Advertisement
A.s. Veluswamy Velu : கருத்துக்கள் ( 15 )
A.s. Veluswamy Velu
Advertisement
Advertisement
ஜனவரி
5
2015
பொது ஒரு நதியைத் தேடி...! காலத்தால் மறக்கப்பட்ட கவுசிகா..!எக்ஸ். செல்வக்குமார் மற்றும் ஏ.சிவகுருநாதன்
கவுசிகா நதி தெக்கலூர் ஏரிப்பாளையம் குக்கிராமத்தின் வடகிழக்குப் பகுதியில் வண்ணாற்றான் கரை என்ற பெயரில் உள்ளது. எனக்குத் தெரிந்த வரை1960 முதல் 1970 வரை, வருடத்தில் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களிலும் ஆனி, ஆடி, மற்றும் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் மழை பெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. மற்ற மாதங்களில் மணலில் நீர் ஊற்று எடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இந்த இடத்தில் ஒரு அனை கட்டப்பட்டி ருக்கிறது. இங்கிருந்து வாய்க்கால் மூலம் புதுப்பாளையம் குளத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. குளம் நிறைந்தவுடன் மதகுகள் திறக்கப்பட்டு முழு அளவு தண்ணீரும் கரையில் செல்லும். கரையின் இரு புரமும் மரங்களும், மலர் செடிகளும், கொடிகளும் பசுமையாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. சுற்றியுள்ள நிலப் பகுதிகளில் விவசாயம் சிறப்புடன் இருந்தது. தற்போது அந்த வண்ணாற்றான் கரையும் அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளும் காய்ந்து கருவிக் கொண்டிருக்கிறது.   17:46:09 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
16
2014
முக்கிய செய்திகள் உள்தாள் பெற குடும்பத்தலைவரே வர வேண்டும் போலி கார்டுகளை கண்டறிய அதிகாரிகள் மும்முரம்
தமிழ் நாட்டில் மொத்த குடும்ப அட்டைகள் இரண்டு கோடி. சுமார் 50000 குடும்பங்கள் அரசு சார்ந்த ஊழியர்கள் குடும்பங்கள். இவர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை மேலும் ஒரு மணி நேரம் காலதாமதமாக அலுவலகத்திற்குச் செல்ல அனுமதி உண்டு. மீதமுள்ள 1.5 கோடி குடும்பங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பணிகள் செய்து பிழைக்க வேண்டும். இவர்கள் பணி செய்யாத காலத்திற்கு சம்பளம் இல்லை. இவர்கள் விடுப்பு எடுத்தால் தொழில் உற்பத்தி பாதிக்கும். குடும்பத் தலைவர்கள் தனது குடும்பத்தை காப்பாற்றும் நோக்கத்தில் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். குடும்பத் தலைவர்களுக்கு வீண் அழைச்சல், வருமான இழப்பு, தொழில் உற்பத்தி பாதிப்பு இவற்றை உணர்ந்து அதிகாரிகள் குடும்ப நபர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை குடும்ப அட்டைக்கு உள்தாள் பெற அனுமதிக்கவேண்டும்.   11:34:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
28
2014
சினிமா நிறைவடைகிறது மகாபாரதம்...
விஜய் டிவி வழங்கிய மகாபாரதம் தமிழ் தொடர் மூலம் மனதை நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதனை அறிந்து கொண்டேன்.   20:44:06 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2014
முக்கிய செய்திகள் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவுத்தபாலில் அனுப்புவதில் சிக்கல்! வார்டு அலுவலகத்தில் குவிகிறது ரிட்டன் தபால்கள்
எனது தந்தை 1971 அல்லது 1972 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் அரசு மருத்துவ மனையில் தனது உடலை மருத்துவ பரிசோதனை செய்ய வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீர் என மயங்கி விழுந்து இறந்துவிட்டார். பின் அங்கு பிரேதப் பரிசோதனைகள் செய்யப்பட்டு பிணம் டெலிவரி கொடுக்கப்பட்டது.அப்போது எனக்கு வயது 11. இப்போது 54. தற்போது அவரது இறப்புச் சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே கோயமுத்தூர் மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் 17-06-2014 ல் மனு செய்தேன். மனுவில் இறந்த நாள் குறிக்க வேண்டிய இடத்தில் ஆண்டு (1971) மட்டும் குறித்துக் கொடுத்தேன். மாதம் குறிப்பிட நிர்ப்பந்தம் செய்தார்கள். குறித்துக் கொடுத்துவிட்டேன். சான்றிதழ் கிடைக்கும் நாள் 25-06-2014 எனக் குறித்த ஒப்புதல் சீட்டுக் கொடுக்கப்பட்டது. எனது சொந்த ஊர் அவினாசி. 25-06-2014 அன்று அவினாசியிலிருந்து மாநகராட்சி அலுவலகம் சென்றேன். இன்னும் பதிவேட்டில் தேடும் பணி முடியவில்லை. 30-06-2014 அன்று வர அறிவுறுத்தினார்கள். அந்தத் தேதியில் சென்றேன். பதிவேட்டில் பெயர் இல்லை மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி மனுவை திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.அன்றைய தினமே கோயமுத்தூர் மாநகராட்சி வலை தளத்தில் உள்ள புகார் பிரிவில் இந்த விபரத்தைப் பதிவு செய்தேன். அதில் எனது சிறு வயதில் தந்தை இறந்ததால் ஆண்டு ஞாபகமில்லை. மேலும் மருத்துவ அறிக்கைகளும் இல்லை. அவர் இறக்கும் தருவாயில் நான் ஆறாம் வகுப்பு படித்ததால் 1971 அல்லது 1972 ஆம் ஆண்டில் இறந்துள்ளார் என்பது உறுதி. எனவே 1971 மற்றும் 1972 ஆண்டு இறப்பு பதிவேட்டில் தேடுதல் செய்து இறப்புச் சான்றதழ் வழங்க‌க் கேட்டிருந்தேன். அதற்கு 03-07-2014 ல் பதில் கிடைத்தது. அதில்,மேற்சொன்ன விபரங்களோடு மீண்டும் சுய முகவரியிட்ட தபால் உறையுடன் ரூ.10/- செலுத்தி மாநகராட்சி வழங்கும் இலவச மனுவில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 04-07-2014 ல் விண்ணப்பம் செய்தேன்.மாநகராட்சி அனுப்பி வைத்த அந்த சாதாரன தபால் மத்திய அரசு, தபால் துறை, அவினாசி தபால் அலுவலகத்திலிருந்து 28-07-2014 அன்று எனக்குக் கிடைக்கப்பெற்றது. அந்தத் தபால் பிரித்துப் பார்த்தேன். மனு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மனுவில் மருத்துவச் சீட்டு இணைக்கவும் என்று மேழுத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவச் சீட்டு காணா மல் போய்விட்டது என்பதனைத் தெரிவித்தும் கூட மீண்டும் இதே பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தச் சூழலில் 1971 மற்றும் 1972 ஆண்டு கோயமுத்தூர் மாநகராட்சி இறப்புப் பதிவேட்டில் எனது தந்தை பெயரை நேரில் தேடுதல் பணி செய்ய கோயமுத்தூர் மாநகராட்சி எனக்கு அனுமதி அளிக்க தினமலர் உதவி செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.   18:41:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
31
2014
பொது இருப்பவர்கள் விட்டுக் கொடுத்தால் இல்லாதவர்கள் பயன்பெறலாம்
நீதி நூல், திருக்குறள் ஆகிய பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளது.   05:11:06 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
30
2014
கோர்ட் கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு
மனிதன் உயிர் வாழ்வதற்கு இயற்கை மண்ணில் எது அதிகம் தேவை என உணராமல் செயற்கைப் பொருட்களை அதிகம் படர விட்டோம். அவற்றை பணம் என்னும் காந்தப் பொருளால் மட்டுமே கவர முடியும். மனிதனின் மனப்பசி, வயிற்றுப் பசியை அடக்கி அப்பணத்தை அடைய தூண்டுகிறது. மனிதன் மனிதனை மறந்துவிடுகிறான். பள்ளிக்கூடம், காவல் நிலையம், நீதி மன்றம் கட்டிடங்களைக் கட்டிய தொழிலாளி தன் வயிற்றுப் பசி போக்கும் பணத்தைத் தேட உழைத்தார். ஆனால் அந்தக் ‌கட்டிடத்திற்குப் பணம் செலவு செய்தவர் அப்பணத்திற்குப் பணத்தைத் தேட முயற்சிக்கிறார். இந்தப் பணம் தேடும் முயற்சிக்கு ஒரு வரைமுறை வைக்க வேண்டும்.   16:26:19 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
30
2014
பொது 14 கி.மீ., தூரத்தை 8 நிமிடத்தில் கடந்த இதயம்
வீட்டை விட்டு வெளியே வந்தால் வீதி, ரோடு, மாநிலச் சாலை, தேசியச் சாலை இவற்றில்தான் நடந்தும் வாகனங்களிலும் சென்று மறுபடியும் வீட்டுக்கு வந்து சேருகிறோம். ஆண்டவனை பிராத்தன் செய்து விட்டு புறப்படுகிறோம். ஆனாலும் விபத்து நடந்து மூளைச்சாவு நிலைக்கு உள்ளாக நேரிடுகிறோம். இதில் பள்ளிக் குழந்தைகள் முதல் சுற்றுலா செல்லும் முதியோர் ‌வரை அடங்குவர். ஆங்கிலேயர் ஆட்சி வரப்போகும் நூறு ஆண்டுக்கு திட்டமிட்டு ரோடுகள் உருவாக்கப்பட்டது. போக்குவரத்தும் குறைவு. இன்று உலக மயமாக்கப்பட்டு உலக மக்கள் அனைவரும் வகைவகையான வாகனங்களில் வேகமாக பயணித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் வீதி முதல் தேசியச் சாலை வரை போதிய அகலம், சிக்கனல்கள் ,உடனுக்குடன் பராமரிப்புப் பணி, போக்குவரத்துக் கண்காணிப்பு ஆகியவற்றிற்கான விதி முறைகளை ஏட்டில் எழுதி வைத்துவிட்டு ரோட் டில் புலம்பிக்கொண்டிருக்கிறோம். பூமி இன்று வரை அதன் சுழலும், சுற்றும் வேகத்தில் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. ஆகவே நாம் வேகமாக செயல்பட்டாலும் விவேகத்துடன் செயல்பட்டு இந்த உலக வாழ்வில் உடலையும் உயிரையும் நிலைத்து நிற்க வழிவகுப்போம்.   08:45:25 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
26
2014
முக்கிய செய்திகள் அதிரடி ஆரம்பம்!மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு கட்டாயம்குடிநீர் இணைப்பு துண்டிப்பு துவக்கம்
வரும் காலங்களில் குடி நீர் கொலைக்கு ஆயுதமாகப் பயன்படுத்தும் நிலை உருவாகலாம். கட்டிட விதிமுறைகளை அவ்வப்பொழுது கண்காணிக்க அலுவலர்கள் பற்றாக்குறை என தெரிவிக்கும் நிர்வாகம் குடி நீர் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள முன் வருவது மேலும் பொது மக்களை பலியிடுவதற்கு ஒரு ஆயுதம்.   08:55:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
27
2014
அரசியல் எனது அரசு என்ற புதிய இணையதளம் துவக்கம் திட்டங்கள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்புது முயற்சியில் இறங்கினார் பிரதமர் மோடி
பல கோடி மக்களின் மதிப்பு மிக்க வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்து ஜனநாயகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும், நாட்டின் வளர்ச்சிக்கு தீட்டப்பட்ட திட்டங்கள் செயல்படுத்துவதில் பொதுமக்கள் எதிர்ப்பால் அவை செயல்படாமல் நின்று விடுகின்றன அல்லது காலதாமதம் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கு மக்களின் நேரடிக் கருத்து கேட்பு முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.   04:58:17 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
18
2014
எக்ஸ்குளுசிவ் அரசு மனநல காப்பகத்தில் 25 ஆண்டுகளாக இருக்கும் கக்கனின் மகன்
பிறப்பு நமது தேர்வு அல்ல. ஆனால் வாழ்க்கை நமது தேர்வு ஆகும். மனிதனின் மனம் வாழ்க்கையின் ஓர் அங்கம். மனிதன் ஒரு வேளை உண்ணும் உணவில் கிடைக்கும் சக்தி மனதை இயக்கி செயலைச் செய்யத்தூண்டுகிறது. அந்தச்செயல் தனக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்மை பயப்பனவாக இருக்க வேண்டும். மனநல காப்பகம் அவருக்கு சிகிச்சை அளிப்பதோடு அங்கேயே ஒரு நிரந்தரப் பணியை கொடுக்க முன்வர வேண்டும்.   04:36:10 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment