E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Sukumar Talpady : கருத்துக்கள் ( 152 )
Sukumar Talpady
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2014
சம்பவம் லடாக் பகுதியில் சீன வீரர்கள் மேலும் ஊடுருவல் சீன அதிபர் வாக்குறுதியையும் மீறி தொடர்ந்து அடம்
சீனாவுக்கு பரஸ்பர கௌரவம் எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. நாம் அந்த நாட்டு அதிபரை அழைத்து 12 ஒப்பந்தங்கள் போட்டு , சபர்மதி ஆஷ்ரமத்திற்கு அழைத்து சென்று எவ்வளவு கௌரவித்தோம் . அவர் மனைவிக்கு எவ்வளவு கௌரவம் கொடுத்தோம் ? அதிபரும், அவர் மனைவியும் மற்ற சீனர்களும் எவ்வளவு சிரித்து சிரித்து பேசினார்கள் ? அவர்கள் சிரிப்பு அனைத்தும் கபட சிரிப்பு என்பது போலே தோன்றுகிறதே ? சீனா திரும்பிய உடனே முதுகில் குத்துகிறார்கள் . இவர்களை நம்பவே கூடாது. இந்திய ரயில்வேயில் எவ்வளவோ கோடி முதலீடு செய்யப் போகிறார்களாம் . என்ன ஆப்பு வைக்க போகிறார்களோ ? ஜென்ட்ல்மன் ஆக நடந்து கொள்ள தெரியவில்லை .   14:28:44 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

செப்டம்பர்
10
2014
எக்ஸ்குளுசிவ் கல்லூரிகளில் தலைவிரித்தாடும் அரிவாள் கலாசாரம்!
இந்த மாதிரி மாணவர்கள் சில்லறை விஷயங்களுக்காக ஆயுதங்களுடன் மோதி கொள்ளும் கலாசாரம் எந்த மாநிலத்திலும் எந்த நாட்டிலும் காண முடியாது . எல்லாம் திராவிட கட்சிகளின் ஆட்சியின் பிரதிபலிப்பு தான் இவை.   08:01:02 IST
Rate this:
5 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
1
2014
அரசியல் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்தினாரா? தி.மு.க.,வில் சர்ச்சை உடன் வெளியானது விளக்கம்
அருமை மகள் கனிமொழியின் தாயார் அதாவது திரு.மு.க.வின் இனைவியார், கனிமொழி சிறையில் இருக்கும் பொழுது உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து, பிராமன அர்ச்சகரிடம் பிரசாதம் வாங்கி சென்றார். அதை கண்டித்தாரா இந்த பகுத்தறிவு பகலவன் திரு.மு.க.? விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரு.ஸ்டாலின் வாழ்த்து சொன்னதை, என்னமோ செய்யக்கூடாத செயலை செய்ததை போல் கண்டித்தாராம் திரு.மு.க. தமிழக மக்களே குறிப்பாக ஹிந்து மத மக்களே இவர்களின் போலி வேடத்தை, நாடகத்தை புரிந்து கொள்ளுங்கள்.   10:24:38 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2014
அரசியல் சுப்ரீம் கோர்ட்டில் உத்தரகண்ட் கவர்னர் குரேஷி வழக்கு
கவர்னர் பதவிக்கென்றே ஒரு கெளரவம், அந்தஸ்து, மரியாதை எல்லாம் இருக்கிறது. அந்த பதவியை யார் வஹித்தாலும் அந்த பதவிக்கான உரிய மரியாதையை கொடுத்தே ஆக வேண்டும். ஆகையால் அந்த பதவியை விட அந்தஸ்தில் குறைந்த உள்துறை செயலாளர் மூலம் போன் செய்ய வைத்து ராஜினாமாவை கேட்க வைப்பது சரியான செயல் அல்ல. கண்டிக்கத்தக்கது. ஏன் முடிந்தால் ஜனாதிபதியின் செயலர் மூலம் ராஜினமா செய்ய சொல்ல வேண்டியதுதானே ? அல்லது தைரியம் இருந்தால் பிடிக்காத கவர்னர்களை எல்லாம் டிஸ்மிஸ் செய்ய வேண்டியது தானே ? முந்தைய அரசுகள் செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்யலாமா ?   13:02:08 IST
Rate this:
2 members
0 members
48 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2014
அரசியல் மகனை முன்னிலைப்படுத்திய மேனகாவால் சர்ச்சை பா.ஜ.,வில் துவங்கியது சலசலப்பு
பையிலிருந்து பூனை வெளியே வந்து விட்டது.( Cat is out of the bag ).இவருக்கும் தன் மகனை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்கிற ஆசை வந்து விட்டது. அதாவது பரம்பரை ஆட்சிக்கு வழி வகுக்கிறார். திரு. வருண் ஒரு ஜூனியர் அமைச்சர் ஆகக் கூட வேலை செய்ய வில்லை. அவர் திறமை என்ன வென்று தெரியாது. அதற்குள் அவருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமாம் . அதுவும் ஒரு பெரிய மாநிலத்திற்கு. பேராசை .   08:29:44 IST
Rate this:
4 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2014
பொது நான் நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் முதல் வகுப்பு மாணவர்களுக்கே மகாபாரத்தை அறிமுகம் செய்வேன்
நீதிபதி சொன்னதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் என்ன ? முதல் வகுப்பு மாணவர்களுக்கு மகாபாரதம் , ராமாயணம் ,பகவத் கீதா இதெல்லாம் புரியுமா என்பது தான் கேள்வி ? இவர் ஒன்று சொன்னவுடன் தான் தான் மிகப் பெரிய அறிவாளி என்கிற நினைப்பால் சிலர் இவரை விமரிசனம் செய்கிறார்கள். திராவிட, பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர்கள் என்று சொல்லுகிறவர்கள் கூட , தங்கள் குடும்பத் தொலைகாட்சியில் (எல்லா மொழியிலும் ) வியாபாரத்திற்க்காக மகாபாரத கதையை ஒளிபரப்புகிறார்கள். ஏனென்றால் மக்கள் வரவேற்ப்பார்கள் என்று நன்றாக தெரியும் அவர்களுக்கு. இதெல்லாம் ஒரு business .   12:13:30 IST
Rate this:
3 members
0 members
25 members
Share this Comment

ஜூலை
28
2014
பொது ரயிலில் 2ம் வகுப்பு பெட்டிகள் குறைப்பு?
இது மிகப் பெரிய சதி இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப் படுவார்கள் . ரயில் டிக்கெட் விலை ஏற்றுவதற்கு இது பின்வழி வாசல். ரயில்வே நிர்வாகம் மக்களுக்கு உண்மையாகவே மூன்றாம் வகுப்பு குளிர் சாதனப் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்தி சேவை செய்ய விரும்பினால் இப்போதைய விலையை ஏற்றாமல் குளிர்சாதன பெட்டியை கொடுக்க வேண்டும்.செய்வார்களா ?   21:14:11 IST
Rate this:
2 members
0 members
109 members
Share this Comment

ஜூலை
26
2014
அரசியல் நான் என்றும் இந்திய பிரஜையே சானியா கண்ணீர் பேட்டி
நீங்கள் இந்திய குடிமகள் தான் . அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை . ஆனால் நீங்கள் வெளிநாட்டில் , அந்நிய நாட்டு குடிமகனை மணந்து கொண்டு அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும்பொழுது எப்படி ஒரு இந்திய மாநிலத்தின் நல்லெண்ண தூதராக செயல் படுவீர்கள் ? தெலுங்கானா மாநிலம் அமைக்க படவேண்டுமென்று பலர் உயிர் தியாகம் செய்தார்கள் . பலர் போலீசாரிடம் அடி வாங்கி காயம் பட்டார்கள் . உண்ணா விரதம் இருந்தார்கள் . ஆனால் நீங்கள் அப்படி எல்லாம் எந்த தியாகமும் செய்யாமல் (ஒருக்கால் நீங்கள் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்காக ) சும்மா நடந்து வந்து ரூ . 1 கோடி வாங்கி கொண்டீர்கள் . தியாகம் செய்தவர்களுக்கு ஒன்றும் இல்லை . ஆனால் உங்களுக்கு ரூ 1 கோடி மக்களுக்கு இதுதான் கோவம் .   10:29:56 IST
Rate this:
6 members
0 members
33 members
Share this Comment

ஜூலை
21
2014
அரசியல் பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்புமதுரை மாநாட்டில் தகவல்
முதலில் சினிமாவில் பெண்களை கேவலமாக காண்பிப்பது, தொலைகாட்சித் தொடர்களில் பெண்கள் மீது வன்முறை காட்சிகளை காண்பிப்பது, இதையெல்லாம் நிறுத்தட்டும். பெண்களே ,ஒற்றுமையாக இந்த மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஒருத்தி விட்டால் இன்னொருத்தி தயார் என்று சொல்லக் கூடாது. இந்த இரண்டு மீடியாக்களில் இந்த மாதிரி காட்சிகளும் வன்முறையை தூண்டுவதற்கு காரணமாக உள்ளது. பெங்களூரில் ஒரு 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததற்கு, பெண்களின் கேவலமான படங்கள் காரணமாக இருந்தது என்று போலீஸ் கூறியுள்ளது.   08:40:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
21
2014
பொது ரயில்களில் சாப்பாடு சரியில்லையா? விற்பனையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
பல வருடங்களுக்கு முன்னால் ரயில்களில் உணவு கொடுக்கும்பொழுது ஒரு தட்டில் கொடுத்து கொண்டிருந்தார்கள் . சாப்பாட்டை சாப்பிடுவதற்கும் வசதியாக இருந்தது. அந்த முறை நிறுத்தப்பட்டுள்ளது. இப்பொழுதெல்லாம் சாப்பாட்டை ஒரு அலுமினிய பேப்பர் பெட்டியில் கொடுக்கிறார்கள். அதில் உணவை பிசைந்து சாப்பிடவும் முடிவதில்லை. சாதம், சாம்பார் எல்லாம் இருக்கைகளில் கொட்டுகிறது. அவ்வளவு விலை கொடுத்தும் திருப்தியாக சாப்பிட முடிவதில்லை. ரயில்வே ஊழியர்கள் அந்த அலுமினிய பேப்பர் தட்டில் எப்படி சாப்பிடுவது என்று செய்து காண்பிக்கட்டும். ரயில்வே நிர்வாகம் இதை முதலில் கவனிக்க வேண்டும்.   08:25:59 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment