K.n. Dhasarathan : கருத்துக்கள் ( 98 )
K.n. Dhasarathan
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2018
கோர்ட் பழனிசாமி முறைகேடு வழக்கு போலீசுக்கு ஐகோர்ட், கெடு!
லஞ்ச ஒழிப்பு துறையா எங்கே இருக்கு ? நெடுஞ்சாலை துறை வேலை செய்ததா ? எங்கே ?எப்போது ? கல்லா கட்டுறதற்கே நேரம் இல்லை, புகார் கொடுத்து இரண்டு வருடம் தானே ஆயிருக்கு , பார்க்கலாம்.   21:44:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் மல்லையா நாட்டை விட்டு வெளியேற ஜெட்லி உதவி ராகுல்
மல்லையா நாட்டைவிட்டு வெளியில் தப்பிப்போனது ஒன்றும் ரகசியம் இல்லை , எல்லோருக்கும் தெரிய முறையாக அனுமதி வாங்கித்தான் போனார் . ஜெட்லீ உள்பட அனைவருக்கும் தெரியும் . இப்போது தெரியாது என்று சொன்னால் யார் நம்புவார்கள் ? காதில் பூ சுற்றலாம் ஆனால் பூ தோட்டமே வைக்க கூடாது . உளவுத்துறை , வருவாய்த்துறை , சி பி ஐ , ஈ டீ மற்றும் உள்ள அனைத்து துறைகளுக்கும் தெரியும் . இங்குதான் மக்களை எளிதில் ஏமாற்றலாமே .   21:36:11 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது 7 பேர் விடுதலை அறிக்கை அனுப்பினார் கவர்னர்?
மத்திய அரசு ஏற்கனவே கவர்னர் முடிவு எடுக்கலாம் என்று சொல்லியாச்சே , இன்னும் ஏன் தாமதம் , மறுபடியும் மத்திய அரசுக்கு அனுப்பினால் என்ன அர்த்தம் ? முடிவு எடுக்க தெரியலை மக்கள் பிரதிநிதிகள் ஏகப்பட்ட பேர் முன்னாள் , இந்நாள் என்று இருக்கிறார்களே, கேட்க வேண்டியது தானே ? ஏன் ஊரெல்லாம் ஆய்வு என்று போயி கேட்கவேண்டியது தானே ? சும்மா காலம் கடத்துதல் வேலை தானே இது . முன்பு அலெக்சாண்டர் என்று ஒரு கவர்னர் இருந்தார் . அவரிடம் போயி பாடம் படிக்கலாம் இவர்.   21:22:26 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் ராகுல் லண்டன் பயணம் பா.ஜ.,சந்தேகம்
ஐயா காங்கிரஸ் கடன் கொடுத்தது தப்புதான் , நீங்கள் என்ன பண்ணீர்கள் ? கடனை வசூல் பண்ண சொன்னால் திருடர்கள் தப்பி ஓடுவதற்கு உதவி செய்துவிட்டு , பிடிக்க நடவடிக்கை எடுக்கிறமாதிரி நடிக்கிறீர்கள் , லலித் மோடி ஞாபகம் இருக்கா? என்ன கிழித்திர்கள்? இப்போது வரிசையாக தப்பி ஓடுகிறார்கள் , இன்னும் எவ்வளவு நாள் காங்கிரஸ் மேல பழி போடுவீர்கள் ? நீங்கள் என்ன சாதனை செய்திர்கள் என்று சொல்லுங்கள் .கேவலமாக இருக்கு .   18:11:42 IST
Rate this:
11 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
பொது விரைவில் பெயர் மாறுகிறது ஐ.ஆர்.சி.டி.சி.,
பெயரில் என்ன இருக்கிறது அமைச்சரே, தரத்தில் இருக்கணும் உங்கள் கவனம் , ரயில்வே ஸ்டேஷன் தனியாக போனதுண்டா ? பத்து கவுண்டரில் ஒன்று அல்லது இரண்டுதான் திறந்து இருக்கும் பார்த்ததுண்டா? ஆளே இல்லாத லெவல் கிராஸிங் எத்தனை உண்டு தெரியுமா? இரவுகளில் ரயிலில் படுக்கைகள் காத்திருப்போர்க்கு கொடுக்காமல் விலைக்கு விற்கப்படுவது தெரியுமா ? எத்தனை ரயில்களில் மக்கள் உட்காரகூட முடியாமல் மிருகங்களை விட கேவலமாக பயணிப்பது தெரியுமா ? தவறு செய்கிற ரயில் ஊழியரை என்றைக்காவது நீங்கள் செக் செய்து பிடித்ததுண்டா ? அல்லது ரயில்வே முன்னேற ஏதாவது செய்ததுண்டா ? பட்டியல் இடுங்கள் முடிந்தால் .   20:48:30 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
பொது வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா மோடி
ஐயா மோடி அவர்களே எதற்காக போக்குவரத்து வளரணும்? தொழில் சாலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகிறதே ? பிறகு எதற்கு உள்கட்டமைப்பு ? வேலை வாய்ப்புகள் எங்கே ? எத்தனை ஆயிரம் தொழ்ற்சாலைகள் வந்தன உங்கள் ஆட்சியில் ? எத்தனை லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றார்கள் ? சரி அடுத்து நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்கிறீர்களே ? எங்கே வளர்ந்தது ? பெட்ரோல் டீசல் விலை தான் வளர்ந்தது , விலை வாசி ஏற்றம் தான் வளர்ந்தது ,மக்களின் துயரங்கள்தான் வளர்ந்தன , அடிப்படை தேவைகளை உணவு உடை வீடு களை நினைத்து பார்க்கமுடியாதவாறு விலைகள், கட்டுப்பாடில்லாத வியாபாரிகள் கொள்ளை வளர்ந்தன . நீங்களும் அருண் ஜெட்லீயும் தினமும் செய்தித்தாள்கள் படியுங்கள் அப்போதாவது நாட்டு நடப்பு தெரியுதா என்று பார்ப்போம்   20:34:28 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது மல்லையா, நிரவ்வை அடைக்க ஐரோப்பிய தரத்தில் சிறை
அந்த நாட்டு ஜட்ஜுகளுக்கு இது ஏன் தேவை இல்லாத வேலை ? இதை ஏன் நமது வக்கீல்கள் ஆட்செபிக்கவில்லை ? இன்னும் நிறைய பேர் பிராடு பண்ணி தப்பி ஓடுவதற்கு வழி செய்ததை போல இருக்கு .   21:53:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
பொது ஒழுக்கமாக வாழ சொன்னால் சர்வாதிகாரி என முத்திரை பிரதமர் வேதனை
ஐயா பிரதமரே உண்மையை பேசுங்க , மாதந்தோறும் நீங்கள் பேசும் மனதோடு பேசும் நிகழ்ச்சியில் புள்ளி விபரம் ஏதும் உண்மையில்லை , புள்ளியியல் துறையும் உண்மையை கொடுப்பதில்லை என்று பரவலாக பேசப்படுவது உங்கள் காதுக்கு வந்ததா ? பொய் கணக்குகள் நிற்காது , மக்களுக்கு உண்மை தெரிய வரும் போது கிடைக்கும் அடி மிக பலமாக இருக்கும் , மீண்டும் எழுந்துவர பலகாலம் பிடிக்கும் . எனவே உண்மையே பேசுங்க ./   21:47:53 IST
Rate this:
105 members
1 members
7 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
பொது தொடர்ந்து அதிகரிப்பு உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
என்னதான் நடக்குது நாட்டிலே உண்மையாகவே வெளிநாட்டு சந்தையில் இப்படி பெட்ரோல் விலை ஏறுகிறதா ? இல்லை நம்மூரு புண்ணியவான்கள் இஷ்டத்திற்கு ஏற்றுகிறார்களா ? பெட்ரோலிய அமைச்சகம் வேடிக்கை பார்க்கிறதா ? நீங்கள் வெளிநாடுகளில் இருந்து குருடு ஆயில் இறக்குமதி பண்ணி சுத்திகரிக்க வேண்டாம் , நேரடியாக பெட்ரோலாகவே வாங்கிக்கொள்ளுவோம் அதன் விலையும் குறைவு . என்ன சரிதானே அமைச்சர் பிரதான் அவர்களே ? அடுத்து இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் விலை 34 ரூபாய் டீசல் விலை 32 என்கிறார்களே, ஆர் டீ ஐ யில் மத்திய அரசு பதில், அப்படியென்றால் மக்கள் திட்டமிட்டு ஏமாற்றப்படுகிறார்களா ? அரசின் நிலை என்ன ? அமைச்சர் விளக்குவாரா ?   21:40:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
முக்கிய செய்திகள் மக்களின் முயற்சியில் வேளச்சேரியில்... உறை கிணறு! நிலத்தடி நீரை சேமிக்க களம் இறங்கினர் இனியாவது சுதாரிக்குமா மாநகராட்சி?
அடுத்து இந்த பகுதிவாசிகள் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. இந்த உறை கிணறுகள் எல்லாம் மாநகராட்சிதான் போட்டது என்று கல்லா கட்டுவார்கள், அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் ? அதை தடுக்க வேண்டிய முன்னேற்பாடுகளை உடனே செய்யுங்கள். 2012 வருடத்தில் 912 கோடி அதிகப்படி இருந்த மாநகராட்சி இப்போது கடனில் மூழ்கி தவிக்கிறது, சம்பளம் வழங்க முடியவில்லை, ஒப்பந்தக்காரர்களுக்கு ஒரு வருடமாகிறது பணம் வர. இது போன்ற நிதி மேலாண்மையில் அருண் ஜெட்லீக்கு குருவெல்லாம் இருக்கிறர்கள் இங்கே , சரி வேலைகளாவது ஒழுங்காக , தரமாக இருக்கா? அதுவும் இல்லையே . போட்ட ரோடுகளை திரும்ப திரும்ப போடுகிறார்கள் சரியில்லாமல் . இதில் சொத்து வரிகளை 100 சதவீதம் வரை உயர்த்தி கல்லா கட்ட வேலை மும்முரமாக நடக்கிறது, முருகா கார்த்திகேயா சென்னை மக்கள் பாவமையா, ஏதாவது செய்து காப்பாற்றுங்கய்யா   20:54:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X