Sukumar Talpady : கருத்துக்கள் ( 174 )
Sukumar Talpady
Advertisement
Advertisement
ஜூன்
21
2018
அரசியல் பா.ஜ., அரசு மூழ்கும் கப்பல் ராகுல் விமர்சனம்
முதலில் மூழ்கி கொண்டிருக்கிற உங்கள் கப்பலை மீட்டு கொண்டு வர முயற்சி செய்யுங்கள் திரு ராகுல் நம் முன்னோர்கள் எதற்கோ சொல்லி வைத்தார்கள் என்பதால் அதையே பா ஜ க விற்கு சொல்ல வேண்டாம் . அதே உவமானம் , உவமேயம் கொடுக்க வேண்டாம் . வேறு எதையாவது உங்கள் சொந்த முயற்சியில் , வார்த்தைகளில் சொல்லுங்கள் .   12:54:15 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

ஜூன்
18
2018
அரசியல் ஜூன் 25-ம் தேதியை தேசிய கருப்பு தினமாக அனுசரிப்புபா.ஜ.க.,
அவசர நிலை பிரகடனப்படுத்தி 43 வருடங்கள் ஆகி விட்டன . இப்பொழுது அந்த தினத்தை கருப்பு தினமாக அறிவிப்பதில் என்ன பயன் ? அடுத்த வருடம் தேர்தல் வரப்போகிறதே அதற்க்காகவா ? ஆனால் இது ஒன்றும் பயன் தராது என்பது என் அபிப்பிராயம் .   19:59:33 IST
Rate this:
7 members
0 members
26 members
Share this Comment

ஜூன்
16
2018
அரசியல் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறார் கருணாநிதி ஸ்டாலின்
எத்தனை முறை இப்படி சொல்லி சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றுவீர்கள் ? ஆனால் உங்கள் அதிர்ஷ்டம் . தமிழ் மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .   19:43:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
16
2018
எக்ஸ்குளுசிவ் வஞ்சிக்கப்படும் தென் தமிழகம்
மங்களூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கோவை பொள்ளாச்சி , பழனி திண்டுக்கல் மதுரை மானாமதுரை ராமநாதபுரம் வழியாக ஒரு ரயில் விட வேண்டும் என்று பலமுறை சொல்லியாகி விட்டது , எழுதியாகிவிட்டது , பேசியாகிவிட்டது . ஆனாலும் அதைப்பற்றி ஒரு அறிவிப்பும் இல்லை . எப்பொழுதுதான் விடிவு காலம் வர போகிறதோ   19:58:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
14
2018
அரசியல் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது எந்த ஆட்சி? அமைச்சர்களுடன் தி.மு.க., மோதல்
இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில்தான் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது எதிலும் தமிழ் , எங்கும் தமிழ் என்று சொல்லிசொல்லி தமிழர்களை ஏமாற்றி வருகிறார்கள் . இன்றைய இளைஞர்களுக்கு தமிழை நன்றாக பேசவும் தெரியவில்லை , உச்சரிக்கவும் தெரியவில்லை , எழுதவும் தெரியவில்லை . தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் நடிகர்கள் ,நடிகைகள் பேசும் தமிழைக் கேட்டால் இரத்தம் கொதிக்கிறது . சினம் எழுகிறது . தமிழர்கள் ஏமாற்றப் படுகிறார்கள் , ஏமாறிக் கொண்டே இருப்பார்கள் . இந்த கழகங்களின் ஆட்சி ஒழிந்தால் தான் தமிழுக்கு நல்ல காலம் .   20:38:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
9
2018
சம்பவம் மனித வெடிகுண்டு வாயிலாக மோடியை கொல்ல திட்டம் அம்பலம்!
இது பழைய செய்திதான் . அதனால் வை கோ வெளியேற்றப்பட்டு அவர் தனி கட்சி தொடங்கி ,மு க , ஸ்டாலின் இவர்களை எப்படி தாக்கி பேச முடியுமோ அவ்வளவு பேசி , பிறகு அங்கேயே போய் சரணாகதி அடைந்துள்ளார் மாவீரன் வை கோ .   09:28:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
6
2018
அரசியல் விவசாய கடன் தள்ளுபடி ராகுல் உறுதி
இனிமேல் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் , கடன் கொடுக்கும்பொழுது Pronote , மற்ற கடன் பத்திரங்களையும் கடன் வாங்குபவர்களிடம் இருந்து வாங்கிக்கொள்ள வேண்டாம் . கடன் தொகையை அவர்களுடைய கணக்கில் வரவு வைத்து விட்டு இஷ்டம் இருந்தால் அல்லது மனது இருந்தால் அல்லது திருப்பி கட்ட முடிந்தால் கட்டுங்கள். இல்லை என்றால் நங்கள் தள்ளுபடி செய்து கொள்ளுகிறோம் என்று சொல்லிவிடட்டும் . பிறகு இப்பொழுது விவசாய கடன் மட்டும் இல்லை வங்கிகளில் லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் வாராக்கடன்( NPA) இவற்றையும் தள்ளுபடி செய்யட்டும் . எல்லோருடைய வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் . "நல்ல பொருளாதார கொள்கை "மற்றும் வங்கி ஊழியர்களுக்கு , கூட்டுறவு ஊழியர்களுக்கு , மேனேஜர் இவர்களுக்கெல்லாம் வேலை மிச்சம் . எந்த கட்சிக்காவது இப்படி செய்ய தைர்யம் உண்டா ? மக்கள் "நல்ல வரவேற்பு " கொடுப்பார்கள் .   19:59:28 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
4
2018
சினிமா நானும் சமூகவிரோதி தான் : ரஜினிக்கு கமல் பதிலடி...
ஒரு படத்தில் வடிவேலு " ஹே நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன் நானும் ரவுடி ஆகி விட்டேன் " என்று சொல்லி போலீஸ் ஜீப்பில் ஏறுவார் . போலீஸ் அவரை ஏற விடமாட்டார்கள் . அது போலத்தான் இருக்கிறது கமல் ஹாசனின் பேச்சு. ஒரு காமெடி பீஸ் அவ்வளவுதான் .   13:53:24 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
4
2018
அரசியல் நானும் சமூக விரோதி தான் கமல்ஹாசன்
தான் ஒரு புரட்சிகரமான கருத்தை சொல்லி விட்டதாக மனதிற்குள் நினைத்து கொண்டிருக்கிறார் . இவர் தப்பி தவறிமுதலமைச்சர் ஆகி விட்டால் தமிழகத்தின் கதி என்னவாகுமோ ? எல்லாம் வல்ல "ஏழையின் சிரிப்பு " தான் காப்பாற்ற வேண்டும் . [   09:22:32 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
2
2018
பொது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இந்தியா வந்தார் மோடி
இந்த வருடம் கடைசியில் ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் சட்டிஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் தேர்தல் வருகிறது .இவை மூன்றும் பா ஜ க ஆட்சியின் கீழ் உள்ளது . அடுத்த வருடம் மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிறது . அதுவரைக்கும் எந்த வெளி நாட்டிற்கும் செல்லாமல் மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்யட்டும் . கட்சியின் வெற்றியை நோக்கி செயல் படட்டும் . சமீபத்தில் நடந்த தேர்தலில்களில் பா ஜ க அடைந்த தோல்வியை நினைவில் வைத்து கொள்ளட்டும் . பெட்ரோல் டீசல் சமையல் காஸ் இவை மூன்றின் விலையை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கட்டும் . சும்மா ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு எல்லாம் காணாது . குறைந்தது ரூ 10/- யாவது குறைக்க வேண்டும் . அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப் படுத்த வேண்டும் . முதோயோர்களுக்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அவ்வளவு செய்யட்டும் . இதை எல்லாம் செய்யாமல் இன்னும் வெளிநாட்டிற்க்கே போய்கொண்டிருந்தால் மக்கள் பா ஜ க விற்கு எவ்வளவு இடங்கள் குறைக்க முடியோமோ அவ்வளவு குறைத்து விடுவார்கள்   20:13:25 IST
Rate this:
1 members
2 members
6 members
Share this Comment