சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி. மறந்து போய் சிங்களனே இலங்கை தமிழர்களுக்கு எதாவது நல்லது செய்ய நினைத்தாலும், இவங்க அத கெடுக்கமா வுட மாட்டங்கா போலிருக்கே. ராஜபக்சேவ உசுப்பி விடுறதுல்ல நீங்க ஒரு கில்லாடி.
05-பிப்-2013 04:45:56 IST
சினிமா என்பது ஒரு வியாபாரம். முற்றிலும் லாப நோக்கத்திற்காக செயல் படும் ஊடகம். அதை கருத்து சுதந்திரத்தோடு ஒப்பிட இயலாது. . "அஞ்சரைக்குள்ள வண்டி", "சாந்தி அப்புறம் நித்யா", மற்றும் எண்ணற்ற கிளுகிளுப்பு படங்களை எல்லாம் கருத்து சுதந்திரம் என்று சொல்லி உண்மையான கருத்து சுதந்திரத்தை கேவல படுத்த வேண்டாம்.
05-பிப்-2013 04:29:04 IST
இப்பெல்லாம் கேப்டனுக்கு புடிக்காத ஒரே வார்த்தை "எம்.எல்.ஏ". ஏனென்றால் இவங்க சொல்லாம கொள்ளாம தமிழக முதல்வரை சந்திக்க போய் விடுகிறார்கள்.
05-பிப்-2013 04:17:13 IST
புலி பசிச்சாலும் "புள்ள" திங்காது. எலி பசிச்ச எல்லாத்தையும் திங்கும். திரு.வைகோ அவர்களே உங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வுடன் கூட்டணி சேரணும்னு நேரவே கேட்ருங்க. மாறு பட்ட அரசியல் செய்வதில் நீங்க ஒரு புலி என்று நினைத்த பல பேரில் நானும் ஒருவன். ஆனால் உங்களுடைய அறிக்கை நீங்க ஒரு பசிச்ச எலி "பன்" திங்க ரெடி என்று நிருபித்து விட்டீர்கள்.
05-பிப்-2013 04:06:51 IST
காவேரி விஷயத்தில் துணிச்சலாக சுப்ரீம் கோர்ட்டை அணுகிய தமிழக முதல்வர் பாராட்டுக்கு உரியவர். அதே வேலையில் நதிகளை தேசிய மயமாக்கவும், ஆறுகளை இணைத்து தேசிய நீர் வழி தடத்தை உருவாக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் உருவாக்க தமிழக முதல்வர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவையே தமிழகத்தின் நீர் தேவைகளை பூர்த்தி செய்யும் தொலை நோக்கு திட்டங்கள். இல்லையென்றால், சுயநல அரசியல் செய்பவர்களால் தொடர்ந்து தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க இயலாது.
05-பிப்-2013 03:51:09 IST
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில் அவருடைய சமாதியில் மரியாதை செய்ததற்கு பாராட்டுக்கள். ஆனால் அவர் கற்று கொடுத்த "கடமை","கண்ணியம்",கட்டுப்பாடு" என்ற உயர்ந்த கோட்பாட்டை அவருடைய சமாதியிலேயே புதைத்து விட்டிர்களே அது தான் வருத்தமா இருக்கு.
04-பிப்-2013 03:11:13 IST
இதற்கு அரசையோ, தனியார் பள்ளிகளையோ அல்லது பெற்றோர்களையோ குற்றம் சொல்ல முடியாது. "மக்கு" ஆகா இருந்தாலும் "மக்கப்" அடிச்சாவது "மார்க்" வாங்குகிற குழந்தைகளையும் குற்றம் கூற முடியாது. நம்முடைய கல்வி முறையில் அதிக மதிப்பெண் பெறுபவர்களே புத்திசாலிகள் எனப்படுவதால் வந்ததன் விளைவு இது. கல்வி முறையில் மாற்றம் செய்யப்படுவதன் மூலமே விடிவு பிறக்கும்.
04-பிப்-2013 02:51:03 IST
இந்த மாதிரி படங்கள் எல்லாம் கருத்து சுதந்திரமா இல்லை வியாபார தந்திரமா? நடிகர்களும் படைப்பாளிகளும் உங்க கருத்து என்ன வென்று கூற வேண்டுகிறோம்.
04-பிப்-2013 02:29:45 IST