Madhu : கருத்துக்கள் ( 351 )
 Madhu
Advertisement
Advertisement
நவம்பர்
6
2018
பொது தலை தீபாவளி- சிறுகதை
காதலையும், சாதி மறுப்புத் திருமணங்களையும் இதை விட எவரும் கொச்சைப் படுத்தியிருக்க முடியாது. வித்யாசமாக சிந்திக்க வேண்டும் இரண்டு பக்கத்திற்குள் 'பாப் கார்ன்' கதையைச் சொல்ல வேண்டும் எனும் நோக்கில் எதை வேண்டுமானாலும் கதையாக எழுத‌ முடியும் என்றால் இப்படிப் பட்ட கதைகளைத்தான் படைப்பாளிகள் உருவாக்குவார்கள். இளைஞர்கள் அதீத கற்பனை உணர்ச்சிக்கு அடிமையாகிறார்கள் என்றால் இது போன்ற கதைகளைப் படிப்பதால்தான்.   07:04:18 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
2
2018
சினிமா இளைஞருக்கு புது செல்போன் வாங்கி தந்த சிவகுமார்...
தான் செய்த தவறை உணர்ந்து அதற்குப் பிராயச்சித்தமாக ஒரு புது செல்ஃபோனை அந்த இளைஞருக்கு திரு. சிவகுமார் அவர்கள் வழங்கியதை நேரிடையாகவே செய்திருக்கலாம் . செல்ஃபோனைத் தட்டிவிடுவது ஒரு பிரபலம் பிராயச்சித்தம் செய்வது யாரோ ஒரு மூன்றாம் மனிதர் மூலமாகவா?   10:38:57 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
10
2018
சினிமா பாலியல் தொல்லை, மிரட்டல் : வைரமுத்து மீது சின்மயி பகீர் புகார்...
'ஹாலிவுட்டில்' கூட பல பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் தங்கள் 'இமேஜ்' பாதிக்கப் படுவதை விரும்புவதில்லை. இவர்கள் வாழ்க்கையில் இரட்டை வேட்டம் போடும் கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டவர்கள்.தமிழ் சினிமாவைப் பொருத்தவரை கதாநாயகன் என்பவன் 'தியாகம் செய்யக் கூடியவன் சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பவன் குடும்பத்தில் பாசக்கார அண்ணன் அல்லது தம்பி தனது உடன்பிறந்தவரே தனக்கு எதிராக சதி செய்தாலும் மன்னிக்கும் மனப்பாங்கு உடையவன் ஏழைகளுக்காகக் கண்ணீர் விடுபவன் ஏழையின் பசியைப் போக்கத் தனது ஒருநாள் வருமானத்தையே கூடத் தியாகம் செய்பவன் பெண்களைத் தனது வசீகரப் பேச்சாலும், வீர‌ தீர நிகழ்ச்சிகளாலும் வீழ்த்தி விடுபவன் காதலியைத் தவிர அல்லது தன் மனைவியத் தவிர வேறு பெண்ணை ஏறிட்டுப் பார்க்காதவன். இக்கட்டான நிலையில் தன் காதலையே தியாகம் செய்யத் துணிபவன்' இவையெல்லாம் நடிகன் ஏற்கும் பாத்திரங்களின் குணாதிசயங்களே தவிர இது வாழ்க்கையில் அவனுடைய உண்மை நடத்தைக்குப் பொருந்தாது எனப் பல பேர்க்குப் புரிவதில்லை. எனவே, மிகப் பிரபலமான ஒருவரைப் பற்றிய 'ரகசியம்' கசியும்போது அவரது ரசிகர்கள் ஒத்துக்கொள்ள மறுத்து ஏதிர்க்கிறார்கள். 'சோஷியல் மீடியா' இன்று அனைவரையும் தோலுரித்துக் காட்ட வந்து விட்டது. ஒரு காலத்தில் 'இந்து நேசன்' போன்ற பத்திரிகைகள் சினிமா உலகில் நடக்கும் அவலங்களை, ஆபாசங்களை மக்களிடம் சென்று விளக்கிக் கொண்டிருந்தது. இன்று அதற்கு அவசியம் இல்லை. நொடிப் பொழுதில் விவகாரங்கள் வெளியே வந்து விடுகின்றன. சென்ற தலைமுறையில் பாதிக்கப் பட்டவர்கள் தற்போது புதுத் தெம்புடன் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை சொல்ல முன்வந்து விட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மறதி நோயைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை.   21:58:35 IST
Rate this:
0 members
1 members
63 members
Share this Comment

செப்டம்பர்
27
2018
பொது ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு சிக்கல்?
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண‌ தண்டனை அறிவிக்கப்பட்டுப் பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு அதனை அனுபவித்து அந்த 7 பேரும் தமிழக‌ கவர்னரின் ஏகோபித்த முடிவால் விடுதலை செய்யப்பட்டால் அதற்காக அடியேன் மிகிழ்ச்சி யடையவோ வருத்தமோ படப்போவதில்லை. ஆனால் அவர்களை விடுவித்து சுதந்திரமாக இருக்க விடுவது தர்மமும் அல்ல. வெளியில் வந்த பிறகு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் போராட்டம் தொடங்குவார்கள். இப்படித்தான் இது நடக்கும். இது ஒரு புறம். பல வருடங்களாக . அற்புதம்மாளை முன்னிறுத்தி அவரிடம் கருத்து கேட்டுக் கொண்டு, அவரது அறிக்கையை ஒளி பரப்பிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் கடந்த 10 வருடங்கள் நமது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியுடன் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களது கருத்துக்களை ஏன் வெளியிட‌ முன்வரவில்லை? இது எந்த விதமான சமுதாய சமத்துவம்? நடு நிலைமை?   11:32:46 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
உலகம் டுவீட்டுக்கு மேல் டுவீட் பாக்., மாஜி ரிபீட்
தான் பிரதமர் ஆக வேண்டும் எனும் ஒரே காரணத்திற்காக இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானின் ஆதரவை ஏற்றுக் கொள்ளாமல் ராகுல் காந்தி அவர்கள் இந்த 'ட்வீட்'களை வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும். 'எங்கள் உள் நாட்டு அரசியல் விவகாரங்களை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்களது நாட்டை முன்னேற்றப் பாருங்கள்' என ராகுல் காந்தியோ,சோனியாவோ, மன்மோகன் சிங்கோ, மணி சங்கர் ஐயரோ, ப.சிதம்பரமோ, அபிஷேக் சிங்வியோ, கபில் சிபலோ அல்லது மற்ற அரசியல் கட்சித் தலைவர்களோ என் பொங்கி எழவில்லை?.ஏன் எனில் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் தேசத் துரோக காரியங்களுக்கு முந்தைய காலங்களில் துணை போய் இருக்கிறார்கள் என அர்த்தம் ஆகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்க்காகப் பாடுபட்ட தலைவர்களின் சுத்த ரத்தத்திற்குப் பிறந்தவர்கள் என்றால் ஜனநாயக முறைப்படியல்லவா நமது பிரதமரை அகற்ற முன் வர வேண்டும்?   13:20:44 IST
Rate this:
0 members
0 members
137 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதம் உயர்வு
இன்றைய தேதியில் சாமான்ய மக்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் அஞ்சலக சேமிப்பே பாதுகாப்பாக உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் லட்சணத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே ..பரஸ்பர நிதிகளின் நிலைமையும், ஷேர் மார்க்கெட்டின் நிலையைப் பொறுத்தே மாறும். எனவேதான், பாமர மக்களும், மூத்த குடிமக்களும் அஞ்சலக‌ சேமிப்பைப் பெரிதும் வரவேற்கிறார்கள். தனியார் மற்றும் அரசுத் துறை வங்கிகளில் கெடுபிடிகள் அதிகம். எஸ்பிஐ போன்ற வங்கிகளில் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகின்றன. அங்கே பணி புரியும் ஊழியர்களும் சதா 'சிடு சிடு'த்த வண்ணமே வேலை பார்க்கிறார்கள். 'டோக்கன் சிஸ்டம்' 'சிங்கிள் விண்டோ சிஸ்டம்' என்பதெல்லாம் பெயரளவில். ஒரு 'டிமாண்ட் டிராஃப்ட்' வாங்க ஒரு மணி 30 நிமிடம் ஆகிறது அதுவும் கூட்டம் அதிகமில்லாத ஒரு நாளில். வங்கி மேனேஜரையோ, தலைமை கணக்கரையோ எந்த ஊழியரும் மதிப்பது இல்லை. இவைகளையெல்லாம் பார்க்கும்போது அஞ்சலக வங்கிகள் எவ்வளவோ மேல்.   13:59:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
எக்ஸ்குளுசிவ் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது உயிர்தப்பிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எதிர்ப்பு
ராஜீவ் காந்தி அவர்கள் இனி சுதந்திரமாக வாழக்கூடாது என ஒரு பயங்கரவாத அமைப்பு தீர்மானித்து, அவரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டி அவரைத் தமிழ் மண்ணிலேயே தமிழர்களின் உதவியுடன் பயங்கரமான முறையில் சொல்கிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு முதலில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுப் பின் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டு விட்டது. இவர்கள் இனி ஆயுளுடன் இருக்கலாம் ஆனால், சுதந்திரமாக மற்ரவர்களைப் போல் வெளியில் இருக்கக் கூடாது என்பதுதான் நல்ல தீர்ப்பாக இருக்க முடியும். இறந்தது முன்னாள் பிரதம மந்திரி மட்டுமல்ல அவருடன் இந்த தேசத்திற்காகக் காவல் துறையில் பணிபுரிந்தவர்களும், அப்பாவிப் பொதுமக்களும் கூடத்தான். எனவே, கவர்னர் தனது அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தி, ஆயுள் தண்டனையை ரத்து செய்ததை மறு ஆய்வு செய்யச் சொல்லை உச்சநீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்ளலாம். உச்சநீதி மன்றம் இதை ஏற்க இயலாத பட்சத்தில், இப்போதுள்ள நிலையே தொடர உத்திரவிடலாம்.இதுவே நியாயமான தீர்ப்பாக அமையும்.   10:06:09 IST
Rate this:
0 members
1 members
11 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
பொது ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அமைச்சரவை பரிந்துரை
ராஜிவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன் தினம் வரை ராஜிவ் காந்தி இப்போது ஜெயிலில் உள்ளவர்கள் அனைவருமே சுதந்திரமாக, உயிருடன் தான் இருந்தனர். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு கடந்த 27 வருடங்களாக மேல் உலகத்தில் வெளிவர‌ இயலாத ஒரு சிறையில் உள்ளார். அவரது கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டுவிட்டது. இப்போது இவர்கள் சுதந்திரமாக வெளிவர வேண்டுமெனில், ராஜிவ் காந்தி அவர்களுக்கும் அவர்களுடன் மாண்டவர்களுக்கும் 'சுதந்திரம்' கிடைத்து பிறகு பழையபடி நம்மிடையே வந்துவாழ வகை செய்ய வேண்டும். உச்ச‌ நீதி மன்றத்தினாலோ, மத்திய அரசினாலோ, மாநில அரசினாலோ, மேதகு கவர்னர் அவர்களாலோ இதனை செய்ய முடியாத பட்சத்தில்,ராஜிவ் காந்தி அவர்களும்+அவர்களுடன் மரணித்த மற்றவர்களும் மேல் உலகத்தில் திரும்பி வர இயலாத நிலையில் இருப்பதுபோல‌ ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களும் வெளிவராத நிலையில் சிறையிலேயே இருப்பதுதான் நியாயமான தீர்ப்பு. மரண தண்டனையையும் அறிவித்து விட்டு, அதை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து விட்டு இப்போது விடுதலை என்பது உச்ச நீதி மன்றத்தை கேலிக்குரியதாக்கும் செயல். Status quo should continue.   10:23:50 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
பொது கல்வீசும் கும்பலுக்கு அதிர்ச்சி கொடுத்த போலீசார்
'பலே .. வெள்ளையத் தேவா ... எதிரிகளின் கூட்டத்தில் தனி ஒருவனாகப் புகுந்து அவர்கள் மொழியிலேயே அவர்களுக்குப் புத்தி வரும்படி பதிலடி கொடுத்தாயே .. பலே ' உன்னைப் போன்ற‌ ஆயிரம் ஆயிரம் வீரர்களுக்கு இத் தேசம் தலை வணங்குகிறது. ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்   11:35:06 IST
Rate this:
0 members
0 members
73 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2018
பொது மல்லையாவுக்கு சிறையில் வசதிகள் வீடியோவை சமர்ப்பித்தது இந்தியா
சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் நமது சுதந்திரத் தியாகி வீரர் திரு. சுப்ரமண்ய சிவாவை அந்தமானில் அடைத்து வைத்து அவருக்கு தொழு நோய் ஏற்பட வைத்தவர்கள் கூறுவதை இந்திய அரசாங்கம் இன்று ஏன் ஏற்க வேண்டும்? நமது 'கமாண்டோ' படையினரை இங்கிலாந்திற்குள் இறக்கி மல்லையாவைக் குண்டு கட்டாகத் தூக்கி இங்கு கொண்டு வந்து செருப்பால் அடிக்காமல் அவர்கள் சொல்வதற்கெல்லாம் நாம் என் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் ? மல்லையா, மோடி, நிரவ், தாவூத் போன்ற அனைவரையும் சட்டத்திற்குப் புறம்பாக இங்கு கொண்டு வந்தாலும் அதை நாம் வரவேற்போம். ஜெய் ஹிந்த்   12:50:57 IST
Rate this:
0 members
2 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X