குஜராத் முதல்வர் மோடியின் ஆட்சியில் அந்த மாநிலம் அடைந்துள்ள வளர்ச்சி மாதிரியை ஏதோ இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று போல அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் ஆனால் தமிழகம், மகாராஷ்ட்ரம் போன்ற மாநிலங்கள் அதை விட அதிக வளர்ச்சி விகிதம் கொண்டுள்ளன. மேலும் அவரது ஆட்சியில் வளர்ச்சி சீரானதாக இல்லை என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. நகர்ப் புறத்திலே காணப்படும் வளர்ச்சி கிராமங்களில் இல்லை குறிப்பாக மருத்துவத்துறையின் குறைபாடுகளை அம்மாநில உயர்நீதிமன்றமே விமர்சித்துள்ளது. கழிந்த வருடம் பன்றிக்காய்ச்சலுக்கு மட்டும் 150 பேர் அங்கு பலியானது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை.மேலும் தொழில்ரீதியான மக்கள் தொடர்பு விளம்பர நிறுவனங்களை வைத்து கோடிக்கணக்கான பணம் செலவு செய்து தன்னை முன்னிலைப் படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார் மோடி. அவருக்கு அவரது கட்சியிலேயே போதுமான ஆதரவு இல்லை மோடியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவே கட்சி தயங்குகிறது. 2002 குஜராத் கலவரம் மோடி முஸ்லீம்களுக்கும், சிறுபான்மையோருக்கும் எதிரானவர் என்ற முத்திரையை அவர் மீது பதிய வைத்துள்ளன. அவர் யாரையும் மதிக்காத கர்வம் பிடித்த ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத சர்வாதிகார மனப்போக்கு உள்ளவர் என்ற எண்ணம் இதர தலைவர்களிடையே உள்ளது. இருந்தாலும் எப்படியாவது பிரதமர் பதவியைப் பிடித்துவிட வேண்டுமென்று அவர் பகிரதபிரயத்தனம் செய்கிறார். ஆக அதிகாரத்துக்காக துடிக்கும் ஒரு தலைவராகவே அவர் உள்ளார். ஆனால் தனக்கு அதிகாரத்தை அடைவதை விட அதைப் பரவலாக்கி மக்களிடம் கொடுத்தால் தான் இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும், ஜாதி மத எல்லைகளைக் கடந்து மக்கள் வாழ்வு சுபீட்சமடையும் என்கிறார் ராகுல் காந்தி. அவர் அதிகாரத்துக்கு ஆசைப் பட்டிருந்தால் 2009 க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பிரதமராகியிருக்க முடியும். எனவே இந்த இரண்டு தலைவர்களில் யார் எதிர் கால இந்தியாவுக்கு தேவை என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
06-ஏப்-2013 02:30:50 IST
இவர்கள் கதறியதைக் கேட்டு யாருக்கும் இரக்க உணர்வு வராது. காரணம், இவர்கள் செய்த குற்றத்தின் கொடூரம். ராம்சிங்க் தற்கோலை செய்தானா அல்லது கொலை செய்யப் பட்டானா என்பது தெளிவாகவில்லை. அவனது தாயார் மகனின் மரண செய்தி கேட்டு கதறும் படம் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. இதுவும் மக்கள் மனதில் இரக்க உணர்வை ஏற்படுத்தாது. காமக்கொடூரங்களை காயடித்து வாழ்நாள் முழுவதும் இருட்டு சிறையில் அடைக்க வேண்டும். மரண தண்டனையை விட அது தான் கொடுமையானது. இருந்தாலும் மக்கள் வரிப்பணத்தில் சோறு போட்டு இவர்களை உயிரோடு வைக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.
12-மார்-2013 12:19:47 IST
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வாழும் ஒரு தமிழன் என்ற முறையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற சகோதரி மலர்விழிக்கு பாராட்டுக்கள். இதர வாசகர்கள் சொன்னது போல நானும் உதவி செய்ய தயாராக இருக்கிறேன். இந்த அனுபவமும் மலர்விழியின் இன்னொரு நாவலுக்கு கருவாக அமையட்டும். வாழ்த்துக்கள்.
08-மார்-2013 14:52:19 IST
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக முழங்கும் திமுக வினர் துன்பம் வந்து விட்டால் மட்டும் மூட நம்பிக்கைகளின் பிடியில் சிக்கித் தவிப்பதும், ஆலயங்களையும், ஆண்டவனையும் தரிசிப்பதும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
06-மார்-2013 14:23:08 IST
நல்ல தரமான பட்ஜெட். அலங்கார பட்ஜெட் என்று நமது முதல்வரும், பெட்ரோலிய பொருட்கள் விலை பற்றிய பரிந்துரையால் மக்கள் பாதிக்கப் படுவர் முன்னாள் முதல்வரும், பெண்கள் ஏழைகள் பற்றி மட்டுமே பேசும் தேர்தல் பட்ஜெட் என்று எதிர்க்கட்சி தலைவரும் பல்வேறு கருத்துக்கள் பரிமாறியிருப் பதிலிருந்து இது நிச்சயமாக மக்கள் விரோத பட்ஜெட் இல்லை என்பது தெளிவாகிறது. மாதாந்திர ஊதியம் வாங்குவோருக்கான வருமான வரி உச்ச வரம்பை உயர்த்தவில்லை. 5 லட்சம் வரை 2000 ரூபாய் குறைக்கப் பட்டுள்ளது. ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10 % சர்சார்ஜ் போடப் பட்டுள்ளது. இதனால் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு கொடுக்கும் ஒரு ராபின் குட் பட்ஜெட் என்று கூட சிலரால் வர்ணிக்கப் படுகிறது. இருந்தாலும் கல்வித்துறைக்கு 17 % வரை அதிக நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக் குரியது. அதிகம் குறை சொல்ல முடியாத ஒரு பட்ஜெட். 8ஆவது முறையாக பட்ஜெட் உரையில் நம் திருக்குறளை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்த வேட்டி கட்டிய தமிழன் சிதம்பரம் அவர்களுக்கு தனியாக ஒரு பாராட்டு சொல்ல வேண்டும்.
01-மார்-2013 14:53:13 IST
மக்களுக்கு பயனுள்ள நல்ல திட்டம். முதல்வரை மனதார பாராட்ட வேண்டுவது நமது கடமை. இது போன்று இன்னும் பல மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற வாழ்த்துக்கள். பத்திரிகையாளர்களின் பகுதியை அரசு அதிகாரிகளும், கட்சிக் காரர்களும் ஆக்கிரமிக்கும் விசயத்தை முதல்வருக்கு பத்திரிகையாளர்கள் தெரிவிக்க வேண்டும். நிச்சயமாக இனி வரும் விழாக்களில் மாற்றம் வரும்.
23-பிப்-2013 22:57:07 IST
அப்சல் குரு தூக்கிலிடப் பட்டது முறையான நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு சட்டவிதிகள் படியே தான் நடந்தது. ஆனால் மத்திய அரசு தூக்குத் தண்டனையை ரகசியமாக நிறைவேற்றிய விதமும், அதற்கான அரசியல் காரணங்களும் தான் விவாதத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியிருக்கிறது. குற்றவாளியோ, தீவிரவாதியோ, அப்சல் குரு விசயத்தில் அரசியல் காரணங்களுக்காக மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. தூக்கில் இடப்படுவதற்கு முன்பு அவனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப் பட வேண்டும். இது முறையாக செய்யப் படவில்லை. அவனது உடலும் அவர்களிடம் ஒப்படைக்கப் படவில்லை. சட்டம் ஒழுங்கை காரணமாகக் குறிப்பிடுவதை ஏற்க முடியாது காஷ்மீர் மாநில முதல்வரே இந்த விஷயத்தில் மத்திய அரசை விமர்சிக்கிறார். இறுதிச் சடங்குகள் செய்ய அவனது குடும்பத்துக்கு உள்ள அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது. ஈனத்தனமான ஒரு தீவிரவாதிக்கு என்ன மனித உரிமை வேண்டிக் கிடக்கிறது என்று வாதாடுவது சட்ட நீதிக்கு பொருந்தாது. அவனது குடும்பத்தின் கோரிக்கையை மத்திய அரசு தட்டிக் களிக்கக் கூடாது.
19-பிப்-2013 22:25:54 IST
தமிழக பாஜக தலைவர் சொல்லியிருக்கும் ஒரு கருத்து குறிப்பிடத்தக்கது. முதல்வர் சொல்வது போல கர்நாடகாவில் பாஜக மட்டுமல்ல, எல்லா கட்சிகளும் சேர்ந்து நிற்கின்றன, காவிரி பிரச்னை மட்டுமல்ல, ஏதாவது மக்கள் பிரச்னைகளில் தமிழக கட்சிகள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து போராடியதுண்டா? அதற்கான வாய்ப்பினை ஆளும் கட்சிதான் கொடுத்ததுண்டா? அரசியல் வேறுபாடுகளை தேர்தலோடு நிறுத்தி விட்டு, ஏதோ குடும்ப விரோதிகள் போல் செயல் படாமல், மக்கள் பிரச்னைகளுக்காக, அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக செயல் பட்டால் தான் மத்திய அரசு செவி சாய்க்கும். செவி கொடுப்பாரா நமது முதல்வர்?
17-பிப்-2013 02:56:44 IST
கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கிறார் போப் 16ஆம் பெனெடிக்ட். இவரது இறைபணி வாழ்வில், 1951ல் குருப்பட்டம் பெற்று, 1971ல் பிஷப்பாகிய சில மாதங்களிலேயே கர்தினாலாக திருநிலைப் படுத்தப்பட்டவர். 1980 களில் தலை தூக்கிய புதிய சிந்தனையாளர்கள் 'விடுதலை இறையியல்' என்ற சித்தாந்தத்தின் மூலம் 'யேசுவின் போதனைகளோடு கம்யூனிச பொருளாதாரக் கொள்கைகளைக்' கலக்க முற்பட்டதை கடுமையாக எதிர்த்து வெற்றி பெற்றவர். 2005 ஆம் ஆண்டு முதல் உலகத்தின் 120 கோடி கத்தோலிக்கர்களுக்கு தலைமையேற்று வழிநடத்திய திருத்தந்தை நல்ல ஆரோக்கியத்தோடு நீடிய காலம் வாழ வாழ்த்துக்கள். உலகத்தின் சிறிய நாடு என்று வர்ணிக்கப்படும் வாடிகனின் மன்னராகவும் போப் கருதப் படுகிறார்.
12-பிப்-2013 02:40:26 IST
ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருந்த கட்காரி, தனக்கு இரண்டாவது முறை தலைமைப் பதவி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் வீர வசனம் பேசியிருக்கிறார். தான் தலைவர் பதவியில் இல்லாததால் இனி கண்ணியமாகப் பேச வேண்டியதில்லை என்று சொல்லும் போதே, இவர் இத்தனை நாளும் கண்ணியமானவராக நடிதிருக்கிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி தவறாக பயன் படுத்துகிறது என்று குற்றம் சாட்டிக் கொண்டே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த அதிகாரிகளை பழிவாங்காமல் விட மாட்டோம் என்று இவர் சொல்வதன் அர்த்தம் என்ன? நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அதிகாரத்தை எங்கள் சொந்த நலனுக்காக தவறாகப் பயன்படுத்துவோம் என்பது தானே ஆக..இவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்படுவது பொதுமக்கள் நலனுக்காவோ, நாட்டை முன்னேற்றவோ இல்லை என்பதை தெளிவாக சொல்லுகிறார். வாழ்க இவர் போன்ற தலைவர்கள் வாழ்க இந்திய குடியரசு
25-ஜன-2013 17:01:39 IST