R.PERUMALRAJA : கருத்துக்கள் ( 125 )
R.PERUMALRAJA
Advertisement
Advertisement
மார்ச்
24
2017
அரசியல் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் கனவில்... பேரிடி!
பாகிஸ்தானை , இந்தியா ரஷ்யா விடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்து தள்ளி வைக்கிறதோ இல்லையோ ஆனால் பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் குழுக்கள் இந்தியாவை பொருளாதார ரீதியில் பின்னுக்கு தள்ளவேண்டும் , ரஷ்யாவும் அமெரிக்காவும் இந்தியாவை எதிரிநாடாக பார்க்கவேண்டும் என்று நினைத்து காய் நகர்த்தி கொண்டு இருக்கின்றன ......H1B விசா என்ன ....எல்லா நடை முறையிலும் முறை கேடுகளும் தில்லு முல்லுகளும் இருக்கவே செய்கின்றன ஆனால் அதை video வாக தயார்படுத்தி அமெரிக்காவின் அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அனுப்பிய அந்த குழு தீவிரவாத கும்பலா அல்லது உண்மையிலேயே அது மக்களுக்காக மக்களால் செய்யப்பட்ட ஒரு காரியமா என்று CIA தான் கண்டு பிடிக்க வேண்டும் , அதுவும் குறிப்பாக இந்தியர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடைபெறும் பொழுது இது நடந்தேறி இருக்கிறது ..இது எரியும் செயல்களில் எண்ணையை ஊற்றுவது போல .... ஒவொரு நாட்டின் உளவு துறையும் மற்ற நாடுகளின் மீது உளவு கண் பார்வை வைக்கும் , அதுபோல இந்திய , ரஷ்யா மீது வைத்திருக்கும் உளவு பார்வையை , பாகிஸ்தானிடம் இருந்து பயிற்சி பெற்ற / பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் நவீன குழுக்கள் , இந்தியாவின் முன்னாள் உளவு அதிகாரிகளை கையில் போட்டு கொண்டு , அவர்களின் மூலமாக இந்தியா ரஷ்யா மீது வைத்திருக்கும் உளவு பார்வையை / தகவல்களை , இந்தியா ரஷ்யா வின் மீது வைத்திருக்கும் " சந்தேக கண் " என்னும் தலைப்புகளில் சர்வதேச தொலைக்காட்சிகளில் கட்டுரை போல ஒளிபரப்பு செய்யப்படலாம் எதிர்காலத்தில் ....பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியான நீர்மூழ்கி கப்பலின் ரகசிய தகவல்கள் கூட இது போன்ற தீவிரவாத குழுக்களின் நவீன செயல்பாடே ..........இப்பொழுதெல்லாம் பாகிஸ்தானின் தீவிர வாத குழுக்கள் ரஷ்யா வின் மாபியா களுடன் அதிக நட்புறவு பாராட்டுகின்றனர் , ரஷ்யா மாபியாக்களுக்கு அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறைக்கும் நிறைய சம்பந்தம் , டிரம்ப் பின் ரியல் எஸ்டேட் துறை செயல்படும் வரை அதன் மூலமும் இந்தியர்களுக்கு பொருளாதார பிரச்சனைகள் அதிகம் வர வாய்ப்புக்கள் அதிகமே , அமெரிக்க இந்தியர்கள்மற்றும் இந்திய அரசும் ஜனநாயக கட்சிகளின் மூலம் FBI / CIA வையும் முடுக்கி விடுவது சிறந்ததே   09:07:37 IST
Rate this:
5 members
1 members
13 members
Share this Comment

மார்ச்
21
2017
அரசியல் அ.தி.மு.க.,வில் கும்மாங்குத்து வளர்மதி - நிர்மலா லடாய்
" காக்கா பிடித்தால் காரியத்தை சாதிக்கலாம் " என்னும் ஒரு மந்திரத்தை திரு வளர்மதி அவர்கள் அண்ணா தி மு க சசி அணியிற்கு மறைமுகமாக சொல்லி கொண்டு இருக்கிறார் .....மக்களால் ஓரங்கட்டப்பட்டு கட்சியினரால் தூக்கி ஏறியப்பட்ட இந்த வளர்மதி / கோகுல இந்திரா எப்பல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் sound கொடுப்பதற்கு என்று காத்து கொண்டு இருக்கிறார்கள் , காச் மூச் என்று கத்தி விளம்பரம் தேடுவதற்கு என்றே இந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களும் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர் . அதில் மயங்கியது சசிகலா........ , மக்களால் தூக்கி எறியப்பட்ட இந்த வளர்மதி ஜெயா இறந்தவுடன் , சசி தான் , அதுவும் சிறை சசியிற்கு ஊர்ஜிதம் , அதற்குள் காரியத்தை சாதிக்க வேண்டும் என்று எண்ணிய வளர்மதி , ஜெயா இறந்தவுடன் சசி சிறை செல்லும் நாட்களுக்குள் எப்படியாவது சசி புகழ் பாடி ஏதாவது ஒரு பதவியை வாங்கிவிட வேண்டும் என்று எண்ணிய வளர்மதி , நாளொரு வண்ணம் , பொழுதொரு மேனி சசி புகழ் பாடி , ஜெயாவையும் கூட கொச்சை படுத்தி பேசி , தமிழக பாட நூல் தலைவராக சசியால் நியமனம் செய்யப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த ஒரு தொலைக்காட்சியின் முன் தினம் தோன்றி புகழ் பாடினால் பதவி என்று எண்ணிய வளர்மதி வேண்டுமென்றே அந்த தொலை காட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைக்கும் படி வேண்டிக்கொண்டார் ........இப்படி எல்லாம் பதவிக்காக காக்கா பிடித்த வளர்மதி என்னும் மேலும் பல பதவிகளை , அதுவும் அவரின் மகனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்பொழுது தினகரன்/ சசி காலா புகழ் பாட ஆரம்பித்து இருக்கிறார் ....குறிப்பாக பத்திரிக்கை கண்கள் படும் இடங்களில் வாய் தகராறில் ஈடுபடுவது , சசி புகழ் பாடுவது , சென்னைக்கு வரும் / சென்னையில் தாங்கும் கட்சினரிடம் ஏதோ தனக்கு அடியாள் / மற்றும் அரசியல் சக்தி இருப்பது போல காட்டிக்கொண்டு , அதையே சசியிடம் காட்டி , தனக்கு கட்சியினரின் செல்வாக்கு இருப்பது போல காட்டி, சசியை ஏமாற்றி பதவி சுகங்களை அனுபவித்து வருகிறார் .... ......இவருடைய இந்த formulaa வை கோகுல இந்திராவும் பின்பற்றி ஏதாவது பதவியில் உட்கார்ந்து விட வேண்டும் என்று முடிவு செய்து , அதன் முதற்படியாக , சசி ஆதரவு கும்பல் கண்களில் படும்படி தொலைக்காட்சி விவாத மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சசி புகழ் பாடி கொண்டு இருக்கிறார் ......பாடியும் இன்னும் எந்த பதவியையும் கிடைக்காததால் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வாய் சண்டைக்கு தயாரா இருக்கிறார்கள் , அதுவும் பத்திரிக்கை யாளர்கள் கண்கள் படும் இடங்களில் யாரவது சசி பற்றி தவறாக பேசவேண்டும் என்று வேண்டுமென்றே இந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களும் காத்துகொண்டு இருக்கின்றனர் , அப்படி யாரவது பேசினால் உடனே சிண்டு முடிந்து கொண்டு பத்திரிக்கைக்காரர்கள் கண்கள் படும்படி / செய்திகள் வரும்படி உடனே வாய் சண்டை இடுகின்றனர் .......ஆனால் மன்னார் குடி மாபியா விற்கு இவர்களால் வர போகும் பிரச்சனைகளை உடனே அறிந்து கொள்ள முடியாது , நிர்மலா பெரியசாமி போல இன்னும் பலர் கட்சியை விட்டு ஓடி போகும் பொழுதான் இந்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பர் , அதற்குள் இந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களும் ( வளர்மதி /கோகுல இந்திரா ) வேறு கட்சிகளில் சேர்ந்து அங்கேயும் இது போல ஒத்து ஊத ஆரம்பித்து விடுவர் ..........   09:15:53 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
20
2017
பொது இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் - 10 முக்கிய அம்சங்கள்
வயர்த்தானால் வரும் பிரச்னையுடன், தந்தையின் திறமையை மிஞ்சமுடியாமல் பணத்திற்கு திணறும் ஆடம்பர வாரிசுகளின் போட்டியும் சேர்ந்து இரு பெரிய கலைஞர்களை கண்ணீர் கடலில் மூழ்கடித்திருக்கிறது ...தமிழ்நெஞ்சங்களையும் சேர்த்து ....   09:17:03 IST
Rate this:
3 members
0 members
22 members
Share this Comment

மார்ச்
20
2017
சம்பவம் ரேஷனில் தரமற்ற பருப்பு வினியோகம் ரூ.199 கோடி வீணாகும் அவலம்
ஏதோ பாலஸ்தீனிய நாடு போல ஆகிவிட்டது தமிழகம் .அரசு இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை அரசு மீது நம்பிக்கை இல்லாமல் விவசாயிகள் டெல்லியில் போராடுகின்றனர் , தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டு கொல்கிறது , கேரளா ஒரு புறம் ஆணை கட்டுகிறது , கர்நாடக ஒரு புறம் மேகதாது ஆணை கட்டுகிறது , ஆந்திர பாலாறு பிரச்சனை .....இதை எல்லாம் கேட்க அரசு இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை ......சரி.. சாமானியனின் வாழ்க்கை தரம் மேம்பட கூட தேவை இல்லை கொடுப்பதையாவது ஒழுங்காக தரமானதாக கொடுத்தால் பரவாயில்லை அதுவும் மோசம் என்றால் என்ன செய்வது ....அதிகாரத்தில் இருப்பவர்கள் டெல்லியிற்கும் - சென்னையிற்கும் lobby செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர் ......தமிழகத்தில் இது போன்ற நிலை யற்ற தன்மை இருந்தால் ஒரு சிலருக்கு மட்டும் லாபமே ஆம் IAS மற்றும் IPS படித்தவர்களை கையில் போட்டு கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதன் வீரியமும் அதிகரித்து கொண்டே போகும் இறுதியில் தமிழகம் 20 அல்லது 30 ஆண்டுகல் பின்னோக்கி செல்லவே வாய்ப்புக்கள் அதிகம் .....   00:46:03 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment

ஜனவரி
26
2017
சம்பவம் கலவர பின்னணியில் ஏழு அமைப்புகள் ஆதாரத்துடன் பட்டியல் தயார்
" போராட்டம் செய்தால் வெற்றி " என்னும் தொழில் நுட்பத்தை நாட்டை ஆளும் அரசுகளே மக்கள் மனதில் விதைத்து விட்டது ......இனி காவல் துறைக்கு தலைவலி தான் ...குறிப்பாக உளவு துறைக்கு தலைவலி தான் ......   08:11:27 IST
Rate this:
3 members
1 members
24 members
Share this Comment

ஜனவரி
25
2017
கோர்ட் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
சக்திமான் என்னும் குதிரையின் காலை உடைத்து அதனை மிருக வதை செய்து , பின் இறந்து போன குதிரையிற்க்கு கண்டன குரல் எழுப்பவில்லை இந்த பீடாவும் உச்சநீதிமன்றமும் .........காளையை கொன்று இறைச்சியை ஏற்றுமதி செய்யும் தொழிலிற்கு தடை விதிக்கவில்லை இந்த பீடாவும் உச்சநீதிமன்றமும் , ............ஆனால் காளையுடன் விளையாடும் விளையாட்டிற்கு தடை விதிக்கிறார்கள் .......கை மேல் துண்டு போட்டு மாடுகளை விலை பேசுவது போல நீதிமன்றத்திற்காக நீதிபதிகளை தேர்வு செய்யும் பொழுது நீதிபதிகளை தகுதி மற்றும் தேர்வு முறை படி தேர்ந்தெடுக்காமல் " கை மேல் துண்டு " போட்டு ஜனாதிபதி தேர்ந்தடுத்திருக்கிறார் போல ....   00:21:21 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஜனவரி
24
2017
பொது மாணவர் போராட்டத்தால் மிரண்ட அமெரிக்க நிறுவனங்கள்!கள நிலவரம் அறிய ஆய்வாளர்கள் தமிழகம் வருகை
பீட்டா ஆதரவு நடிகை , திரிஷாவை கூப்பிட்டுரெண்டு குத்தாட்டம் போட்டு " coke குடி ....என் கைய்ய புடி ..." னு வசனம் பேசி விளம்பரம் செய்தால் மார்க்கெட் புடித்துவிடலாம் என்று இந்நேரம் COKE காரன் முடிவு செய்திருப்பான் ...   01:03:16 IST
Rate this:
1 members
0 members
29 members
Share this Comment

ஜனவரி
24
2017
பொது ஜெ., பிறந்த நாளில் புதிய கட்சி தீபா அணி ஆலோசனை
" ஜல்லிக்கட்டு " என்னும் சுனாமியில் " ஜெயாவின் மரண " தாக்கமே மக்கள் மனதிலிருந்து அடித்து கொண்டு போய் விட்டது .....இனி கட்சி ஆரம்பித்து , சின்னம் , கொடி என்று சென்று கோட்டை பிடிப்பதற்குள் பொழுது விடிந்துவிடும் ...   00:53:08 IST
Rate this:
5 members
1 members
17 members
Share this Comment

ஜனவரி
21
2017
பொது ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்-பீட்டா
இந்த அமைப்பில் உள்ள தமிழக உறுப்பினர்கள் யார் யார் என்று சொன்னால் தினமலருக்கு ஆயிரம் கோடி நன்றிகள் ....   18:19:57 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
20
2017
பொது தமிழக இளைஞர்கள் போராட்டம் மத்திய - மாநில அரசுகள் அதிர்ச்சி
ஜல்லிக்கட்டுற்கு ஆதரவு கிடைத்து சட்டம் நிறைவேறியது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் .....இவ்வளவு பெரிய போராட்டம் உண்டு பண்ணாமல் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மத்திய மாநில அரசுகள் சாமர்த்தியமாக கையாண்டு இருக்கலாமே ஜெயாவின் மறைவை வார்த்த புயல் மக்கள் மனதில் இருந்து மறைத்தது ....இரண்டாவதாக , இப்பொழுது ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவின் செல்வாக்கை / பயணத்தை ஜல்லிக்கட்டு வின் மூலம் திசை திருப்பி விடப்பட்டதோ என்று தான் என்ன தோன்றுகிறது ....   18:11:15 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment