பொது நலன், பொது மக்கள் நலன் மீது தனது பார்வையையும், எண்ணத்தையும் செலுத்தி தன் பணியுடன் இதற்கு நேரம் ஒதுக்கி என்.எச்.47 ரோட்டை அகலப் படுத்தும் பணியில் ஏற்படும் கால தாமதம், குறைபாடுகள், உயிரிழப்புக்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்து பொது நல மனு தாக்கல் செய்து அதில் வெற்றி அடைய அய்யா வக்கீல் நந்தகுமார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
02-ஜூன்-2013 05:59:38 IST
லஞ்சம் வாங்குவதில் விதி மீறல். ரூபாய் 49999 க்கு மேல் லஞ்சம் வாங்கியதால் வந்த வினை. கட்டடம் விபத்து. சட்டம், விதி, அரசு ஆணை மீறல். காவல் துறை, நீதி மன்றம், சிரை? நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை...விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா...தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லை
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லை. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு... ஒன்று மனசாட்சி... ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா...
29-ஏப்-2013 04:57:57 IST
ஒரு தாலூக்கா அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 90 வருவாய் கிராமங்கள் உள்ளன. 45 வருவாய் கிராமங்களுக்கு ஒரு
தாலூக்கா அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். தாலூக்கா அலுவலகங்களுக்கு நவீன முறையில் புதிய கட்டிடங்கள்
கட்ட வேண்டும். நவீன தொழில் நுட்பமான கனிணியில் கிராமம் வாரியாக குடும்ப விபரம், ஜாதி விபரம், பிறப்பு, இறப்பு, பள்ளி செல்லும் குழந்தைகள் விபரம், நிலம், வீடு, மாத வருமானம், வாக்காளர் விபரம் ஆகியவற்றை பதிந்து
பயனாளர்களே சரி பார்க்கும் விதத்தில் இணையதள வலைவாசளில் வெளியிட வேண்டும். கனிணி தொழில் நுட்ப
பணியாளர்களைப் பயன்படுத்த வேண்டும். அணைத்துச் சான்றிதழ்களும் முன் கூட்டியே தேவையறிந்து தயார் செய்து
கனிணியில் பதியப்பட வேண்டும். பொது மக்களுக்கு அலைச்சல், போகுவரத்து செலவு, லஞ்சம், கால விரையம், வரு
மான இழப்பு ஆகிய பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதுடன் தாலூக்கா அலுவலகங்களில் அன்றாடப் பணிகளை
இடையூறு இன்றி செய்யவும் முடியும்.
24-பிப்-2013 05:35:43 IST
காவிரி நீர் பிரச்னை 1890-2013 இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் துவங்கிய காவிரி நீர் பிரச்னை தொடர்ந்து 65 ஆண்டு கால சுதந்திர இந்தியா நாட்டில் நீடித்து, ஆட்சியாளர்கள், அதிகாரிகள் எடுத்த அயராத நடவடிக்
கைகளின் காரணமாகவும், உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவுகள் மூலமாகவும், காவிரி நீர்
நியாயமான அளவில் பங்கீடு செய்து நடுவர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது
வரவேற்கத்தக்க ஒன்றாகும். நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் உள்ள நதி நீர் பங்கீட்டை செயல்படுத்தும் அமைப்புகளாக திகழும் காவிரி நதி நீர் நிர்வாக ஆணையம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்குமுறை குழு என, இரண்டு அமைப்புகளையும் விரைவில் உருவாக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
21-பிப்-2013 05:06:11 IST
தமிழ்நாடு அரசு, அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவ மனைகள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்துப்
பிரிவுகளிலும் லஞ்சப் பேய் தலை விரித்து ஆடுகிறது. இது பற்றி தினமலர் நாளேடு மாமூல், கட்டிங், லஞ்சம், ஊழல்,
பற்றி தெளிவாக எழுதியிருந்ததை படித்திருக்கிறேன். தற்போது தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத் துறை இதை உறுதி
படுத்தியிருக்கிறது. ஆட்சியாளர்கள் தான் இதற்குப் பொறுப்பாவார்கள்.
17-பிப்-2013 20:58:45 IST
உத்திரப்பிரதேசம் மாநிலம், அலகாபாத் நகர், பிரயாகையில் கடந்த ஜனவரி 14ந் தேதி துவங்கிய மகா கும்பமேளா வரும்
மார்ச் 10ந் தேதி வரை நடக்கிறது. நேற்று தை அமாவாசை என்பதால் நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும், பிற நாடுகளி
லிருந்தும் உ.பி. யைச் சேர்ந்த மக்களுமாக சுமார் 3 கோடி பேர் அந்த இடத்தில் கூடியுள்ளனர். ஒரு நிகழ்விற்கு பல்வேறு
பகுதிகளிலிருந்து வரும் மக்கள் நிகழ்வு முடிந்ததும் அந்த இடத்திலிருந்து ஒரே நேரத்தில் புறப்படுவார்கள் என்பது கால
காலமாகத் தெரிந்த செயல். மாலை 7 மணிக்கு ரயில் நிலையத்தில் மக்கள் நெருக்கம் அதிகமாயியுள்ளது. இதைக்
கண்டு கொள்ளாத அதிகாரத்தில் உள்ளவர்கள் இதற்குப் பொறுப்பாவார்கள்.
11-பிப்-2013 11:59:54 IST
விழுப்புரம், டீசல் இஞ்சின் மெக்கானிக் சாரங்கன் அவர்களின் மகள் செல்வி. வசந்தி, காவல் துறை ஆய்வாளர் அவர்கள்,
1973 ஆம் ஆண்டு முதன்முதலாக பெண் காவலராக பணியில் சேர்ந்து 39 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றி, தம் வாழ்க்கைச் சாதனைகளைச் சமுதாயத்திற்கு அர்ப்பணித்து அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். செல்வி வசந்தி
அவர்களின் ஊக்கமும், உறுதியும் அவரது குறிக்கோள் வெற்றி அடையச் செய்திருக்கிறது. தொடர்ந்து சமுதாயப் பணி
களுக்கு தம்மை அர்ப்பணித்து வாழ்க்கையின் குறிக்கோள் அமைய வாழ்த்திப் பாராட்டுகிறேன்.
10-பிப்-2013 04:59:10 IST
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்....கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்...
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்....பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்.....
கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே....களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே.....
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே.....நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
வீரமுண்டு வெற்றி உண்டு....விளையாடும் களமிங்கே உண்டு... 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால்(பிரித்தானியர்)
முதன் முதலாக இந்தியாவில் உள்ள சென்னையில் கட்டப்பட்ட கோட்டையாகும். 370 ஆண்டுகளாக பேரோடும்,
புகழோடும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை நிறைவேற்றிய கோட்டையாகும். சுதந்திர இந்தியா, 65 ஆண்டு
கடந்த நிலையில் தமிழகத்தின் தலைமைச் செயலகத்திற்குப் புதிய கட்டிடம் தேவை குறித்து 30 ஆண்டுகளாக தொடர்ந்த
கனவு உண்மையானது. ஆனால் அதில் அமர்ந்து பணியாற்றுவதில் மனம் பொய்யானது.
07-பிப்-2013 04:39:29 IST
பூமியிலிருந்து ஏறக்குறைய 6.4 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்தின் தன்மை மற்றும் செயல்பாடுகளை விஞ்ஞானிகளால் அனுப்பி வைக்கப்பட்டு உள்ள க்யூரியாசிட்டி விண்கலம் மூலம் உடனுக்குடன் தகவல் பெற்றுக் கொண்டு அதில் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த விஞ்ஞான உலகத்தில் இந்தியாவின் உச்ச நீதி மன்
றத்திற்கு நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆன்-லைன் மூலம் அறிக்கைகள் பெறவும், வீடியோ கான்பரன்ஸ்
மூலம் உயர் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் வழிவகை செய்யலாமே. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு ...இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு...நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது, அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது. இப்போது கோர்ட்டை முட்டாளுனு நினைக்
கிறவாங்களுக்கு.
06-பிப்-2013 05:32:18 IST