Advertisement
CGS Kumar : கருத்துக்கள் ( 5 )
CGS Kumar
Advertisement
Advertisement
ஜனவரி
14
2013
அரசியல் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியை அத்வானி முன்மொழிவார் : சோ பேச்சு
"அ.தி.மு.க., அரசை எல்லாவற்றிலும், நான் ஆதரிக்கவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையம் பிரச்னையில், ஆரம்பத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அண்ணா நூலகத்திற்கு இடையூறு செய்திருக்கக் கூடாது" சொல்வது சரி. ஆனால் இது தவிர வேறு சில குறைகளும் உண்டு. மந்திரி சபையில் தகுதியானவர்களே இல்லை. முதல்வர் ஜெயா ஒருவரே நிர்வாகத்தை கவனிக்க முடியாது. மின் வெட்டில் இந்த அரசும் சரியாக திட்டமிடவில்லை. திட்டக்குழு சிறப்பாக செயல்படவில்லை. சமீபத்தில் திட்ட குழு உறுப்பினர் ஒருவர் மனம் வெதும்பி ராஜினமா செய்து விட்டார் என தினமலர் செய்தி வந்தது. முதல்வரின் அணுகுமுறை மத்திய அரசுடன் சரியில்லை. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க அணியில் இருந்தாலும், தேவையான சமயத்தில் மத்திய அரசுடன் இணங்கி காரியம் சாதிப்பது போல் தமிழக் முதல்வரும் செய்ய வேண்டும். காவிரி பிரசினை, மின் வெட்டை முன் வைத்தால் அதிமுகவுக்கு எதிராக முடியும். அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிக்க வேண்டுமானால் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும். மந்திரி சபை, ஆலோசகர்கள் அளவில் மாற்றம் வேண்டும். நல்ல நிர்வாகம்தான் ஓட்டு கொடுக்கும். குஜராத், பீகார் மாநிலத்தில் திரும்ப திரும்ப வெற்றி பெறுவது நல்ல நிர்வாகத்தை வைத்து... பீகார் தமிழ் நாட்டை விட பின் தங்கிய மாநிலம், ஆனாலும் இலவசம் இல்லாமல் நிதிஷ் வெற்றி பெறுகிறார். ஓட்டுக்கு பணமோ, இலவசமோ உதவாது. கருணாநிதி கொடுக்காத இலவசம் இல்லை. கருணா நிதி கொடுக்காத பணம் இல்லை...அதிமுக பா.ஜ.கவுடன் கூட்டு வைத்தால், மோடி பிரதமர் என்றால் ஓட்டு விழும்.   06:41:18 IST
Rate this:
6 members
107 members
22 members
Share this Comment

ஜனவரி
12
2013
பொது வரி கட்ட நடிகர், நடிகைகள் எதிர்ப்பு சரிதானா?
சிதம்பரம் மீது ஆயிரம் குறை சொல்லலாம், ஆனால் இந்த விவகாரத்தில் அவர் முடிவு சரி    07:53:08 IST
Rate this:
1 members
0 members
41 members
Share this Comment

ஜனவரி
12
2013
பொது சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்: விதிமீறல் விளம்பரங்களுக்கு தேவை கடிவாளம்!
தமிழக போக்குவரத்தது துறை மிக மோசம். ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்சம் விரித்தாடுகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் மாற வேண்டும்.   07:49:51 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
12
2013
அரசியல் காவிரியை முன்னிறுத்தி லோக்சபா தேர்தல் வியூகம்: ஜெ., திட்டம் பலிக்குமா?
காவிரியை தற்காலிக ஓட்டுக்காக யோசிக்காமல், நிரந்தர தீர்வு என்று யோசிக்க வேண்டும். பொதுவாக மழை குறைந்து வருகிறது. ஆனால், காவிரி பாசன நில பரப்பு அதிகம் அதிகம் ஆகி விட்டது. கர்நாடகாவில் மண்டயா மாவட்டம் 1960, 70 களில் இவ்வளவு தண்ணீர் உபயோக்படுத்தபடவில்லை. அப்போது, தமிழக அரசு பேசாமல் இருந்து விட்டது. சுப்ரீம் கோர்டில் சென்று போராடி நம் உரிமையை நிலை நாட்டினால் பத்தாது. இந்த வருடம் பெங்களூரில் குடிக்க தண்ணீர் இல்லை. அப்புறம் என்ன செய்ய முடியும்? தமிழக மற்றும் கர்நாடக அரசு மாற்று பயிர் செய்ய (தண்ணீர் குறைவாக செலவாகும்) மத்திய அரசை நிதி கொடுக்க நிர்பந்திக்க வேண்டும். மழை காலங்களில் நீர் வீணாகிறது. இதை தமிழ் நாட்டில் உள்ள ஏரி, குட்டிகளை நிரப்பி (காவிரி நீர் வைத்து) நிலத்தடி மட்டத்தை உயர்த்தாலம். வெறும் ஓட்டுக்கு இந்த விவாகரத்தை கையில் எடுத்தால் ஓட்டு கிடைக்காது.   07:45:48 IST
Rate this:
0 members
1 members
20 members
Share this Comment

டிசம்பர்
31
2012
அரசியல் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டி :ஜெ.,
காங்கிரஸ் + தே.தி.மு.க + திமுக ஒரு அணி என்ற நிலை உருவாகும்போது, மிக கடுமையான போட்டி இருக்கும். அதிமுக ஆட்சி பொறுத்தவரை திமுக ஆட்சியை விட சட்டம் ஒழுங்கு பரவாயில்லை. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆதிக்கம் இல்லை. இன்னும் சிறப்பாக ஆட்சி இருக்க மின் வெட்டு தீர வேண்டும், திறமையான மந்திரிகள் இருக்க வேண்டும், பொது பிரசினைகலான டெங்கு போன்றவை ஒழிக்கப்பட வேண்டும்....ஆட்சி சிறப்பாக இருந்தால் மக்கள் அதிமுகவுக்கு ஓட்டு போடுவார்கள். அதிமுக + பா.ஜ.க கூட்டணி நன்றாக இருக்கும். மோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஓட்டு கூடி விழும்...   06:38:31 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment