இதுவரை மக்கள் அனைவரும் சினிமாவில் வரும் அயோக்கியத் தனத்தையே குறிக்கோளாகக் கொண்டு மக்களைச் சுரண்டும் வில்லன்களைக் வெள்ளித் திரையில் கண்டு வெகுண்டெழுந்து, கதாநாயகன் அவர்களைக் களைஎடுபபதை மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தார்கள். யார் கண் பட்டதோ. இனிமேல் பல்வேறு காரணங்களால் படம் தாமதாக வருவதன் மூலம், நிஜமான வில்லன்களைக் கண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் யோசிப்பார்கள். இஸ்லாமியர்களுக்கு எனது நிஜமான மனதார்ந்த பாராட்டுக்கள். ஒரு விழிப்புணர்ச்சியை புகுத்தி விட்டார்கள், தமிழக மக்கள் அனைவருக்கும்.
05-பிப்-2013 10:42:17 IST
அப்சல் குரு செய்தது குற்றமே இல்லை என்றாகிவிட்டது. அதற்க்கு ஈடான மாபெரும் குற்றங்கள், துணிச்சலாக நடப்பதை பார்த்தால் , அரசியல் மற்றும் காவல் துறை பின்னணி இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை எனப் படுகிறது. நம் தலை எழுத்து, இதையெல்லாம் பார்த்து பார்த்து புலம்பத்தான் வேண்டும். வந்தே மாதரம் வாழ்க பாரதம்
07-ஜன-2013 16:17:09 IST
மாயாவதி சொல்வது போல், இந்தத் திட்டம் ஒரு கேவலமான ஒன்று தான். இது 2014 தேர்தலை மனதிற்க் கொண்டு செய்யப் பட்டதுதான்.
ஆனால், உபி யின் வளர்ச்சிக்காக எதையும் செய்யாமல், யானை சிலை நிறுவுவதையே தொழிலாகக் கொண்ட இவருக்கு, மோடியை பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை.
03-ஜன-2013 12:47:41 IST
இந்த மாதிரி குற்றங்களுக்கு, வெளிப்படையான சாட்சியங்கள் இருக்கும் பட்சத்தில் மரண தண்டனையை அவசியம் கொடுத்தே தீர வேண்டும். மேலும் நாடு முழுதும் நிகழும் அநேகமான இம்மாதிரியான குற்றங்கள் எல்லாம் அரசியல் பின்புலத்தை கொண்டவர்கள்தான் அதிகம் செய்கிறார்கள் என்றே படுகிறது. அந்த மாதிரி தெரிந்தால் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களுக்குக்க் கூட தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் வழக்கினை மிகவும் துரிதமாக, இழுத்தடிக்காமல் குற்றவாளிகளுக்கு தண்டனை உடனுக்குடன் தந்து தீர்ப்பு அளிக்க வேண்டும்.
01-ஜன-2013 06:52:06 IST
கற்ப்புக்கரசி கண்ணகி எரித்தாள் மதுரையை அன்று தனக்கு நடந்த அநியாயத்தை எதிர்த்து.
அதே போல் இதுவும், தனக்கு நடந்த அநியாயங்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட அறப் போராட்டமாக இருக்குமோ? என்றோ எதிர் பார்த்தது மிக தாமதமாக நடந்துள்ளது.
28-டிச-2012 13:19:11 IST