார்கள். இதுவரை இவர்கள் எதற்கு இப்படி குரல் கொடுத்தார்கள்? எல்லாம் தேர்தல் படுத்தும் பாடுதான். தனபாலு ரொம்ப டவுட்டு பட வேண்டாம். இது தெளிவான விஷயம். அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்.
21-மார்-2013 16:53:35 IST
தொழிற்சங்கங்களை கட்சிக்கு அப்பாற்பட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். இது தொழிலாளிகள் செய்த தவறு. கால் பிளேட் பிரியானிக்கும் ஒரு குவாட்டருக்கும் அலைந்தால் இப்படிதான் நம்மை கூவி கூவி விற்றுவிடுவான் நமது அரசியல்வியாதி. இனியாவது கட்சி சம்பந்தம் இல்லாத தொழிற்சங்கங்களை ஊக்குவிக்க வேண்டும். இது எல்லா வகை தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும். ஆனால் நாம் எங்கே திருந்தப் போகிறோம்.
21-மார்-2013 16:45:17 IST
இது செவிடன் காதில் ஊதின இன்னுமொரு சங்குதான். இனி வரும் காலங்களிலும் இது போன்று பல தீர்மானங்கள் தொடர்ந்து வருடா வருடம் நிறைவேற்றப்படும். ஆனால் எதுவும் அங்கே நடக்காது. நல்ல மனதுடன் உண்மை அக்கறையுடன் இது இடம்பெறாதவரை இந்த தீர்மானங்களால் எந்த பயனும் இல்லை.
21-மார்-2013 16:30:10 IST
இதுக்கு தான் தாத்தா ரொம்ப நாளா சும்மாவே இருந்தார். சொறிஞ்சி சொறிஞ்சி விட்டு உசுப்பேத்தி உசுப்பேத்தியே இப்படி அவரை ரத்தக் கண்ணீர் M R ராதா நிலைமைக்கு கொண்டு போய்ட்டீங்களே? இப்படி எல்லாம் அனுபவிக்கனும்னுதான் நீண்ட ஆயுளோட இருக்காரோ... அப்படிதான்னா.. தாத்தா வாழ்க இன்னும் பல்லாண்டுகள்.
21-மார்-2013 10:40:33 IST
நமது கோரிக்கைப்படி, ஐ.நா., மனித உரிமை கழகத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. - இது என்ன புதுக் கதை? தீனா மூனா கானா சொல்லி ஐ.நா., மனித உரிமை கழகத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதா? தாத்தாவுக்கு என்ன ஜன்னி கிண்ணி பிடிச்சிக்கிட்டு உளறுதா? மருத்துவர் அய்யா கொஞ்சம் பாருங்க. கண்ணுக்கு எதிரேயே சரித்திரத்தை தரித்திரம் ஆக்குறாரே.
20-மார்-2013 15:12:09 IST